முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
தப்பிய மனைவி.. சிக்கிய மகள்? அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 0
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2011 16:55

 

 'புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து புதிய தலைமைச் செயலகத்துக்கு அரசுத் துறைகள் மாற்றம்

என்கிற பெயரால், முக்கியக் கோப்புகளை அழிக்க தி.மு.க. அரசு திட்டம்’ என்று அதில் தலைப்புச் செய்தி. தேர்தல் ஆணையத்துக்கு, அ.தி.மு.க. சார்பில் தரப்பட்ட மனுவின் சாராம்சம் அதுதான். அறிக்கையை முழுமையாகப் படித்துவிட்டு நம் முகத்தைப் பார்த்தார் கழுகார்! 

 

ழுகார் உள்ளே நுழையும்போது, நம் மேஜையில் 'நமது எம்.ஜி.ஆர்.’ நாளிதழ் கிடந்தது.

 

'புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து புதிய தலைமைச் செயலகத்துக்கு அரசுத் துறைகள் மாற்றம்

என்கிற பெயரால், முக்கியக் கோப்புகளை அழிக்க தி.மு.க. அரசு திட்டம்’ என்று அதில் தலைப்புச் செய்தி. தேர்தல் ஆணையத்துக்கு, அ.தி.மு.க. சார்பில் தரப்பட்ட மனுவின் சாராம்சம் அதுதான். அறிக்கையை முழுமையாகப் படித்துவிட்டு நம் முகத்தைப் பார்த்தார் கழுகார்!

 

''எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு இடியாப்பச் சிக்கல் வந்தது இல்லை! 'தமிழ்நாட்டுக்கு எது உண்மையான தலைமைச் செயலகம்?’ என்ற குழப்பம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்தையும் சட்டசபையையும் மாற்றி, அண்ணா சாலையில் அமைத்து இருக்கிறார் கருணாநிதி. 'நான் புதிய தலைமைச் செயலகத்தில் காலடிவைக்க மாட்டேன்’ என்று சபதம் போட்டுள்ளார் ஜெயலலிதா. 'அடுத்து வரப்போகும் ஆட்சி... தி.மு.க-வா? அ.தி.மு.க-வா?’ என்று முடிவான பிறகுதான் இந்தக் கட்டடங்களுக்கு உண்மையான மரியாதை மீண்டும் பிறக்கும்!''

''ஏதோ, 'கோப்புகளைக் காணாமல் அடிக்கிறார்கள்’ என்கிறாரே ஜெயலலிதா?''

''கோப்புகளை இட மாற்றம் செய்கிறார்கள் என்பதுதான் உண்மை. 'பிப்ரவரி 24-ம் தேதிக்குள், கோட்டையில் இருந்து புதிய தலைமைச் செயலகத்துக்கு முழுமையாக அனைத்துத் துறைகளையும் மாற்றிவிட வேண்டும்’ என்று கருணாநிதி உத்தரவிட்டார். ஆனால், அப்படி முடியவில்லை. மார்ச் 1-ம் தேதி தேர்தல் தேதி அறிவித்ததால், பணிகள் அப்படியே முடக்கப்பட்டன. இப்போது விதிமுறைகள் தளர்த்தப்பட, கோப்புகளை மீண்டும் இட மாற்றம் செய்ய அதிகாரிகள் முயன்றார்கள். இதைக் கேள்விப்பட்டுத்தான் ஜெயலலிதா கொந்தளித்தாராம்.''

''ம்...''

''தொழில், பொதுப் பணி, ஊரக வளர்ச்சி, சமூக நலன், பொது ஆகிய ஐந்து துறை தொடர்பான ஆவணங்​களையே அதிரடியாக மாற்றி இருக்​கிறார்கள். பணியாளர் நலன், சட்டம், வருவாய்த் துறையின் சில பகுதிகள், நிதி ஆகியவை பழைய கட்டடத்தில் இருந்து புதிய தலைமைச் செயலகத்துக்கு கொண்டு செல்ல நாமக்கல் மாளிகைக்கு நகர்த்தப்பட்டு உள்ளன. 'புதிய ஆட்சி வந்துதான் இந்த முடிவுகளை எடுக்க முடியும்’ என்கிறார் ஜெயலலிதா. கருணாநிதி, புதிய தலைமைச் செயலகத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் பார்த்து, அழகூட்டிக் கட்டியவர். ஆதங்கத்தில் அவர் முகமே மாறிவிட்டது. 'இந்தக் கட்டடத்தை சும்மா போட்டுவிடுவாரா அவர்?’ என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளால் கேட்டாராம். பழைய கோட்டையை அப்படியே தொல்பொருள் துறையினரிடம் ஒப்படைத்து​விடுவது என்பதே  கருணாநிதியின் திட்டம். அதற்கு ஜெயலலிதா போட்ட தடையைப் பொறுக்க முடியாமல், திங்கள்கிழமை காலை புதிய தலைமைச் செயலகத்துக்கே கருணாநிதி கிளம்பி வந்தார்!''

''அவர் புதிய தலைமைச் செயலகத்துக்கு வருவது ஒன்றும் புதிது இல்லையே?''

''சில நாட்களாக அவர் வராமல் இருந்தார். 'அங்க போய் என்னய்யா பண்றது? எதையும் பண்ணக் கூடாதுன்னுதான் தேர்தல் கமிஷன் சொல்லுதே?’ என்று கோபப்பட்டாராம். ஆனால், ஜெயலலிதா அறிக்கையைப் பார்த்ததும், ஆவேசம் அடைந்தவராக புதிய தலைமைச் செயலகத்துக்குச் சென்றார். ஆறாவது மாடியில், கான்ஃபரன்ஸ் ஹாலுக்குப் பத்திரிகையாளர்களை வரச் சொல்லிச் சந்தித்தார். 'இது காபந்து சர்க்கார் அல்ல. தொடர்ச்சியான அரசுதான். தேர்தல் முடிவு வந்த பிறகு, புதிய ஆட்சி அமையும் வரை இருக்கும் அரசுக்கே காபந்து சர்க்கார் என்று பெயர்’ என்று தத்துவார்த்த விளக்கம் கொடுத்த கருணாநிதி முகத்தில் சோகம் தென்பட்டது. '2ஜி வழக்குத் தொடர்பான இரண்டாவது குற்றப் பத்திரிகை தாக்கல் ஆகப்போகிறது. அதில் கனிமொழி, தயாளு அம்மாள் இருவரும் சேர்க்கப்பட இருக்கிறார்கள்’ என்ற தகவல்தான் கருணாநிதியைச் சோர்வடைய வைத்தது!''

''தயாளு அம்மாள் பெயர் அதில் இடம் பெற​வில்லையே?''

''கருணாநிதி நிருபர்களைச் சந்தித்தபோது, குற்றப் பத்திரிகை தாக்கல் ஆகவில்லை. 'தயாளு, கனிமொழி பெயர் சேர்க்கப்பட்டால், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேறுமா?’ என்று ஒரு பெண் நிருபர் கேட்டதுதான் தாமதம்... கருணாநிதி கொந்தளித்தார். 'சில பெண்கள் இதயம் இல்லாமல் இருக்கிறார்கள். நீயுமாம்மா?’ என்றாராம். ஆனால், அவருடைய பேட்டி டெக்ஸ்ட் அனைத்துப் பத்திரிகைகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டபோது, 'பெண்ணாக இருந்துகொண்டு இது மாதிரிப் பேசக் கூடாது. பெண் நிருபர் இப்படி இதயத்தைத் தூக்கி எறிந்துவிட்டுப் பேசக் கூடாது’ என்று கனிவாக மாற்றப்​பட்டது.''

''இதயம் இல்லாத பெண் என்று யாரை கருணாநிதி சொல்கிறார்?''

''குற்றப் பத்திரிகையில் தயாளு, கனிமொழி ஆகிய இருவர் பெயரையும் சேர்க்க வேண்டாம் என்று இறுதி வரைக்கும் தி.மு.க. மன்றாடியதாம். 'தேர்தல் முடிவு வரும் வரைக்காவது தள்ளிவையுங்கள்’ என்றும் சொல்லப்பட்டதாம். 'வாக்குப் பதிவு நடக்கும் வரை தள்ளிவைக்கச் சொன்னதால், கனிமொழி, தயாளு பெயரைச் சேர்க்கவில்லை. இப்போது, மீண்டும் தள்ளிவைக்கச் சொல்வது நல்லது அல்ல’ என்று சி.பி.ஐ. அதிகாரிகள் சினம் கொண்டார்களாம். 'காமன் வெல்த் ஊழலில் சம்பந்தப்பட்ட கல்மாடியைக் கைது செய்யாமல் ஆ.ராசாவைக் கைது செய்தீர்கள். இப்போது என் மனைவி, மகளையும் கைது செய்வீர்களா? தி.மு.க-வுக்கு மட்டும் ஓரவஞ்சனையா?’ என்று கேட்டாராம் கருணாநிதி''

''இந்தத் தகவலை டெல்லிக்குக் கொண்டுசென்றது யார்?''

''மூன்று நாட்களுக்கு முன்னதாக டி.ஆர்.பாலு டெல்லி சென்றார். பிரதமரையும், பிரணாப் முகர்ஜி​யையும் சந்தித்தார். கருணாநிதியின் கோபத்தை, முழுமையாக பாலு கொட்டினாராம். 'உச்ச நீதிமன்றம் மேற்பார்வையில் நடக்கும் வழக்கு என்பதால், எங்களால் ஓர் அளவுக்கு மேல் எதையும் செய்ய முடியாது. யாரையும் காப்பாற்ற முடியாது’ என்று சி.பி.ஐ. தரப்பில் சொல்லப்பட்டதையே, காங்கிரஸ் மேலிடம் தனது பதிலாகச் சொன்னது. கருணாநிதிக்கு பதில் சொல்வது மாதிரியே காலையில் சுரேஷ் கல்மாடியைக் கைது செய்தனர். மதியம் குற்றப்பத்திரிகையில் கனிமொழியைச் சேர்த்தார்கள்.''

''தயாளு அம்மாள்தான் விடுபட்டுள்ளாரே?''

''அவரைப் பொறுத்தவரையில், சி.பி.ஐ. அதிகாரிகளிடம் இரண்டுவிதமான கருத்துகள் இருந்தனவாம். 'எனக்கு எதுவும் தெரியாது. சரத்குமார் சொன்ன இடத்துல கையெழுத்துப் போட்டேன். நீங்க சொல்ற போர்டு மீட்டிங்குல இதுவரைக்கும் கலந்துகிட்டதுகூட கிடையாது’ என்பதை உண்மையான வார்த்தைகளாக சில அதிகாரிகள் நம்ப... 'அவரது வயதைக் காரணமாகச் சொல்லலாம்’ என்று சி.பி.ஐ. வக்கீல்கள் ஆலோசனை சொன்னார்கள். இதைவைத்தே தயாளு பெயர் நீக்கப்​பட்டதாகத் தகவல்!''

''இந்தச் செய்தி பரவியபோது, கருணாநிதி எங்கே இருந்தார்?''

''சி.ஐ.டி. காலனி வீட்டில்! ராஜாத்தி அம்மாள், கனிமொழி இருவரும் உடன் இருந்தனர். 'உடனே, மத்திய அமைச்சர்கள் அத்தனை பேரையும் பதவியை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள்’ என்று கருணாநிதி கோபப்பட்டதாகவும் சொல்கிறார்கள். 'அமைதியாக முடிவெடுங்கள். தேர்தல் முடிவுகள் வந்த பிறகு யோசிக்கலாம்’ என்று ஸ்டாலின் சமாதானப்​படுத்தினாராம். அதற்குள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு ஆகிய மூவர் அணி வந்துவிட்டது. 'வக்கீல்​களின் ஆலோசனையை வாங்குங்கள்’ என்று கருணாநிதி சொல்லி ஒரு மணி நேரம் கடந்தது. உடனேயே, டெல்லியில் இருந்து அடுத்த தகவல்... 'மே 6-ம் தேதி கனிமொழி ஆஜராக வேண்டும்’ என்று! 'அரெஸ்ட் பண்ணிடுவாங்களா?’ என்று பதறினாராம் ராஜாத்தி.''

''என்ன ஆகும்?''

'' 'குற்ற உடந்தை’ என்ற கடுமையான வார்த்தையைக் கனிமொழி மீது சி.பி.ஐ. பயன்படுத்தி உள்ளது. சிக்கலில் இருந்து அவர் விடுபடுவதற்கு, ஆ.ராசாவைப்போலவே பல மாதங்கள் ஆகலாம். கருணாநிதிக்கு வைக்கப்படும் ஆசிட் டெஸ்ட் இது என்று டெல்லி மீடியா வட்டாரம் பரபரக்கிறது. ஆனாலும் 2ஜி குற்றப்பத்திரிகை விவகாரத்தை எதிர்கொள்ள தி.மு.க-வும் தயாராகி விட்டது. வரும் 27-ந்தேதி உயர்மட்ட செயல்திட்டக் குழு கூட்டத்தை அவசரமாக கூட்டியிருக்கிறது தி.மு.க. காங்கிரசுடனான கூட்டணிப் பேச்சு வார்த்தையில் முரண்பட்ட தி.மு.க. கடந்த மார்ச் 4-ந்தேதி தான் உயர்மட்டக்குழு கூட்டத்தை கூட்டி 'செக்’ வைத்து பின்வாங்கியது. ஒன்னறை மாத இடைவெளியில் மீண்டும் இப்படி ஒரு கூட்டத்தைக் கூட்டியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது'' என்றபடியே ஜூட் விட்டார் கழுகார்!  

ழுகார் உள்ளே நுழையும்போது, நம் மேஜையில் 'நமது எம்.ஜி.ஆர்.’ நாளிதழ் கிடந்தது.
 

Comments  

 
+1 #20 \sraju.cdms 2011-05-07 21:55
:-x :-x :-x :-x :-x :-x :-x :-x :-x :-x :-x :-x :eek: :eek: :eek: :eek: :eek: :D :D :D :D :D :lol: :lol: :lol: :lol: :lol: :-) :-) :-) ;-) ;-) ;-) 8) 8) 8) 8) 8) :-| :-| :-| :-* :-* :-* :-* :-* :oops: :oops: :sad: :sad: :cry: :o :o :o :-? :-x :eek: :zzz :P :roll: :sigh: svenugopal
Quote
 
 
0 #19 P. Chellapandi 2011-05-06 08:25
Atleast Raja will have company in his prison cell now!!
Quote
 
 
0 #18 ganesh g iyer 2011-05-04 16:29
இதயம் இல்லாத பெண் என்று யாரை கருணாநிதி சொல்கிறார்? சோனியாவைத்தான்....
Quote
 
 
0 #17 Pandiyan 2011-05-04 02:36
Idhu than da aapu !!!
Quote
 
 
0 #16 Thangavel M 2011-05-02 12:16
சவுக்கு, மகள் என்ன தான் தப்பிக்க மனைவியையும் காட்டி கொடுக்க தயங்க மாட்டார்கள் இன்றைய ஆட்சியாளர்கள்
Quote
 
 
+4 #15 vennai 2011-05-01 22:24
A caste from Andhira or migrants, they do business like this only whether wife or female in family -- MALE wants money only. Tamilinan simple says MAMA....
you understand what caste and whom i am saying.. NADAVAI AVILTHU PAAR..

Quoting Thanmana Tamilan:
மன்மோகன் சிங்கும், கருணாநிதியும் பேசிக் கொள்கிறார்கள்

மன்மோகன் : கலைஞர்ஜி உண்மைய சொல்லுங்க, அந்த 2 லட்சம் கோடி எங்க?

கலைஞர் : சொல்றேன்பா, இவ்வளவு நாளா என் மனசில பூட்டி வச்சிருக்கற குடும்ப ரகசியத்தை சொல்றேன், இது கடுகளவு வெளிய கசிஞ்சாலும் என்ன நீங்க உயிரோடவே பார்க்க முடியாது..!

மன்மோகன் : ஒக்கே சொல்லுங்க..

கலைஞர் : ரொம்ப நாளா கனிமொழிய ராசா வச்சிருக்கறதா ஊருக்குள்ள ஒரு வதந்தி, அத கேட்டு கோவப்பட்ட நான் அவன் சட்டைய புடிச்சி, ஏண்டா என் மகள நீ வச்சிருக்கியாடா ன்னு கேட்டேன், அவன் சிம்பிளா ஒரு பதில சொன்னான்

மன்மோகன் : என்ன பதிலு?

கலைஞர் : கனிய நான் வெச்சுக்கறேன், ’’மணி’’ய நீ வெச்சுக்க...ன்னு சொன்னான்.

மன்மோகன் ; அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?

கலைஞர் : பட் அந்த டீலிங் எனக்கு புடிச்சிருந்த்த ு, நானும் ஒத்துக்கிட்டேன் .
Quote
 
 
0 #14 abdul 2011-05-01 18:36
INNUM ETHANA NAALAIKU DA VITTU VAIKA PORANGA.. INDHA OOLAL NAYGALA ELLAM ADICHU THERUVULA SEMBULLI KUTHI KALUDHA MELA ETHAMA ARIKKAI VUDRANUNGALAM..

SEIZE ALL THE BELONGINGS FROM KARUNA FAMILY.. YAR THAN IDHA SEYVANGALO..
Quote
 
 
0 #13 Kanian 2011-05-01 14:59
இன்று (1 May , 2011 ) காலை சென்னை மரினா கடற்கரையில் ஊழலுக்கு எதிராக ஜன லோக் பால் சட்டம் கொண்டு வர அரசாங்கத்தை நிர்பந்திக்க மாபெரும் மனித சங்கலி போராட்டம் நடந்தது. 5000 க்கும் அதிகமான பொதுமக்கள் இதில் கலந்து கொண்டார்கள். படங்கள் இந்த link இல் உள்ளன.

http://www.facebook.com/media/set/fbx/?set=oa.158591844204882

http://www.flickr.com/photos/62358923@N07/show/
Quote
 
 
+5 #12 vijayarajanm 2011-05-01 12:21
எங்கள் ஊரில் ஒரு கதை உண்டு.... ஓருவன் தேங்காய் திருடுவதற்காக மரத்தின் மீது ஏறினான், அப்பொழுது காவல்காரன் பார்த்து விட்டான், உடனே "ஏண்டா மரத்தின் மீது ஏறினாய் ?" என்று கேட்டான்.. அதற்கு திருடன் "புல்லு புடுங்க ஏறினேன்.." என்று சொன்னான்...

உடனே காவல்காரன் "தென்னை மரத்தில் எப்படியடா புல் இருக்கும் ?" என்று கேட்டான்..
அதற்கு திருடன் "அதனால தாங்க கீழே இறங்கறேன் " என்று சொன்னான்...

அது போல "ஏதுடா 214 கோடி பணம் ?" என்று கேட்டால் "டிபீ ரியாலிட்டி கம்பெனியிடம் பணம் கடன் வாங்கினேன்" என்கிறான் "ஏண்டா டிபீ ரியாலிட்டி கம்பெனி உனக்கு பணம் கொடுத்தான் ?" என்று கேட்டால் "அதுதான் பணத்தை திருப்பி கொடுத்திட்டேன்" என்று சொல்கிறான்
Quote
 
 
+2 #11 ம பொன்ராஜ் 2011-05-01 00:52
சுப்ரீம் கோர்ட்டில்:

நீதிபதி: உனக்கு 170000 கோடி அபராத தொகை, இல்லை என்றால் 100 வருட கடுங்காவல் சிறை. எது வேணும்?
கருணாநிதி: எனக்கு முதல்ல சொன்ன 170000 கோடியே கொடுத்துருங்க எசமான்....!!!
Quote
 
 
0 #10 ம பொன்ராஜ் 2011-05-01 00:46
//'2ஜி வழக்குத் தொடர்பான இரண்டாவது குற்றப் பத்திரிகை தாக்கல் ஆகப்போகிறது. அதில் கனிமொழி, தயாளு அம்மாள் இருவரும் சேர்க்கப்பட இருக்கிறார்கள்’ என்ற தகவல்தான் கருணாநிதியைச் சோர்வடைய வைத்தது!//நான் கூட ஏதோ இந்தியா ஐ.நாவின் அறிக்கையை எதிர்த்து இலங்கைக்கைய மீண்டும் காப்பாற்றி 'தமிழன் எல்லாம் எங்களுக்கு மயிருக்கு சமம்' என்று டெல்லி கொக்கரித்ததை நினைத்து தான் கருணாநிதி சொர்ந்துவிட்டார ோ என்று ஒரு கணம் அதிர்ந்து விட்டேன். நல்லவேளை. அப்படி ஏதும் நடக்கவில்லை. கருணாநிதியா கொக்கா?
Quote
 
 
0 #9 Subramanian 2011-04-29 16:06
itharkakathan anraikke JPC kulu amaikka vaendam enru sonnom. Ketteengala. PAC kku naerntha gathiye patheengala?
Quote
 
 
+22 #8 Thanmana Tamilan 2011-04-29 12:29
மன்மோகன் சிங்கும், கருணாநிதியும் பேசிக் கொள்கிறார்கள்

மன்மோகன் : கலைஞர்ஜி உண்மைய சொல்லுங்க, அந்த 2 லட்சம் கோடி எங்க?

கலைஞர் : சொல்றேன்பா, இவ்வளவு நாளா என் மனசில பூட்டி வச்சிருக்கற குடும்ப ரகசியத்தை சொல்றேன், இது கடுகளவு வெளிய கசிஞ்சாலும் என்ன நீங்க உயிரோடவே பார்க்க முடியாது..!

மன்மோகன் : ஒக்கே சொல்லுங்க..

கலைஞர் : ரொம்ப நாளா கனிமொழிய ராசா வச்சிருக்கறதா ஊருக்குள்ள ஒரு வதந்தி, அத கேட்டு கோவப்பட்ட நான் அவன் சட்டைய புடிச்சி, ஏண்டா என் மகள நீ வச்சிருக்கியாடா ன்னு கேட்டேன், அவன் சிம்பிளா ஒரு பதில சொன்னான்

மன்மோகன் : என்ன பதிலு?

கலைஞர் : கனிய நான் வெச்சுக்கறேன், ’’மணி’’ய நீ வெச்சுக்க...ன்னு சொன்னான்.

மன்மோகன் ; அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?

கலைஞர் : பட் அந்த டீலிங் எனக்கு புடிச்சிருந்த்த ு, நானும் ஒத்துக்கிட்டேன் .
Quote
 
 
+1 #7 thamizhan 2011-04-29 11:35
Savukku Sir, I think all these are waste of time . All the suspects should be arrested and then questioned. If one person gives a complaint that his item is missing in his house and he suspects a person immediately that person is interrogated. IN this case, kanimozhi, karuna, dayalu, rajathi, raja - why should not they be questioned. They claim they are innocent and why they are afraid to face it. When raja was arrested, karuna called for meeting and praised raja for his good works as him minister, now he called for meeting and praised for good works of kani. How long Kuppusamy is there in the party and others are in te party ? why no posting or minister ? during the five year period, ponmudi, nehru, samy, suresh rajan, parithi, poongothai have amazed wealth to the extent of Rs.3000 + crores individually and ponmudi more than 5000 crores and nehru more than 10000 crores.
why these people cannot be arrested. Scam kings thurai murugan and arcot veerasamyhas amazed more than 10000 crores. When baalu swindled more than 12,000 crores in sethu samuthiram, where is law to capture him. they are running a good power plant in china where his son is a director ? The entire DMK should be interrogated, arrested ad put in jail in tamilnadu interest and leave the state with a good governor like alexander or like Mr.Sagayam - collector of madurai. No political party should rule for next 5 years
Quote
 
 
0 #6 jaya 2011-04-29 10:26
Quoting நாய் சேகர்:
பிஏசி அறிக்கை அடுக்கும் குற்றச்சாட்டுகள ்...

பிரதமரின் அறிவுறுத்தலை அலட்சியப்படுத்த ியது, ஏலம் முறை குறித்த உண்மைகளை உள்நோக்கத்துடன் மறைத்தது, பிரதமரை தவறாக வழிநடத்தியது, விதிகள் பலவற்றை மீறியது, தன்னிச்சையாகவும ் சட்ட விரோதமாகவும் செயல்பட்டது உள்ளிட்ட முக்கியக் குற்றச்சாட்டுகள ் பலவும் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மீது தொடுத்திருந்தது , பிஏசி வரைவு அறிக்கை.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக பிரதமருக்கு முறையான ஆலோசனைகளை வழங்காதது, கண் முன் நடந்த தவறுகளை கைகட்டி வேடிக்கைப் பார்த்தது என பிரதமர் அலுவலகம் மீது கடுமையான குற்றச்சாட்டுகள ் வைக்கப்பட்டிருந ்தது.

அதேபோல், ராசா தன் விருப்பம்போல் செயல்படுவதற்கு பச்சைக்கொடி காட்டியதாக பிரதமரையும் பிஏசி அறிக்கை விமர்சித்திருந் தது.

மேலும், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இழப்பு ஏற்பட்ட பிறகு, அதுகுறித்து நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்காமல ், இது முடிந்து போன பிரச்னை என்பதால் விட்டுவிடாலம் என பிரதமருக்கு கடிதம் வாயிலாக அப்போதைய நிதியமைச்சர் குறிப்பிட்டது மிகவும் துரதிஷ்டவசமானது என்று ப.சிதம்பரத்தையும் கடுமையாக சாடியிருந்தது பிஏசி அறிக்கை.

முன்னதாக, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளால் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட து.

அதன் தொடர்ச்சியாக, இந்த முறைகேடு குறித்து, பாரதிய ஜனதா மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்க து.

ennathan itharkku theervu sekar?
Quote
 
 
+8 #5 பிரதாப் குமார் 2011-04-29 09:23
நீங்க நில ஆக்கிரமிப்பு நடத்த ஊரில் உள்ள மக்களின் மனைவி மகள்களை சித்தரவதை செய்தப்ப உன்னுடைய இதயத்தை எங்க வச்சிருந்த துரோகி கருணா? உனக்குன்னு வரும்போது வலிக்குதோ? சாவுடா.
Quote
 
 
-1 #4 latha 2011-04-29 07:17
vikatan manja pathirikai agi pala mathangal agirathu.Enraikku vijayakanthin pirachara comediai vakkalathu vangiatho anreke urithianathu.Onru mattum nitchaiyam win panna povathu DMK than.
Quote
 
 
+11 #3 நாய் சேகர் 2011-04-28 19:20
போங்கடா நீங்கலும் பொதுக்கணக்கு குழு விசாரணையும்! இப்படியெல்லாம் வேலை வெட்டியில்லாமல் அறிக்கைவந்தால் அதை 2ஜி பணத்தை வைத்தே வெளிவரவிடமாட்டோ ம்னுதானே ஜெபிசி, பிஏசி எல்லாம் வேண்டாம்னு சொன்னோம். கேட்டட்தானே! வீட்ல குழந்தை பொறந்தாலே எதிர்கட்சிக்கார ன் சதின்னு சொல்ற ஆள் இருக்கும் வரைக்கும் எங்கள ஒன்னும் செய்யமுடியாது. 1.75 லட்சம் கோடி பணத்தோட ஜெபிசி, பிஏசி செலவும் சேர்ந்து நஷ்டம்.
Quote
 
 
+2 #2 நாய் சேகர் 2011-04-28 19:09
பிஏசி அறிக்கை அடுக்கும் குற்றச்சாட்டுகள ்...

பிரதமரின் அறிவுறுத்தலை அலட்சியப்படுத்த ியது, ஏலம் முறை குறித்த உண்மைகளை உள்நோக்கத்துடன் மறைத்தது, பிரதமரை தவறாக வழிநடத்தியது, விதிகள் பலவற்றை மீறியது, தன்னிச்சையாகவும ் சட்ட விரோதமாகவும் செயல்பட்டது உள்ளிட்ட முக்கியக் குற்றச்சாட்டுகள ் பலவும் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மீது தொடுத்திருந்தது , பிஏசி வரைவு அறிக்கை.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக பிரதமருக்கு முறையான ஆலோசனைகளை வழங்காதது, கண் முன் நடந்த தவறுகளை கைகட்டி வேடிக்கைப் பார்த்தது என பிரதமர் அலுவலகம் மீது கடுமையான குற்றச்சாட்டுகள ் வைக்கப்பட்டிருந ்தது.

அதேபோல், ராசா தன் விருப்பம்போல் செயல்படுவதற்கு பச்சைக்கொடி காட்டியதாக பிரதமரையும் பிஏசி அறிக்கை விமர்சித்திருந் தது.

மேலும், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இழப்பு ஏற்பட்ட பிறகு, அதுகுறித்து நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்காமல ், இது முடிந்து போன பிரச்னை என்பதால் விட்டுவிடாலம் என பிரதமருக்கு கடிதம் வாயிலாக அப்போதைய நிதியமைச்சர் குறிப்பிட்டது மிகவும் துரதிஷ்டவசமானது என்று ப.சிதம்பரத்தையும் கடுமையாக சாடியிருந்தது பிஏசி அறிக்கை.

முன்னதாக, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளால் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட து.

அதன் தொடர்ச்சியாக, இந்த முறைகேடு குறித்து, பாரதிய ஜனதா மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்க து.
Quote
 
 
+7 #1 jaya 2011-04-28 17:07
பண்ணறது எல்லாம் பண்ணிவிட்டு கொள்ளை அடித்துவிட்டு இப்போ விசாரணை என்று வரும்போது எனக்கு தெரியாது.. சரத் குமார் இ கேளுங்கள் என்று சொல்லுவது நல்லா இல்லை. மேலும்.. அடிச்ச பணத்தை எல்லாம் திரும்ப கொடுத்துவிட்டால ் விட்டுவிடலாம். தண்டனை குறைய வைப்பு இருக்கு.இவனுங்க எங்கே இதுவரை திரும்ப கொடுதிருக்காங்க .?அப்பா சுப்றேமே கோர்ட் இல் என்ன சொல்லுகிரர்களோ அதை எட்ட்ருகொல்லுங் கள்
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 107 விருந்தினர்கள் மற்றும் 1 உறுப்பினர்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

தமிழ்லீடர்

tamilleader

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday5184
mod_vvisit_counterYesterday9838
mod_vvisit_counterThis week57921
mod_vvisit_counterLast week67096
mod_vvisit_counterThis month176729
mod_vvisit_counterLast month297247
mod_vvisit_counterAll days8392457