முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
இலங்கை இராணுவ ரவுடிகளின் கோர, பிசாசு முகத்தை கிழிக்கும் வகையில் அமைந்துள்ள போர்க்குற்ற திரைப்படம்! ஜூன் 14 ல் வெளியிடுவோம் - சனல் 4 அறிவிப்பு அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 20
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
புதன்கிழமை, 01 ஜூன் 2011 23:40

 

இலங்கைப் போர்க்குற்ற ஆவணங்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் சனல் 4  தொலைக்காட்சி ஊடகம் அவ் ஆவணத் தொகுப்பினை திரைப்படமாக்கி எதிர்வரும் 14ம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடவுள்ளது.

ஒரு மணித்தியாலத்தை அடக்கிய இப்போர்க்குற்ற ஆவணத்தொகுப்பு திரைப்படத்தினை எதிர்வரும் 3ம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளது.

Sri_Lanka_UN_DEPARTURE_BG_A2சனல் 4  ஊடகம் இத் திரைப்படத்தினை எதிர்வரும் 14ம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.

இதுவரையில் வெளியிடப்படாத போர்க்குற்ற ஆவணங்களும் இத்திரைப்படத்தில் அடங்குவதாகவும், போரினால் பாதிப்புற்றோரின் வாக்குமூலங்கள், நேரடிச்சாட்சியங்கள் ஆகியனவும் இத்திரைப்படத்தில் அடங்குவதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழ் இளைஞர்களை இலங்கை இராணுவ ரவுடிகள், நிர்வாணப்படுத்தி, கைகளை பின்னால் கட்டி உட்கார வைத்தும், நிற்க வைத்தும் பின்னாலிருந்து தலையில் சுட்டு கோரமாக கொல்லும் நெஞ்சைப் பதற வைக்கும் காட்சிகளையும் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் தான் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இதுபோன்ற மேலும் பல கொடூரமான, கோரமான காட்சிகள் அடங்கிய முழுமையான வீடியோத் தொகுப்பை வெளியிடப் போவதாக சனல் 4 அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

இலங்கை இராணுவ ரவுடிகளின் கோர, பிசாசு முகத்தை கிழிக்கும் வகையில் இந்தக் காட்சிகள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் காட்சித் தொகுப்பை ஐ.நா. மனித உரிமை ஆணையத்திடம் சமர்ப்பிக்கவுள்ளது சனல் 4.

உலகம் இதுவரை கண்டிராத மிக மோசமான போர்க்குற்றக் காட்சிகள் இதில் இடம் பெற்றிருப்பதாகவும், போரினால் பாதிக்கப்பட்டோர் அளித்த வாக்குமூலங்கள், சாட்சியங்கள், போர்க்குற்ற ஆவணங்கள் உள்ளிட்டவை இதில் இணைக்கப்பட்டிருப்பதாகவும் சனல் 4 கூறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து சனல்-4  தொலைக்காட்சி இலங்கையின் போர்க்குற்ற ஆவணங்களை தொகுத்து சினிமாப் படமாக தயாரித்துள்ளது. இது வருகிற 3 ம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

போர்க்குற்ற ஆவணங்கள் அடங்கிய இந்த சினிமா படம் வருகிற 14 ம் திகதி வெளியிடப்படுகிறது. இந்த தகவலை சனல்-4 தொலைக்காட்சி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த வீடியோ தொகுப்பு சுமார் ஒரு மணி நேரம் ஓடக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

இத்தனை செய்தாலும் இந்த உலகம் ஈழத் தமிழர்களுக்காக அசைந்து கொடுக்குமா என்பதுதான் இப்போது நம் முன் உள்ள மிகப் பெரிய கேள்வி.

மேலதிக விபரத்திற்கு

இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றமைக்கான ஆதாரமாக அமைந்த சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளிகள் அனைத்தும் உண்மையானவை என்று நீதிக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் சித்திரவதைகள் குறித்த ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் கிறிஸ்ரொப் ஹெய்ன்ஸ் நேற்றைய கூட்டத்தொடரில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

இந்த வீடியோ ஆதாரத்தை போலியானது என்று இலங்கை அரசு மறுப்பு வெளியிட்டு வருகின்ற போதிலும், அவை உண்மையானவை என்றும் இலங்கை அரசு பொய் கூறுகின்றது என்பதும் ஐ.நா முதல் யாவரும் அறிந்ததே.

War-crimes film, Heyns report, drown Colombo theatrics on terror

 

Comments  

 
+2 #3 jp 2011-06-03 16:34
ரஜபக்ஷ & சோனியா தன்டனை கிடைகும்
Quote
 
 
+1 #2 raja1 2011-06-02 21:22
இதைக் கேட்க யாருமே இல்லையா? இவ்வுலகில் தர்மம் என்பது ஒன்றே இல்லையா?
இவ்வுலகில் வாழும் மனிதர்கள் உனர்வற்றவனா?
Quote
 
 
+8 #1 naan kadavuL 2011-06-02 12:29
இலங்கை என்று தன் குற்றங்களை ஒப்புக்கொண்டிரு க்கிறது. ஊடகவியளாலர்கள் கடத்தல்,படுகொலை , வேறு பல கடத்தல் படுகொலைகளை செய்து விட்டு விடுதலைப் புலிகள் மீது சுமத்தி பயங்கரவாதிகளாக் கியது, மீனவர்கள் படுகொலை இப்படி எல்லாவறையும் செய்து விட்டு மறுப்பு தெரிவிப்பது இலங்கையின் புத்த தர்மம் ஆயிற்றே. ஆனால் ஒன்று மட்டும் புரியவில்லை. உலக நாடுகள் சில இன்னமும் சிங்களத்திற்கு துணை போவது ஏன்?தாங்கள் செய்வதை மறைப்பதற்காகவா?இனப்படுகொலை அனுபவத்தை பெற்ற இஸ்ரயெல் கூட தமிழர் இனப்படுகொலையை நியாயப்படுத்துக ிறது. சனல் 4 செய்து வரும் இந்த அளப்பெரிய செயல்களுக்கு நாம் தமிழர்கள் கடமைபட்டு இருக்கிறோம். இவை உலகத்தின் கண்களை திறக்குமா இல்லை பயங்கரவாதிகள் என்ற பூச்சாண்டியை தொடர்ந்து காட்டி சிங்களத்திற்கு துணை போகுமா? முதலில் வைகோ வின் குறுந்தட்டை கண்டு தமிழக மக்கள் எழுச்சி கொள்ள வேண்டும்.பேசி விட்டு, கண்களில் வரும் நீரை துடைத்து விட்டு நம் கடமை முடிந்ததாக இருந்துவிடக் கூடாது.குழந்தைகள்,பெண் கள் முதியவர்கள் என்று இலட்சக்கணக்க்கா ன அப்பாவிகள் கொல்லப்பட்டதையு ம்,குற்றுயிராக கிடந்தவர்களையும ்,கொல்லப்பட்ட பெண்களையும் கூட விட்டு வைக்காத சிங்கள மிருகங்களின் ஈனச் செயல்களை தமிழன் உள்ள வரை மறக்கவும் கூடாது.மன்னிக்கவும் கூடாது.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 117 விருந்தினர்கள் மற்றும் 1 உறுப்பினர்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

தமிழ்லீடர்

tamilleader

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday5206
mod_vvisit_counterYesterday9838
mod_vvisit_counterThis week57943
mod_vvisit_counterLast week67096
mod_vvisit_counterThis month176751
mod_vvisit_counterLast month297247
mod_vvisit_counterAll days8392479