முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
வாங்க G வாங்க! வரவேற்ற திகார். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 1
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
புதன்கிழமை, 23 பிப்ரவரி 2011 10:28

 றுகிய முகம்... கலங்கிய கண்கள்... பலவீனத்தின் எல்லையைத்

தொட்ட மனம்... தளர்ச்சியை எட்டிய கால்கள்... என மொத்த ஸ்ருதியும் இறங்கிய நிலையில் ஆ.ராசா திகார் சிறைக்குள் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்டுள்ளார். ''வாங்கஜி வாங்க'' என்று அங்குள்ளோர் இகழ்ச்சியாக அழைத்தாலும் அவரால் என்ன  பதிலளிக்க முடியும்?

 

 திகார் சிறை ஆசியாவிலேயே பெரியது. சுமார் 12 ஆயிரம் கைதிகள் இப்போது உள்ளனர். திகார் என்ற கிராமத்தில் உள்ள இந்தச் சிறை  வளாகத்தில் ஒன்பது மத்திய சிறைச்சாலைகள் உள்ளன. சிறைச்சாலை எண் 1-ல் உள்ள வார்டுகள் மிகவும் பிரமாதமாக பராமரிக்கப்​படுவதைப் பாராட்டி,  மாடல் வார்டுக்கான ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்றுள்ளது. சிறை எண் 1-ல் செல் எண் 9-ல் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிமினல்களும், இந்தியாவில் கொடூர தாதாக்களும் அடைந்து கிடக்கும், இந்த திகார் சிறைச்​சாலைக்கு பிப்ரவரி 17-ம் தேதியன்று ஆ.ராசா கொண்டு வரப்பட்டார். ஏற்கெனவே இதே ஊழல் வழக்கில் கைதான சித்தார்த் பரூவா, ஆர்.கே.சந்தோலியா இருவரும் பிப்ரவரி 8-ம் தேதி முதல் இந்தச் சிறைச்சாலையில்தான் இருக்கிறார்கள். இங்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு வளையங்கள் உண்டு. உள்வட்டப் பாதுகாப்புகளை டெல்லி யூனியன் பிரதேச சிறைத்துறை போலீஸார் கவனிக்கிறார்கள். இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினர் வெளிவட்ட பாதுகாப்புப் பணியில் இருக்​கிறார்கள். தமிழக போலீஸின் ஆயுதப் படை பிரிவைச் சேர்ந்த சுமார் ஆயிரம் போலீஸார் டவர் கண்காணிப்பு, ஹை ரிஸ்க் வார்டு பாதுகாப்பு, சர்ப்ரைஸ் செக்கிங் மற்றும் சிறைச்சாலை ரோந்து போன்ற பணிகளை பல வருடங்களாகச் செய்து வருகிறார்கள். ஆ.ராசா அடைக்கப்பட்டிருக்கும் ஹை ரிஸ்க் வார்டு செல்லின் எண் 9-ஐ  நுழைவாயில், செல் கதவு... என்று ஐந்து பூட்டுகளைக் கடந்துதான் அடைய​முடியும். இந்த வார்டினை சிறைச்சாலை அதிகாரிகளும், தமிழக ஆயுதப்படைப் பிரிவு போலீஸாரும் கூட்டாகத்தான் திறக்கவேண்டும் என்பது சட்டம். இந்த வார்டுக்கு மற்ற கைதிகள் வரமுடியாது. அதேபோன்று, இங்கே இருப்பவர்களும் சிறைச்சாலைகளின் மற்ற இடங்களுக்குச் செல்ல முடியாது. 24 மணி நேரமும் ரகசிய கேமரா கண்காணிப்பு உண்டு.  

டெல்லி போலீஸ் அதிகாரி ஒருவரிடம் நாம் பேசியபோது, ''சிறைச்சாலையில் உள்ள சாதாரண கைதிகளுக்கும் ஹை ரிஸ்க் வார்டில் உள்ள கைதி​களுக்கும் வசதிகளில் பெரும் வித்தியாசம் உண்டு. ஆ.ராசா அடைக்கப்பட்டுள்ள அதே சிறைச்சாலையில் உள்ள செல் ஒன்றில்தான், பெண் பத்திரிக்கையாளர் ஷிவானி கொலைவழக்கில் கைதான அரியானா மாநில ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.கே.சர்மா அடைக்கப்பட்டு இருக்கிறார். இங்குள்ள செல் ஒவ்வொன்றிலும் ஒன்று அல்லது மூன்று பேர்கள் அடைக்கப்​படுவார்கள். அந்த​வகையில், தனி செல்தான் ராசாவுக்கு ஒதுக்குவார்கள். வார்டு வளாகம், வெளி ஏரியாக்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட ரகசிய கேமராக்கள் இருக்கின்றன. குறிப்பாக, ஹை ரிஸ்க் வார்டு செல்லில் உள்ள கைதிகளின் மூவ்மென்ட்களை எல்லா நேரமும் கன்ட்ரோல் ரூமில் இருந்தபடி, கண்காணிப்பார்கள். செல்லில் ஃபேன், கேபிள் டி.வி. வசதி உண்டு. சிறைச்சாலையின் பொது இடத்தில் வாரத்துக்கு இருமுறை டி.வி.டி. பிளேயர் வைத்து திரைப்படங்கள் ஒளிபரப்புவார்கள். விரும்பும் பத்திரிகையை வார்டுக்கு வரவழைத்துப் படிக்கலாம். செல்லின் ஒரு மூலையில் இண்டியன் டைப் டாய்லெட் இருக்கும். அதைத்தான் தினப்படி கைதி பயன்படுத்த வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. ஜீன்ஸ் பேன்ட் தவிர வேறு எந்த டிரஸ்ஸையும் அணியலாம்.  கைதியே அவரது உடைகளை துவைத்துக்கொள்ள வேண்டும். அயர்ன் பண்ண சிறைச்சாலையில் வசதி உண்டு.

ஒரு ஸ்பெஷல் கேன்டீன் உண்டு. இங்கே ஸ்நாக்ஸ் முதற்கொண்டு அனைத்து அயிட்டங்களும் கிடைக்கும். மாதம் நாலாயிரம் ரூபாய் வரை செலவு செய்யலாம். இந்த தொகையைக் கொடுத்து டோக்கன் வாங்கி செல்லில் வைத்துக்கொள்ளலாம். ஹை ரிஸ்க் வார்​டில் இருப்பவர்கள் இந்த கேன்டீனுக்குப் போக அனுமதி​யில்லை. அதனால், 'சேவாதார்' என்று அழைக்கப்படும் ஹெல்பர்களை பொருள் வாங்கி வர பயன்படுத்திக் கொள்ளலாம். இதே சிறைச்சாலையில் வேலை எதுவும் செய்ய முடியாத நிலையில் இருப்பவர்களும் உதவுவார்கள். அந்த வகையில் அவர்களுக்கும் காசு கிடைக்கும். டால், ரொட்டிதான் முக்கியமான உணவு. வெஜிடபிள் சப்ஜி தருவார்கள். மற்றபடி, நான்வெஜ் கிடையவே கிடையாது!'' என்றார்.

கைதிகளின் பெயர்களின் முதல் எழுத்து ரொம்ப முக்கியம். வாரத்தின் ஒவ்வொரு நாளையும் குறிப்பிட்ட எழுத்துகளைக் கொண்டவர்களுக்கு என பிரித்து வைத்திருக்கிறார்கள். அந்த வகையில், ராசாவின் முதல் எழுத்தான 'ஆர்', 'ஏ’ மற்றும் 'எஸ்’ எழுத்து கொண்டவர்களை திங்கள் அன்று உறவினர்கள் நேரில் பார்க்கலாம். பார்வையாளர்கள் அறையில் ஐம்பது மைக்குகள் இருக்கும். சந்திக்க வருபவருக்கும் கைதிக்கும் இடையில் இடைவெளி இருக்கும். ஒரே நேரத்தில் இங்கிருந்து ஐம்பது பேர்கள் மைக்கில் எதிர்புறம் உள்ள கைதிகளிடம் பேசுவார்கள். கூச்சல், குழப்ப​மாகத்தான் இருக்கும்.  

திகார் சிறைச்சாலையில் நுழைந்த ராசாவிடம் அங்குள்ள விதிமுறைகளையும் நடைமுறைகளையும் அதிகாரிகள் விலாவாரியாகச் சொன்னார்களாம். அவர்​களிடம் சில சந்தேகங்களைக் கேட்ட ராசா, அவர்கள் சொன்ன பதிலைக் கேட்டு முகம் உறைந்து போனாராம். 'கைது செய்தால் மட்டுமே அவர் குற்றவாளி இல்லை’ என்று ஆ.ராசாவுக்கு சான்று தந்த தங்கள் தலைவர், திகார் சிறைக்குச் சென்று ராசாவை நேரில் பார்த்து திடப்படுத்துவரா என்பது அவருடைய ஆதரவாளர்களின் ஆர்வமான எதிர்பார்ப்பு. மாற்றுக்கட்சியில் இருந்த போதும் பொடாவில் கைதான வைகோவை சிறையில் சென்று பார்த்த தலைவர், சொந்தக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரை பார்க்காமலா இருப்பார் என்பது ஆ.ராசாவின் ஆதரவாளர்களின் நம்பிக்கை!

 

நன்றி ஜுனியர் விகடன்

 

Comments  

 
+1 #6 அரங்க. மதியழகன் 2011-03-07 16:40
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
Quote
 
 
+6 #5 விகடகவி 2011-02-23 23:46
கெளப்புடா ராசா, கெளப்புடா! என்சாய்!
Quote
 
 
+6 #4 ம.பொன்ராஜ் 2011-02-23 15:38
ராசாவை பார்க்க 'மு.க' வரும்....ஆனா வராது...!!!
Quote
 
 
+11 #3 sakthy 2011-02-23 14:10
குடும்பத்திற்கா கவும்,கட்சிக்கா கவும் எதையும் செய்யத் தயங்காதவர் தலைவர். அதனால் ராஜாவை கை கழுவி விட தயங்க மாட்டார். தினமும் தற்கொலைக்கு தள்ளப்படும் விவசாயிகள், இலவசங்களால் தொழில் இழக்கும் ஏழை தொழிலாளர்கள், கல்வியும் மருத்துவமும் வியாபாரமாக்கப்ப ட்ட நிலையில் தவிக்கும் ஏழைகள்.இவர்கள் கண்ணீரை துடைக்க வேண்டியவர்கள் அவர்கள் கண்ணீருக்கு காரணமாகி விட்ட நிலையில் அனுபவித்தே தீர வேண்டும். அராஜகம் தலை தூக்கி நிற்கிறது. தமிழ்நாட்டில் குற்றச் செயல்கள் குறந்து விட்டன என்று கருணாநிதி கூறிப் பெருமைபட்ட மறுநாளே வருகிறது காவல்துறை அறிக்கை. தமிழ்நாட்டில் குற்றச் செயல்கள் இரண்டு மடங்காகி விட்டன என்று. மக்கள் அச்சம்,வேலையின் மை,பொருளாதார சுமை என்றெல்லாம் கலங்கும் போது எப்படி இப்படியெல்லாம் நடக்க முடிந்தது. கொலைக்காரனுக்கு கூட இருக்கும் அனுதாபம்,இரக்கக ுணம் இந்த கொள்ளைக்காரர்கள ுக்கு இல்லாதது ஏன்
Quote
 
 
+30 #2 சித்திரகுப்தன் 2011-02-23 10:57
(சொந்தக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரை பார்க்காமலா இருப்பார் என்பது ஆ.ராசாவின் ஆதரவாளர்களின் நம்பிக்கை!.........)

ராசா ’ஜி’ கனவு கண்டுடாதிங்க.அவர பாத்துக்கவே ஒரு ஆளு வேனும்.இந்த அழகில் உங்களல்லாம்...போய்... பாக்க.
வைகோவ பார்த்தது வேற சமாச்சரம் வோய்.உடன்பிறப்புகளிட ம் நல்லபேர் எடுக்க.கருநாநிதியின் கிரிமினல் அரசியலில் இதெல்லம் சகஜமப்ப.தேர்தல் முடியும் வரை இத்தெல்லாம் நடக்கறது சிரமம்தன்.
சரி பாப்பா வந்து..பாத்துச்ச.ஆயிரம் தான் இருந்தாலும் கட்டுன பொண்டாட்டி மாதிரி வராது வோய்.நீர் உள்ள சாப்பிடற சாப்பாடு கூட உம்ம பொஞ்சாதி வீட்டுல சப்பிடுமாங்கிறத ு சந்தேகம்தான்.ஆனா..பாப்பா அப்பன மாதிரி சர்வசாதரனமாகத்த ான் இருக்கு.கிளிக்கும் குரங்குக்கும் இப்பவாது வித்யாசம் தெரிஞ்சா சரி.சட்டத்தை ஏமாற்றலாம்.தர்மத்தை ஏமாற்றமுடியாது.உணர்ந்தா
சரி ராசா’ஜி’. வர்ட்டா..அய்யய்யோ..தெரியாமே வ்ர்ட்டானுட்டேன ்.
Quote
 
 
+2 #1 balamct 2011-02-23 10:57
varuvanga,s tel niruvanam, kalaignar tv,kku 100 kodi kadan koduthiruppatha ka thakavalkal vanthullathu.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 78 விருந்தினர்கள் மற்றும் 1 உறுப்பினர்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

தமிழ்லீடர்

tamilleader

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday5133
mod_vvisit_counterYesterday9838
mod_vvisit_counterThis week57870
mod_vvisit_counterLast week67096
mod_vvisit_counterThis month176678
mod_vvisit_counterLast month297247
mod_vvisit_counterAll days8392406