முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
சன் டி.வி. நிர்வாகி கைது: கிளறப்படும் பழைய புகார்கள் அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 18
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
செவ்வாய்க்கிழமை, 05 ஜூலை 2011 07:19

திரைப்பட விநியோகஸ்தரை மிரட்டியதாக கூறப்படும் வழக்கில் சன் டி.வி. நிர்வாகி சக்சேனா கைது செய்யப்பட்டதால், அவர் தொடர்பான பழைய புகார்களை சென்னை மாநகரக் காவல்துறையினர் துப்புதுலக்கி வருகின்றனர்.

 

சேலத்தைச் சேர்ந்த திரைப்பட விநியோகஸ்தர் டி.எஸ்.செல்வராஜ். இவரிடம் சன் டி.வி.யின் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா, "தீராத விளையாட்டு பிள்ளை' என்ற திரைப்படத்தின் சேலம் பகுதி விநியோக உரிமையை தருவதாக ரூ.1.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்தாராம்.

 

இந்நிலையில் சக்சேனா ஒப்பந்தப்படி அந்த படத்தின் சேலம் பகுதி விநியோக உரிமத்தை செல்வராஜுக்கு கொடுக்காமல், நேரடியாக விநியோகம் செய்தாராம். இதனால், தான் கொடுத்திருந்த ரூ. 82.53 லட்சத்தை செல்வராஜ் திருப்பிக் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் சக்சேனா இழுத்தடிப்பு செய்ததாக தெரிகிறது. மேலும் இப் பிரச்னையில் 5-1-2011 அன்று சக்சேனா, செல்வராஜுக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.

 

இது குறித்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் செல்வராஜ் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீஸôர் நம்பிக்கை மோசடி, வஞ்சித்து ஏமாற்றுதல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் சக்சேனா மீது வழக்குப் பதிந்தனர். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை சக்சேனாவை கைது செய்தனர். பின்னர் கே.கே. நகர் காவல் நிலையத்தில் சக்சேனாவிடம் போலீஸôர் விசாரணை செய்தபின் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சக்சேனா ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றம் அவரை 15 நாள்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

 

பழைய புகார்கள்: சென்னை மாநகர காவல்துறையில் சக்சேனா மீது 2 புகார்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் ஒரு பெண்ணை மிரட்டியதாக ஏற்கனவே ஒரு புகார் மாநகர காவல்துறையில் உள்ளதாம். இப் புகார் வந்து பல மாதங்களாகிவிட்ட நிலையில், மாநகர காவல்துறை அப் புகார் மீது இப்போது துப்புதுலக்கி வருவதாகக் கூறப்படுகிறது. அதே போல அண்மையில் வெளியான ஒரு திரைப்படத்தின் டி.வி. உரிமத்தை வாங்கியதற்காக ரூ. 2.75 கோடி பணத்தை வழங்காமல் சக்சேனா இழுத்தடிப்பு செய்து வருவதாக அப் படத்தின் தயாரிப்பாளர் மாநகர காவல் ஆணையர் ஜே.கே.திரிபாதியிடம் கடந்த மாதம் 7-ம் தேதி புகார் அளித்தார். இப் புகார் குறித்தும் போலீஸôர் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இப் புகார்களின் கீழும் சக்சேனா மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாகக் காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. இந்தப் புகார்கள் குறித்து இன்னும் வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

காவல்துறை மனு: இதற்கிடையே கே.கே. நகர் போலீஸôர், சக்சேனாவை தங்களது காவலில் எடுத்து விசாரணை செய்வதற்கு அனுமதி கேட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தனர். இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகிறது.

 

Comments  

 
+6 #7 Karthikk 2011-07-05 21:13
Boss apadiye intha nkkp raja(erode) mela ethavuthu case iruntha parunga avanoda tholla thaanga mudiyala
Quote
 
 
+6 #6 REBEL 2011-07-05 15:00
ஒத்த மனமுடைய திருடர்கள் ஒன்னா சேர்ந்துட்டாஙகை யா. நம்ம கதி அவ்வளவு தான்.
Quote
 
 
+9 #5 yohannnayalini 2011-07-05 14:59
சன் டிவி ஒழிக
Quote
 
 
+9 #4 Padmanabhan 2011-07-05 12:20
இவனைப் போன்ர வீனாப் போனவர்கலை மக்கல் அடிட்து துவைக்க வேன்டும்.
Quote
 
 
+7 #3 jagan t 2011-07-05 11:08
[ஃஉஒடெ நமெ="ஆகாஸ்ஹ்"]இந்த செய்தி விகடனில் - செய்தியில் வரவில்லை... ஏன்???[/ஃஉஒடெ]
வந்தால்தான் அது விகடன். இல்லவிட்டால் வேறு பெயர் வைத்துக்கொள்ளலா ம்.
Quote
 
 
+18 #2 Sekaran 2011-07-05 10:55
ஓர் தொலைக்காட்சி நிர்வாகத்தில் ஓர் நபருக்கு இந்த "திமிர்" என்றால்..? மஞ்ச துண்டாரின் குடும்ப உறுப்பினர்களுக் கு உள்ள சர்வாதிகாரம் எப்படி இருந்திருக்கும் ..? கேட்டால் "பழி" வாங்கும் நடவடிக்கை என்று புலம்புவார்கள்..! நிலங்களை அடித்து பிடிங்கியவர்கள் ..கட்டபஞ்சாயத்து களவாணிகள்.ரௌடிகள்..எல்லோருக்குமே அம்மா இனி ஓர் சிம்ம சொப்பனம்தான்..!!
Quote
 
 
+20 #1 AKASH 2011-07-05 09:18
இந்த செய்தி விகடனில் - செய்தியில் வரவில்லை... ஏன்???
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 124 விருந்தினர்கள் மற்றும் 1 உறுப்பினர்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

தமிழ்லீடர்

tamilleader

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday5235
mod_vvisit_counterYesterday9838
mod_vvisit_counterThis week57972
mod_vvisit_counterLast week67096
mod_vvisit_counterThis month176780
mod_vvisit_counterLast month297247
mod_vvisit_counterAll days8392508