முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
பா.ம.கவுக்கு 31. எரிச்சலோ எரிச்சல் அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 2
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
புதன்கிழமை, 23 பிப்ரவரி 2011 10:24

 

 ஆனந்த மருத்துவர்... அதிர்ச்சி ஸ்டாலின்!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஏழு தொகுதிகளி​லும்

தோற்றுப்போனதால், இந்த முறை 25 ஸீட்டுகள் கிடைத்தாலே பெரிது என நினைத்தது பா.ம.க. தரப்பு. இதற்கிடையில், 'எங்கள் கூட்டணியில் பா.ம.க. இருக்​கிறது!’ என கருணாநிதி சொன்ன வார்த்தைகளை ராமதாஸ் மறுத்த விவகாரம், தி.மு.க-வைக் கனல் கக்க​வைத்தது. ராமதாஸ் சமா​தானத் தூதுவிட்ட போதும், 'காங்கிரஸைக் கேட்டுத்தான் முடிவு சொல்வோம்!’ என சொல்லிவிட்டார் கருணா​நிதி. இதற்கிடையில் பா.ம.க-​வின் எம்.எல்.ஏ-க்கள் ஜி.கே.மணி, வேல்முருகன் இருவ​ரும் துணை முதல்வர் ஸ்டாலினிடம் பேச... '25 ஓகே என்றால், பேசலாம்!’ என்று கறாராகப் பதில் வந்தது. பா.ம.க. மீது ஏக எரிச்சலில் இருக்கும் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர், 'பா.ம.க. கூட்டணி வேண்டவே வேண்டாம்!’ என ஸ்டாலினிடம் வற்புறுத்த, 'கூட்டணி குறித்துப் பிறகு பேசலாம்!’ என்றபடி லண்டனுக்குக் கிளம்பிப் போனார் ஸ்டாலின்.

 

இதற்கிடையில்தான் தங்கள் இல்லத் திருமண விழாவுக்கு அழைப்பு வைக்க கோபாலபுரத்திடம் நேரம் கேட்டார் ராமதாஸ். உடனடியாக அனுமதி கிடைக்க... பத்திரிகையோடு உள்ளே போனவருக்கு 31 ஸீட் பரிசு கிடைத்தது. 'இப்போதே கூட்டணி அறிவித்து​விடலாம்’ எனச் சொல்லி உடன்படிக்கைக் கடிதமும் அவசரகதியில் தயார் செய்யப்பட... நடப்பது கனவா நனவா என நம்ப முடியாமல் திக்குமுக்காடிப் போனார் ராமதாஸ்.

அழைப்பிதழ் வைக்க வருவதாக மட்டுமே லண்டனில் இருந்த ஸ்டாலினிடம் தகவல் சொல்லப்பட்டதாம். தொகுதி உடன்பாடு குறித்த தகவல் ஸ்டாலினுக்கு எட்ட... '28  ஸீட்டுகளுக்கே தலையாட்டுற நிலையில் இருந்தவங்களுக்கு, எதுக்கு 31 ஸீட் கொடுக்கணும்? நான் சென்னைக்கு வரவா... இல்லை இங்கேயே நிரந்தரமாகத் தங்கிடவா?’ என்று கோபமான வார்த்தைகளைக் கொட்டி இருக்கிறார்.

அதன் பிறகு பா.ம.க. மீது வெறுப்பில் இருந்த அமைச்சர் ஒருவர் முதல்வரின் முடிவு பின்னணி குறித்து ஸ்டாலினிடம் விளக்கி இருக்கிறார். 'தலைவர் பா.ம.க-வை கூட்டணியில் சேர்க்கப்போறது தெரிஞ்சு எவ்வளவோ மறுத்துப் பேசினோம். ஆனா, தலைவர் உறுதியா இருந்திட்டார். எங்களோட ஆதங்கத்தைப் பதிவு பண்ற விதமா டாக்டர் வந்தப்ப நாங்க அங்கே இல்லை. ஆனாலும், துரைமுருகனை மட்டும் ரொம்ப வற்புறுத்தி கூடவே வெச்சுக்கிட்டார் தலைவர்’ எனச் சொல்லி இருக்கிறார்.

லண்டனில் இருந்து திரும்பிய ஸ்டாலின் இதுகுறித்து கருணாநிதியிடம் விவாதிக்கப் போகிறார் என ஆதங்க அமைச்சர்கள் ஆவலோடு காத்திருக்க... அப்படி ஒரு சம்பவம் நடக்காமலே போனது!

அழகிரியும் ஆத்திரத்தில்!

பா.ம.க-வைக் கூட்டணியில் சேர்ப்பது குறித்து மதுரையில் இருந்த அழகிரியிடமும் ஆலோசனை நடத்தப்படவில்லையாம். 'சேர்க்கப்போகிறோம்!’ என்கிற தகவல் மட்டும்  சொல்லப்பட்டது. ஆ.ராசாவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியைப் பறிக்காதது, பூங்கோதை மீது நடவடிக்கை எடுக்காதது, குறிப்பிட்ட சிலருக்காகக் கட்சியின் மரியாதையை சட்டை செய்​யாதது என சமீபகாலமாக கருணாநிதி மீது நிறையவே  வருத்தத்தில் இருக்கிறார் அழகிரி.

ஆனால், பா.ம.க-வைக் கூட்டணியில் சேர்ப்பதைக்கூட தன்னிடம் முறையாகச் சொல்லாததால் அழகிரி ஆக்ரோஷமாகிவிட்டார். 'தேர்தல் நேரத்தில் கோபப்படக் கூடாது என்பதற்காகப் பொறுமையாக இருக்கிறேன். தென் மாவட்டங்களில் யாருக்கு ஸீட் கொடுப்பது என்பதையும் அவர்களே தீர்மானித்துக்கொள்ளட்டும்!’ என ஆவேசமானவர், சென்னையில் உள்ள தி.மு.க. முக்கியஸ்தர் ஒருவரிடம் மீண்டும் ராஜினாமா முடிவு குறித்துப் பேசினாராம்!

வெளியேறும் முடிவில் வி.சி-க்கள்!

பா.ம.க-வுக்கு முதல் ஒதுக்கீடு நடத்தியது விடுதலைச் சிறுத்தைகளை ரொம்பவே ஆத்திரப்படுத்தி இருக்கிறது. ஈழ விவகாரம் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் பாதகமாக அமைந்தபோது, தக்க துணையாக இருந்தது சிறுத்தைகள்தான். பல நெருக்கடிகளையும் தாண்டி கூட்டணியில் நீடித்த தங்களை அடுத்த இடத்துக்குத் தள்ளிவிட்டு, பா.ம.க-வுக்கு ராஜபாட்டை விரித்ததை சிறுத்தைகளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

''கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க-வுக்கு நாங்கள் கொடுத்த மரண அடியை யாரும் மறுக்க முடியாது. வட மாவட்டங்களில் வலுப்பட்டு இருக்கும் எங்கள் கட்சியைத்தான் முதலில் அழைத்து ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும். 'பா.ம.க-வை கூட்டணியில் சேர்ப்போமா?’ என ஸ்டாலின் எங்கள் தலைவர் திருமாவளவனிடம் கேட்டபோது, 'தாராளமாகச் சேர்க்கலாம்!’ என்றுதான் சொன்னோம். ஆனால், அப்படியும் எங்களை அவமானப்படுத்தும் விதமாக பா.ம.க-வுக்கு 31 ஸீட்டுகளை ஒதுக்கியவர்கள் எங்களுக்கு 10 ஸீட்டுகளைத் தாண்ட முடியாது என்கிறார்கள். அவர்களுக்குப் பெரிய அளவில் அள்ளிக் கொடுத்த தி.மு.க-விடம் எங்களின் செல்வாக்கு அதிகமுள்ள 25 தொகுதிகளின் பட்டியலைக் கொடுத்து இருக்கிறோம். 21-ம் தேதி நடந்த முதற்கட்டப் பேச்சுவார்த்தையிலேயே மொத்த ஆதங்கத்தையும் எங்கள் தலைவர், கலைஞரிடம் சொல்லி இருக்கிறார். 15 ஸீட்டுகளுக்குக் குறைந்து எங்களால் தி.மு.க. கூட்டணியில் நீடிக்க முடியாது. அ.தி.மு.க. தரப்பில் இருந்து எங்களுக்கு வரும் அழைப்புகளை நிராகரிக்கும் நிலையில் நாங்கள் இல்லை!'' என்கிறார்கள் சிறுத்தைகளின் முதல் வரிசைத் தலைவர்கள்.

சிறுத்தைகளை வசப்படுத்த ஓ.பன்னீர்செல்வமும், செங்கோட்டையனும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அரசியல் ஆலோசகர் ஒருவர் சிறுத்​தைகளை அ.தி.மு.க. பக்கம் கொண்டுவர சபதமே பூண்டு இருக்கிறார்!  

கருணாநிதியின் டபுள் செக்!

பா.ம.க-வை வலிய அழைத்து மெகா பரிசு கொடுத்ததன் மூலமாக கருணாநிதி ஒரே கல்லில் இரு மாங்காய்களை அடித்துவிட்டதாக கட்சியின் சீனியர்கள் சிலர் கிசுகிசுக்கிறார்கள். ''பா.ம.க. மீதான கோபம் தலைவருக்கு இப்போதும் இருக்கிறதுதான். ஆனால், பா.ம.க-வை உடனடியாக அழைத்ததின் பின்னணி​யில் பல காரணங்கள் இருக்கின்றன. அ.தி.மு.க. - தே.மு.தி.க இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை எப்படிப் போய்க்கொண்டு இருக்கிறது என்பதை உளவுத் துறை மூலமாக தலைவர் உன்னிப்பாகக் கவனித்தார். 51 ஸீட்டுகளில் பேரத்தை ஆரம்பித்த விஜயகாந்த் கடைசியில் 39 ஸீட்டுகளுக்குச் சம்மதித்த விஷயம் தலைவருக்குத் தெரிய வந்தது. அடுத்த நாள் விஜயகாந்த் தரப்பில் கார்டனுக்கு ஒரு பிரதிநிதி அனுப்பப்படலாம் என்பது உறுதியான பிறகுதான், காலையிலேயே பா.ம.க. கூட்டணியை அறிவித்து, யாரும் எதிர்பார்க்காதபடி 31 ஸீட்டுகளையும் வாரி வழங்கினார். 'வட மாவட்டங்களில் மட்டுமே செல்வாக்குகொண்ட பா.ம.க-வுக்கு 31 ஸீட்டுகளுடன் ஒரு ராஜ்ய சபா ஸீட்டும் கிடைக்கிறது என்றால், தமிழகம் முழுக்கச் செல்வாக்குப் பெற்று இருக்கும் தங்கள் கட்சிக்கு விஜயகாந்த் அதிக ஸீட்டுகளைக் கேட்பார்!’ என யூகித்துத்தான் தலைவர் அதிகப்படியான ஸீட்டுகளை பா.ம.க-வுக்கு அள்ளி வழங்கினார். இதனாலேயே அடுத்த நாள் நிகழ இருந்த அ.தி.மு.க. - தே.மு.தி.க. உடன்பாடு தள்ளிப்போனது. பா.ம.க-வுக்கான ஸீட்டுகளை சொல்லியே மீண்டும் முருங்கை மரம் ஏறத்தொடங்கினார் விஜயகாந்த். இது தலைவருக்குக் கிடைத்த முதல் வெற்றி. அடுத்தபடியாய் ஸீட் விஷயத்தில் தொடர்ந்து டிமாண்ட் காட்டும் காங்கிரஸ், பா.ம.க-வுடன் தனி ரூட்டில் பேச்சுவார்த்தை நடத்தியதும் தலைவரைக் கோபப்படுத்தியது. பா.ம.க-வுக்கு அதிக ஸீட் ஒதுக்கியதன் மூலமாக காங்கிரஸுக்கான ஸீட்டுகளைக் குறைக்க முடியும் என்பது தலைவரின் உறுதியான நம்பிக்கை. காங்கிரஸ் தலைவர்களின் முதல் கட்டப் பேச்சுவார்த்தையில், 'பா.ம.க-வைத் தக்கவைத்துக்கொள்ள 31 ஸீட்டுகளை ஒதுக்கித்தான் ஆக வேண்டும்!’ என்பதைத் தலைவர் பட்டவர்த்தனமாகவே சொன்னார். அதனால், 55 ஸீட்டுகளைத் தாண்டி காங்கிரஸ் தலைவர்களால் டிமாண்ட் காட்ட முடியவில்லை. அந்த விதத்திலும் இது தலைவருக்குக் கிடைத்த வெற்றிதான்!'' என்கிறார்கள் அர்த்தபுஷ்டியோடு.

காங்கிரஸின் பதிலடி!

''கலைஞர் என்னதான் ராஜ தந்திரியாகச் செயல்​பட்டாலும், அதற்கான பதிலடியைக் கொடுக்க நாங்​களும் தயங்கப்போவது இல்லை. முதல் கட்டப் பேச்சுவார்த்தையிலேயே 80 தொகுதிகளை நாங்கள் வலியுறுத்தினோம். பா.ம.க-வுக்கு 31 ஸீட் வழங்கியதைச் சொல்லி, எங்களின் ஸீட்டுகளைக் குறைக்க முடியாது. இடதுசாரிகளுக்கு கடந்த தேர்தலில் ஒதுக்கிய ஸீட்டுகளை அப்படியே எங்களுக்குக் கூடுதலாகக் கொடுக்கச் சொல்கிறோம். எங்களை ஆலோசிக்காமல் தி.மு.க-வுடன் ஐக்கியமான பா.ம.க-வுக்கு இனிதான் சிக்கலே ஆரம்பமாகும். மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி கோரிய விவகாரத்தில் மெக்ஸிகோவில் இருந்து வந்த புகார் இப்போதும் சி.பி.ஐ. கையில்தான் இருக்கிறது.

குலாம் நபி ஆசாத் மூலமாக கூட்டணிக் கணக்கை எப்படியும் திருப்தியாக முடித்துவிடலாம் என நினைக்கிறது தி.மு.க. ஆனால், டெல்லியில் இருக்கும் இன்னும் இரண்டு தலைவர்கள் ஓகே சொன்னால்தான் கூட்டணி ஒப்பந்தத்தில் நாங்கள் கையெழுத்திடுவோம். இல்லையேல் எத்தகைய முடிவுக்கும் தயாராவோம்!'' என்கிறார் தொடர்ந்து எரிச்சலை வார்க்கும்  காங்கிரஸ் தலைவர் ஒருவர்!

- இரா.சரவணன்

பழைய பேப்பர்!

ஒரு நிருபரின் டைரி குறிப்புகள்...

இப்போது பா.ம.க. அறிவாலயத்தில் ஐக்கியமாகி​விட்டது. ஆனாலும், இடையில் பா.ம.க-வும் தி.மு.க-வும் செய்த அலம்பல்கள், சலம்பல்கள் கொஞ்சநஞ்சமல்ல. டைரிக் குறிப்பில் தேதிவாரியாகப் புரட்டினோம்!

2008 ஜூன் 13...

''வன்னியர் சங்கப் பொதுக்குழுவில் தலைவர் கலை​ஞரை அருவருக்கத்தக்க வகையில் பேசியிருக்கிறார் காடுவெட்டி குரு. இதைக் கேட்டுக்கொண்டு நாம் ஆட்சி​யில் இருக்கவேண்டுமா?'' - முரசொலி சேது இல்லத் திருமணத்தில் இப்படி முழங்கி, ஆதார சி.டி-யையும் மேடையிலேயே கருணாநிதியிடம் அளித்தார்.

''எல்லாத் தலைகளை வெட்டும்போதும் வழிகிற ரத்தம்​தான் என் தலையை வெட்டினாலும் வழியும். படுகொலை செய்யத் தயாராக இருக்கிற காடுவெட்டி குருவின் கடுமையான சொற்களைத் தாங்கிக்கொண்டுதான் ஒரு கூட்டணியில் இருக்கவேண்டும் என்றால், அதைவிட அவமானம் வேறு ஒன்றும் இருக்க முடியாது!'' - அந்தத் திருமணத்திலேயே கருணாநிதி சொன்னது இது!

2008 ஜூன் 17...  

'கடந்த ஜனவரியில் பேசிய குருவின் பேச்சு, கருணாநிதிக்கு ஏற்கெனவே தெரியும். நானும் கடிதம் எழுதி, அவரும் பதில் எழுதினார். இப்போது அந்தப் பேச்சை வெளியிடுவது திட்டமிட்ட சதி!'' - ராமதாஸ் அறிக்கை.

''தி.மு.க., இனி ஆட்சிக்கு வராது என்று மக்கள் முத்திரை குத்தி விட்டார்கள் என்பது போன்ற நாகரிகத்​துக்குப் புறம்பான சொற்கள் ராமதாஸ் அறிக்கையில் உள்ளது. காடுவெட்டி குரு பேசியதற்காக பா.ம.க. நடவடிக்கை எடுக்கவில்லை. தி.மு.க. அரசை குத்திக்காட்டி அதன் மூலம் மலிவான விளம்​பரத்தை தேடிக்கொள்வது, ராமதாஸின் அரசியல் பாணியாகி​விட்டதால், கூட்டணியை இனி தொடர முடியாது!' - தி.மு.க. உயர்மட்ட செயல் திட்டக் குழு தீர்மானம் இது. அதையடுத்து, கூட்டணி பிரிந்தது. காடுவெட்டி குரு கைதானார்.

2008 ஜூன் 18...  

''தி.மு.க-வின் முடிவுக்காக வருந்தவில்லை. தி.மு.க. இன்னும் திருந்தவில்லை. மக்கள் பிரச்னைக்காக இன்​னும் அதிகமாகக் குரல் கொடுப்போம்...'' -  ராம​தாஸ் அறிக்கை.

2008 ஜூன் 29...

''பா.ம.க-வினரை விலைபேசி இழுக்கும் கீழ்த்தர​மான வேலையில் தி.மு.க. அமைச்சர்களே ஈடுபட்​டிருக்கிறார்கள். கருணாநிதி மதுக்கடைகளைத் திறந்து 4 தலைமுறையினரை குடிப் பழக்கத்தில் நாசமாக்கி​விட்டார்...'' - ராமதாஸ் பேட்டி.

2010 மே 29...  

''நடந்தவைகள் நடந்தவையாகட்டும், நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும் என்ற அடிப்படையில் பா.ம.க-வைக் கூட்டணியில் இணைத்து, 2011 சட்டமன்றத் தேர்தலுக்கு அடுத்த ராஜ்யசபா தேர்தலிலும் பா.ம.க-வுக்கு ஒரு இடம் வழங்கப்படும்.'' - தி.மு.க. உயர்மட்ட செயல்திட்ட குழு தீர்மானம்.

''பா.ம.க. சில நாட்கள் முன்பு வரை உங்களைத் தரக்குறைவாகத் தாக்கியதே... அவர்​களுடனேயே கூட்டணியா?'' என்கிற நிருபர்கள் கேள்விக்கு கருணாநிதி, ''உங்களைப் போன்ற சில செய்தியாளர்கள் பேசாததையா அவர்கள் பேசி​விட்டார்கள்? 'சிண்டு முடிகிற’ வேலை வேண்டாம்!''- இது உயர்மட்டக்குழு கூட்டத்துக்குப் பிறகு கருணாநிதி அளித்த பேட்டி.

  நன்றி ஜுனியர் விகடன்

 

Comments  

 
0 #7 unmai 2011-02-25 10:43
thanks to juniar vikatan.
Quote
 
 
-3 #6 கிராமத்தான் 2011-02-24 14:37
சவுக்கின் கதை அருமை..

சினிமாவில் நீங்கள் கதை எழுத செல்லலாம்

பணம் பார்த்த மாதிரியும் ஆச்சி
பொழப்ப ஓட்டினமாறியும் ஆச்சி
Quote
 
 
+5 #5 வாலி 2011-02-23 19:32
திமுக கூட்டுக்குடும்ப தலைவர் கருணா நிதி அவர்களுக்கு ஐயா நீங்கள் பிறப்பால் தெலுங்குகாரர் என்பது உலகமறிந்த விடயம், நீங்கள் பொதுவாழ்வில் ஈடுபடும் நோக்கத்தோடு புறப்பட்டு உங்களின் தொலைநோக்கற்ற சிந்தனையாலும் பேராசையாலும் திசைமாறி குடும்பமே கோவில் என்ற வட்டத்துக்குள் காலச்சக்கரம் தள்ளி வீழ்த்திவிட்டது . (நீங்களாக நினைத்து விழவில்லை.)இனி நீங்கள் நினைத்தாலும் வெளிவரமுடியாது. கடைசிகாலத்திலென ்றாலும் உங்கள் வாயால் அந்த உண்மைகளை அறிய விரும்புகிறோம், நீங்கள் சின்னமோளக்காரர் என்றும். தேவதாசி பரம்பரையென்றும் , தேவ அடியாள் கூட்டத்தை சேர்ந்தவரென்றும ் நண்பர்கள் கூறுகின்றனர், ஆனால் உங்களைப்பார்த்த ால் பிராமணர் குலத்தவர்போலவும ், பறையர் இனத்தைச்சேர்ந்த வர் போலவும் தோற்றம் அளிக்கிறது, எது உண்மை , முத்துவேலு நாயக்கர். தெட்சணாமூர்த்தி என்றும்,, முத்துவேல் றொட்டி. கிருஷ்ணமூர்த்தி யென்றும் ஆளாளுக்கு கதைவிடுவதால் உங்கள் பிறப்பில் களங்கம் ஏற்பட்டுவிடுமென நான் மிகுந்த வேதனையடைகிறேன். தயவுசெய்து அக்கா ஜெயலலிதாவுக்கு முரசொலியில் தினமும் மூன்றுமணிக்கு எழுந்து பதில் எழுதும் நீங்கள் எனது சந்தேகத்தை தீர்ப்பீர்களென திடமாக நம்புகிறேன், சிரமத்திற்கு மன்னிக்கவும்.
Quote
 
 
+1 #4 Esan 2011-02-23 18:05
According to Rahul, they want to be rule Tamil Nadu. It is only possible by replacing AIDMK or DMK. Now DMK is counting its tough time due to 2G scam though Congress is part of it. When DMK punished for their 2G loot, then Congress show it hands are clean. Also people are fed up with DMK, corruption and family arrogance in many fields. By delaying JPC, now Congress mostly cleaned evidence against them with the help of CBI. So JPC can't do much against Congress but DMK can be victmized. If Congress supports DMK, after Karunanidhi it may be survive in politics, that will not good for Congress strategy and Rahul's dream. Congress will try for third front or get maximum seat. That will enable them to change partner even after election. Congress has big strategy by using 2G, let us wait for how it is going to execute it. There are lot of things to come ..
Quote
 
 
+5 #3 RAJKUMARPANDIAN 2011-02-23 16:50
விஸ்வகர்மாக்கள் தமிழ்நாட்டில் எத்தனை சதவிகிதம் ??!!!! சாணார்கள் அதாங்க நாடார்கள் வடமாவட்டங்களில் எத்தனை பேர் உள்ளனர்...எழுதியவர் தச்சரோ ???

தமிழன் இனஉணர்வு கொள்ளுவது இருக்கட்டும் ..உமக்கு ஏன் இப்படி ஒரு சதி வெறி..??!!!!
Quote
 
 
0 #2 sakthy 2011-02-23 14:27
இன்னுமா நம்மை நம்புகிறார்கள்..இது வடிவேலுவின் நகைச் சுவை. இன்னுமா இந்த மக்கள் இவர்களை நம்புகிறார்கள். தூங்கியது போதும் எழுந்திருங்கள். இல்லையேல் என்றுமே எழும்ப முடியாது.
Quote
 
 
+4 #1 தமிழ் வேல் 2011-02-23 11:30
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் கட்சி ஆரம்பித்த புதிதில் நான் தவறு செய்தால் முச்சந்தில்
நிறுத்தி சவுக்கால் அடியுங்கள் என்றார்!
சாதி வெறி தூண்டிவிட்டு தமிழர்களை பிரித்தார் வன்னியர் வோட்டு அன்னியர்க்கு இல்லை என்றார்
அன்னியர் யார் என்றால் அங்கெ வன்னியர் சாதிக்கு அடுத்த படியான தமிழ் ஆயர் சாதி காரர்கள்,தமிழ்
கொல்லர்கள்,தச்ச ர்கள் மட்டும் தமிழ் மறையர்கள்(பறையர ்கள்)இசுலாமியர் கள்,தமிழ் நாடார் சாதி காரர்கள்
இவர் வன்னியர் சமூக மக்களை சிறுபான்மை சாதி களுக்கு எதிராக தூண்டி விட்டு தன் குடும்பத்தின் பிடியில் வைத்து இருகின்றார்.
இதற்கு தீர்வு வன்னியர்களில் நல்லவர்கள் ,சாதி வேற்றுமை பார்க்காதவரை மற்டவர்கள் ஆதரிக்க வேண்டும்.
வன்னியர் 20 தொகுதி களில் 60 % இருகல்லாம் மற்ற சாதி காரர்கள் மருத்துவர் ஆதரவு இல்லாத வன்னியர்க்கு வாக்களிப்பது என்று முடிவு செய்ய வேண்டும் இதனால் மருத்துவர் குடும்பத்தின் பிடியில்
இருந்து ஒரு விடிவு பிறக்கும்.
இதை யாதவர்கள்,மறையர ்கள் ,இசுலாமியர் ,விஸ்வகர்மாக்கள ் நாடர்கள் கூட்டாக இதை செய்ய வேண்டும்
வட மாவட்டங்களில் யாதவர் + மறையர்+ நாடார் கூட்டமைப்பு ஒன்று உருவாக வேண்டும்
இது 60 % மக்கள் கூட்டமைப்பாக இருக்கும் .

இந்த கூட்டமைப்பு சாதி வெறியர்களுக்கு சாவு மணி அடிக்கும்
தமிழ் மக்களை இன பேதம் பார்த்து பிரித்து அரசியல் ஆதாயம் தேடி குடும்பம் வளர்பவர்களுக்கு
இனி சாவு மணி அடிப்போம்.

தமிழா இனி எந்த கட்சில் நீ இருந்தாலும் சாவு உன்னக்கு சர்வ நிச்சயம்
இன உணர்வு கொள்
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 76 விருந்தினர்கள் மற்றும் 1 உறுப்பினர்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

தமிழ்லீடர்

tamilleader

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday5130
mod_vvisit_counterYesterday9838
mod_vvisit_counterThis week57867
mod_vvisit_counterLast week67096
mod_vvisit_counterThis month176675
mod_vvisit_counterLast month297247
mod_vvisit_counterAll days8392403