|
குஷ்புவின் குபீர் பிரசாரம்
மு.க.ஸ்டாலின், கனிமொழியின் பிரசாரப் பயணத்தில் விடுபட்டுப்போன
மதுரைக்குத் தி.மு.க. அனுப்பிவைத்த பிரசார பீரங்கி குஷ்பு!
முதல் பிரசாரக் களம் மதுரை என்பதால், மு.க.அழகிரி வீட்டுக்கு ஆசி வாங்க, 10 மணிக்கு தன் சகோதரருடன் ஹோண்டா சிஆர்-வி காரில் வந்து இறங்கினார் குஷ்பு. மணிக்கணக்கில் காத்திருந்த பத்திரிகையாளர்களுக்கு, இருவரது சந்திப்புக் காட்சியை போட்டோ எடுக்கக்கூட அனுமதி கிடைக்கவில்லை. அந்தக் கடுப்போ என்னவோ, வெளியே வந்த குஷ்புவிடம் எடுத்த எடுப்பிலேயே கற்புப் பிரச்னை குறித்துக் கேள்வி கேட்டார் ஒரு நிருபர். 'அது முடிந்து போன விஷயம். உச்ச நீதிமன்றமே தீர்ப்பு சொல்லியாச்சு!' என்று குஷ்பு பதில் சொல்லியும்... 'கற்பு குறித்த கருத்தால் பெண்கள் உங்கள் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். அது பிரசாரத்தில் எதிரொலித்தால்..?' என்று விடாப்பிடியாக நிருபர் கேட்க... கடுப்பாகி, 'நீங்க அ.தி.மு.க-காரரா?' என்று கருணாநிதி ஸ்டைலில் கோபமாகக் கேட்டுவிட்டுப் பிரசார வேனில் ஏறியவர், ஜெயலலிதாவைக் கிழிக்க ஆரம்பித்தார்.

அவரது பேச்சைக் கேளுங்கள்!
'எல்லாரும் நல்லா இருக்கீங்களா? தொடர்ந்து நல்லா இருக்கணும்னா, நீங்க வாக்களிக்க வேண்டிய சின்னம் உதயசூரியன். ஏன்னா, உங்களுக்காக உழைச்சு பல நல்ல திட்டங்களை கலைஞர் நிறைவேற்றி இருக்கார். இவ்வளவு நாளும் கொட நாட்டில் படுத்துத் தூங்கின அந்த அம்மா, தேர்தல் வந்ததும் மக்களுக்காகக் கவலைப்படுற மாதிரி நடிக்கிறாங்க. இன்ஸ்டன்ட் இட்லி, இன்ஸ்டன்ட் காபி மாதிரி திடீர் திடீர்னு ஆர்ப்பாட்டம் நடத்தினாங்க. உங்களை யாராவது ஏமாற்ற முடியுமா என்ன?
'அந்த அம்மா ரொம்ப மாறிட்டாங்க... முன்ன மாதிரி காலில் விழச் சொல்றதில்லை, மற்ற தலைவர்களையும் உட்கார வெச்சுப் பேசுறாங்க’ன்னு சிலர் சொன்னாங்க. ஆனா, கூட்டணிக் கட்சிக்காரங்களுக்கே தெரியாம 160 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களைத் தன்னிச்சையா அறிவிச்சு, 'நான் பழைய திமிர் பிடிச்ச, அகம்பாவம் பிடிச்ச ஜெயலலிதாதான்’னு நிரூபிச்சிட்டாங்க. அஞ்சு வருஷங்களா ஒண்ணாவே இருந்த ஒருத்தரைத் தூக்கி வெளியே எறிஞ்சிட்டாங்க. மக்களாகிய உங்களையும் தூக்கி எறியத் தயங்க மாட்டாங்க.
நாங்க எல்லாம் சினிமா கதாநாயகிகள். ஆனா, கலைஞரோட வாக்குறுதிகளே இந்தத் தேர்தலோட உண்மையான கதாநாயகி. சினிமாவில் கஷ்டமான காட்சியில் 'டூப்’ போடுவாங்க. ஆனா, அந்த அம்மா தேர்தலில் 'டூப்’ போடுறாங்க. சொந்தமாத் தேர்தல் அறிக்கை எழுதக்கூட நேரம் இல்லாத, பொறுமை இல்லாத, அக்கறை இல்லாத அவங்களுக்கா உங்க ஓட்டு?
கருவறை முதல் கல்லறை வரைக்கும் தி.மு.க-வோட திட்டங்கள் போய்ச் சேர்ந்திருக்கு. நீங்க கண்ணைக் கசக்கக் கூடாதுன்னு காஸ் அடுப்பும், பொழுதுபோக்குக்கு டி.வி-யும் கொடுத்திருக்கார் கலைஞர். அந்த அம்மா ஆட்சிக்கு வந்தா, டி.வி., அடுப்பு எல்லாத்தையும் புடுங்கிட்டுப் போயிடுவாங்க. மதுரையில் நான் பிரசாரத்தைத் தொடங்கக் காரணம், இந்த மண்ணோட 'தில்’லுதான். ஆண்டவனே வந்து பாட்டு எழுதினாக்கூட அதில் தப்பிருக்குன்னு தைரியமா சொல்றவங்க நீங்க. 'நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே’னு சொல்ற தைரியசாலிங்க. இந்த மண்ணுக்கு வந்ததும் எனக்கே அதிக தைரியம் வந்திருக்கு.
பத்துப் பதினைந்து வருஷங்களுக்கு முன்னாடி ஷூட்டிங்குக்காக மதுரைக்கு வந்தா, மீனாட்சியம்மன் கோயில், திருமலை நாயக்கர் மகாலைத் தவிர பார்க்கிறதுக்கு ஒண்ணும் இருக்காது. இப்பப் பாருங்க... பெரிய பெரிய கட்டடங்கள், பாலங்கள்னு மலேசியா மாதிரி இருக்கு மதுரை. காரணம் அழகிரி அண்ணன்தான்.
விஞ்ஞானத்தில் நியூட்டன் ஃபார்முலா, சினிமாவில் ரஜினி ஃபார்முலா மாதிரி தேர்தலில் அழகிரி அண்ணனோட ஃபார்முலாதான் சக்ஸஸ் ஃபார்முலா. தென் மண்டலத்தைத் தன் மண்டலமா மாத்தி, அப்புறம் பொன் மண்டலமா மாத்தின அழகிரி அண்ணனின் சின்னம் உதயசூரியன். கண்டிப்பா ஓட்டுப் போடுங்க. தேர்தல் முடிஞ்சதும் நன்றி சொல்ல கண்டிப்பா வருவேன். அப்ப உங்க வீட்டில்தான் சாப்பிடுவேன்... சரியா?' என்று வீதி வீதியாகச் சொல்லியபடியே சென்ற குஷ்பு, வெயில் உச்சிக்குப் போக ஓய்வுக்குக் கிளம்பினார். மாலையில் வேறு காஸ்ட்யூமில் அவரது பிரசாரம் மீண்டும் தொடர்ந்தது.
பள்ளி மாணவிகளிடம், 'உங்களுக்கு லேப் டாப் கம்ப்யூட்டர் தர்றதா தாத்தா சொல்லியிருக்கார். அதனால் அவருக்கே ஓட்டுப்போடணும்னு வீட்டில் சொல்லணும், சரியா செல்லம்?' என்றவர், தாய்க்குலத்தைப் பார்த்து, 'என்னை மாதிரி புசுபுசுன்னு குழந்தை பிறக்கணும்னா, கலைஞருக்கு ஓட்டுப் போடுங்க. கர்ப்பிணிப் பெண்களுக்கு பத்தாயிரம் கொடுக்கப் போறதா சொல்லியிருக்கார்...' என்று தமாஷாகப் பேசினார்.
ஆனால், பெண்கள் எல்லாரும் அவரது சேலை, பாசி மற்றும் கையில் பச்சை குத்தியிருந்ததையே ரசித்துப் பார்த்தனர். ஜாக்பாட் நிகழ்ச்சியில் விதவிதமாக ஜன்னல் ஜாக்கெட் அணிந்து வந்த குஷ்பு பிரசாரத்தில் ஏமாற்றிவிட்டாரே என்பது ஆண்களின் கவலை!
நன்றி ஜுனியர் விகடன் |
Comments
பத்துப் பதினைந்து வருஷங்களுக்கு முன்னாடி ஷூட்டிங்குக்காக மதுரைக்கு வந்தா, மீனாட்சியம்மன் கோயில், திருமலை நாயக்கர் மகாலைத் தவிர பார்க்கிறதுக்கு ஒண்ணும் இருக்காது. இப்பப் பாருங்க... பெரிய பெரிய கட்டடங்கள், பாலங்கள்னு மலேசியா மாதிரி இருக்கு மதுரை. காரணம் அழகிரி அண்ணன்தான்.
excuse me, does DMK do condom, contraceptive or some related business?
//நீங்க கண்ணைக் கசக்கக் கூடாதுன்னு காஸ் அடுப்பும், பொழுதுபோக்குக்க ு **டி.வி-யும்** கொடுத்திருக்கார ் கலைஞர்.//
After seeing TV seriels only people cry.
//'நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே’னு சொல்ற தைரியசாலிங்க..//
But Sivaperuman gave life back to old Nakkeeran. Azhagiri killed young workers of Dinakaran.
//என்னை மாதிரி புசுபுசுன்னு குழந்தை பிறக்கணும்னா, கலைஞருக்கு **ஓட்டுப்** போடுங்க//
any typo? spelling mistake? I remember Kushboo one fumed that she was shot with harmone injections at teen age to get her enormous (புசுபுசு) growth since her father wanted to make money on her.. Does DMK has any such plan to do this to female fetus?
Ippadiye pochunna,
avanga kuzhuthaiyum kusboo kuzhanthai -nu solluvanka pola
varathule 3 naaal kalai - iravu erandu velaium KUSHBOO IDLY supply panuvange.
ENDHA SCHEME INTRODUCE PANUBOTHU, KOLUKU MOLUKU KUSHBOOO , ayya avargaluku KUSHBOO IDLY OOOTI VIDUVAR ...ENDHA NIGALCHI KALAIGNER THOLAIKATCHIYIL NERADI OLIPARAPU SEIYA PADUM
ஓ.. இதுவும் கழக அரசோட நல திட்டங்கள்ல ஒன்னா... !
சொல்லவே இல்ல...
இந்த விஷயம் கலைஞருக்கு சுமார் 42 வருடத்துக்கு முன்னால தெரிஞ்சிருந்தால ் கொஞ்சம் பெட்டரா இருந்திருக்கும் ..
நண்பரே உங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன் ஆனால்,
இவர் இவரின் கணவனிடமோ அண்ணனிடமோ அக்கவிடமோ அல்லது வேறு யாரிடமோ தனிப்பட்ட விதத்தில் கற்பு பற்றி பேசி இருந்தால் நீங்கள் சொல்வதை போல் அவர் நடத்தை பற்றி விமர்சிக்காமல் இருக்கலாம், அனால் அவரோ ஊடகங்களிடம் திருமணதிற்கு முன்னால் உறவு கொள்வது தவறில்லை என்று சொல்லி இருக்கிறார், இவர் கருத்து பலரிடம் தவறான தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இதை சொல்லும் பொழுது அவரின் நடத்தையை சுட்டி காட்டி தான் நம் மக்களிடம் அவர் சொன்னது தவறான கருத்து என்று கூற முடியும்,
ஒரு விபச்சாரி தனிப்பட்ட வகையில் தன வயிற்றை கழுவ விபச்சாரம் செய்தால் அவளை பற்றி விமர்சிப்பது தவறு, அனால் அதே விபச்சாரி மேடை போட்டு விபச்சாரம் ஒன்றும் தவறில்லை இதுவும் ஒரு தொழில் தான் எல்லாரும் இதில் ஈடுபடவேண்டும் என்று சொல்லும் பொழுது அந்த பெண்ணின் நடத்தை பற்றி பேசும் கட்டாயம் வரும், அதே போல் தான், குஷ்பூ அவர் குறிப்பிட்டதை போல் அவருக்கு திருமனத்திற்கு முன் உறவு இருந்திருக்கலாம ், அனால் அதை ஊடகத்திடம் எல்லோரும் அப்படி இருப்பது தவறில்லை என்று சொன்னதால் அவர் விமர்சிக்கப்பட வேண்டிய நபராகிறார்.
அப்ப ஆ.தி. மு. -வுக்கு ஓட்டுப் போட்டா நமீதா மாதிரி குழந்தை பிறக்குமா - மக்கள் குழப்பம்.
அனைத்து மருத்துவர்களும் ஒன்று கூடி தீவிர ஆலோசனை. அமெரிக்காவில் இருந்து சிறப்பு மருத்துவ குழு வந்துள்ளது.
Apdi matum nadanthichuna Intel kaaran saadhik maadiri thooku potuka maataan avamaanathil naaka pudngitu sethiduvaan en computer ungaluku awlo kevalama poochaanu...
paradesingala yaenda edhirkaala citizengalayum pitchai kaarana aakureenga???
யோவ் யாருப்பா அது பச்சை மாலு
கனி: இருக்கட்டும்பா.... 'ரமீசை' நீங்க வச்சுக்கங்க....'ராசாவை'.....................!!!!!
மு.க: இப்போ வேண்டாம்... இந்த மொக்கை ஜோக்குக்கு 'தேர்தல்' முடிஞ்சதுக்கு அப்புறம் சிரிக்கிறேன்....!!!
Quoting KUSHBOOOOO:
மு.க - அட கடுப்பேத்தாதமா! அங்க வந்திருக்கிறது ரமீஸ் ராஜா!
REPORT/SHOW SPEECHES OF THESE LOWLY PERSONS WHO CONSIDER POLITICS AS THEIR PASTIME TO MAKE MONEY AND IF POSSIBLE TO GAIN POLITICAL POWER AND THEY ARE LEAST WORRIED ABOUT THE WELFARE OF THE DOWNTRODDEN. SO CALLED CAPTAIN HAS GONE A STEP AHEAD OF OTHERS BY SLAPPING HIS OWN CANDIDATE IN PUBLIC.(INTERESTINGLY TODAYS NEWSPAPERS CONVENIENTLY FORGOT TO REPORT THE INCIDENT AND NOW YOU CAN JUDGE FOR YOURSELVES THEIR BIASED STAND). JEYA IS NO BETTER AS SHE REFUSED TO MENTION THE NAME OF THE CANDIDATE OF A FRIENDLY PARTY. IF THESE INTEMPERATE PERSONS WHO ALWAYS FOUND IN INEBRIATED MOOD SNATCH POWER , I AM SHUDDERRED TO THINK OF THE CONSEQUENCES.
அவர் தீ மு க விற்கு பிரச்சாரம் செய்யும் பொழுது கூறிய விஷயங்களை விமர்சியுங்கள். தவறில்லை. மதுரை மலேசியா போல் இருக்கிறதாம்.. அப்படியென்றால் சென்னை என்ன நியூ யார்க் போல் இருக்கிறதா? என்ன காமெடி சார் இது...
அண்ணன் அழகிரி தான் இதற்க்கு காரணமாம்.. அந்த செய்தித்தாள் அலுவலகத்தினுள் புகுந்து மூன்று பெயரை கொன்றார்களே அதுக்கும் அண்ணன் அஹ்சகிரி தானே காரணம்?? அதா சொல்லலையே...
வெறும் பத்தாயிரம் ருபாய் போதுமா ஒரு குழந்தையை பெற்றெடுக்க? சும்மா வீட்டிலேயே இருங்கள், நாம் பணம் தருகிறேன் அதில் நீங்கள் வாழ்தால் போதும் என்று நம் பாமர மக்களை இப்படி ஏமாற்றி எத்தனை நாள் நாடகம் நடக்க போகிறதோ தெரியவில்லை...
கடவுள் தான் தமிழகத்தை இந்த குடும்பத்திடமிர ுந்து காக்க வேண்டும்...
#யார் இல்லையின்னா குஷ்பு பீரங்கிதாங்க!
கற்புப் பிரச்னை குறித்துக் கேள்வி கேட்டார் ஒரு நிருபர். 'அது முடிந்து போன விஷயம்.
#ஆமா அதுபற்றி குஷ்புகிட்ட கேட்டதே தப்புதாங்க!
ஏன்னா, உங்களுக்காக உழைச்சு பல நல்ல திட்டங்களை கலைஞர் நிறைவேற்றி இருக்கார்.
#ஆமா ஒரே மணி நேரத்தில 1,00,000 பேர கொண்ணுருக்காரு.1/2 நாள் உண்ணாவிரதம் இருந்திருக்காரு . 4 தாரத்த பொண்டாட்டியா வைச்சிருந்திருக ்காரு!
நாங்க எல்லாம் சினிமா கதாநாயகிகள்.
# அதானே நடிக்க வந்திருக்கீங்க அடுத்த தேர்தல்ல யாருக்கு நடிப்பீங்க?
கருவறை முதல் கல்லறை வரைக்கும் தி.மு.க-வோட திட்டங்கள் போய்ச் சேர்ந்திருக்கு.
2009 ல் ஈழத்திலை நடந்த படுகொலை திட்டத்த சொல்லுறீங்களா குசு!
மதுரையில் நான் பிரசாரத்தைத் தொடங்கக் காரணம், இந்த மண்ணோட 'தில்’லுதான்.
தினகரன் அலுவலகத்தில் நடந்த தில்ல மறக்காம வைச்சிருக்கிறீங ்க தாயீ!
விஞ்ஞானத்தில் நியூட்டன் ஃபார்முலா, சினிமாவில் ரஜினி ஃபார்முலா மாதிரி தேர்தலில் அழகிரி அண்ணனோட ஃபார்முலா.
# தாத்தாவோட சர்க்கரியா, நிலக்கரி. ஸ்பெக்ரம்.குடும்பம் இதுகளையும் சேத்துக்குங்க!
'உங்களுக்கு லேப் டாப் கம்ப்யூட்டர் தர்றதா தாத்தா சொல்லியிருக்கார ்.
கொழந்தை குடுக்குறதா பேசிக்கிட்டாங்க ளே அது அவரால முடியாதாமா?
என்னை மாதிரி புசுபுசுன்னு குழந்தை பிறக்கணும்னா, கலைஞருக்கு ஓட்டுப் போடுங்க.
ஐயோ வாணாங்க வீட்டுக்காரங்க இருக்காங்க!
RSS feed for comments to this post