முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
ஒரு குடும்பம் வளர்ச்சி பெற, 6 கோடி குடும்பங்கள் அவஸ்தை பட வேண்டுமா - ஜெயலலிதா அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 0
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
வெள்ளிக்கிழமை, 01 ஏப்ரல் 2011 07:54

எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பதுதான் கருணநிதியின் தாரக மந்திரம் என அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா கூறினார்.

 

வேலூர் கோட்டைவெளி மைதானத்தில் அதிமுக, தேமுதிக, இந்திய குடியரசுக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வியாழக்கிழமை அவர் பேசியது:

 

இத்தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்திற்காக மட்டும் நடைபெறும் சாதாரண தேர்தல் அல்ல. உங்களுக்கு விடுதலை பெற்றுத் தரப்போகும் தேர்தல். மக்களை வெகுவாகப் பாதித்துள்ள விலைவாசி உயர்வுக்கு காரணம் கருணாநிதிதான்.

 jaya34309483

அவர் அரிசி கடத்தலை ஊக்குவித்தார், பதுக்கலுக்கு பக்கபலமாக இருந்தார். டீசல், பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணமாக இருந்தார். அதனால்தான் ரூ.12-க்கு விற்ற சர்க்கரை ரூ. 35-க்கும், ரூ. 28-க்கு விற்ற துவரம் பருப்பு ரூ. 90-க்கும், ரூ. 35-க்கு விற்ற புளி இன்று ரூ. 110-ஐயும் நெருங்கியுள்ளது.

 

மணல் கொள்ளை: கடந்த 5 ஆண்டுகளில் மணல் கொள்ளை தமிழகம் முழுதும் அமோகமாக நடந்து வந்துள்ளது. இன்னமும் நடைபெறுகிறது. இதனால் மூலம் கருணாநிதி குடும்பத்தினர் நாட்டையே கொள்ளையடித்து வருகின்றனர்.

 

ரூ. 2500-க்கு விற்ற மணல் இன்றைக்கு ரூ. 13 ஆயிரத்தையும், ரூ. 150-க்கு விற்ற

 

சிமென்ட் ரூ. 280-க்கும், ரூ. 3-க்கு விற்ற செங்கல் ரூ. 6-க்கும் விற்கப்படுகிறது. இதனால் நீங்கள் இனி கனவில்தான் வீடு கட்ட முடியும்.

 

மின்வெட்டு: மின்வெட்டால் தமிழகம் தொழில், விவசாயத்தில் பாதிப்பை சந்தித்து வருகிறது. பொருளாதாரத்தில் வீழ்ச்சி கண்டு வருகிறது. வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிவிட்டது.

 

சட்டம், ஒழுங்கு இல்லாமல் போய்விட்டது. தமிழ்நாட்டில் நடைபெறுவது ஆட்சியே அல்ல. ஒரு ரௌடி கும்பல் தமிழக மக்களை அடக்கி ஆள்கிறது. காவல்துறை கருணாநிதி குடும்பத்தினரின் ஏவல்துறையாக மாறிவிட்டது. மக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.

 

ஸ்பெக்ட்ரம் ஊழல்: எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பதுதான் கருணாநிதியின் தாரக மந்திரம். தமிழ்நாட்டின் கடன் ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் பெருகிவிட்டது. ஆனால், ஸ்பெக்ட்ரம் ஊழலில் மட்டும் கருணாநிதி குடும்பத்தினர் அடித்த கொள்ளை 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய். கருணாநிதி குடும்ப தொலைக்காட்சிகள் அனைத்தும் இந்த ஊழல் பணத்தில் இருந்துதான் ஆரம்பிக்கப்பட்டன.

 

இந்தப் பணம் அரசுக்கு கிடைத்திருந்தால் நாடு வளம் பெற்றிருக்கும், மக்கள் வளம் பெற்றிருப்பீர்கள். இப்போது வளம் பெற்றிருப்பது கருணாநிதி குடும்பம் மட்டும்தான். நாட்டிலேயே மக்கள் பணத்தை சுருட்டி தன் மக்களை கோடீஸ்வரர்களாக ஆக்கிய ஒரே முதலமைச்சர் கருணாநிதிதான்.

 

ஸ்பெக்ட்ரம் ஊழலால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. காலாவதியான மருந்துகள் விற்பனை, கள்ள லாட்டரி சீட்டு விற்பனை என பலவழிகளில் கருணாநிதி குடும்பத்துக்கு பணம் சென்றுகொண்டே இருக்கிறது. அனைத்து அரசுத் திட்டங்களிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது.

 

கருணாநிதி குடும்பம் இன்றைக்கு ஆசியாவிலேயே பணக்கார குடும்பமாக ஆகிவிட்டது. தன் குடும்பம் உலக பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதுதான் கருணாநிதியின் தற்போதைய இலக்கு.

 

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி மக்களாட்சி அல்ல. ஒரு குடும்ப ஆட்சி. ஒரு குடும்பம் தொடர்ந்து வளம் பெற 6 கோடி குடும்பங்கள் அவதிப்பட வேண்டுமா என்றார் ஜெயலலிதா.

 

Comments  

 
0 #7 rocket raja 2011-04-02 11:55
Vote for ADMK!!!!!
Congress down down.. DMK ozhiga...
Quote
 
 
0 #6 KK 2011-04-01 17:00
So far Vkatan,Kumudam reporter,Outloo k-MRDA,Headlines today- Marg, Asianet-Cfore(full details not known),Loyola college have predicted AIADMK victory with seats ranging from 144 to 175 and more
Nakkheran has predicted 160 seats for DMK
Looks like People have made up their mind and as days roll by momentum will shift to Winning alliance.

Saidai Duraiswamy is giving tought fight to Stalin and in Tiruvarur Jaya drew massive crowd .
Some efforts are on to bring some closure in Bangalore court case to put pressure on Jayalalitha. Also Raja may come on bail and Kani's chargesheet may be delayed.But nothing is going to help as the people want change
Quote
 
 
+4 #5 jaya 2011-04-01 16:03
அம்மா போகும் இடம் எல்லாம் ஒரே கூட்டம்... பெண்கள் ஆர்வமுடம் கேட்கிறார்கள். அண்ணா நகர் ஆர்ச்சு பக்கம் இன்று போனேன் நெல்சன் மாணிக்கம் ரோடு வரை ஒரே பெண்கள் கூட்டம் .. நல்லா வரவேற்ப்பு . பூரண கும்பத்துடன். நல்லா வரவேற்ப்பு.திமுக கூட்டம் சும்மா குவர்த்டருக்கும ் காசுக்கும் கூடுது.. விளைவசிதான் இன்று முக்கிய பிரச்சினை . பெட்ரோல் அநியாயமாக 65 ரூபா. எல்லா பணனமும் இத்தாலிக்கு போகுது..
Quote
 
 
-7 #4 MDMK 2011-04-01 14:14
Nee mattum niyayama...neeyum oru kudumba aatchi dhaan ( sasikala).. nee thiruntha povadhu illai..
Quote
 
 
0 #3 HARI 2011-04-01 14:06
SAVUKKU AVARGAL THAMILAGA MUTHALVARUDAYA THARPOTHAYA KUDUMBA SOTTHIN MOTTHA MATHIPEEDU PATRI ORU KATTURAI ELUTHINAL NANDRAGA IRRUKUM.
Quote
 
 
0 #2 நாய் சேகர் 2011-04-01 11:50
He is never ever qualified to become CM, all it happens because of you. Until 1996, how Mannargudi mafia acted, many of us know, but still she is with you and influencing your most of decions. We don't know will she going to repeat the 91-96 trend. Second, your basic characteristic is not changed that clearly shown in the result. It is not at all a right decision that you lost MDMk who was with you for longer period. However we have a hope that you are better administartor than Karunanidhi and you have good intention to do better for the people. You don't have family, but your friend has one. People want remove entire Karunanidhi and his family, unfortunately you didn't use this opportunity this time. But still you have brighter chance to win, but how are you going to rule, that is milion dollar question. Hope you repeat 2001-06 rule with few exceptions and without mannarkudi maafia influence. ALL THE BEST!
Quote
 
 
+2 #1 பிரபல ஜோதிடர் 2011-04-01 10:20
புகைப்படம் மிகவும் அருமையாக உள்ளது. எங்க இருந்துதான் சவுக்குக்கு ஸ்டில்லு கெடைக்கோ தெரியலப்பா. நல்ல ரசனை உள்ள போட்டோ க்ராபருங்க. ஸ்டில் எல்லாமே நல்லா பக்காவான க்லாரிட்டியோட இருக்குப்பா.

இந்த தேர்தலில் அதிமுக தான் நிச்சயம் ஜெயிக்கும். என்ன நம்ப முடியவில்லைதானே . அப்டின்னா இங்க http://saamiyaar.blogspot.com/2011/03/9.html வாங்க. ப்ளீஸ் வாங்க.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 83 விருந்தினர்கள் மற்றும் 1 உறுப்பினர்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

தமிழ்லீடர்

tamilleader

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday5147
mod_vvisit_counterYesterday9838
mod_vvisit_counterThis week57884
mod_vvisit_counterLast week67096
mod_vvisit_counterThis month176692
mod_vvisit_counterLast month297247
mod_vvisit_counterAll days8392420