முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
கேடி சகோதரர்களின் நாடித் துடிப்பு. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 60
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
புதன்கிழமை, 08 ஜூன் 2011 13:19

 

 

''அமைச்சர் தயாநிதி மாறனை மையமாக​வைத்துக் கிளம்பி உள்ள விவகாரத்தில், 'ஸ்டெர்லிங்’ சிவசங்கரன் பெயர் அடிபடுகிறது. இவர் நடத்திய ஏர்செல் நிறுவனத்துக்குத்தான் தயாநிதி மாறன் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு வழங்குவதில் தாமதம் செய்ததாகவும்... ஆனால், மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் இதன் பங்குகளை வாங்கிய பிறகு அனுமதி கிடைத்ததாகவும் டெல்லி மீடியாக்கள் போட்டுத் தாக்குகின்றன. இந்த சந்தேக வலையை சி.பி.ஐ. வசம் பின்னிவிட்டவரே சிவசங்கரன்தான் என்றும், கடந்த மே 15-ம் தேதி சி.பி.ஐ. வசம் சிவசங்கரன் ஒரு கடிதத்தைத் தாக்கல் செய்து உள்ளதாகவும் தகவல்.

 

சிவசங்கரனைப் பின்னால் இருந்து இயக்கும் ஆட்கள், சென்னையில் அதுவும் குடும்ப உட்பகை நபர்களாகவே இருக்கிறார்கள் என்பதும் கூடுதல் தகவல். 'செல்வாக்கான குடும்பத்தின் பெண்மணி ஒருவர் டெல்லி ஹோட்டல் ஒன்றில் சிவசங்கரனை சந்தித்துப் பேசினார். அதன் பிறகுதான் இந்தக் கடிதத்தை அவர் சி.பி.ஐ-க்கு அனுப்பினார்’ என்கிறார்கள் டெல்லியில். இந்த வாக்குமூலங்களை வைத்து சி.பி.ஐ. என்ன செய்யப்போகிறது என்பது ஒரு சில நாட்களில் தெரிந்துபோகும்!”

 

இதில் இவர்கள் சூசகமாக சுட்டிக் காட்டுவது என்னவென்றால், ராசாத்தி அம்மாள் தான் பின்னால் நின்று சிவசங்கரனை இயக்குகிறார் என்பதுதான். ராசாத்தி அம்மாள் சிவசங்கரனை பின்னால் நின்று இயக்கினால் என்ன ?   தயாநிதி மாறன் யோக்கியமானவரா ?

இதே இதழில் கழுகார் பகுதியில் ஒரு கேள்வி பதில்.

.ராசா மீது தனிப்பட்ட முறையில் உங்களுக்கு ஒரு வெறுப்பு அல்லது காழ்ப்பு இருப்பதுபோல் எனக்குத் தோன்றுகிறது. சரியா?

1999-ல் ஆ.ராசா மத்திய அமைச்சராக ஆகிவிட்டார். அதில் இருந்தே அவரைக் குறை சொல்லி எழுதிக்கொண்டு இருந்தால், உங்கள் கேள்வியில் அர்த்தம் இருக்கும். 10 ஆண்டுகள் கழித்து 2009-ம் ஆண்டு, ஸ்பெக்ட்ரம் ஊழல் ஆதாரங்களுடன் நமக்குக் கிடைத்த பிறகுதான், அவரை விமர்சித்து எழுதினோம். நாங்கள் அப்போது எழுதியபோது, உள்நோக்கம் கற்பித்தார்கள். நாங்கள் எழுதியது சரியான தகவல்கள்தான் என்பதை சி.பி.ஐ. கைதுப் படலம் இப்போது நிரூபித்து உள்ளது. இப்போதும் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் குற்றச் செயல்களைத்தான் விமர்சிக்கிறோமே தவிர, ஆ.ராசா என்ற தனி மனிதரை அல்ல!

 

அடுத்து தயாநிதி மாறனையும் சிபிஐ கைது செய்யப் போகிறதே… அப்போது ராசாவைப் பற்றி கசிந்த செய்திகளை விட, இப்போது தயாநிதி மாறனுக்கு எதிராக ஏராளமாக ஆவணங்கள் வெளியாகியிருக்கிறதே….   ஏன் அமைதி காக்கிறார்கள் ?

 

இப்படி அப்பட்டமாக, வெளிப்படையாக தயாநிதி மாறனுக்கு விகடன் நிறுவனம் சப்போர்ட் செய்வதற்கான காரணம் என்ன என்ற புலனாய்வில் சவுக்கு இறங்கியது.

 

அந்த விபரங்களை பார்க்கும் முன்பு, ஜுனியர் விகடன் பத்திரிக்கையைப் பற்றி சில விபரங்களைப் பார்ப்போம். விகடன் குழுமத்தை வாங்கி நடத்தி வந்தவர் எஸ்.எஸ்.வாசன் என்பதை அறிவீர்கள். அவருக்குப் பிறகு, அவரது மகன் பாலசுப்ரமணியன் இணை மேலாண் இயக்குநராக பொறுப்பேற்கிறார். அப்போதெல்லாம் அவர் சேவற்கொடியான் என்ற பெயரில், சிறுகதைகள் எழுதுவது வழக்கம்.

 

முழுப் பொறுப்பும், பாலசுப்ரமணியம் வசம் வந்ததும், அவர் எழுதுவதை நிறுத்திக் கொண்டார். அதற்கு அவர் சொன்ன காரணம், புதிய திறமைகளை நாம் உள்ளிழுக்க வேண்டும் என்பதே….

 

1983ம் ஆண்டு, ஜுனியர் விகடன் தொடங்கப் படுகிறது.   தொடக்கத்தில் பிரமாதமாக விற்கும் என்று எதிர்ப்பார்க்கப் பட்ட ஜுனியர் விகடன், அந்த அளவு வெற்றியைப் பெறவில்லை. 1984ம் ஆண்டு, முதன் முறையாக மாணவப் பத்திரிக்கையாளர் திட்டம் என்று ஒரு திட்டத்தை அறிமுகப் படுத்துகிறார்கள்.

 

இந்த மாணவப் பத்திரிக்கையாளர் திட்டம் பெரும் வெற்றியைப் பெறுகிறது.   இளம் மாணவர்களாக களமிறங்கும் மாணவர்கள், புதிய உத்வேகத்தோடு, சமுதாயத்தைப் பீடித்திருக்கும் பல்வேறு விஷயங்களை எடுத்து எழுதுகிறார்கள். இதனால், ஜுனியர் விகடனின் சர்குலேஷன், மள மளவென்று ஏறுகிறது.

 

கொத்தடிமைகளை கண்டுபிடிப்பது, இரட்டைக் குவளை முறையை வெளிக் கொணர்வது, சட்ட விரோத மரம் வெட்டுதலையும் கடத்தலையும் வெளிச்சம் போட்டுக் காட்டுவது என்று பல்வேறு சமுதாய பிரச்சினைகளை பற்றி எழுதுவதோடு அல்லாமல், ஜுனியர் விகடன் சார்பாகவே பொது நல வழக்கும் தொடுக்கப் பட்டது.

 

மூச்சுக்கு முன்னூறு தடவை வாசகர்கள் தான் ஜுனியர் விகடனை உருவாக்கியவர்கள், காப்பாற்றுபவர்கள் என்று சொல்லுவார் என்று கூறுகிறார்கள் விபரம் அறிந்தவர்கள். இப்போது போல், அப்போதெல்லாம், வக்கீல் நோட்டீஸ் அனுப்புவது பேஷன் ஆகவில்லை. ஆனாலும், ஒரு போஸ்ட் கார்டில் எதிர்ப்பு தெரிவித்து எழுதினால் கூட, அதற்கு மரியாதை கொடுப்பார் பாலசுப்ரமணியம்.

 

ஒரு முறை கிணத்துக்கடவைச் சேர்ந்த 65 வயது முதியவர், ஜுனியர் விகடனில் நடுப்பக்கத்தில் சினிமாவுக்காக வெளியிடப்படும் படங்கள் மிகவும் ஆபாசமாக இருக்கிறது, என்னால் ஜுனியர் விகடனை வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை என்று கடிதம் எழுதினார்.   உடனடியாக ஒரு நிருபரை அந்த பெரியவரை சென்று சந்திக்கச் சொல்லி, அடுத்த வாரம் முதல், நடுப்பக்கத்தில் நாகரீகமான படத்தைப் போடுங்கள் என்று கூறினார் பாலசுப்ரமணியன்.

 

திரைப்படத்துறையில் காலடி எடுத்து வைத்த பாலசுப்ரமணியன், அதில் வெற்றி பெறாத காரணத்தால், மீண்டும் அதில் நுழையவேயில்லை. திரைத் துறையில் ஈடுபாடு, பத்திரிக்கையை நாசம் செய்து விடும் என்று நம்பினார் அவர்.   அதனால், அவர் பொறுப்பில் இருந்த வரை திரைப்படத் துறையில் நுழைய முயற்சிக்கவேயில்லை. ஆனால், துரதிருஷ்ட வசமாக, திரைப்படத் துறையில் நுழைவதற்காக பத்திரிக்கையை நாசப்படுத்தி வருகிறார் சீனிவாசன் என்பதுதான் வேதனையான விஷயம்.

 

மற்றொரு உதாரணத்தைச் சொல்ல வேண்டும் என்றால், நடிகை திரிஷா, குளிக்கும் காட்சியை ஒரு இணைய தளம் வெளியிட்டது.   அப்போது, நக்கீரன் இதழ், ஃப்ரேம் ஃப்ரேமாக இந்த காட்சியை வெளியிட்டது.   நடிகை திரிஷா கூட, பின்னாளில் ஒரு பேட்டியில், இணைய தளத்தில் வெளியானதை விட, நக்கீரனில் வெளியிட்டது குறித்துதான் தனது வருத்தத்தை தெரிவித்திருந்தார்.

 

இது தொடர்பாக ஜுனியர் விகடன் சார்பாக, காவல்துறையில் புகார் செய்யப் பட்டு, சுவீடனில் இயங்கிக் கொண்டிருந்த அந்த இணையதளத்தின் சர்வர் முடக்கப் பட்டது. இது தொடர்பாக செய்தி வெளியிட பாலசுப்ரமணியத்திடம் விவாதிக்கும் போது, அந்த வீடியோவில் உள்ள ஒரு காட்சியை படமாக வைக்கலாம் என்று ஆலோசனை கூறப்படுகிறது.   “உங்கள் டேஸ்ட் இவ்வளவு மோசமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை என்று சீறியிருக்கிறார்.” இல்லை சார், இஷ்யூ நல்லா விக்கும் என்று சொன்னவுடன், ”அதற்கு சரோஜா தேவி நடத்தி விட்டு போய் விடலாமே” என்று கோபத்துடன் கூறியிருக்கிறார்.   இதுதான் பாலசுப்ரமணியம். அந்த இதழில், ஜுனியர் விகடன் அட்டையில், திரிஷா புடவை கட்டியிருக்கும் படம் வெளியானது.

 

இதுதான் பாலசுப்ரமணியம்.

 

1991ல், இணை இயக்குநராக பொறுப்பேற்கிறார் சீனிவாசன். பிறகு 2000 அல்லது 2001ம் ஆண்டில் மேலாண் இயக்குநராக ஆகிறார். அதன் பிறகு, பத்திரிக்கை என்பதை வெறும் வியாபாரமாக மட்டுமே பார்க்கிறார்.   சுட்டி விகடன், சட்டி விகடன் என்று பல்வேறு பத்திரிக்கைகளை சராமாரியாக தொடங்கியது மட்டுமல்லாமல், தொலைக் காட்சித் தொடர் மற்றும் சினிமா எடுக்கத் தொடங்கிய போதுதான் இவரின் சரிவு தொடங்குகிறது.

 

வெறும் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு வேலை செய்கிறார் சீனிவாசன். ஆனந்த விகடன் இதழில் முதல் முறையாக, ஒரு நூதனமான விளம்பரம் செய்யும் உத்தியை கையாள்கிறார். அது என்னவென்றால், செய்தி போலவே விளம்பரம் போடுவது. அதற்குப் பெயர் ஸ்பாட்டைட்.   இந்த ஸ்பாட்லைட்டை எடுத்துக் கொண்டீர்கள் என்றால், அச்சு அசலாக செய்தி போலவே இருக்கும், விளம்பரம் என்பதற்கான எந்த அறிகுறியும் இருக்காது.   எழுதியவர் பெயர், புகைப்படக்காரர் பெயர், ஆகிய அனைத்தும் இருக்கும்.   சாதாரமாக விளம்பரம் செய்ய ஆகும் கட்டணத்தை விட, மூன்று பங்கு ஆகும்.

 

அடுத்த அயோக்கியத்தனம், 2004 தேர்தலின் போது. வேட்பாளர் தம்பட்டம் என்ற பெயரில், ஒவ்வொரு வேட்பாளரைப் பற்றியும், நான்கு அல்லது ஐந்து பக்கங்களுக்கு, ஆகா, ஓகோ என்று புகழ்ந்து எழுதுவார்கள். அந்தப் பக்கத்தின் கீழே, துளியூண்டாக advt என்று இருக்கும். இதில் கோடிக்கணக்கான லாபம் பார்த்தாக தகவல்கள் கூறுகின்றன.

 

2006 தேர்தலின் போது, வைகோ, ஒரு குற்றச் சாட்டை முன் வைத்தார்.   மதுரையில் ஜெயா டிவிக்கு அளித்த பேட்டியில் “அதிமுக மற்றும் அதன் கூட்டணிக்கு நாளுக்கு நாள் செல்வாக்கு அதிகரித்து வருவதாகபல்வேறு கருத்துக் கணிப்புகளும் தெரிவிக்கின்றன. இதை தயாநிதி மாறனால்பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

 

இதனால் பல்வேறு பத்திரிக்கைககளுக்கு நெருக்கடி கொடுத்து திமுகவுக்கு ஆதரவாககருத்துக் கணிப்புகளை வெளியிட முயற்சித்து வருகிறார்.

 

ஆனால் தமிழகத்தில் மட்டும் திடீரென ஒரு கருத்துக் கணிப்பை நடத்தி முடிவுகளைவெளியிட்டுள்ளது. இல்லாத ஒன்றை இட்டுக் கட்டிக் கூறி திமுகவுக்கு ஆதரவாக கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிடடுள்ளது.

 

இப்போது இவர்கள் ஜூனியர் விகடனை வளைத்து விட்டார்கள். இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் தினகரனை பணம் கொடுத்துவாங்கினார்கள். அதன் மூலம் பொய்யான செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்.

 

இப்போது ஆனந்த விகடனை வளைத்துள்ளார்கள். ஆனந்த விகடன் பத்திரிக்கைதரதமான, மிகச் சிறந்த, உயர்ந்த பத்திரிக்கை. நேர்மைக்கு இலக்கணமானபத்திரிக்கைக் குடும்பம் அது.

 

அப்படிப்பட்ட பத்திரிக்கை சமீப காலமாக, சில வெளியில் சொல்ல முடியாதபிரத்யேக காரணங்களினால், சன் தொலைக்காட்சியின் தயவு தேவைப்படும்இக்கட்டில் இருப்பதால் அவர்களுக்கு சாதகமான செய்திகளை வெளியட வேண்டியநிலையில் உள்ளது.

 

அப் பத்திரிக்கையின் நடுநிலை கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து இப்போது முற்றிலும்போய் விட்டது.

 

வருகிற நாட்களில் திமுக கூட்டணிக்கு 200 இடங்கள் வரை கிடைக்கும் என்றஅப்பட்டமான, பொய்யான செய்தியை வெளியிட அவர்கள் முடிவு செய்துள்ளார்கள்.

 

அந்த செய்தியை தினகரன், சன் டிவியில் வெளியிட்டு வாக்காளர்கள் மத்தியில் திமுகவுக்கு ஆதரவான பிரமையை ஏற்படுத்தி அதன் மூலம் கொஞ்சம் ஓட்டுக்கள் கிடைக்காதா என்று முயற்சிக்க நினைக்கிறார்கள்.

 

ஜூனியர் விகடனின் நிருபர்கள் பலர் மிரட்டப்பட்டுள்ளார்கள். உண்மையைச்சொன்னதற்காக அச்சுறுத்தப்பட்டுள்ளார்கள்.

 

அந்தப் பத்திரிக்கையை விலைக்கு வாங்க தீவிரமாக முயற்சித்து வந்தனர். அந்த முயற்சியில் அனேகமாக வெற்றி பெற்று விட்டதாகவே எனக்கு தெரிய வந்துள்ளது “ என்றார் வைகோ.

 

வைகோவின் அந்த பேட்டி, பின்னாளில் மறுக்கப் பட்டதாக தெரிகிறது.

 

ஆனால் இப்போது, விகடன் குழுமத்தில் 46.15 சதவிகித பங்குகளை கேடி சகோதரர்கள் வாங்கியுள்ளதாக தெரிகிறது.   இதற்கான ஆவணங்களை சவுக்கு முதன் முறையாக, பிரத்யேகமாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறது.

 Share_holders_Page_1

 

Share_holders_Page_2 

இப்போது இந்த ஆவணங்களைப் பார்த்தீர்கள் என்றால், Bodies Corporate என்ற இடத்தில் 46.15 சதவிகித பங்குகள் காண்பிக்கப் பட்டிருக்கிறன்றன அல்லவா ? இது மாறன் சகோதரர்களின் குழுமத்தைக் குறிக்கிறது.     மீதம் உள்ள 53.85 சதவிகித பங்குகள் இயக்குநர் அல்லது அவரது உறவினர்கள் என்று உள்ளது.   இயக்குனராக உள்ளவர் சீனிவாசன்.   அவரது மனைவி திருமதி.ராதிகாவைத் தவிர, வேறு ஒருவருக்கும் இவர் பங்குகளை ஒதுக்கவில்லை என்கிறது விகடன் வட்டாரங்கள்.   பாலசுப்ரமணியத்திற்கு மொத்தம் 5 பெண்கள். ஒரு ஆண் குழந்தை.   சீனிவாசன் தான் அந்த ஒரே ஆண் குழந்தை. அந்த 5 பெண்களில் ஒருவருக்குக் கூட, பங்குகளை ஒதுக்கவில்லை சீனிவாசன்.

 juni

ஆக, அந்த 46.15 சதவிகித பங்குகளும், கேடி சகோதரர்களுடையதே என்று சவுக்கு அறுதியிட்டுச் சொல்கிறது. வழக்கமாக கம்பெனிப் பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களில்,  ஷேர் வைத்திருப்பவர்களின் முழுமையான விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், விகடன் குழுமத்தால் முழுமையான விபரங்களை சமர்ப்பிக்கவில்லை என்று மத்திய உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

மேலும், பத்திரிக்கை சட்டத்தின் படி, ஆண்டுதோறும், மார்ச் மாதத்தில், பத்திரிக்கை நடத்துபவர்கள், தங்களின் நிறுவனத்தில் பங்குகளை வைத்திருப்பவர்களின் விபரத்தை வெளியிட வேண்டும். இது சட்டம்.   ஒரு சதவிகிதத்துக்கு மேல் பங்குகளை வைத்திருந்தாலும் வெளியிட வேண்டும் என்பதுதான் சட்டம். ஆனால், விகடன் குழுமத்தார் ஒரு முறை கூட இந்த விபரங்களை வெளியிட வில்லை என்பதில் இருந்தே, இவர்களின் திருட்டுத் தனம் தெரிகிறது.

 

நிற்க.   கடந்த மூன்று மாதங்களாக, ஜுனியர் விகடன் மற்றும், ஆனந்த விகடன் பத்திரிக்கைகள், திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வந்திருப்பதை பார்த்திருப்பீர்கள்.   குறிப்பாக, மு.க.சர்கார் என்ற தலைப்பில் மார்ச் மாதம் வந்த அந்தக் கட்டுரை. மிக கடுமையான விமர்சனங்களைக் கொண்டிருந்த அந்தக் கட்டுரையில், கேடி சகோதரர்களைப் பற்றி இருந்தது இது மட்டும் தான்.

 

“கருணாநிதியின் மருமகனாகவும் மனசாட்சியாகவும் இருந்த முரசொலி மாறனின் மறைவுக்குப் பிறகு, அவரது இரண்டாவது மகன் தயாநிதியை மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் நிறுத்தினார்கள். உடனேயே கேபினெட் அமைச்சராக்கப்பட்டார். டெல்லி அரசியல் இவரது கட்டுப்பாட்டுக்கு வந்தது. இவரது அண்ணன் கலாநிதி மாறன் நடத்தி வந்த நாளிதழில் ஒரு கருத்துக்கணிப்பு வெளியானதைத் தொடர்ந்து குடும்பத்துக்குள் குழப்பம். நேரடி அரசியலில் இறங்காமல் அதே சமயம், தென் மாவட்டத்து அரசியலைத் தனது ஆளுகைக்குள் வைத்திருந்த மு.க.அழகிரியின் செல்வாக்கை அந்தக் கருத்துக் கணிப்பு குறைத்து மதிப்பிட்டு இருந்தது. கலாநிதி, தயாநிதி ஆகியோருக்கும் அழகிரிக்குமான மோதலில், கருணாநிதி மகன் பக்கம்தான் நின்றார். தயாநிதி, கட்சியைவிட்டு நீக்கப்பட்டார். இனி, டெல்லியைக் கவனிக்க யார் என்ற கேள்வி எழுந்தபோது, கருணாநிதி தனது மகள் கனிமொழியை மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கினார். அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் அழகிரியும் நிற்க... குடும்பக் கோபங்கள் தணிந்து தயாநிதியும் மறுபடி நுழைய... ஒரே குடும்பத்தில் இருந்து ஐந்து பேர் கட்சியின் முக்கியப் பதவிகளைப் பிடித்தார்கள்.

இன்றைய நிலையில் தி.மு.க-வின் ஐம்பெரும் தலைவர்கள் இவர்கள்தான்! “

கேடி சகோதரர்களின் அசுர வளர்ச்சி, திமுகவைப் பயன்படுத்தி அவர்கள் செய்த அட்டூழியங்கள் எதுவுமே இடம் பெறவில்லை. கனிமொழியின் மகன் ஆதித்யாவின் புகைப்படம் உள்ளிட்டவற்றை வெளியிட்ட விகடன், தயாநிதியின் படத்தை வெளியிடவில்லை.

ஒரு ஊழலில் சிக்கி, ஆதாரங்களோடு அம்பலமாகி சின்னாபின்னமாகி நிற்கும் நிலையில், இந்தியா முழுக்க உள்ள அத்தனைப் பத்திரிக்கைகளும் தன்னைப் பற்றிய செய்திகளை வெளியிட்டு வரும் நிலையில், ஜுனியர் விகடனில் செய்தி வெளி வராமல் தடுக்க முயன்ற, தயாநிதி, தன்னைத் தூக்கி வளர்த்த, தன்னை ஆளாக்கிய, தன்னை எம்பியாக்கி, தன்னை மந்திரியாக்கி அழகு பார்த்த, சன் டிவி என்ற சாம்ராஜ்யம் உருவாகுவதற்கு காரணமாக இருந்த கருணாநிதியையும் அவர் குடும்பத்தையும் இப்படியா விமர்சனம் செய்து எழுதுவது ? மனசாட்சி இருக்கிறதா மாறன்களுக்கு ?   இதனால் தான் சவுக்கு கருணநிதியை விட பெரிய தீய சக்தி எது என்று 2011 ஏப்ரல் 9 அன்று எழுதியது.

இது மட்டும் அல்லாமல், திமுக அமைச்சர்களின் ஊழல்களை கல்வித் தந்தைகள் என்றும் புதிதாக முளைத்த சாராய ஆலைகள் என்றும் ஜுனியர் விகடன் செய்தி வெளியிட்டதே… ? அதெல்லாம், திமுகவில் அத்தனை பேரையும் அழித்து விட்டு, தாங்கள் கட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கமல்லாமல் வேறு என்ன ?

ஒரு நிறுவனத்தின் முதலாளிக்கு அந்த நிறுவனத்தை யாருக்கு வேண்டுமானாலும், விற்கவோ, விற்க மறுக்கவோ, இழுத்து மூடவோ உரிமை உண்டு. ஆனால் அந்த வியாபாரம் வெளிப்படையாக இருக்க வேண்டும்.

ஒன்பது ரூபாய் கொடுத்து புத்தகத்தை வாங்கும் வாசகனாக எனக்கு இந்த உண்மையைத் தெரிந்து கொள்ள உரிமை இருக்கிறது.   வாசகனான நான், தினகரனிலோ, குங்குமத்திலோ, சன் டிவியிலோ, கேடி சகோதரர்களுக்கு எதிரான செய்திகளை எதிர்ப்பார்க்கப் போவதில்லை. ஆனால் ஜுனியர் விகடனிலும், ஆனந்த விகடனிலும், எதிர்ப்பார்ப்பதற்கான காரணம், இதை நடுநிலையான ஊடகம் சீனிவாசன் மட்டுமே இதன் முதலாளி என்று நம்பிக் கொண்டிருப்பதுதான்.

உங்கள் குழுமத்தில் கேடி சகோதரர்கள் 46.15 சதவிகித பங்குகளை வைத்திருக்கிறார்கள் என்ற உண்மையை பட்டவர்த்தனமாக உலகுக்கு சொல்லுங்கள். அதற்குப் பிறகு ஜுனியர் விகடன், தமிழ் மக்களின் நாடித்துடிப்பு அல்ல…. கேடி சகோதரர்களின் நாடித் துடிப்பு என்பதை புரிந்து கொள்வோம்.   உங்களை நம்ப மாட்டோம்.

 

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை

எல்லா அறமுந் தரும்.

 

பொய் இல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு எதுவுமில்லை; என்றும் நீங்காத அறவழி நலன்களை அளிப்பது அந்த வாழ்வேயாகும்.

 

ஏமாற்றிப் பிழைப்பது என்பதைப் போன்ற இழிவான காரியம் எதுவுமே இல்லை. உங்கள் பத்திரிக்கையை வாங்கும் வாசகர்கள் அத்தனை பேரும் ஏமாற்றிப் பிழைப்பவர்கள் அல்ல…..   உழைத்த பணத்தில் உங்கள் பத்திரிக்கையை வாங்குகிறார்கள்.

 

Comments  

 
+1 #111 mindblowingromeo 2011-06-12 15:24
in the above form 5,000,000 was coded but unfortunately in Indian practice we are using Indian format as 50,00,000.
when our indian system finacial practice turned to western format????? :o
Quote
 
 
0 #110 aha 2011-06-12 00:49
You cannot criticize the anti DMK articles if they really commit the crime.You can surely question the neutrality.I wish everyone wrote genuinely about all issues irrespective of the Govt.Then only media can find some respect.
Quote
 
 
0 #109 T G Ramamurthy 2011-06-11 19:36
வாஞஜி நாதன் படம் பிரகாஷ்ராஜ் போல் ஆனன்ட விகடன் உள்ளது
Quote
 
 
+1 #108 T G Ramamurthy 2011-06-11 13:20
ஆடி அடஙுகும் வாழ்க்கையடா ஆற்டி நிலமெ சொந்தமடா
Quote
 
 
+1 #107 vsankar 2011-06-11 13:10
எல்லாமொ ஒரெ குட்ட்யில் ஊரிய மட்டைகல்
Quote
 
 
0 #106 உண்மை விளம்பி 2011-06-11 12:50
இன்றைக்கு ஜூ.வியில் அட்டைப்படத்திலே யே சின்னவன (தயாநிதி) பத்தி எழுதியிருக்கு....தான் இன்னும் நடுநிலைமை வகிப்பதாக காட்டுவதற்கான முயற்சிதான் இது...முதலில் செக்கர்ஸ் ஹோட்டல் தாக்குதல் மற்றும் பொட்டு சுரேஷிடம் மண்டியிட்டது இதன் பின்னணியில் நடந்த பேரங்கள்..இது ரெண்டுக்கும் விளக்கம் அளித்து தன் நேர்மையை நிரூபிக்கட்டும் ஜூ.வி..!
Quote
 
 
+1 #105 குஞ்சாமணி 2011-06-11 02:43
ஜூ.விய காக்கா மீசை கோப்பால் வாங்கியிருந்தாக ூட எனக்கு நெஞ்சு ஆறும்...ஆனா கே.டி பயபுள்ளைங்க வாங்கிப்புட்டாய ிங்கன்னு தெரிஞ்சதுல இருந்து அரை கவளம் சோறு கூட தொண்ட குழிக்குள்ள இறங்க மாட்டீங்குது...
Quote
 
 
0 #104 madhu 2011-06-10 18:19
bye bye vikatan
Quote
 
 
+5 #103 உண்மை விளம்பி 2011-06-10 13:04
எம்.ஜி.ஆர் காலத்தில் சட்டமன்றதிலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ு சிறையில் அடைத்ததை எதிர்த்து நீதிமன்றம் சென்று பத்திரிக்கை சுதந்திரத்தை நிலைநாட்டினார் முந்தைய ஆசிரியர் பாலசுப்ரமணியம்...பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர ்களுக்கு நிதி திரட்டியது, ஊழல் பெருச்சாளிகளை தோலுரித்து காட்டியது, மனித உரிமைகளுக்காக வழக்கு தொடுத்தது என்று உண்மையான சமூக அக்கறையோடு நடந்து வாசகர்களின் நன் மதிப்பையும் நம்பிக்கையையும் பெற்றிருந்த பத்திரிக்கையை வியாபாரமாக மாற்றி காசு பார்க்கிறார் இன்றைய முதலாளி..இவர் பத்திரிக்கையை மட்டும் விற்கவில்லை, அதன் லட்சோப லட்ச வாசகர்களையும் அச்செட்ச் ஆக காட்டிதான் விற்றிருக்கிறார ். ஆனால் இனி வாசகர்கள் இந்த பத்திரிக்கையை ஒதுக்கி தள்ளுவார்கள் என்பது உறுதி...ஆக தமிழகத்தின் மொத்த ஊடக பலமும் கேடிகளிடம்தான் உள்ளது போலிருக்கிறது. இதை இப்படியே அனுமதித்தால் கேடிகளின் கருத்துதான் இனி தமிழகத்தின் கருத்து என்பதுபோல் ஒரு மாயையை உருவாக்கி விடுவார்கள்...இதற்கு நிச்சயமாக ஒரு மாற்று ஏற்படவேண்டும்.
Quote
 
 
+5 #102 Vijay US 2011-06-10 05:21
விகடன்=வியாபாரி

குமுதம், விகடன் இரண்டுமே வாரிசுகள் கையில் வந்து சீரழிந்து போய்விட்டது....

நன்றி சவுக்கு....
Quote
 
 
+2 #101 Desigan 2011-06-10 00:31
my one wish was fullfilled (kani arrest), eagerly waiting to see Maran behind bars... I am pleased to tell that the example given by comparing with THIRUKURAL is awesome
Quote
 
 
+7 #100 உண்மை விளம்பி 2011-06-09 21:32
தகவல் அறியும் உரிமை சட்டப்படி நாளைக்கே உரிய துறைக்கு ஒரு விண்ணப்பத்த தட்டி விட்டு விகடன் குழுமத்தில் 46 .15 % பங்குகள் வைத்திருக்கும் அந்த 'Body Corporates' யார் என்பதை கேளுங்கள் சவுக்கு. கிடைக்கும் தகவலை அப்படியே இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.
Quote
 
 
+10 #99 ஓமக்குச்சி 2011-06-09 21:27
இனி ஜூ.வி பக்கமே போக மாட்டேன்...நான் குடுக்குற ஒன்பது ரூபாய் கேடிங்களோட பாக்கெட்டுக்கு போகுறத என்னால தாங்க முடியல...ஏற்கனவே கேபிள் மூலமா என் காச சாப்பிடுறாயிங்க ...இதுல இது வேறயா? அதுக்கு ஒன்பது ரூவாய்க்கு வாரம் இரு முறை நாலு முட்டை வாங்கி சாப்பிட்டு ஒடம்ப தேத்தலாம்..என்ன நாஞ்சொல்றது?
Quote
 
 
+7 #98 சின்ன குண்டூசி 2011-06-09 21:20
ஐயா சவுக்கு..ஹைட் ஆப் இன்வெஸ்டிகேட்டீ வ் ஜெர்னலிசம் என்றால் என்ன என்று நீங்கள் நிரூபித்து விட்டீர்கள் உங்கள் புலனாய்வின் மூலம்..பணத்துக்கு முன்பு எதுவுமே நிற்காது என்பதற்கு லட்சக்கணக்கான (நான் உட்பட) வாசகர்கள் நேர்மையான நடுநிலை பத்திரிக்கை என்று நம்பிக்கை வைத்திருந்த ஜூ.வியும் விதிவிலக்கல்ல என்று நிரூபணம் ஆகி விட்டது...சத்தியமாக வெறுத்து போய் சொல்கிறேன் மீடியாவில் எதை யாரை நம்புவது என்றே தெரியவில்லை..எல்லாமே காசுதான் போலிருக்கு...சரி..சட்டப்படி ஒரு பத்திரிக்கையில் யார் யார் பங்குதாரர்கள் என்பது வெளியிட வேண்டும் என்பது கட்டாயம் என்றால் ஏன் நீங்கள் ஒரு வழக்கு போட்டு ஜூ.வியின் பங்குதாரர்கள் யார் என்பதை வெளி கொண்டு வரக்கூடாது? செய்வீர்கள் என்று நம்புகிறேன்...அப்படியே இன்னொரு யோசனை...புலனாய்வு பத்திரிக்கை உலகில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்..நீங்கள் ஏன் அந்த இடத்தை நிரப்ப கூடாது? யோசியுங்கள்..! குறைந்த விலையில் லாப நோக்கம் இல்லாமல் மக்கள் நம்பிக்கையை மட்டுமே அடித்தளமாக கொண்டு நடு நிலையுடன் ஒரு பத்திரிக்கை தொடங்குங்கள். என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
Quote
 
 
+5 #97 sharan 2011-06-09 18:39
இந்த வாரம் நான் ஜுவி வாங்வில்லை இனீம் இல்லை.
Quote
 
 
+2 #96 Dravidan 2011-06-09 17:13
Savukku, U R EXCELLENT
Quote
 
 
+4 #95 kr veerappan 2011-06-09 16:35
விகடன்,நீயுமா? சந்தேகப்பட்டோம் .சீசீசீ
Quote
 
 
+3 #94 KVSSriram 2011-06-09 15:59
Dear Savukku,
You doing excellent investigative journalism. please find out NDTV, CNN IBN,TIMES NOW & Head Lines today share holders details. Cong. might have purchased similar shares of these channels.
You can also take out P.Chidambaram"s business details and expose them in the public.
Quote
 
 
+4 #93 Choco 2011-06-09 15:45
ச்சீ.. நாயும் பிழைக்குமா இந்தப் பிழைப்பு.. விகடன் பாணியிலேயே அதற்கு குட்டு வைக்கிறேன். - சாட்டையடி சாக்கோ
Quote
 
 
+5 #92 Choco 2011-06-09 15:43
அய்யோ.. என்னமா பசுத்தோலை போர்த்திக் கொண்டு ஜனநாயகத்தைக் குத்திக் குதறிக் கொண்டிருக்கிறது இந்த ஜூனியர் விகடன் புலி.. நான் கெட்டவன் என்று வெளிப்படையாகச் செயல்படுபவர்களை க் கூட தாராளமாக நம்பி விடலாம்.. நல்லவன் என்று சொல்லிக் கொண்டு அத்தனை கெட்டவைகளையும் முகமூடி அணிந்து செய்து கொண்டிருக்கும் விகடனை என்னவென்று சொல்வது..? கேடி சகோதரர்கள் விகடனுக்குள் ஆழமாகவே நஞ்சைப் பாய்ச்சி விட்டார்கள். லட்சோப லட்சம் வாசகர்களை ஏமாற்றி காசு பார்த்துக் கொண்டிருக்கும் விகடனை இனியும் தமிழ மக்களின் நாடித் துடிப்பு என்று அட்டையில் சொல்லிக் கொள்ள தமிழர்கள் அனுமதிக்கக் கூடாது.. - ஸாக்கோவின் சாட்டையடி!
Quote
 
 
+7 #91 கனிகா சம்பத் 2011-06-09 14:02
சவுக்கு நன்கு ஆராயுங்கள். விகடன் நிறுவனத்தில் பணிபுரியும் அத்தனை பேரின் செல்போன்களும் கே.டி. பிரதர்ஸ் வாங்கிக் கொடுத்தது. ஏர்டெல் நிறுவன் இணைப்பு பெற்றிருக்கும் அந்த செல்பேசியின் பில்கள் அனைத்தும் இன்றும் சன் நெட்வொர்க் என்கிற பெயரில்தான் இருக்கிறது. விகடன் சீனிவாசன், கலைஞரையும் தூக்கி சாப்பிட்டுவிடும ் அரசியல்வாதி. அவரை பிந்தொடர்ந்து பாருங்கள். பல அசிங்கங்கள் வெளிவரும். அவர் எஸ்.எம்.எஸ். என்று ஒரு பட்ம் தயாரித்தார். அதில் திருமணத்துக்கு முன்பே காதலியை படுக்கச் சொல்லி வற்புறுத்தும் காதலின் செய்கைகளை அப்பட்டமாக காண்பித்ததோடு, அதை நியாயப்படுத்தவு ம் செய்திருந்தார். அதேபோல, படம் முழுக்க சிகரெட்டும் கையுமாக அலைவார் கதாநாயகன். டாஸ்மாக்கில் கதாநாயகன் அடிக்கும் கூத்துக்களை கதாநாயகி டாஸ்மாக்குக்கே வந்து பார்ப்பார். மதுக்கடைகளை அரசாங்கம் நடத்துவதை எதிர்த்து ஜூ.வி-யிலும் ஆ.வி-யிலும் கட்டுரை போடும் சீனிவாசன் வியாபாரத்துக்கா க அதே காட்சிகளை தன்னுடைய படத்தில் எடுப்பார். அதேபோல, அடுத்ததாக ஒரு படம் எடுத்தார். அதில் ஒரு திருடனின் திருட்டு வாழ்க்கையை அப்பட்டமாக நியாயப்படுத்துவ ார். இதுதான் அவருடைய வாழ்க்கை நெறிமுறை லட்சணம். இனியும் விகடனின் உண்மையான வாசகர்கள் இந்த போலிவாதிகளிடம் ஏமாறக்கூடாது. அதற்கு சவுக்கு போன்றவர்கள்தான் பொறுப்பு. அயோக்கியர்களை இந்த நாட்டில் இருந்தே அப்புறப்படுத்த வேண்டும். விகடன் பற்றி நிறைய தோண்டுங்கள். தற்போது அங்கே பணியாற்றிக் கொண்டிருக்கும் மூத்த பத்திரிகையாளர்க ளே கதை கதையாகச் சொல்வார்கள். ஒரே ஒரு கண்டிஷன், அவர்களின் சொந்த வாழ்க்கையை பற்றி நீங்கள் தோண்டக்கூடாது. அதை தோண்டினால், பல பெண்கள் ஆபாசமாக வெளியே வருவார்கள். ஆனந்த விகடனில் ஆண்கள் பெயரில் கதை எழுதினால் போட மறுக்கிறார்கள். அதனால் ஆண்களே, பெண்கள் பெயரில்தான் புனைப்பெயரிட்டி கதை எழுதிக் கொண்டிருக்கிறார ்களாம். அசிங்கம்டா சாமி. த்தூஊஊஊஊ...
Quote
 
 
+6 #90 நல்லது 2011-06-09 12:22
அப்பா... சவுக்கு உன் காலைக்காட்டு (சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குகிறேன்) :lol: :lol: :lol: :lol: :lol:
ஜீ.வி. தன் செய்திகள் மூலம் வலியுறுத்துவது அரசியலில் தனி மனித ஒழுக்கம் மற்றும் அரசு இயந்திரங்களில் நியாயமான சட்டப்படி நடவடிக்கை.
அப்படி இருக்கும்பொழுது , ஜூ.வி. அந்த 46.15% பங்குகள் யாருக்குச் சொந்தம் என்பதை கம்பணி சட்டப்படி தெரிவித்து தாக்கல் செய்திருக்க வேண்டும், செய்யாதது மாபெரும் குற்றமும் வாசகர்களுக்கு மிகப்பெரிய துரோகம் இழைத்ததாகும்.
அந்த பங்குகள் யாருக்குச் சொந்தம் என்பதை தெரிவிக்காத வரை, சவுக்கு சொன்ன காரணம்தான் உண்மையாக- ஜீ.வி யின் செய்தி கொள்கை அடிப்படையில்- இருக்கவேண்டும், இருக்கின்றது.
அவ்வாறு பங்குகளைப் ப்ற்றி அறிவிக்கத வரை நான் பதினைந்து ஆண்டுகளாக தவறாமல் படித்து வந்த ஜூ.வி யை இனிமேல் வாங்கப்போவதில்ல ை. :sad: :sad:
Quote
 
 
+3 #89 Thustan 2011-06-09 10:55
கேடிகளின் துரோகம் மலையளவு. கருணாநிதியைக் காட்டிக்கொடுத்த வர்கள் எவரை வேண்டுமானாலும் இறக்குவார்கள், ஏற்றுவார்கள்.
சவுக்குக்கு நன்றிகள் பல.
Quote
 
 
+4 #88 ரிஷி 2011-06-09 10:14
//வழக்கமாக கம்பெனிப் பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களில், ஷேர் வைத்திருப்பவர்க ளின் முழுமையான விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், விகடன் குழுமத்தால் முழுமையான விபரங்களை சமர்ப்பிக்கவில் லை என்று மத்திய உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.//

இதற்கு தண்டனை ஏதும் கிடையாதா? முழுமையாக சமர்ப்பிக்காவிட ்டால் பத்திரிகை நடத்துவதை தடைசெய்யவேண்டிய துதானே!! அப்படியென்றால் தயாநிதிக்கும் காங்கிரஸுக்கும் உள்கனெக்ஷன் இருக்கிறது.
Quote
 
 
0 #87 ரிஷி 2011-06-09 10:04
//ஆனால் இப்போது, விகடன் குழுமத்தில் 41.15 சதவிகித பங்குகளை கேடி சகோதரர்கள் வாங்கியுள்ளதாக தெரிகிறது. இதற்கான ஆவணங்களை சவுக்கு முதன் முறையாக, பிரத்யேகமாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறது.//

கட்டுரையின் இப்பகுதியில் தகவல் பிழை இருக்கிறதே! சரிசெய்யவும்.
Quote
 
 
+11 #86 kaasinaath 2011-06-09 10:01
ஐயா... ஒரு வேளை இந்த இக்கட்டில் இருந்து தயாநிதி விடுபட்டால் நன்றி கடனாக அவர் காங்கிரஸ் அடிமையாகி விடுவார். அப்போது ஜுவி காங்கிரஸை பற்றி எழுதுவதையும் நிறுத்தி விடுவார்கள். அப்புறம் என்ன மசுருக்கு அந்த பத்திரிகையை படிச்சுகிட்டு...
Quote
 
 
+3 #85 gopri 2011-06-09 09:30
keedi sathorargal - count down!! pls start to flash the days....
these guys need to be dumped!! quick and fast!!
Quote
 
 
-13 #84 waran 2011-06-09 09:23
கல போக்கில சவுக்கு யாரோட துதி பாட போகுது பொறுத்திருந்து பாப்போம்
Quote
 
 
+2 #83 Iridiumcobra 2011-06-09 08:57
நாட்டில் இயங்கும் அனைத்து கம்பனிகளும், நிறுவனகளும் பணம் சம்பாதிக்கும் நோக்கத்திலேயே நடத்தப்படும் என்பதும், யாரும் சேவை செய்யும் மடங்களை நடத்துவது இல்லை என்பதும் தெளிவான விஷயம். இன்று உள்ள வணிக வாய்ப்புகளை பயன்படுத்தி கோடிக்கணக்கில் சம்பாதிக்க நேற்று முளைத்த காளான்கள் கூட வெறியுடன் அலையும் போது, 50 வருடங்களுக்கு மேலாக துறையில் இருந்து தொழில் நுணுக்கங்களை, தொடர்புகளை உடைய ஒரு பத்திரிக்கை நிறுவனம், அவர்களின் அரசியல், வணிக தொடர்புகளை சாதகமாக பயன்படுத்தி பணம் சம்பாதிக்க நினைப்பது என்பது ஒன்றும் தேசதுரோகம் இல்லை. ஜூவி விற்கும் 2 லட்சம் பிரதிகளின் மூலம் கிடைக்கும் 18 லட்சம் ரூபாயில் லாபம் என்பது, இன்றைய விலை வாசி நிலவரத்தில் வெறும் 5% கீழாகத்தான் இருக்கும். அதாவது வெறும் 90,000 ௦௦௦ ருபாய். இதை வைத்துக்கொண்டு அவர்கள் என்ன செய்வார்கள். இன்றைய தேதியில் நல்ல மக்கள் கூட்டம் கூடும் இடங்களில் போண்டா, பஜ்ஜி போடுபவர்கள் கூட நல்ல முறையில் நடத்தினால் இந்த 90,000 ௦௦௦ ருபாய் சம்பாதிக்க முடியும். எனவே, காபினெட் மந்திரியின் குடும்ப டிவியில் ப்ரோக்ராம்களின் ஸ்லாட்களை பெற்று, பெண்களைக் கவரும் சீரியல்களை போட்டு, கோடிக்கணக்கில் விளம்பர வருவாயை ஈட்டி நாலு காசு பார்க்க அவர்கள் நினைப்பது என்பது இயற்கை. காபினெட் மந்திரியின் குடும்ப டிவியும் நல்ல காசு பார்க்கும் நிகழ்ச்சிகளை தயாரிக்கும் ஆட்களை வளைத்து விளம்பர வருவாயை அள்ள நினைப்பதும் இயற்கை. எனவே இந்த வியாபார தொடர்பில் இரு தரப்புக்கும் கொளுத்த லாபமே. எனவே அவர்களின் வியாபார நோக்கத்திற்கு முன்னால் உண்மை, நேர்மை, பத்திரிக்கை தர்மம் போன்றவைகளை எதிர்பார்த்தால் நம்மைப்போல் முட்டாள் ஜென்மங்கள் யாரும் இல்லை.
Quote
 
 
+12 #82 Raj, Singapore 2011-06-09 08:53
JV ignores any comments on Dayanidhi - I will not renew my membership.
Quote
 
 
+2 #81 Sham rao 2011-06-09 08:51
contd
The existence of 24371500 would expose that it was the main line with 300 auxiliary connections continuously numbered from 24371500 to 24371799. So it had to be suppressed, and was. Second, the Note confirms the existence of further 23 lines at Maran’s home. The further lines are known in technical terms as BRA lines. The Note says, “there are 7 BRA lines” and “2 ordinary numbers” “working in the name of CGM Chennai Telephones at Boat Club Chennai”. Each BRA line consists of three lines that simultaneously transmit voice, document and video; so, the seven BRA lines actually mean 21 lines.
Aggregating these 21, the two ordinary lines and the 300 lines represented by the main line 24371500, the total number of ISDN lines smuggled into the home exchange of Maran was 323.
This is precisely what the CBI had exposed in its report.
The New Indian Express had made it public that Maran has stolen a whole exchange of 323 lines. The BSNL Note now provides the final, nailing proof of Maran’s guilt. Will he accept his wrong doing at least now?
Quote
 
 
+1 #80 Sham rao 2011-06-09 08:50
contd
It meant that they had been kept out of the exchange system itself; and they constituted a secret exchange with ‘2437’ as the common exchange code. How would the secret exchange work? Like this. If a subscriber in a BSNL exchange needs attention, he will dial ‘1191’ after dialling the exchange code.
For the Maran home exchange, all calls for attention to 23471191 would get automatically diverted to 24311191.This was intended to keep the very existence of the exchange and the code ‘2437’ secret.
Second, the Note nails Maran finally as it confesses to the existence of his 300-line secret home exchange. “It is learnt”, it says, that the numbers “24371515 and 24371616” [which Maran had asked to be converted to MP quota] are “auxiliary numbers” of the “main number 24371500 with 300 extensions”.
The Note adds that this main line [24371500]“is working in 3/1 Boat Club Road….in the name of CGM Chennai Telephones”.
The Note shows that the fraud had continued for more than five weeks after he resigned. The Note confirms four crucial facts.
One, the main line 24371500 constitutes, and conceals within it, the 300-line illegal exchange that included 24371515 and 24371616; two, the fraudulent exchange was in the name of CGM Chennai Telephones, not in Maran’s name; and three, the illegal exchange was operating till 21.6.2007; and four, the charges for this exchange were borne by the government – the words “under the DTISD [Dept] category” in the Note implicitly admits this fact. The Note makes two further devastating admissions that again prove the theft of the 323 line home exchange by Maran.
First, it says, “for effecting the conversion of the above numbers” from free of cost lines into chargeable MP quota lines as requested, the main line “24371500 has to be suppressed” and “24371515 and 24371616 have to be created as ordinary numbers with STD facility and MP category”. Why suppress 24371500? Simple.
Quote
 
 
+1 #79 Sham rao 2011-06-09 08:49
MARAN FRAUD
http://expressbuzz.com/nation/now-will-you-accept-it-as-wrong-mr-maran/282466.html
‘I had only one BSNL line – 24371500 – and no other in my name or home at 3/1 Boat Club Avenue. The New Indian Express story of 323 lines is false. Why didn’t they get the facts from BSNL?’ yelled Dayanidhi Maran on June 2, 2011. The New Indian Express nailed his lie in less than 36 hours. The BSNL website itself showed, not one, but two numbers at Maran’s home – 24371500 in CGM BSNL’s name and 24371515 in Maran’s name. The BSNL letter of 6.4.2009, citing which Maran had lied that he had only one line – 24371500 – given to him as MP, proved to be worthless. The evidence now obtained from BSNL has turned out to be a devastating one against him. The new evidence irrefutably proves that Maran did have and operate, at government’s cost, the secret home exchange of 323 lines. BSNL has admitted that it had to “suppress” this fraud, after he ceased to be minister. The evidence – Office Note of BSNL Chennai circle dated 21.6.2007 – nails all his lies. Maran resigned as Telecom Minister on 13.5.2007. Two weeks later, on 28.5.2007, a request was made to BSNL to convert the two numbers, 24371515 and 24371616 “working for the former Minister” Maran – to MP quota. It is this request that made the BSNL spill the beans on its file not only about the explosive truth of the 323-line home exchange, but also about its secret structure.First, the BSNL Note says: “no information” was “available about these numbers” – 24371515, 24371616 – with Public Grievances Cell or computer cell. The officer had therefore, “to contact” Mambalam exchange “for details of these numbers”. Why were these numbers hidden from the Mambalam exchange? No answer. That these numbers were not with the computer cell or with Public Grievances cell gives clue to the fraud.
contd
Quote
 
 
+3 #78 Sham rao 2011-06-09 08:41
கலைக்னர் TV received 214 crores to repay from an Industrialist in Chennai.This is also a bribe.But this is not coming out.Pl take this up urgently and inform courts/JPC
Quote
 
 
+3 #77 rajj 2011-06-09 08:04
உண்மையை ரொம்ப நாளைக்கு மறைக்க முடியாது? அதை எவ்வளவு தான் மறைத்தாலும் முளைத்துக்கொண்ட ு வெளியே வரும்.. அதை யாரும் மறைக்கவோ, மறுக்கவே முடியாது…. இது எல்லோருக்கும் பொருந்தும்…. இன்றைக்கு அது ஜீனியர் விகனுக்கு நாளைக்கு யாரோ…
Quote
 
 
+6 #76 nandu 2011-06-09 07:56
வெளியில் சொல்ல முடியாதபிரத்யேக காரணங்கள் நான் சொல்றேன் வேறஎன்ன? பொம்பளைங்க பிரச்சனை இதுவும் செக்ஸ் பட ரேஞ்சுக்கு சிடி மாட்டிருக்கு...!
Quote
 
 
+6 #75 amma 2011-06-09 07:35
ஜுனியர் விகடனுக்கு சங்கு, பாலு, இறுதி காரியம் எல்லாம் ஒரே கட்டூரையில் செஞ்சி முடித்துவிட்டிய ே சாவுக்கு....? வாழ்க சாவுக்கு 2001 சட்டமன்ற தேர்தல் போதே குறிப்பிட்ட அண்ணன் வைகோ வளர்க..,
Quote
 
 
+10 #74 RITE 2011-06-09 06:02
இது கனவிலும் நினைத்து பார்க்கமுடியாத நிலை. தமிழகத்தில் நடு நிலை பத்திரிகையே இனி இல்லையோ.


குட்டி பையன் சவுக்கு எறிந்து இருப்பது பெரிய கோலியாத்தை நோக்கிய கல்.

பொறி கலங்கி இருப்பது நடுநிலை பார்வையாளர்களும ்தான்.
Quote
 
 
+3 #73 Blogpaandi 2011-06-09 05:35
விகடனின் தென்றல், திருமதி.செல்வம் ஆகிய நெடுந்தொடர்கள் சன் தொலைகாட்சியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகிவருக ின்றன.
Quote
 
 
+4 #72 தஞ்சை குணா 2011-06-09 05:16
'கூடா நட்பு கேடாய் முடியும்' - பழமொழி சீனிவாசனுக்கு நன்றாக பொருந்துகிறது.

பாலசுப்ரமணியன் விகடன் - நியாயமான ஆசை, மக்களிடம் நன்மதிப்பு, சீரான வளர்ச்சி.
சீனிவாசன் விகடன் - பேராசை, வேகமான வளர்ச்சி, வாசகர்களிடம் அவநம்பிக்கை, வேகமான வீழ்ச்சி.
Quote
 
 
+8 #71 Priyan 2011-06-09 04:36
I have been using the Vikatan internet account for the past 5 years. But thats it now. I am not going to renew that...
I deeply hurt to hear this news!! There was rumour before.. But I did not believe it.. But I trust Savukku! I believe you... I am done with Vikatan!! Bye! Bye!
Quote
 
 
+9 #70 Senthil USA 2011-06-09 04:00
அட பாவிகளா... விகடன் லைஃப் மெம்பர்ஷிப் வாங்கி வெச்சிட்டென். திருடர்கள்தான் வாழ்கிறார்கள் இந்த காலத்தில்
Quote
 
 
+9 #69 Veerasamy 2011-06-09 02:33
நான் பலமுறை ஜுனியர் விகடனை கண்டிடத்து எழுதிய எனது கருத்துக்கள் publish செய்யபடவில்லை.
Quote
 
 
+2 #68 விக்ரம் 2011-06-09 01:57
Dear Savukku, Your new template has some problems. Main Page shows first 2-3 lines of the article . If we click "Read More" it starts from 4th line... not from the 1st. Is it intentional?
Quote
 
 
+17 #67 praba 2011-06-09 01:43
இப்பத்தான் புரிகிரது. ஜு.வி.ல நான் மாறன்களை பற்றி எழுதிய எதுவும் வந்தது இல்ல, ஆனால் மற்றவர்களை பற்றி எந்தகுறை எழுதினாலும் வருகிரது..அய்யகோ..இந்த கேடிகளிடம் நானும் ஏமாந்துவிட்டேனே . இப்பத்தான ஒரு வருடத்திருகு புதுபித்தேன் ரூ.900./- ஊஉ.ஊஊ..வடக்குபட்டி ராமசாமி..ஊஊஊஉ..
Quote
 
 
+4 #66 பா 2011-06-09 01:26
விகடன் வெளிட்ட ஷேர்களின் மொத்த மதிப்பு ரூ 50 லட்சம் தானா? மிக குறைவாக இருப்பது போல் தெரிகிறது. அதிலும் வெறும் 5200 ஷேர்களைத் தான் ரூ 5.2 லட்சத்திற்கு விகடன் விற்றிருக்கிறது . அப்படிப் பார்த்தால், மாறன் சகோதரர்களின் முதலீடு கிட்டத்தட்ட ரூ 2.5 லட்சம் தான். எப்படிப் பார்த்தாலும் இது ஒரு சரியான கணக்காகத் தெரியவில்லை. மேலும் பல வாசகர்கள் ஏற்கனவே கூறியுள்ளது போல் மாறன் சகோதரர்களின் பெயர் இந்த இரண்டு பக்கங்களிலும் இல்லை. அவர்களின் பெயர் உள்ள வேறு ஆதாரத்தை வெளியிட முடியுமா?

சவுக்கு, உங்களின் குற்றச்சாட்டிற் கு இது சரியான ஆதாரம் தான் என்பதை உறுதி செய்ய முடியுமா? இது தவறாக இருக்கும் பட்சத்தில், உங்கள் மீது விகடனும், மாறன் சகோதரர்களும் வழக்கு தொடர வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதை விட முக்கியமாக உங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக ும். தயவுசெய்து விளக்க முடியுமா சவுக்கு?
Quote
 
 
0 #65 தென்னை 2011-06-09 00:43
நான்கு வருடங்களுக்கு முன்னால் இதை யூகிக்க முடிந்த உங்களால் ஏன் தேர்தலுக்கு முன் இதை ..வெளியிட வில்லை..தங்களுக்கு தேவை திமுக எதிர்ப்பு செய்திகள்..அதை ஜூ.வியில் வந்ததும் காப்பி பேஸ்ட் செய்யும்போது எங்கே போனது உங்கள் துப்பறியும் மூளை...
Quote
 
 
+7 #64 பட்டிக்காட்டான் 2011-06-09 00:43
கேடி சகோதரர்களின் நாடி துடிப்பு அடங்கும் நேரம் வந்து விட்டது. சவுக்கு வேகமாக சுழல ஆரம்பித்துவிட்ட து.
Quote
 
 
+3 #63 ravi raja 2011-06-09 00:21
மாணவ பத்திரிகையாளர்க ளின் உழைப்பை சுரண்டி வாழும் விகடன் இன்று ஒரு குறிப்பிட்ட சாதி நபர்களின் பிடியில் சிக்கி த் தவிக்கிறது.இந்த நவீன பார்ப்பனர்களைப் பற்றியும் குறிப்பிட்ட ஜாதியின் ஆதிக்க வெறி விகடனில் போடும் ஆட்ட த்தைப்பற்றியும் சவுக்கு விசாரித்து போட வேண்டும்
Quote
 
 
+2 #62 V.Jai 2011-06-08 23:48
ஆசையே அழிவிற்கு காரணம்...
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 92 விருந்தினர்கள் மற்றும் 1 உறுப்பினர்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

தமிழ்லீடர்

tamilleader

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4800
mod_vvisit_counterYesterday9838
mod_vvisit_counterThis week57537
mod_vvisit_counterLast week67096
mod_vvisit_counterThis month176345
mod_vvisit_counterLast month297247
mod_vvisit_counterAll days8392073