முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
கருத்துக் கணிப்புகளில் முடிவு: அதிமுக கூட்டணி அமோக வெற்றி அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 5
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
வெள்ளிக்கிழமை, 01 ஏப்ரல் 2011 07:43

 

தமிழ்நாடு சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக - தேமுதிக - கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணி பெருவாரியான மக்களின் ஆதரவுடன் அமோக வெற்றி பெறும் என்று இந்தியா டுடே - ஹெட்லைன்ஸ் டுடே - மெயில் டுடே - ஓஆர்ஜி ஆகியவை நடத்திய கருத்துக் கணிப்பும் அவுட் லுக் வார இதழும் எம்டிஆர்ஏ அமைப்பும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பும் தெரிவிக்கின்றன.

 

23127328

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும் கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் ஆட்சியைப் பிடிக்கும், அசாமில் எந்தக் கட்சிக்கும் அணிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நிலைமை ஏற்படும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

கடந்த சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் கிடைத்த வாக்குகளை அடிப்படையாக வைத்தும், இப்போதைய பிரச்னைகள் தொடர்பாக சில கேள்விகளுக்கு வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட பதில்களின் அடிப்படையிலும் இந்தக் கணிப்பு நடைபெற்றுள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல், விலைவாசி உயர்வு, இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது, இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவது, சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு, அமைச்சர்கள் - அதிகாரிகள் நிலையில் காணப்படும் ஊழல் போன்ற காரணங்களால் திமுக தலைமையிலான கூட்டணியை எதிர்ப்பதாக கருத்துக்கணிப்பில் பங்கு கொண்டவர்களில் பெருவாரியானவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா டுடே நடத்திய கருத்துக் கணிப்பில் 51% பேர் ஊழலை முக்கிய பிரச்னையாகக் கருதுகின்றனர். 34% பேர் அது பெரிய பிரச்னை இல்லை என்கின்றனர்.

முதல்வர் பதவிக்கு ஏற்றவர் ஜெயலலிதாவே என்று 37% பேரும் கருணாநிதியே என்று 34% பேரும் கருதுகின்றனர்.

கருணாநிதியின் அரசுதான் ஊழல் மிகுந்தது என்று 39% பேரும் ஜெயலலிதாவின் அரசுதான் ஊழல் அரசு என்று 21% பேரும் கூறினர்.

அலைக்கற்றை ஊழல் குறித்து தெரியும் என்று 51% பேரும், தெரியாது என்று 17% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அலைக்கற்றை ஊழலில் கருணாநிதி குடும்பத்தாருக்குத் தொடர்பு உள்ளது என்று 38% பேரும் இல்லையென்று 26% பேரும் நினைக்கின்றனர்.

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது அந்த விவகாரத்தை சரியாகக் கையாள கருணாநிதி அரசு தவறிவிட்டது என்று 41% பேரும் சரியாகத்தான் கையாண்டது என்று 25% பேரும் கருதுகின்றனர். விலைவாசி உயர்வு தங்களை பாதிக்கும் பிரச்னை என்று 59% பேரும், இது முக்கிய பிரச்னையே இல்லை என்று 29% பேரும் கருத்து தெரிவித்தனர்.

2009 மக்களவை பொதுத் தேர்தலில் நடந்த வாக்குப்பதிவு அடிப்படையில் ஹெட்லைன்ஸ் டுடே ஓஆர்ஜியின் கருத்துக் கணிப்பு முடிவு வருமாறு:

2009 மக்களவை பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 37% வாக்குகள்தான் கிடைத்தன, திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு 43% வாக்குகள் கிடைத்தன.

இப்போது நடைபெறவுள்ள சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 50% வாக்குகளும் 164 தொகுதிகளும் கிடைக்கும்.

திமுக கூட்டணிக்கு 45% வாக்குகளும் 68 தொகுதிகளும் கிடைக்கும்.

மற்றவர்களுக்கு 5% வாக்குகளும் 2 தொகுதிகளும்தான் கிடைக்கும்.

மேற்கு வங்கம்: மேற்குவங்க மாநில சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணிக்கு 44% வாக்குகளும் 182 சட்டப் பேரவைத் தொகுதிகளும் கிடைக்கும். மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணிக்கு 43% வாக்குகளும் 101 தொகுதிகளும் கிடைக்கும். மற்றவர்களுக்கு 12% வாக்குகளும் 11 தொகுதிகளும் கிடைக்கும்.

கேரளம்: கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 48% வாக்குகளும் 96 தொகுதிகளும் கிடைக்கும்.

மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி முன்னணிக்கு 40% வாக்குகளும் 41 தொகுதிகளும்தான் கிடைக்கும். மற்றவர்களுக்கு 12% வாக்குகளும் 3 தொகுதிகளும்தான் கிடைக்கும்.

அசாம்: அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 32% வாக்குகளும் 46 தொகுதிகளும்தான் கிடைக்கும். அசாம் கண பரிஷத் கட்சிக்கு 25% வாக்குகளும் 38 தொகுதிகளும்தான் கிடைக்கும்.

பாஜகவுக்கு 12% வாக்குகளும் 15 தொகுதிகளும்தான் கிடைக்கும். அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 14% வாக்குகளும் 15 தொகுதிகளும்தான் கிடைக்கும். மற்றவர்களுக்கு 16% வாக்குகளும் 12 தொகுதிகளும் கிடைக்கும். எனவே அசாமில் இழுபறி நிலைமை ஏற்படும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

அவுட்லுக் - எம்டிஆர்ஏ கணிப்பு: 2011 சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் - பாமக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்று 37.4% பேரும் அதிமுக -தேமுதிக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்று 54% பேரும் மற்ற கட்சிகள் அல்லது அணி ஆட்சிக்கு வரும் என்று 8.6% பேரும் கருத்து தெரிவித்துள்ளனதமிழ்நாடு சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக - தேமுதிக - கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணி பெருவாரியான மக்களின் ஆதரவுடன் அமோக வெற்றி பெறும் என்று இந்தியா டுடே - ஹெட்லைன்ஸ் டுடே - மெயில் டுடே - ஓஆர்ஜி ஆகியவை நடத்திய கருத்துக் கணிப்பும் அவுட் லுக் வார இதழும் எம்டிஆர்ஏ அமைப்பும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பும் தெரிவிக்கின்றன. 

 

Comments  

 
-2 #6 Puthiyavan Raj 2011-04-03 19:16
ஜெயலலிதா ஆட்சியில் மக்கள் எலிக்கறி தின்றார்களே. இதையும் சொல்ல வேண்டியது தானே. மறுபடியும் இவர் ஆட்சிக்கு வந்தால் மக்கள் எலி மட்டுமல்ல ஊரும் ஜந்துக்கள் அனைத்தையும் தின்ன வேண்டிய கட்டாயம் ஏற்படும். 20 கிலோ மீட்டர் தூரம் உள்ள இடத்துக்கு ஹெலிகாப்டரில் செல்லும் இந்த அம்மா முதலமைச்சர் ஆனால் எப்படி திறம்பட ஆட்சி நடத்த முடியம்? தமிழ்நாட்டின் மொத்த வருமானமும் இவரின் பாதுகாப்புக்கும ், ஆடம்பர பவனிக்குமே செலவளிக்கப்படும ே. தமிழ் மக்கள் இவருக்கா ஒட்டு போடப்போகிறீர்கள ். நன்றாக சிந்தித்து ஓட்டுக்களை மக்கள் நலத்திட்டங்களை தொலை நோக்குப் பார்வையுடன் தெளிவுடன் செய்யும் கலைஞருக்கே போட்டு வெற்றி பெற செய்யுங்கள். அதுதான் நமக்கும் தமிழகத்துக்கும் நல்லது. அல்லது இந்த பூலோகத்தில் நரக வேதனையை அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்க ள் தாரளமாக ஜெயலிதாவுக்கு உங்கள் ஓட்டை போட்டு நீங்களே உங்கள் நல்வாழ்வில் ஓட்டை (பெரிசாக) போட்டுக்கொள்ளுங ்கள். நன்றி : அரபுத்தமிழன்
Quote
 
 
+4 #5 rishabas 2011-04-02 14:04
Quoting Puthiyavan Raj:
நல்ல நகைச்சுவை... ஒரு சிறு திருத்தம்... 'திமுக'வை 'அதிமுக' என்றும், 'அதிமுக'வை 'திமுக' என்றும் மாற்றி வெளியிட்டுவிட்ட ீர்கள் போல.


So... there are still some fools left who think that MK will win the election. Mr. Puthiyavan Raj.. wait until May 13 and you can join with Vadivel & kushboo who will regret for the rest of their lives, for their stupid decision of canvassing for MK.
Quote
 
 
0 #4 MDMK 2011-04-01 14:53
DMK & ADMK = kollai kootam..

MDMK= Kolgai udaya ore katchi..

Boycot the election..
Quote
 
 
+3 #3 loyola survey 2011-04-01 14:36
நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.கூட்டணி 105 தொகுதிகளிலும், தி.மு.க.கூட்டணி 70 தொகுகளிலும் வெற்றிபெறும் என்று சென்னை லயோலா கல்லூரி நடத்திய கருத்துக்கணிப்ப ு முடிவில் தெரிவிக்கப்பட்ட ுள்ளது.

லயோலா கல்லூரி தகவல் ஒளிபரப்புத்துறை யும் மக்கள் ஆய்வகம் என்ற அமைப்பும் இணைந்து சட்டமன்றத் தேர்தலில் மக்களின் ஆதரவு யாருக்கு என்று கருத்து கணிப்பு நடத்தியது. கருத்துக்கணிப்ப ு முடிவுகள் சென்னையில் இன்று வெளியிடப்பட்டது .

கருத்துக்கணிப்ப ு முடிவுகளை வெளியிட்டு மக்கள் ஆய்வகம் அமைப்பின் மாநில அமைப்பாளர் பேராசிரியர் ராஜ நாயகம் கூறியது....``நடை பெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் மக்களின் ஆதரவு யாருக்கு என்று அறியவும், எந்தகட்சி ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெருமான்பை பெரும் என்று கருத்துக்கணிப்ப ு நடத்தப்பட்டது.

கடந்த மார்ச் 21 முதல் 29 வரை தமிழகம் முழுவதும் 3.200 பேரிடம் கருத்து நடத்தியதில் அ.தி.மு.க.கூட்டணிக்கு 48.6 சதவீதம் பேரும் தி.மு.க.கூட்டணிக்கு 41.1 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர ்.

ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்று 51 சதவீதம் பேரும், கருணாநிதி முதல்வராக வேண்டும் என்று 36.7 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர ். இந்த கருத்துக் கணிப்பு அடிப்படையில் பார்க்கும் போது தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி 105 தொகுதிகளிலும், தி.மு.க. கூட்டணி 70 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்று தெரிகிறது.``என்று பேராசிரியர் ராஜநாயகம் தெரிவித்தார்.
Quote
 
 
+8 #2 kathir 2011-04-01 14:12
அ.தி.மு.க. வெற்றிபெற வேண்டும். அப்போதுதான் மக்களை காப்பாற்ற முடியும்.
Quote
 
 
-13 #1 Puthiyavan Raj 2011-04-01 10:20
நல்ல நகைச்சுவை... ஒரு சிறு திருத்தம்... 'திமுக'வை 'அதிமுக' என்றும், 'அதிமுக'வை 'திமுக' என்றும் மாற்றி வெளியிட்டுவிட்ட ீர்கள் போல.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 79 விருந்தினர்கள் மற்றும் 1 உறுப்பினர்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

தமிழ்லீடர்

tamilleader

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday5142
mod_vvisit_counterYesterday9838
mod_vvisit_counterThis week57879
mod_vvisit_counterLast week67096
mod_vvisit_counterThis month176687
mod_vvisit_counterLast month297247
mod_vvisit_counterAll days8392415