முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
சீறிய ஜெ.... சிக்கிய ஜாபர் சேட். கொட்டும் ஆதாரங்கள். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 36
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
வெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2011 11:46

 

01

கடந்த செவ்வாயன்று காலை ஒன்பது மணிக்கு பத்திரிகையாளர்களுக்கு ‘முன்னாள் உளவுத்துறைத் தலைவர் ஜாபர் சேட் வீட்டில் சோதனை’ என்று எஸ்.எம்.எஸ். வந்து  பரபரப்பை ஏற்படுத்தியது.

பலரால் நம்பவே முடியவில்லை. அதிகாரத்தின் உச்சியில் இருந்த, வானளாவிய அதிகாரம் படைத்த ஜாபர் வீட்டிலா சோதனை? பலருக்கு சோதனை கொடுத்த ஜாபருக்கே  சோதனையா?... அந்த சில நிமிடங்களில் திக்குமுக்காடிப் போனார்கள் பத்திரிகையாளர்கள்.

தமிழகத்தின் அதிகார மையமாக இருந்து அனைவரையும் ஆட்டிப்படைத்த ஜாபர் சேட்டை லஞ்ச ஒழிப்பு போலீஸார் எப்படி நெருங்கினார்கள்....?

தி.மு.க. ஆட்சியின் போது, தொலைபேசி ஒட்டுக்கேட்பு புகார் வந்தது அல்லவா? அந்தப் புகாரின் கதாநாயகனே இந்த ஜாபர் சேட்தான். அப்போதைய எதிர்க்கட்சித்  தலைவி ஜெயலலிதாவின் தொலைபேசியையும் ஒட்டுக்கேட்க ஜாபர் சேட் தவறவில்லை.

அப்போதே இதுகுறித்து ஜெயலலிதா கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். தேர்தல் நேரத்திலும் ஜாபர் மீது சரமாரியாக புகார் தெரிவித்து தேர்தல் கமிஷனின்  நடவடிக்கையைக் கோரினார். அதன்பிறகு, ஜாபர் சேட் அதிரடியாக மேற்கு வங்கத் தேர்தல் பார்வையாளராக மாற்றப்பட்டார்.

ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, அதிகாரிகளை அழைத்த முதல்வர் ஜெயலலிதா, ‘என்ன ஆச்சு ஜாபர் சேட் விவகாரம்...?’ என்று சீறியதுதான் தாமதம். சுறுசுறுப்பாக களத்தில்  இறங்கினார்கள் போலீஸார். 

லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றி, தொலைபேசி ஒட்டுக் கேட்பு சர்ச்சையில் சிக்கி பணி இடை நீக்கத்தில் உள்ள சங்கர் என்பவர் புகார் கொடுக்க... ஜாபர் சேட் மீதான  நடவடிக்கையை முடுக்கி விட்டனர் போலீஸார். இதுகுறித்து ‘ஜாபர் மீது பல கோடி மோசடிப் புகார்’ என்ற தலைப்பில் 24.7.2011 தேதியிட்ட இதழில் செய்தி வெளியிட்டி ருந்தோம்.

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த அதிரடி குறித்து விசாரித்தோம். ‘‘சும்மா சொல்லக்கூடாது...போலீஸார் ரொம்பத்தான் மெனக்கெட்டிருக்கிறார்கள்...’’ 

லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சமீபத்தில் நியமிக்கப் பட்ட துணை இயக்குனர் வெங்கட்ராமன் தான் ஒட்டுமொத்த ஆபரேஷனையும் மேற்பார்வை செய்திருக்கிறார்.   ஏற்கெனவே, சி.பி.ஐ.யில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் என்பதால்,  இந்த ஆபரேஷனை கச்சிதமாகவே செய்திருக்கிறார்.

மே மாதம் தலைமைச் செயலாளருக்கு சங்கர் கொடுத்த புகாரின் மீது ரகசிய விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. அந்த விசாரணையில், பல ஆண்டுகளாகவே ஜாபர் சேட்  ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.

ஜாபர் சேட்டின் கல்லூரித் தோழரான பால்ராஜ் ஜான்சன் மற்றும் ஜாபர் சேட்டின் பினாமி என்று கருதப்படும் ஜெய்சங்கர் ஆகியோர் ஜாபரின் முதலீடுகளை நிர்வகித்து  வந்தனர் என்ற தகவலும் தெரிய வந்துள்ளது.

“புகார் எங்களுக்கு மே மாதத்திலேயே வந்தாலும், உரிய விசாரணை நடத்தி பல்வேறு விவரங்களைக் கண்டறிந்த பிறகே வழக்குப் பதிவு செய்தோம்’’ என்கிறார் லஞ்ச  ஒழிப்புத் துறை அதிகாரி ஒருவர். அந்த அதிகாரி தொடர்ந்து கூறுகையில், ”விருப்புரிமை கோட்டாவின் கீழ் அரசு நிலம் ஒதுக்கீடு செய்வது, ஒதுக்கீடு பெறும் நபர் அந்த  இடத்தில் வீடு கட்டிக் கொள்ளத்தானே தவிர, வியாபாரம் செய்து லாபம் சம்பாதிக்க அல்ல. 

ஆனால், ஒதுக்கீடு பெற்ற ஜாபரின் மனைவியும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் செயலாளராக இருந்த ராஜமாணிக்கத்தின் மகன் துர்காசங்கரும் சேர்ந்து ‘லேண்ட்  மார்க் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தோடு கூட்டாக வியாபாரம் செய்துள்ளனர்.  அந்த நிறுவனம் ஜாபர் சேட்டின் மனைவி பர்வீன் ஜாபருக்கும்,  துர்கா சங்கருக்கும் ஒதுக்கிய நிலத்தில், 12 அடுக்கு மாடி வீடுகளைக் கட்டி வருகிறது.  

இந்த வீடுகள் ஒவ்வொன்றும் இரண்டரைக் கோடிக்கு விற்பனை செய்யத் திட்டமிட்டிருந்தனர்.  ஒட்டுமொத்த அடுக்கு மாடியும், ‘சென்ட்ரலைஸ்டு’ ஏ.சி. வசதி கொண்டது.  இது தவிர, ஒவ்வொரு வீட்டின் சமையலறைக்கும் இத்தாலி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உபகரணங்கள், தரைக்கு இத்தாலி பளிங்குக் கற்கள், நீச்சல் குளம்,  ஜிம்னாசியம், லிஃப்ட், ஜெனரேட்டர் போன்ற வசதிகளோடு  கட்டப்பட்டு வருகிறது. 

இதற்காகவா சமூக சேவகர் என்ற பிரிவில் நிலம் ஒதுக்கினார்கள்?’’ என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார் அந்த அதிகாரி. 

லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரத்தில் விசாரித்த போது, கிடைத்த தகவல்கள் ஜாபர் மோசமான புதைகுழியில் சிக்கிக் கொண்டுள்ளார் என்றே தோன்ற வைக்கிறது.  

‘‘செவ்வாயன்று காலை 8 மணிக்கு அண்ணா நகரில் உள்ள ஜாபர் வீட்டுக்குள், விசாரணை அதிகாரி கூடுதல் எஸ்.பி. சுப்பையாவும், கூடுதல் எஸ்.பி. ஜெயலட்சுமி  தலைமையிலான டீமும் நுழைந்தது.  லஞ்ச ஒழிப்புத் துறையின் பல்வேறு சோதனைகளில் பங்கெடுத்து நீண்ட அனுபவம் கொண்ட இன்ஸ்பெக்டர் வேலன் சுப்ரமணியும்  இந்த டீமில் இடம்பெற்றிருந்தார்.

வீட்டினுள் நுழைந்ததும் தங்களை அறிமுகப் படுத்திக் கொண்ட அதிகாரிகள்,  சோதனை நடத்தப் போகும் விவரத்தை ஜாபர் சேட்டிடம் தெரிவித்து, ‘உங்கள் மனைவியை  ஒத்துழைக்கச் சொல்லுங்கள்’ என்று ஜாபரிடம் போனில் தெரிவித்த பின், சோதனையைத் தொடங்க உத்தரவிட்டார் கூடுதல் எஸ்.பி. சுப்பையா.    

சோதனையின் போது ஜாபர் சேட்டின் லேப்டாப் மற்றும் 8 ஐபாட் கருவிகளும், 35 சி.டி.க்களும் சிக்கியிருக்கின்றன.   அதில் ஒரு சி.டி.யை போட்டுப் பார்த்த சுப்பையா  அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.  கருணாநிதியின் குடும்ப உறுப்பினர் ஒருவரோடு ஜாபர் நடத்திய உரையாடல் அந்த சி.டி.யில் இருந்திருக்கிறது. 

உடனடியாக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் கே.பி. மகேந்திரனைத் தொடர்பு கொண்டார் சுப்பையா. இதன்பின்னர், லேப்டாப் உள்ளிட்ட கருவிகள் மட்டும் முதலில்  அப்புறப்படுத்தப்பட்டன. அதன்பிறகு, சோதனையில் சிக்கிய பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றிய விஜிலென்ஸ் அதிகாரிகள் ஜாபரின் வீட்டை விட்டுக் கிளம்பினர். 

இந்நிலையில், லேண்ட் மார்க் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தில் தொடக்கத்தில் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்திருக்கின்றனர்.  ‘எங்கள் எம்.டி. வராமல் எந்த  ஆவணங்களையும் ஒப்படைக்க முடியாது’ என்று சாக்குப்போக்கு சொல்லியிருக்கிறார்கள்.

அந்த அலுவலகத்தை சோதனையிடச் சென்ற டி.எஸ்.பி. அலி பாஷா,  சோதனைக்கு ஒத்துழைத்து ஆக வேண்டிய அவசியத்தை விளக்கியதும், ஒரு வழியாக ஒத்துழை த்திருக்கிறார்கள். துர்கா சங்கர் வீட்டுக்குச் சென்ற டி.எஸ்.பி. திருநாவுக்கரசு தலைமையிலான டீமும், பல்வேறு ஆவணங்களை அள்ளி வந்திருக்கிறது.

ஜாபர் வீட்டுக்கு அருகிலேயே கஸ்தூரி ராஜா என்ற ஜாபரின் நண்பர் வீடும் சோதனைக்குத் தப்பவில்லை. பல்வேறு ரியல் எஸ்டேட் ப்ராஜெக்டுகளைச் செய்து வரும், இந்த  கஸ்தூரி ராஜாவின் வீடு, வெள்ளை மாளிகை என்று வர்ணிக்கும் அளவுக்கு மிக ஆடம்பரமாக இருந்தது.   இவர்தான் ஜாபரின் பல்வேறு முதலீடுகளை ரியல் எஸ்டேட் டில் ஜாபர் சார்பாக செய்து வருகிறார்.  ஜாபரின் நண்பர் ஜான்சன் வீட்டில் மட்டும் ரூ.50 கோடி மதிப்புள்ள ஆவணங்கள் சிக்கியதாகச் சொல்கிறார்கள்.  

சோதனைக்குச் சென்ற லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனை இரவு மற்றொரு இடத்தில் தொடர்ந்தது.   

எண் 23, ராஜா தெரு, கல்யாணி நகர், திருவான்மியூர் என்ற முகவரியில் உள்ள இந்த இடத்தை சோதனைக்குத் தேர்ந்தெடுத்த காரணம், ஜாபரின் மகள் செல்வி  ஜெனிஃபர்தான். ‘சமூக சேவகர்’ என்ற பிரிவில் வீடு ஒதுக்குங்கள் என்று கருணாநிதிக்கு ஜெனிஃபர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முகவரிதான் இது. 

இந்த இடத்தில் சோதனை செய்யச் சென்ற அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால், இந்த இடம் பெரும் பணக்காரர்கள் குடியிருக்கும் பகுதியில் இருந்த  காலி இடம். இந்த வீட்டு மனையும் எப்படியும் மூன்று கோடி விலை இருக்கும் என்கிறார்கள். 

ஒரு காலி மனையை குடியிருக்கும் முகவரியாக ஜெனிஃபர் ஏன் காட்ட வேண்டும் என்றும் கேள்வி எழுகிறது.  இதற்கு தனியாக செல்வி ஜெனிஃபர் மீது ஒரு கு ற்றச்சாட்டு சேர்க்கப்படும்’’ என்கிறார்கள் லஞ்ச ஒழிப்பு போலீஸார்.

இந்த ரெய்டு குறித்து கருத்துத் தெரிவித்த  மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர், “பேராசை காரணமாக தன் மகளை சிக்கலில் இழுத்து விட்டு கருணாநிதி திகாருக்கு  அனுப்பியது போலவே, ஜாபர் சேட்டும் தன் மகளை கிரிமினல் வழக்கில் சிக்க வைத்துள்ளார்.  திறமையான அதிகாரியான ஜாபர் சேட், முன் பின் யோசிக்காமல்  மனைவியையும், மகளையும் பயன்படுத்தி சொத்து சேகரிக்க எடுத்த முயற்சிதான் இன்று அவருக்கு சிக்கலாகி இருக்கிறது’’ என்றார். 

இதனிடையே வக்கீல் புகழேந்தி கொடுத்த புகாரிலும் ஜாபர் சேட் மீது இன்னொரு வழக்குப் பதிவு செய்யப்படலாம் என்கிறார்கள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்.   

‘‘ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும்போது... ஜாபர் சேட் எல்லாம் எம்மாத்திரம்...?’’

- ஆச்சரியப்படுபவர்களுக்கு இதையே பதிலாக சொல்லிக் கொண்டிருக்கிறது போலீஸ் வட்டாரம்.

அடேங்கப்பா...?

ஜாபர் சேட் குடியிருந்த அண்ணா நகர் பங்களா 4 கிரவுண்டுகளில் கட்டப்பட்டிருக்கிறது.  அதன் மதிப்பு ரூ. 15 கோடி என்கிறார்கள். அந்த வீட்டில் மாதந்தோறும் 20  ஆயிரம் வாடகைக்கு குடியிருப்பதாக ஒப்பந்தம் போட்டுள்ளார் ஜாபர்.  

ஒரு மாதம் முன்புதான் ஜாபர் சேட், அண்ணா நகர் பங்களாவுக்கு குடி போயிருந்தாலும், ஜாபரின் மனைவி, 2 ஜூன் 2009 அன்று வீட்டு வசதித் துறைக்கு எழுதிய  மனுவில், ஜாபர் தற்போது குடியிருக்கும் அண்ணா நகர் பங்களா முகவரியையே கொடுத்திருக்கிறார்.  இதனையும் தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்கள் போலீஸார்.

அண்ணா நகர் பங்களா ஜாபர் சேட் பினாமி பெயரில் வாங்கியுள்ள சொத்து என்றும் போலீஸார்  தெரிவிக்கிறார்கள்.  இது போக, பழைய மகாபலிபுரம் சாலையில் ‘க்ள £சிக் ஃபார்ம்ஸ்’ என்ற இடத்தில் இரண்டு கிரவுண்டுகள் வேறு பெயரில் ஜாபர் வைத்திருப்பதாகவும் தெரிகிறது.  

இந்த இரண்டு கிரவுண்டுகள், அண்ணா நகர் பங்களா, இதர முதலீடுகள், திருவான்மியூர் கல்யாணி நகர் காலி மனை ஆகியவற்றை மட்டும் வைத்தே, ஜாபர் மீது வரு மானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு விரைவில் பாயும் என்று பயமுறுத்துகிறார்கள் லஞ்ச ஒழிப்பு போலீஸார்.

என்ன பொருத்தம்!

முன்னாள் தலைமைச் செயலாளர் திரிபாதிக்கும், முன்னாள் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் உபாத்யாயாவுக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் வெளியானது  தொடர்பான வழக்கில் சங்கர் கைது செய்யப் பட்டார்.

சி.பி.சி.ஐ.டி. கஸ்டடியில் சைபர் க்ரைம் டி.எஸ்.பி. பாலு தம்மை கடுமையாக சித்திரவதை செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தார் சங்கர். ஆட்சி மாறியதும் மீண்டும் ஒரு  புகாரை உள்துறைச் செயலாளரிடம் நேரில் கொடுத்துள்ளார். 

ஜாபர் சேட் உத்தரவின்படி, இரண்டு காவல்துறை உயர் அதிகாரிகளை அந்த வழக்கில் சிக்க வைக்கவே சங்கரை  டி.எஸ்.பி.  பாலு சித்திரவதை செய்தார் என்ற புகார்  கூறப்பட்டது. அந்த பாலுவின் சொந்தத் தம்பியான கூடுதல் எஸ்.பி. சுப்பையா, ஜாபர் சேட் மீதான இந்த வழக்கின் புலனாய்வு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார் என் பது தான் கூடுதல் தகவல்.

 

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

 

Comments  

 
0 #64 Thangarasu 2011-08-09 00:52
:lol: Great Job Thaliva :)
Quote
 
 
+3 #63 TACChennai 2011-08-04 17:34
தமிழக ஊழல் எதிர்ப்பு இயக்கம் - ஊழல்வாதிகளை கடுமையாக தண்டிக்கவும், சொத்துக்களை பறிமுதல் செய்யவும் -- மாபெரும் பேரணி.
ஆகஸ்ட் 6 , 2011 , சனிக்கிழமை அன்று மாலை 5 - 6.30 வரை, மரினா கடற்கரை காந்தி சிலை முதல் - அண்ணா சமாதி வரை. சுமார் 20000 மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

லக்சிமிகாந்தன் பாரதி, தமிழருவி மணியன், SM அரசு போன்றோர் கலந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன். வாருங்கள் தோழர்களே நாமும் கலந்து கொள்வோம்.
Quote
 
 
-4 #62 RAJKUMARPANDIAN 2011-08-02 23:04
நீ பிசி பொறம்போக்கா அல்லது பொறம்போக்கா
Quote
 
 
+1 #61 unmai tamilan 2011-08-02 21:38
இவன எல்லாம செருபால அடிகனும்
Quote
 
 
+4 #60 Scorpio 2011-08-02 13:05
தம்பி .... என்ன சொல்ல.... ரொம்ப சந்தோஷமா இருக்கு.....என் தந்தைக்கும் இத போலே நடந்த அநியாயத்தை என்னாலே தட்டிக் கேட்க முடியாமல் போனது. ஆனால் அவர் முடிந்த வரை போராடினார் . என்னிடம் சாதுர்யம் இல்லாமல் போனது... தக்க பின்புலமும் இல்லை. எந்தந்தைக்கு கேடு செய்த அதிகாரிகள்...ஸ்கந்தன் இ. ஆ.ப. இப்போ மத்திய பணியில் இருக்கான். போத்திப் பார்ப்பான் . அடிவருடி .....அழகிரி ராஜான்னு ஒரு பி.ஓ. ஒய்வு . ராஜபாளையம் ராஜுஸ். அண்ணா நகர்லே இருக்கிறதா சொன்னாங்க... மாநில தீர்ப்பாயம் இப்போ இல்லே.... அதிலே அசோக் குமார் தாஸ் ந்னு ஒரு எஸ்.சி. பொறம்போக்கு பயல்... செத்துட்டான் ....கேனத்தனமா ஒரு தீர்ப்பு .... கட்டப்பஞாயத்க்க ுன்னே பொறந்திருப்பான் போலே... என் அப்பாவும் செத்துட்டார் .... மெட்ராஸ் திருட்டு டாக்டர்ஸ் கொன்னுட்டாங்க லக்சம் லக்ச்சமா காசு புடுங்கினப்புரம ்.... வைராக்கியத்திற் கு ஞானத்திற்கும் அவர்தான் எனக்கு உதாரணம்/ ஆதர்ச புருஷன். .. உங்கள் வைராக்கியமும் சிறப்பா உள்ளது.... இது தொடரணும்
Quote
 
 
0 #59 mganapathy. 2011-08-02 12:00
your job is very great. u r courge and ur concern is very great.pl give u r phone, cell numbere to the entire tamil nadu people, to enable them to give vittal information. sothat u can bring out the truth. best wishes
Quote
 
 
+5 #58 Chicago Tamilan 2011-08-02 01:38
ஜாபர் சேட் இடைக்கால பணீ நீக்கம்.
Why Savukku did not publish this news yet?
Quote
 
 
0 #57 suresh Ayyanar 2011-08-01 18:59
Land grab complaint against former TN minister

0You recommend thisYou don't recommend thisShare
Chennai, Aug 1 (PTI) A police complaint was today lodged against former Tamil Nadu minister Parithi Ilamvazhuthi and several others alleging their involvement in land grabbing with the complainant seeking to drag DMK President M Karunanidhi also in the matter.

Ranga Reddy of Dharmathoppu Trust in Villivakkam here in his complaint alleged that in 2001 a personal assistant to Ilamvazhuthi, T Gagarin, had prepared fake documents relating to seven acre 46 cent land, originally a property of the trust in the city, and sold it to Doshi Builders for Rs 5.35 crore but was worth around Rs 200 crore.

In his complaint lodged with Commissioner of Police, he alleged that Ilamvazhuthi''s aides had told him that the property was meant for former deputy chief minister M K Stalin''s son Udhayanidhi Stalin whose name was linked with Doshi Builders.

An RTI reply from the officer concerned in registrar''s office did not show the issuance of any such patta to anyone, he said.

Reddy said he had lodged a complaint on December 27 last year seeking action.

"The very next day, when all the TV channels aired news about the complaint, Gagarin posed for a photo with then Chief Minister Karunanidhi. Doing so, they prevented the police from taking any action on my complaint," Reddy charged.

Alleging that Karunanidhi had extended support to Ilamvazhuthi and his aides thus preventing any action being taken against them, Reddy sought action against the former chief minister and his grandson Udhayanidhi Stalin also.

The complaint was lodged on a day when the DMK staged state-wide protests accusing the AIADMK government of foising false cases against its partymen on charge of land grabbing.
PTI DSJ MS VS VSC
Quote
 
 
+9 #56 Murattukaalai 2011-08-01 12:42
ரொம்ப பெருமையா இருக்கு சவுக்கு. உன்ன மாதிரி ஆல்தாயா நான் தேடி கிட்டு இருந்தேன்.
Quote
 
 
+9 #55 Father 2011-08-01 11:39
ஊரில் தெருவோர டி கடைகளில் வைதிருபதுபோல் இப்போது எல்லா போலீஸ் நிலையத்திலும் அறிவுப்பு பலகை வைக்கவேண்டும் இன்றய கைது (ஸ்பெஷல்) புதிய அரசு ஆணை பிறப்பிக்க பட்டுள்ளது. என்ன சட்டமோ அல்லது ஒழுங்கோ எல்லாம் அம்மா செயல்
Quote
 
 
+7 #54 Munish 2011-08-01 10:57
Congrats Shankar... I admire your courage and determination.. Great job done!... Lot more pending :-)
Quote
 
 
+4 #53 yolk 2011-07-31 22:05
Great Sir..Hats off..
Quote
 
 
+3 #52 hinas 2011-07-31 20:51
ப்யாரு முதல்வர்னு தெரியலபா
Quote
 
 
-2 #51 Jaffer 2011-07-31 17:18
உப்பு சப்பு இல்லாத கதை
Quote
 
 
+3 #50 தேவேந்த்ரநாத்சாரங்கி 2011-07-31 15:07
well done sangar
Quote
 
 
+4 #49 avvai 2011-07-30 22:23
பின்னிட்டய சவுக்கு
Quote
 
 
+3 #48 Ram US 2011-07-30 21:40
உங்களை போல ஒரு மனிதர் இந்த நாட்டுக்கு தேவை. வாழ்த்துக்கள்.
Quote
 
 
+3 #47 bharathinesan 2011-07-30 19:03
அரசு அன்று கொல்வான் -இது பழைய மொழி. புதிய அரசு வந்து கொல்லும்- இது புதிய மொழி. ஜாஃபருக்கு இந்த பாட்டைப் போடு - நான் ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்லை..........
Quote
 
 
+2 #46 sandeep prasanna 2011-07-30 16:35
Sankar sir!! Neenga engayoo poiteenga!!! Vazhthukkal...
Quote
 
 
+16 #45 தஞ்சை குணா 2011-07-30 16:27
உங்கள் தைரியம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. உங்கள் உழைப்பையும், வைராக்கியத்தையு ம் எப்படி பாராட்டுவதென்று தெரியவில்லை.வாழ்த்துக்கள். உங்களைப் போன்றவர்கள் ஒவ்வொரு துறையிலும் சிலர் இருந்துவிட்டால் பெரிய அதிகாரிகள் தவறு செய்ய நிச்சயம் அச்சப்படுவார்கள ். அதிகாரிகள் ஒத்துழைக்கவில்ல ை என்றால் அரசியல்வாதிகளால ் ஊழல் செய்ய முடியாது. அண்ணா ஹசாரே போன்றவர்கள் போராடவேண்டிய அவசியம் இருக்காது.
Quote
 
 
+9 #44 dhass 2011-07-30 15:33
நாள் - 31/7/2011
இடம்- பர்வானா அரங்கம்
ஆட்ஸ்ச் ட்ஹேஆட்றே ஓப்போஸீடே,
போள்ளாச்ஹீ.
அங்க என்னடான்னு கேட்கரிங்களா? நம்ம சவுக்கு சங்கர் சார் அங்க வரார். யெதுக்கு அப்டின்னா பொள்ளாச்சிள இருக்கிர ஒரு சங்கம் சிறத வெப் சைட்டா நம்ம சவுக்க செலக்ட் பன்னிருக்காங்க . அந்த விழாவுள பேச போரார். நீங்க
Quote
 
 
+9 #43 sudesh 2011-07-30 12:37
சவுக்கு அண்ணா முதலில் உங்கள் தைரியத்திற்கு என் பாராட்டுகள். நீங்க சவுக்கு சுழற்றுவதை நிறுத்த வேண்டாம். நீங்க அடிக்கடி கொடுக்கணும் சவுக்கடி.
Quote
 
 
+11 #42 பிரம்பு 2011-07-30 12:27
சவுக்கு பேரை கேட்டாலே சாபருக்கு விக்கும்!
(விக்கிக் கொல்லும்/கொள்ளும்)
Quote
 
 
+14 #41 ஊமை 2011-07-30 12:27
சிங்கம் யா நீ.
Quote
 
 
+1 #40 chandru 2011-07-30 12:24
Try to be Attorney Shankar. Hats off to the great Job you are reading. I greatly admire your writing skills. We need the people of your character in society. You can be great attorney which will save others and you.
Quote
 
 
+3 #39 saran 2011-07-30 11:59
ஜாபர் சேட் உத்தரவின்படி, இரண்டு காவல்துறை உயர் அதிகாரிகளை அந்த வழக்கில் சிக்க வைக்கவே சங்கரை டி.எஸ்.பி. பாலு சித்திரவதை செய்தார் என்ற புகார் கூறப்பட்டது!! உண்மை நிலை என்ன???
Quote
 
 
+31 #38 covai murugan 2011-07-30 10:15
என்னமோ போங்க சங்கர் ...முதல்வன் அர்ஜுன் மாதிரி பாப்புலர் ஆயிட்டீங்க :lol:
Quote
 
 
+7 #37 satheesh 2011-07-30 06:59
ஹாட்ஸ் ஆப் 2 யு. யெதனயொ பேர் இவனால் பாதிக்கபட்டாலும ் தைரியமாக அவன் பேரில் புகார் குடுதத்துள்ளிர் கள்.
பிறரை போல் வெறும்
காகித புலி அல்ல என்பதை நிருபித்துள்ளிர ்கள்
Quote
 
 
+25 #36 அன்பு 2011-07-30 06:18
வாழ்த்துக்கள் சவுக்கு,
இறைவன் உம்மை எப்போதும் நேர்வழியில் நடத்தட்டும்,

குமுதம் ரிப்போர்ட்டருக் கு ஒரு வேண்டுகோள் ,
அடுத்தமுறை 'சஙகர்' என்று பெயர் குறிப்பிடும் போது " சவுக்கு சங்கர் " என்று குறிப்பிடுமாரு அன்போடு கேட்டுக் கொள்கிறேன், ஏனெனில் ஏழரை கோடி மக்களில் மிக குறைந்த மக்களுக்களுக்கே சவுக்கை பற்றி தெரிந்துள்ளது.
நன்றி
Quote
 
 
+5 #35 tweety 2011-07-30 02:49
முன்னாள் தலைமைச் செயலாளர் திரிபாதிக்கும், முன்னாள் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் உபாத்யாயாவுக்கு ம் இடையே நடைபெற்ற உரையாடல் .

does anybody have a link to that recording or transscript ?
Quote
 
 
+7 #34 Ramani 2011-07-30 02:46
இது போல், நீதித்துறையில் உள்ள ஊழல் பற்றியும் எழுதவும். கல்வித்துறையிலு ம் ஊழல் உள்ளது. கிட்ட தட்ட துணை வேந்தர் பதவி 3 முதல் 5 கோடி பணம் கொடுத்து வாங்கப்படுகிறது . கடந்த 10 வருடமாக துணைவேந்தர்கள் செய்த ஊழல் அளவில்லை. இதையும் கவனித்தால் நன்றாக இருக்கும்
Quote
 
 
+1 #33 tweety 2011-07-30 02:44
லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றி, தொலைபேசி ஒட்டுக் கேட்பு சர்ச்சையில் சிக்கி பணி இடை நீக்கத்தில் உள்ள சங்கர் என்பவர் புகார் கொடுக்க

job well done i hope you get your job back asap.
jaffer is a a*hole
Quote
 
 
+25 #32 Ramani 2011-07-30 02:42
சவுக்கு, உங்களுக்கு அரசுப்பதவி கிடைத்தால் கூட போகக்கூடாது. உங்கள் பணி தமிழ் நாட்டுக்கு தேவை. நீங்கள் மிகப்பெரிய மனிதர்களின் முகத்திரையை கிழிக்கிறீர்கள் , அதனால் உங்கள் பாதுகாப்பையும் கவனித்த்துக்கொள ்ளுங்கள். உங்கள் நிதி நிலை மோசமாக இருந்தால், உங்கள் பேங்க் அக்கவுண்ட் விவரத்தை தெரிவிக்கவும். நிறைய வாசகர்கள், சட்டப்படி நன்கொடை கொடுப்பார்கள்.

உங்கள் பணி தொடரட்டும். ஒரு சில வேண்டு கோள். தனி மனிதர் பற்றி விமர்சனம் பற்றி குறைக்கவும் (ஜாதி, ஒருவரின் குடும்ப பழக்க வழக்கங்கள் என...). மற்றபடி, உங்கள் எண்ணங்கள், சித்தாங்கள் எல்லாம் அருமை...
Quote
 
 
+3 #31 ThambratalaiyanKuppi 2011-07-30 02:02
""ஏ.டி.ஜி.பி., ஜாபர் சேட் விவகாரத்துல வேற ஏதாவது தகவல் உண்டா ஓய்...'' என, கிளறினார் குப்பண்ணா.""எத்தனையோ அதிகாரிகள் என்னென்னவோ செஞ்சிருக்கறப்ப , ஜாபர் சேட் வீட்டுல மட்டும், "ரெய்டு' நடத்துனதுக்கு என்ன காரணம்னு விசாரிச்சேன் வே... போன ஆட்சியில, கார்டன்ல நடந்த எல்லா விஷயத்தையும் ஒட்டுக் கேட்டு, முன்னாள் முதல்வருக்கு தெரிவிச்சிருக்க ார்... அ.தி.மு.க.,விலும் நிறைய குழப்பங்களை ஏற்படுத்த, உளவுப் படையை பயன்படுத்திருக் கார்...""அதோட, தேர்தல் நேரத்துல கூட்டணிகளுக்கு இடங்கள் ஒதுக்கறதுக்கு முன்பே, அ.தி.மு.க., தேர்தல் பட்டியல் வெளியாச்சுல்ல... அதுல, இந்த அதிகாரியின் கைங்கர்யமும் இருந்துச்சாம் வே... இதையெல்லாம் சேர்த்து வச்சு தான் அவர் மேல கை வச்சுட்டதா சொல்லுதாவ...'' எனக் கூறிவிட்டு எழுந்தார் அண்ணாச்சி; பெஞ்ச் அமைதியானது.
Quote
 
 
+5 #30 Rangaraj Rajendran 2011-07-30 01:47
Dear savukku sankar,
Welldone.A single person with his associates along with a great justice has achieved lot of things.
Take care.Don't give up.There is a long journey waiting for you.
Quote
 
 
+1 #29 kkkk 2011-07-29 23:40
Congrats Savukku
Quote
 
 
+3 #28 Franklin 2011-07-29 23:06
சவுக்கு அண்ணா.. நேற்று தஙகளுடன் வலை தளைத்தில் உரையாடியதில் நான் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்.... நன்றி அண்ணா :-)
Quote
 
 
+10 #27 T G RAMAMURTHY 2011-07-29 22:03
சவுக்கின் வழக்கையே எடுத்துக் கொள் ளுங் கள்.கருணாநிதியின் தலைமைச் செய லா ளர், தற்போது முதலமைச்சராக இருக்கும் ஜெயலலிதா மீது, ஒரு பொய் வழக்கை பதியச் சொல்லி லஞ்ச ஒழிப்புத் துறை இயக் குநருக்கு நெருக்கடி கொடுக்கிறார்.அவர் முடி யாது என்று மறுத்தும், மீண்டும் மீண் டும் நெருக்கடி கொடுக்கிறார். கருணாநிதி யின் அமைச்சரான நாடார் இனக் கொழுந்து, கனிமொழியின் உற்ற தோழி பூங்கோதை லஞ்ச வழக்கில் சிக்கிய தனது உறவினரை காப்பாற்றுவதற்க ாக, சட்டத்தை வளை யுங்கள் என்று லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்கு நெருக்கடி கொடுக்கிறார். இந்த உரையாடல் களை வெளியிட்டால் என்ன தவறு ? நாட்டு மக்களுக்கு உண்மை தெரிய வேண்டாமா ? இது போன்ற உரை யாடல்கள் வெளியானதால் தானே, உங்கள் குடும்பத்தின் பதவி ஆசையும், பணம் மற்றும் அதிகாரி வெறியும் நாட்டு மக்க ளுக் குத் தெரிய வந்தது. இல்லையென்றால் நல்லவன் வேஷம் அல்லவா போட்டுக் கொண்டு திரிந்திருப்பீர ்கள் ?மேலும், அந்த உரையாடலை வெளியிட்டது கூட இவந்தான் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லாம லே யே, இந்த வழக்கிலிருந்து விடுப்ட்டு மீண்டும் அரசுப்பணியில் சேர என் நல வாழ்த்துக்கள்
Quote
 
 
+6 #26 prg 2011-07-29 21:31
வாழ்த்துக்கள் சவுக்கு
Quote
 
 
+3 #25 periyar 2011-07-29 21:19
dear savukku sankar, great job keep it up. tamilnadu very badly needs a wikileaks. we are ready to support you financially, give your bank details.
Quote
 
 
+3 #24 KVB 2011-07-29 20:11
[ஃஉஒடெ நமெ="டமில்ஸ்ரேதர்"]"சங்கர் என்பவர் புகார் கொடுக்க"
இவர் நமது சவுக்கு இனையதளத்தின் ஆசிரியர் சங்கரா????[/ஃஉஒடெ]
அமாயா .... அமா...
Quote
 
 
+7 #23 Krishnaasp 2011-07-29 20:02
வாழ்த்துக்கள் சங்கர்!
Quote
 
 
+3 #22 b.s.mani 2011-07-29 19:29
really i appreciate your great job.your sucess means dharmam vellum at last.
Quote
 
 
+12 #21 சீனு 2011-07-29 18:41
குமுதம் தான்பா 'நன்றி சவுக்கு' அப்படீன்னு போடனும்.

உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை...
Quote
 
 
+7 #20 T G RAMAMURTHY 2011-07-29 18:16
வெள்ளாட்டின்சபத ம் அது பொல்லாத சபதம்
இது நீதிக்கும் நேர்மைக்கும் நாணயத்திற்கும் நல்ல மனதிற்கும் கிடைத்த வெற்றி
.அன்று நினைத்தீர் அதற்கு உழைத்தீர்
இன்று நடத்தி வெற்றி கண்டீர்
வாழ்க உஙகள் பணி தொடரட்டும் உஙகள் செவை
Quote
 
 
+8 #19 முத்து 2011-07-29 17:59
வாழ்த்துக்கள் சங்கர் அண்ணா.. தங்களின் அயராத உழைப்புக்கு கிடைத்த வெற்றி.
Quote
 
 
+15 #18 jagan t 2011-07-29 17:36
சவுக்கின் தைரியத்திற்கும் விடாமுயற்சிக்கு ம் கிடைத்த பரிசே இது. வாழ்த்துக்கள் சவுக்கு.
:-) :P :D :lol:
Quote
 
 
+18 #17 ~J 2011-07-29 17:34
Quoting R.Rao:
... சங்கர் ஐ.பி.எஸ் தேர்வு எழுதி பெரிய பதவிக்கு வந்தால் நன்றாக இருக்கும். இன்னும் காலமிருக்கு. (அல்லது வக்கீலுக்குப் படியுமைய்யா!)


இதை வழி மொழிகிறேன்...

உமது சேவை... தமிழகத்திற்கு தேவை...
Quote
 
 
+46 #16 Suresh Raja 2011-07-29 16:03
உளவுத்துறை ஏதோ பிளவுதுறைனு நெனச்சி அதை களவுதுறையா மாத்திக்கிட்டு ஏதோ கொஞ்சம் சம்பாதிச்சா அது எழவுதுறையா மாறி கழுத்தருக்குதே - ஜாபர் சேட் புலம்பல்ல்ல்ல்ல ்ல்.... :-? :-? :-? :-? :-?

பெயரிலே சேட் என்று வைத்துக்கொண்டு பர்வீன் என்னும் இஸ்லாமிய பெயர் கொண்ட பெண்ணை திருமணம் செய்து ஜெனிபர் என்ற கிறித்துவ பெயரை மகளுக்கு சூட்டி மத நல்லிணக்கத்தை காட்டி கருவாடு கடை வைத்து மீனவர்கள் நலம் காத்து ஒரு வாரம் வைத்து அடித்தாலும் படக்ஸில் உள்ள தழும்பு போலீசார் அடித்தது இல்லை தந்தூரி அடிப்பில் மறந்து உக்காந்தது என்று பில்டப் குடுக்கும் எங்கள் அண்ணன் கருவாடு சேட் சீ சீ ஜாபர் சேட் "திருடனும் தேளும்" என்ற தலைப்பில் பக்கீரன் இதழில் உரை ஆற்றுவார்ர்ர்ர் ர்ர்ர்ர்... இதை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சுற்றம் சூழ வெலக்கமாறு சாக்கடையில் நனைந்த செருப்பு, அழுகிய முட்டை, ஏதோவொரு சாணத்தோடு வாக்காளர் அட்டையுடன் வந்து வரிசையில் நின்று அடிக்குமாறு வேண்டுகிறோம்ம்ம ்ம்ம்ம்ம்ம்ம்ம் .....
:eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek:
Quote
 
 
+19 #15 yelilarasan 2011-07-29 15:48
சவுக்கு அவர்களின் போராட்டமும், சத்தியமும் ஜெய்யத்து. வாழ்த்துக்கள்.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 94 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

தமிழ்லீடர்

tamilleader

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4909
mod_vvisit_counterYesterday9838
mod_vvisit_counterThis week57646
mod_vvisit_counterLast week67096
mod_vvisit_counterThis month176454
mod_vvisit_counterLast month297247
mod_vvisit_counterAll days8392182