முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
நீரா ராடியாவுடன் தொடர்புள்ள அனைவரையும் விசாரிக்க வேண்டும்: ஜெயலலிதா அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 3
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சனிக்கிழமை, 12 பிப்ரவரி 2011 23:49

சர்ச்சைக்குரிய வணிக மற்றும் அரசியல் தரகர் நீரா ராடியாவுடன் நெருக்கமான தொடர்புள்ள அனைவரையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

 2881301161_b3ab45afdd_b

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 

 “நம்பிக்கை”, “நாணயம்” என்றால் அதற்கு மறுபெயர் “டாடா” என்று தான் தலைமுறை தலைமுறையாக இந்தியர்கள் கருதி வந்தனர்.  “டாடா நிறுவனத்தினர் லஞ்சம் கொடுக்க மாட்டார்கள்” என்பதும், “டாடா நிறுவனத்தினர் அரசியலுக்கு இடமளிக்க மாட்டார்கள்” என்பதும் தான் இந்திய தொழில் துறையினர் மத்தியில் நிலவி வந்த கருத்து. துரதிர்ஷ்டவசமாக, இவையெல்லாம் பழங்கதையாக ஆகிவிட்டன.

 

 அரசியல் வணிகத்தில் இன்று டாடாவும் விதிவிலக்கல்ல என்ற தர்மசங்கடமான கருத்து தற்போது வெளிப்படுத்தப்பட்டுவிட்டது.  இந்தியாவின் மிகப் பழமை வாய்ந்த, புகழ் பெற்ற தொழில் நிறுவனமான டாடா குழுமத்திற்கு இந்த அவப்பெயரை பெற்றுத் தந்த பெருமை கருணாநிதி குடும்ப உறுப்பினர்களையும், தி.மு.க. அரசின் முதல்வர் கருணாநிதியையுமே சாரும்.

 

 2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தலுக்கு சற்றுமுன்,  திடீரென உயர் பதவி பெற்ற கருணாநிதியின் பேரனும், அப்போதைய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சருமான தயாநிதி மாறன், டாடாவின் ஸ்டார் டி.டி.எச். நிறுவனத்தின் 33 விழுக்காடு பங்குகளை சன் டி.வி. குழுமத்திற்கு சந்தை விலையை விட குறைந்த விலைக்கு அளிக்குமாறு டாடாவிற்கு நிர்ப்பந்தம் கொடுத்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

  

தயாநிதி மாறனால் ஊக்குவிக்கப்பட்ட, தயாநிதி மாறனின் உடன்பிறந்த சகோதரர் கலாநிதி மாறன் தலைமை செயல் அலுவலராக உள்ள சன் டி.வி. குழுமத்திற்கு டாடா ஸ்டார் டி.டி.எச்.ன் பங்குகள் கொடுக்கப்படவில்லையெனில், டாடாவின் தொலைத்தொடர்பு திட்டங்களுக்கான அனுமதிக்கு ஆபத்து ஏற்படும் என்று தயாநிதி மாறன் டாடாவை மிரட்டினார் என்ற குற்றச்சாட்டும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

  

கருணாநிதி குடும்பத்தில் ஏற்பட்ட சண்டையை அடுத்து, தயாநிதி மாறன் ஓரங்கட்டப்பட்டு, மத்திய அமைச்சர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட போது, மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்தவர் ரத்தன் டாடா தான்.

 

 தயாநிதி மாறனுக்கு பிறகு மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட ஆ. ராசாவை புகழ்ந்து, பாராட்டி தன் கைப்பட எழுதிய  தனிப்பட்ட ஒரு கடிதத்தை கருணாநிதிக்கு 13.11.2007 அன்று நீரா ராடியா மூலம் அனுப்பியிருக்கிறார் ரத்தன் டாடா.

  

தயாநிதி மாறன் தலைமையிலான தொலைத்தொடர்புத் துறையை தெளிவாக விமர்சிக்கின்ற இந்தக் கடிதம், சர்ச்சைக்குரிய வணிக மற்றும் அரசியல் தரகர் நீரா ராடியாவால் கருணாநிதியிடம் நேரடியாக அளிக்கப்பட்டு இருக்கிறது.

 

 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடுகள் மூலம் இந்திய நாட்டிற்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதற்காக ராசாவை சிபிஐ தீவிரமாக விசாரித்துக் கொண்டு இருக்கிறது. ரத்தன் டாடாவால் நல்லவர் என்று கூறப்பட்ட ராசாவே இந்த அளவுக்கு ஊழல் புரிந்து இருக்கிறார் என்றால், அவருக்கு முன்பு தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தவரும், அவருக்கு வேண்டியவர்களும் எந்த அளவிற்கு ஊழல் புரிந்து இருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே அதிர்ச்சியாக இருக்கிறது.

 

 ரத்தன் டாடா கருணாநிதிக்கு எழுதிய கடிதத்திலிருந்து, நீரா ராடியா கருணாநிதிக்கு ஏற்கனவே அறிமுகமானவர் என்பது நன்கு தெளிவாகிறது.  ரத்தன் டாடா தன்னுடைய கடிதத்தில் நீரா ராடியாவை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கவில்லை. இந்தக் கடிதத்தின் மூலம், நீரா ராடியா கருணாநிதியின் பல்வேறு குடும்ப உறுப்பினர்களுடன் நெருக்கமாக நடத்திய உரையாடல்களை எளிதில் தள்ளுபடி செய்துவிட முடியாது.

  

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இரண்டாவது முறை ஆட்சி அமைத்தபோது மத்திய அமைச்சர் பதவி பெறுவதற்காக 600 கோடி ரூபாய் பணத்தை தயாநிதி மாறன் தயாளுவிற்கு கொடுத்ததாக கூறப்படுவது; தொலைத்தொடர்புத் துறை ராசாவுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதில் கனிமொழி அதிக ஆர்வம் காட்டியது; தயாநிதி மாறனுக்கு தொலைத்தொடர்புத் துறை அளிக்கப்படாமல் கவனித்துக் கொண்டதற்கு கைமாறாக கனிமொழியின் தாயார் ராசாத்திக்கு சென்னையில் முக்கிய இடம் அளிக்கப்பட வேண்டும் என்று டாடாவிடம் ராசாத்தி கோரிக்கை வைத்தது ஆகிய அனைத்தும் மிகவும் ஆழமாக, கூர்ந்து ஆய்வு செய்யப்பட வேண்டியவை.

  

அமைச்சர்களை நியமனம் செய்யும் பிரதமரின் தனிப்பட்ட உரிமையை வெளி நபர்கள் பறித்துக் கொண்டது குறித்த உண்மை வெளிக் கொண்டு வரப்பட வேண்டுமானால், கருணாநிதி, கனிமொழி, ராசாத்தி உட்பட நீரா ராடியாவுடன் நெருக்கமாக தொடர்பு வைத்துள்ளவர்கள் அனைவரையும் சிபிஐ விசாரிக்க வேண்டும்.

 

இது உடனடியாக செய்யப்பட வேண்டும்.  இதைப் பற்றிய முழு உண்மையையும் தெரிந்து கொள்ள இந்திய நாட்டிற்கும், இந்திய மக்களுக்கும் உரிமை இருக்கிறது.

  

இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

Comments  

 
0 #31 singaitamilan 2011-02-18 21:03
Dear All fellow readers, pls spend some time to go and see the Video clips. How Indian Politicians corrupt or nation so far. pls send this link to all of your friend and relatives.

http://www.truthaboutindiacorruption.org/
Quote
 
 
0 #30 KK 2011-02-16 15:59
Read in maalamalar one vasagar comment on KaniMozhi getting arrested for protesting for Fishermen
இந்த நாடகத்துல கதாநாயகன் ராஜபக்ஷ, கதாநாயகி கனி, திரை கதை வசனம் டைரக்சன், இயக்கம் அத்தனையும் திருவாளர் மஞ்சள் துண்டு. நாடக அரங்கம் தமிழகம். டிக்கெட் கட்டணம் ஓட்டு மட்டுமே. பார்வையாளர்கள் இளிச்சவாய் தமிழர்கள்
Quote
 
 
0 #29 KK 2011-02-16 14:26
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=48690

KARUNANIDHI VAITHAR CHECK
இல.கணேசன் பிறந்த நாள்: கலைஞர் நேரில் வாழ்த்து

congress ENNA badil check vaikum??
Quote
 
 
0 #28 KK 2011-02-15 17:57
BREAKING NEWS FROM NDTV

CBI SUMMONS MD OF TATA REAL ESTATE - MAY BE IN CONNECTION WITH VOLTAS DEAL.
NOOSE IS TIGHTENING
Quote
 
 
+1 #27 KK 2011-02-15 17:52
READ THIS ALSO
T.Selvan - Tirunelveli,இந் தியா
2011-02-15 00:25:02 IST Report Abuse
துரைமுருகன் துபாய் அடிகடி சென்று வருவது பற்றி தினமலர் வாசகர் ஒருவர் முன்பே விமர்சனம் எழுதி இருந்தார். அவர் துரைமுருகனுக்கு துபையில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் இருப்பதாகவும் அதை கவனிக்கவே துபை வருவதாகவும் எழுதியிருந்தார் . அது மட்டும்தானா ? இல்லை வணிக வளாகங்களும் உள்ளனவா என்பதை சு.சாமி கண்டுபிடித்து கொள்வார். துபையில் துரைமுருகன் எவ்வளவு டாலர் முதலீடு செய்துள்ளார் என்பதையும் சு.சாமி பார்த்துகொள்வார ்.துரைமுருகனுக்கு ம் நேரம் சரியில்லை.
Quote
 
 
0 #26 KK 2011-02-15 17:49
INTERESTNG COMMENTS
rish - New York City,யூ.எஸ்.ஏ
2011-02-15 05:52:56 IST Report Abuse
யோவ் ..சாமி...நீ பெரிய ஆளுயா! சோனியா தங்கச்சி ப்ளைட் புடிச்சி துபாய் போனதெல்லாம் எப்டியா கண்டுபிடிக்கற? இந்த பத்திரிக்கைகள், டிவி எல்லாம் ஒன்னும் ..ங்க மாட்டேங்கிறாங்க ! இவ்ளோ அடுக்கடுக்கா சோனியா மேல புகர் பண்ணினாலும் ஒன்னும் பதில் வர மாட்டேங்குதே! மஞ்ச துண்டு குடும்பம் தமிழ் நாட்டை பங்கு போட்ட மாதிரி, அன்டனியா மெய்னோ குடும்பம் இந்தியாவ கூறு போட்டுக்கிட்டு இருக்கு. வேற நாட்டுல பொறந்து, இன்னிக்கு இந்த இந்தியாவ கொள்ள அடிசிகிட்டு இருக்கு இந்த கூட்டம். எல்லாம் ராஜீவ் வோட சபல புத்திதான் காரணம். போனமா, படிச்சமா, வந்தமா ன்னு இல்லாம.....ஐயோ! இவ்ளோ பெரிய காங்கிரஸ் கட்சிய வழி நடத்த இந்த டுப்ளிகேட் காந்திகளை தவிர வேற யாருமே இல்லையா? துரை முருகன் இனிமே தூங்க மாட்டார்னு நெனைக்கிறேன்.
Quote
 
 
-1 #25 KK 2011-02-15 17:48
ANOTHER READER WRITES ON WHY DURAI MURUGAN GOING TO DUBAI OFTEN

Vivian - Singapore,சிங்க ப்பூர்
2011-02-15 07:21:25 IST Report Abuse
Already he moved several Crores to Dubai & Indonesia, he tried to make investment in Singapore also through a top person from PWD department, whose relative running software business in singapore. so trace him & his belongings, even top officials (educated stupids) also working with him to move funds...catch hold of him, Swami is in right track..
Quote
 
 
0 #24 KK 2011-02-15 17:45
ONE READER WRITES IN DINAMALAR
ற்போது தமிழகத்தில் நடைமுறையில் உள்ள இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தின் ஏக போக உரிமை எடுத்துள்ள ETA ஸ்டார் நிறுவனம் தலைமையகம் துபாயில் தான் உள்ளது. இதன் உரிமையாளர் சலஹுதீன் தமிழ்நாட்டில் கீழக்கரையில் முன்பு கள்ளகடத்தல் தொழில் ஈடுபட்டிருந்தார ். அப்போது எம்ஜியார் தமிழக முதல்வர். அவர், சலஹுதினை பிடித்து, சட்ட விரோதமாக செயல் பட்டதால், இனி தமிழ்நாட்டிற்கு ள் வர வேண்டாம் என்று சொன்னார். பிறகு அவர் துபாய் சென்று பெரிய ஆளாகி விட்டார். எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற கோட்பாட்டில், கருணாநிதி அவரை நண்பனாக்கி கொண்டு, ஊழல் செய்து வருகிறார். இதுவே உண்மை
Quote
 
 
0 #23 KK 2011-02-15 15:14
SWAMY VS DURAI MURGUAN
ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில், பல்வா கைது செய்யப்பட்டுள்ள ார். இவருக்கு சொந்தமாக குஜராத்தில் தனி விமான தளம், தனி விமானங்கள் உள்ளன. இந்த விமானம் மூலம் சோனியாவின் தங்கைகள் இருவர் துபாய்க்கு சென்றுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தும்படி பிரதமரிடம் கேட்டுள்ளேன்.

அமைச்சர் துரைமுருகன் அடிக்கடி துபாய் செல்கிறார். துபாயில் என்ன வேலை, இதை துரைமுருகனே விளக்க வேண்டும். விளக்காவிட்டால் நானே கண்டுபிடித்து வெளியிடுவேன்.ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில், ராஜா ராஜினாமா , கைது செய்யப்பட்ட போதும், "தலித், தலித்' என, கருணாநிதி சொல்கிறார். ஆனால், பெரம்பலூர் மாவட்டத்தில் தலித்துக்களுக்க ு சொந்தமான நிலத்தை, தி.மு.க., அரசு ஆர்ஜிதம் செய்து, எம்.ஆர்.எஃப் தொழிற்சாலை அமைக்க கொடுத்துள்ளது.இதில், இருந்து கருணாநிதிக்கு தலித்துக்கள் மீது எந்தளவு பாசம் உள்ளது என்பது தெரியும். மக்கள் இனி ஊழலை தாங்க முடியாது என முடிவுக்கும் வந்துவிட்டனர். இதனால் ஸ்பெக்ட்ரம் ஊழல் வரும் தேர்தலில் பெரிய அளவில் எதிரொலிக்கும்.இவ்வாறு சுப்ரமணியசாமி கூறினார்.பேட்டியின் போது அக்கட்சியின் தமிழக தலைவர் சந்திரசேலா உடனிருந்தார்.
Quote
 
 
0 #22 KK 2011-02-15 15:11
DURAI MURUGAN TRIES TO EMULATE KARUNANIDHI IN PISATHU VAKIL NOTICE
சுப்பிரமணியசாமி தம்மை பற்றி கூறிய தவறான செய்திகளுக்கு வருத்தம் தெரிவிக்காவிட்ட ால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார ்.



இதுகுறித்து அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாம் அடிக்கடி துபாய் செல்வதாகவும், சிபிஐ கைது செய்துள்ள பால்வாவுக்கு சொந்தமான விமானத்தில் பயணிப்பதாகவும் சுப்பிரமணியசாமி வெளியிட்டுள்ள செய்திக்கு கண்டனம் தெரிவித்துள்ளார ்.



தமிழ் மன்ற விழாக்களுக்காக இதுவரை மூன்று முறைதான் துபாய் சென்றுள்ளதாகவும ், அதுவும் பயணிகள் விமானத்தில்தான் என்றும் அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

மேலும், பால்வா என்பவரை புகைப்படத்தில்த ான் பார்த்துள்ளதாக கூறியுள்ள அமைச்சர் துரைமுருகன், என்னைப் பற்றிக் கூறிய தவறான செய்திகளுக்கு சுப்பிரமணியசாமி வருத்தம் தெரிவிக்க வேண்டும். தவறினால் அவரை நீதிமன்றத்தின் மூலம் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்
Quote
 
 
+3 #21 SEMPARAICHELVAN 2011-02-15 10:53
infosysNarayana Murthy has given $5 million gift to Harvard for the Clay Sanskrit Library................HCL founder-chairman Shiv Nadar raised around Rs 585 crore by selling about 2.5% stake in HCL Technologies on Thursday, and said the proceeds will be donated towards philanthropic investments in India’s education sector. The Shiv Nadar Foundation, launched by Mr Nadar, will use this money for expanding its philanthropic efforts across thousands of schools and colleges in the country.......JUDGE PEOPLE BY THEIR DEEDS.
Quote
 
 
+3 #20 SEMPARAICHELVAN 2011-02-15 10:44
The Tata Group today became the largest donor ever to Harvard Business School's 102-year history. Tata Chairman, Ratan Tata, donated $50 million (Rs 220 crore) from the Dorabji Tata Trust and the Tata Education and Development Trust, philanthropic entities of Tata Group...........நல்லா வருதுப்பா வாயில.
Quote
 
 
+3 #19 SEMPARAICHELVAN 2011-02-15 10:38
be proud of Wipro’s Azim Premji, who has donated Rs. 8846 crore for education in India. Premji’s philanthropic act is the largest ever by an Indian.வாழ்த்த வார்த்தைகள் கிடைக்கவில்லை ஐயா
Quote
 
 
+1 #18 SEMPARAICHELVAN 2011-02-15 10:31
அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக்கும் 5 கோடி டாலர்கள் வழங்கியிருக்கிற ார் டாட்டா. பொழப்பு நடத்துறது இங்கே வாரிகொடுக்குறது பாரீன் பல்கலைக்கா?
Quote
 
 
+1 #17 mottai 2011-02-14 14:10
கலைஞர் நீண்ட காலமாக "உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு" என்று மேடை தவறாமல் கூறுவார். அவர் தலையைப்பார்த்தா ல் அவர் ஏதோ சரியாக சொன்னது நம் காதில்தான் தவறாக விழுந்துள்ளதோ?
Quote
 
 
+3 #16 KK 2011-02-14 09:31
BREAKING NEWS
SUNTV SHINES IN SPECTRUM-675 crore scam
Sun TV shines in spectrum deal?
Manoj Gairola, Hindustan Times
New Delhi, February 14, 2011 Email to Author
Astro, a sister concern of Malaysian billionaire T Ananda Krishnan-owned Aircel, invested R675 crore in the Maran family-owned Sun TV’s DTH venture within four months of getting spectrum in Dishnet Wireless (Now Aircel). It took Dishnet two years and seven months before it could get its licences in related stories

The report says DoT, under specific instructions from the communications minister’s office, delayed granting the licences by asking “irrelevant” and “vague” questions. The minister during this period — from May 2004 to May 2007 — was DMK heavyweight Dayanidhi Maran.

http://www.hindustantimes.com/Sun-TV-shines-in-spectrum-deal/H1-Article1-662045.aspx
Quote
 
 
+2 #15 Shanthamoorthi 2011-02-14 07:50
What Premji has given in the form of shares is worth 2 billion and 8000 Crores. its not just 800 crores.
Quote
 
 
+4 #14 Force 2011-02-13 22:13
(D)aily (M)oney (K)arunanidhi.
Quote
 
 
+11 #13 riazkhan 2011-02-13 18:24
எனக்கு என்னமோ இந்த தேர்தலில் நாம் கருணாநிதியிடம் நல்லா திட்டு வாங்க போகிறோம் என்று தெரிகிறது. பின்பு என்ன அவர் தான் தேர்தலில் தோற்றுவிட்டால் தமிழக மக்களை "தமிழர்கள் வாழை மட்டை", "நன்றி கெட்டவர்கள்" சொரணை அற்றவர்கள்", என்று வாயிற்கு வந்ததெல்லாம் திட்டுவாரே! எதற்கும் நாம் திட்டு வாங்க தயாராகவேண்டும்.
Quote
 
 
+2 #12 C.B.I 2011-02-13 18:10
All investigations are over... Karuna and Kanimozhi have no connection in 2G..
India is an corruptionless country.. Jai hind....
This is our country's situation today :(
Quote
 
 
+10 #11 semparaichelvan 2011-02-13 13:38
விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி இந்திய ஏழை குழந்தைகள் படிப்பிற்கு மட்டுமே செலவிடவேண்டும் என்று தன சொத்திலிருந்து 800 கோடி ரூபாய்கள் வழங்கியிருக்கிற ார். இதை எந்த பத்திரிக்கையிலோ தொலைகாட்சியிலோ பார்த்ததாக நினைவிருக்கிறதா ?....ஐந்து மில்லியன் டாலர் ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்துக் கு வாரி வழங்கிய இந்த டாட்டா கோமானின் நாட்டுப்பற்றை பற்றி இனியும் இங்கு புகழாதீர் ஐயனே.........
Quote
 
 
-10 #10 jeya iyengar 2011-02-13 13:03
Mudalla entha pappathiai visarika vendum bangalore courtla.Ithai kandipaga prasarikathu Savukku.enna ne oru pappan.
Quote
 
 
+15 #9 anani 2011-02-13 11:42
ரத்தன் டாட்டா யோக்கியம் என்று சொன்னதற்க்கே நீர் வாயை கழுவவேண்டும் ஐயா. சமுகத்தில் நல்ல இடத்தில் இருக்கும் ஒரு நபர், மிக சாதரணமாக ஒரு அமைச்சரை மாற்றுவதை பற்றி பேசுகிறார். விசாரிப்போம் என்று சொன்னால் நாட்டுப்பற்றை காட்டுகிறார். பல ஆயிரம் ஏழை மாணவர்கள் இங்கு படிக்க வழியில்லாமல் இருக்கும் போது ஐந்து மில்லியன் டாலர் ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்துக் கு வாரி வழங்கிய இந்த கோமானின் நாட்டுப்பற்றை பற்றி இனியும் இங்கு புகழாதீர் ஐயனே.
Quote
 
 
+6 #8 பாரதிக்குஞ்சு 2011-02-13 10:43
டாடா குழுமத்திற்கு இந்த அவப்பெயரை பெற்றுத் தந்த பெருமை கருணாநிதி குடும்ப உறுப்பினர்களையு ம், தி.மு.க. அரசின் "முதலாளி" கருணாநிதியையுமே சாரும்.

இதைப் பற்றிய முழு உண்மையையும் தெரிந்து கொள்ள இந்திய நாட்டிற்கும், இந்திய மக்களுக்கும் உரிமை இருக்கிறது.
Quote
 
 
+2 #7 Bharath Arunachalam 2011-02-13 09:49
According to economic times, a survey has found that people in Chennai are very angry at politicians. I hope that they go to the polls with the same anger and kick karunanidhi and his family out of power.
http://economictimes.indiatimes.com/news/economy/indicators/india-angry-blames-govt-for-corruption-inflation/articleshow/7485728.cms
Quote
 
 
-16 #6 ஜாப 2011-02-13 08:56
நீ அ இ அ தி மு க தான்
Quote
 
 
+9 #5 media 2 2011-02-13 08:17
அதிகாரிகளின் கேள்விகளுக்கு ஆ.ராசாவின் ஒத்துழைப்பு சரியாக இல்லை. இது தொடர்ந்தால், மேலும் சில நாட்கள் கஸ்டடி கேட்போம். பெரும்பாலான கேள்விகளுக்கு, 'இது பிரதமருக்குத் தெரியும்... சோனியாவுக்கு தெரியும். அவர்களிடம் கேளுங்கள்' என்று மற்ற பெயர்களை இழுக்கிறார். தலை வலி, வயிற்று வலி என உடல்நிலையைக் காட்டி, விசாரணையைத் தட்டிக் கழிக்கிறார். இதுமாதிரி போக்கு காட்டுகிற கைதிகளை எப்படி டீல் செய்வது என்று எங்களுக்கும் தெரியும்.

தமிழகத்துக்கு ஐந்து சி.பி.ஐ. உயர் அதிகாரிகள் போயிருக்கிறார்க ள். ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சா போன்ற சிலரை விசாரணை வளையத்தில் முதலில் கொண்டுவருவார்கள ். அவரது குடும்பத்தினர், நெருங்கிய சகாக்கள் என்று பலரையும் கூடிய விரைவில் ஆ.ராசா கம்பி எண்ண வைத்துவிடுவார் போலிருக்கிறது. எங்களுக்கு வலுவான ஆதாரம் கிடைக்கும் என்றால், யாரையும் கைது செய்யத் தயங்கமாட்டோம்!'' என்றனர். thanks JUVI
Quote
 
 
+8 #4 media media 2011-02-13 08:17
அடேங்கப்பா... மீடியா கம்பெனி!

''தமிழகத்தின் முக்கிய இளம் வி.ஐ.பி-கள் இருவர் அடிக்கடி அமெரிக்காவுக்கு சென்று வருவதையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கண்காணித்தனர். பல ஆயிரம் கோடியில் அவர்கள் இருவரும் ஒரு மீடியா கம்பெனியை அங்கு துவக்கப் போவதைக் கண்டு எங்கள் அதிகாரிகளே திகைத்தனர். ஆசியா கண்டத்தில் எங்கு ஆங்கிலப் படங்கள் ரிலீஸ் ஆனாலும், ஒரு குடையின் கீழ் வைத்து அவற்றைக் கட்டுப்படுத்தும ் வகையில் இருக்குமாம் இந்த புது கம்பெனி...'' என்கிறார்கள் சி.பி.ஐ. வட்டாரத்தினர்.
Quote
 
 
+6 #3 copycat 2011-02-13 08:16
'சென்னையில் ஐ.பி. என்கிற உளவுத் துறையின் உயர் அதிகாரி இத்தனை நாள் என்ன செய்துகொண்டிருந ்தார்?'' - இதுதான் மத்திய அரசின் தற்போதைய கேள்வி! ''வங்கிகளில் பெருந்தொகை கைமாறும்போதெல்ல ாம், தினப்படி தகவல்கள் ஐ.பி-க்குப் போகும். இதேபோல, டெல்லி நார்த் பிளாக்கில் உள்ள பண மோசடியைக் கண்டுபிடிக்கும் செல்லுக்கும் தகவல் போகும். இவர்கள் எல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்தததன் பின்னணிதான் புரியவில்லை. சென்னையில் உள்ள ஐ.பி-யின் உயர் அதிகாரி இங்கே வந்து பல வருடங்கள் ஆகியதால், பதவி உயர்வு வந்தது. ஆனால், அவர் இங்குள்ள பதவியை அப்கிரேட் செய்து வாங்கிக்கொண்டு, இங்கேயே இருக்கிறாராம்... இதெல்லாமே ஏன் என்பது எப்படியும் தெரியவரும்!'' என்று சொல்லி முடித்தனர், சி.பி.ஐ. வட்டாரத்தினர். Ju VI thanks
Quote
 
 
+6 #2 copy 2011-02-13 08:15
கால் டாக்ஸியில் கரன்சி

இந்திய பிரபல கார் நிறுவனங்களில் சமீபகாலமாக மொத்தமாக கார்களை வாங்க யாராவது அட்வான்ஸ் பணம் கட்டினார்களா என சி.பி.ஐ. துருவியபோது, தென் இந்தியாவில் உள்ள பிரபல நிறுவனத்தின் சார்பில் பெருந்தொகை கட்டியிருப்பது தெரிந்தது. அந்த நிறுவனம் ஏற்கெனவே கால் டாக்சி பிஸினஸில் ஈடுபட்டிருக்கிற து. சுமார் 3,000 எண்ணிக்கையில் பல்வேறு பிராண்ட் கார்களை வாங்க முதலீடு செய்ததின் பின்னணியைத் துருவியபோது, இதிலும் சென்னை பவர்ஃபுல் பெண்மணி ஒருவரின் பெயர் அடிபடுகிறதாம்! Thanks JU VI
Quote
 
 
+26 #1 அ.சந்தர் சிங். 2011-02-13 01:51
இந்த தி.மு.க.வினர் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும்.
திருடர்கள் முன்னேற்றக் கழகம்தான் தி.மு.க. என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
இந்த சொட்டை இருக்கிறானே,கல் யாண வீட்டில் அவன்தான் மாப்பிள்ளை.இழவு
வீட்டில் அவன்தான் பிணம்,என்ற எண்ணம் அவனுக்கு.இருடி ,,இருக்குடி மவனே உனக்கு.!
மாலை ,மரியாதை எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்.அப்புறம் உனக்கு ஒரேயடியாய் உனக்கு
ங்குதான்
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 103 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

தமிழ்லீடர்

tamilleader

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday5109
mod_vvisit_counterYesterday9838
mod_vvisit_counterThis week57846
mod_vvisit_counterLast week67096
mod_vvisit_counterThis month176654
mod_vvisit_counterLast month297247
mod_vvisit_counterAll days8392382