|
முக்கிய விருந்தினர்கள் வந்ததும், ஒரு வழியாக மாலை 6.30க்கு விழா தொடங்கியதும், பார்வையாளர்களிடம் “அப்பாடா.. இப்பவாவது தொடங்கினாங்களே” என்ற நிம்மதியை காண முடிந்தது.
முதலில் சவுக்கின் வரவேற்புரையோடு நிகழ்ச்சி தொடங்கியது. சவுக்கு தனது வரவேற்புரையில், இந்தப் புத்தகம் இப்போது வெளி வருவதற்கான அவசியம் என்ன என்பதை உணர்தியது. அமேரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி, 1963ம் ஆண்டு, படுகொலை செய்யப் பட்டதும், அதனால் ஏற்பட்ட பின்விளைவுகளையும், அவரை சுட்டுக் கொன்ற, லீ ஹார்வி ஆஸ்வால்ட் என்பவர் கைது செய்யப் பட்டு, பிறகு, மற்றொரு நபரால் சுட்டுக் கொல்லப் பட்டது குறித்தும், அமேரிக்க அரசாங்கத்தால் நடத்தப் பட்ட பல்வேறு விசாரணைகள் இந்தக் கொலையில் ஆஸ்வால்ட் மட்டுமே சம்பந்தப் பட்டுள்ளார் என்று முடிவெடுத்த பிறகு, 15 ஆண்டுகள் கழித்து நியமிக்கப் பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட விசாரணைக் குழு, ஆஸ்வால்ட் மட்டும் இந்தக் கொலையில் சம்பந்தப் படவில்லை, பெரிய சதித்திட்டம் ஒன்று இருந்ததை உறுதி செய்ததை விளக்கியது.

கென்னடி படுகொலையில் விசாரணை நடத்தப் படுவதை விட, ராஜீவ் கொலையில் விசாரணை நடத்தப் பட வேண்டிய அவசியம் என்னவென்றால், ராஜீவ் கொலையில் தண்டிக்கப் பட்டு 7 பேர் இன்னமும் சிறைச் சாலையில் வாடிக் கொண்டிருக்கும் விவகாரத்தை சுட்டிக் காட்டியது.
அதன் பிறகு, நூலை தோழர் விடுதலை ராசேந்திரன் அவர்கள் வெளியிட, முதல் பிரதியை ஊடகவியலாளர் கஜேந்திரன் அவர்கள் பெற்றுக் கொண்டு, உரையாற்றினார்.

தோழர்.கஜேந்திரன், இந்தப் படுகொலை விசாரணை எப்படி, திராவிட இயக்கத்தை ஒடுக்குவதற்கு பயன்பட்டது என்பதையும், இந்தக் கொலையை பற்றி பேசுவதைக் கூட அபாயகரமான ஒரு விவகாரமாக எப்படி ஆக்கப் பட்டது என்பதையும், விளக்கினார். சவுக்கு தளத்தைப் பற்றி தனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்த தோழர் கஜேந்திரன், சவுக்கு தளம், விக்கிலீக்ஸ் இணைய தளம் போல, ரகசியங்களை வெளியிடுவதற்கு, இணைய தொழில்நுட்பத்தை மட்டும் நம்பியிருக்காமல், பல்வேறு வழிமுறைகள் மூலமாக விஷயங்களை சேகரித்து, வெளிப்படுத்துவதால், சவுக்கு தளம், விக்கிலீக்ஸ் தளத்துக்கு நிகரானது என்று தெரிவித்தார். இந்த நூல், ஒரு பெரிய அதிர்வலையை தமிழ்நாட்டில் ஏற்படுத்துவது உறுதி என்று தெரிவித்தார்.

அடுத்து பேசிய தோழர் விடுதலை ராசேந்திரன், இந்த நூலின் மீது கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார். இந்த நூலை வெளியிடும் சவுக்கு பதிப்பகம் மற்றும், மொழிபெயர்ப்பாளர் ஆனந்தராஜ் ஆகிய இருவரின் நோக்கம் சரியானதாக இருந்தாலும், நூலில் உள்ள பல கருத்துக்கள், புலிகள் இயக்கத்துக்கு எதிரானதாகவும், உண்மைக்கு மாறானதாகவும் இருப்பதாக தனது கண்டனங்களை பதிவு செய்தார். ஏழு தமிழர் விடுதலை என்பது சவுக்கு மற்றும் ஆனந்தராஜின் நோக்கமாக இருப்பதால், அந்த விடுதலைக்கு பயன்படும் விஷயங்களும், இந்த நூலில் இருப்பது, இந்நூலின் சிறப்பம்சம் என்பதைத் தெரிவித்தார்.

ராஜபக்ஷேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரும், பிரச்சார பயணத்தில் இருந்து இந்த நிகழ்ச்சிக்காக சென்னை திரும்பிய தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் ஒருங்கிணைப்புச் செயலாளர், தோழர் புகழேந்தி அடுத்துப் பேசினார். இந்த நூல் அவர் கையில் மேடையில்தான் வழங்கப் பட்டது என்பதால், நூலுக்குள் செல்லாமல், ராஜீவ் கொலையில் தண்டிக்கப் பட்டு இருக்கும் ஏழு தமிழரைப் பற்றிப் பேசினார். அவர்களோடு, கடந்த பத்து ஆண்டுகளாக பழகி வருவதாகவும், அவர்களுக்கு இந்தப் படுகொலையைப் பற்றி எந்த விபரமும் தெரியவில்லை என்பதை தன்னால் உணர முடிந்தது என்றும் கூறினார். ராஜீவின் கொலையானது, இந்திய அமைதிப் படையின் அட்டூழியங்களால் பாதிக்கப் பட்ட, பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப் பட்ட யாரோ ஒரு சகோதரியின் குடும்பத்தைச் சேர்ந்தவர், பழிவாங்கும் உணர்ச்சியால் செய்திருக்கக் கூடியதே, இதை ஒரு இயக்கம் செய்திருக்கும் என்று கருதுவதற்கான சாத்தியங்கள் குறைவே, இதற்காக ஒரு இனத்தையே அழிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டது என்று கூறினார்.

மேலும், நளினியை சோனியாவின் மகள் பிரியங்கா சிறையில் சந்தித்த பிறகுதான் ஈழத்தில் போர் தீவிரமடைந்தது என்பது போன்ற ஒரு பிம்பத்தை கட்டுவதற்கான தீவிரமான பிரச்சாரங்கள் நடைபெற்று வருவதாகவும், அது முறியடிக்கப் பட வேண்டும் என்றும் கூறினார்.
அடுத்து தோழர் தியாகு பேசினார். இந்திய அமைதிப் படை இலங்கையில் நடத்திய அட்டூழியங்களையும், அதனால் ஒரு இனத்தை அழிக்க நடந்த முயற்சிகளையும் பட்டியலிட்டார். இந்திய அமைதிப் படையில் தளபதியாக பணிபுரிந்த மேஜர் ஹர்கிரீத் சிங் என்பவரிடம், பேச்சு வார்த்தைக்கு என அழைத்து, பிரபாகரனை சுட்டுக் கொல்லும் படி ராஜீவ் காந்தி உத்தரவிட்டார் என்ற தகவலை, ஹர்கிரீத் சிங் தனது நூலில் வெளியிட்டிருப்பதை சுட்டிக் காட்டினார். இந்த நூல் ஏழு தமிழர் விடுதலைக்கு நிச்சயம் உதவக்கூடிய பல தரவுகளை கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.

நூலாசிரியர் ராஜீவ் ஷர்மா பேசும் போது, அவரது நூலில், விடுதலைப் புலிகளை மோசமாக சித்தரித்திருப்பதாக எழுந்த குற்றச் சாட்டுக்கு, இந்த நூல் வெளி வந்த போது, மத்திய உளவுத் துறை அதிகாரிகள் விடுதலைப் புலிகளை மிக மிக திறமையானவர்களாக சித்தரித்திருப்பதாக அவரை கடிந்து கொண்டதை சுட்டிக் காட்டினார். இது போல இரண்டு கருத்துக்கள் இருப்பதே இந்த நூலுக்கு கிடைத்த வெற்றி என்று கூறினார். ஏறக்குறைய 6 ஆண்டுகள், யுனைட்டட் நியூஸ் ஆப் இந்தியாவின் செய்தியாளராக, வர்மா கமிஷன், ஜெயின் கமிஷன் ஆகியவற்றை ஒரு நாள் விடாமல், கவனித்து, பல்வேறு அதிகாரிகள் அளித்த தகவல்களையும், ஆதாரங்களையும் வைத்தே இந்த நூல் எழுதப் பட்டதாகவும், வேறு யாரும் தெளிவாக ஒரு நூலைக் கொண்டு வருவதற்கு முயலாத காரணத்தாலேயே இந்த நூலை அவர் எழுதியதாகவும் குறிப்பிட்டார். இந்த நூல் படிக்கும் அனைவரையும் வசீகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மொழிபெயர்ப்பாளர் ஆனந்தராஜ் பேசுகையில், வட இந்தியாவில் பல்வேறு இடங்களில் மென் பொறியாளராக பணியாற்றி அனுபவத்தின் போது, பல்வேறு விவாதங்களில் பங்கெடுத்துக் கொண்டதாகவும், அப்போதெல்லாம், அவர்கள் தமிழர்கள் ராஜீவைக் கொன்றார்கள் என்று குற்றச் சாட்டு சுமத்தும் போது, அவர்களை மறுதலிக்க தம்மிடம் எந்த ஆதாரமும் இல்லாமல் இருந்தது என்றும், தி.நகரில் உள்ள ஒரு நூலகத்தில், இந்த புத்தகத்தைப் பார்க்கும் போது, கட்டாயம், இது தமிழ் மொழியில் வந்தே தீர வேண்டும் என்பதால் இந்த முயற்சிகளை எடுத்ததாக தெரிவித்தார். இந்த நூல் ஒரு விவாதத்தை ஏற்படுத்தும் என்று உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்தார்.

இறுதியாக விழாவுக்கு பேச்சாளர்களுக்கு முன்னதாக குறித்த நேரத்துக்கு வந்திருந்த, மத்திய உளவுத் துறை (Intelligence Bureau) மாநில உளவுத் துறை (Special Branch CID) க்யூ பிரிவு (Q Branch CID) மற்றும், சென்னை மாநகர நுண்ணறிவுப் பிரிவு (City Intelligence Services) ஆகியோருக்கும், விழாவுக்கு வருகை தந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப் பட்டது. இந்த விழாவுக்கு மொத்தம் ஏழு காவல்துறையினர் உளவுப் பணிக்காக வந்திருந்தனர் என்பதே, அரசு, இந்த விழாவை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறது என்பதற்கு சான்று.
விழா முடிந்ததும், சவுக்கு வாசகர்கள் பலரைச் சந்திக்க முடிந்தது. அவர்களை சவுக்குக்கு அடையாளம் தெரியாவிட்டாலும், அவர்களாக தேடி வந்து, தங்கள் அன்பையும் பாராட்டுக்களையும் பொழிந்தார்கள். ஏதோ நாலு வார்தை இணையத்தில் கிறுக்குகிறான் என்று இல்லாமல், அவர்கள் காட்டிய அன்பு நெகிழ வைத்தது. இந்த வாசகர்களின் அன்பைப் பார்க்கும் போது, என்ன சிரமம் வரினும், சவுக்கை மேலும்,சிறப்பாக நடத்தியே தீர வேண்டும் என்ற உறுதி ஏற்பட்டது.
விழாவுக்கு நேரில் வந்த அன்புத் தோழர்களுக்கும், வெளிநாடுகளில் இருந்து வாழ்த்து தெரிவித்த அன்பு உறவுகளுக்கும், சவுக்கின் நன்றிகள் என்றும் உரியது.
புத்தகம் வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண். ஆனந்தராஜ். 9940339748 |
Comments
at T. Nagar new book land near GRT thanga malaigai north usman road. Chennai-17
"தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பலர் பேசியும் எழுதியும் வந்த செய்தியைத்தான் இந்திய உளவுத்துறை குறிப்புகளோடு இந்தப் புத்தகம் சில பக்கங்களில் பேசுகிறது. பெரும்பான்மையான பக்கங்களில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும், கொலை வழக்கில் கைதானவர்களுக்கு எதிராகவும் பேசுகிறது. உச்ச நிதிமன்றம் நிரபாரதிகள் என விடுவித்த 19 பேரையும் குற்றவாளிகள் என்கிறது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்க ளை விடுவிக்க இந்தப் புத்தகம் எப்படி உதவி செய்யப் போகிறது? அவர்கள் அப்பாவிகள் என்பதையோ, அவர்கள் மீதான வழக்கு ஜோடிக்கப்பட்டது என்பதையோ இப்புத்தகம் எங்கேயாவது பேசுகிறதா? அவர்களை வழக்கிலிருந்து விடுவிப்பதற்கான சிறுமுகாந்திரத் தையாவது அளிக்கிறதா? சிஐஏ தொடர்பு குறித்து இந்தப் புத்தகம் பேசுவதால், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கு விடுதலை கிடைத்துவிடுமா? அமெரிக்காவின் விசுவாசமான அடிமையாகிவிட்ட இந்தியா, சிஐஏவுக்கு எதிராக சிறுதுரும்பையாவ து அசைக்க சம்மதிக்குமா?"
ரெண்டு மேட்டர்லே தப்பா போய்கிட்டு இருக்கீங்க.
1. ஸ்ரீலங்கன் விஷயம்...அதிலே நீங்க சொல்ற பேசுற விஷயங்கள் சரியான அரைவேக்காட்டுத் தனமா இருக்கு .அதுபத்தி நேரம் கிடைக்கும் பொது உங்க மெயில் இட் க்கு எழுதுறேன்.ரெண்டாவது மேட்டர் பத்தியும் .
தோழர்( ??) த்யாகு ஒரு சுபாரி கில்லர் .என் தந்தையின் நண்பர் முத்து தங்கப்பவை கூலிக்காக கொன்றவர். அதற்காக தக்க ஆதாரங்களின் அடிப்படையில் தூக்குதண்டனை விதிக்கப்பட்டவர ். அந்த சட்டப் பணியில் எனது தந்தையின் பங்கும் உண்டு. ஹெ நச் ஒனெ மன் ஆர்ம்ய் . ணெவெர் ஃபெஅரெட் அன்ட் நெவெர் சொநெட் டொந்ன் ப்ய் பொலிடிசிஅன்ச் ஒர் சுபெரிஒர்ச்... அவரும் தங்களைப் போலே அரசுப் பணியில் பல கஷ்டங்களை அனுபவித்தவர்.... நேர்மையாக இருப்பதற்காக .... சாகும் வரையில் சமாதானம் ஏதும் செய்து கொள்ளாமலேயே ..
.த்ய்குவுக்கு இந்த முட்டாள் தோழர்கள் ஞானஸ்நானம் செய்து தோழர் ஆக்கியதை அப்போதே எதிர்த்தோம்....இப்போதும் எதிர்ப்பை பதிவு செய்கிறேன்.
இது சவுக்கின் தரத்தை குறைக்கும் செயல்.
சில ஆண்டுகளுக்கு முன் காலச்சுவடுக்கும ் இது போலே ஒரு பதிவை அனுப்பினேன்.
மற்றபடி தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்....
விருச்சிகம்
When the congress prime minister is in Tamil Nadu, why was no one from the Tamil Manila Congress by his side? It's like the CEO visinting a branch office and no one from the branch is by him; he's all alone. Where's Moopanar? Usually they would be swarming him to be in the photographs. Maybe that night they knew it would be thier last photograph if they were by him! This is a hard to digest fact and not a coincidence.
Senior congress leadership was pretty sure that the BOFOS deal was a big blunder. It was a burglary in broad daylight. And how do you counter it so that it works for you instead of aganist you? Eliminate the prime accused and case closed. And till date whats the status of the BOFOS case... where is Quattrocchi...nobody knows???
Rajiv's hasty decision to send IPKF to Lanka without much thought process did'nt go well with the LTTE. The Indian army was ill prepared and Rajiv did not listen to the voices from the South. The LTTE and Tamizhs were the tool used. I'm not saying we are innocent, but given the mindset at that time, it was easy to provocate LTTE.
'Hey your mom promoted us with money and wepons, and now you are sending a whole army aganist us???'
And the LTTE took the bait; maybe they thought that if they pull off the Rajiv assasination successfully then it would deter the spirit of the Lankans and at the same time boost the morale of their own cadre. They got their revenge, or atleast thats what they thought!....nope they were 'USED'...'again' by the North.
If this is a possible theory, then who would be the agent for the congress leadership to talk to Prabha. Hmmm...well...who was the then chief minister of our TN....hmmm....damn I dont seem to remember his name....
My gut feeling tells me that Karuna is talking a lot of dirty secrets to the grave along with him.
இது வெறுமனே மத்திய அரசிற்கான வேண்டுகோளாக இருந்தாலும் தமிழர்கள் தரப்பில் இருந்து வலுவான ஒரு குரலாக அதுவும் இந்திய அரசின் ஓர் அங்கமான தமிழக மாநில அரசினால் கொண்டுவரப்பட்டு ள்ளமை நிச்சயமாக அனைத்துலக கவனத்தை ஈர்க்கும்.
அந்தவகையில் செயலுறுப் பெறாவிட்டாலும் தமிழக சட்டமன்றத்தில் சிறிலங்கா ஒரு போர்குற்ற நாடு அதன் மீது பொருளாதாரத் தடை விதிக்க ஐக்கிய நாடுகள் சபையினை நிர்பந்திக்க வேண்டும் என்று இந்திய மத்திய அரசைநோக்கி வேண்டுகோள் விடுத்து தீர்மாணம் நிறைவேற்றியிருப ்பது நிட்சயமாக ஒரு வரலாற்றுத் தீர்மானமாகவே இருக்கும்.
முதல் குரலாக தமிழர் தரப்பின் அங்கீகரிக்கப்பட ்ட அரசான தமிழக அரசிடம் இருந்து வெளிப்பட்டுள்ளத ு. இதனை இந்திய நடுவன் அரசு செவிசாய்க்கவில் லை என்றால் அவர்கள் அம்பலப்பட்டுப் போவார்கள். அதனை சோனியா காந்தி தலைமையிலான காங்கிரசு கட்சி எடுக்கும் முடிவில்தான் தெரியும்.
எது எப்படியோ சிறிலங்கா அரசிற்கு எதிராக வலுவான குரல் மிகமிக அருகாமையில் இருந்து எழுப்பப்பட்டுள் ளது என்பது மகிழ்விற்குரியத ு. அது தொடர்ந்து பயனப்படும் பாதை எதுவாக இருப்பினும் இதுவரை இருந்த முதல் தடை அகற்றப்பட்டு விட்டது என்பதையிட்டு உலகத் தமிழர்கள் மகிழ்வுடன் இந்த வரலாற்றுத் தீர்மாணத்தை ஏற்றுக்கொள்வோம் .
உலகத்தமிழர்களது உள்ளம் மகிழும்படியாக நம்பிக்கை ஒளியாக ஒரு தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் கொண்டுவந்து அதனை அனைத்து உறுப்பினர்களது ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றியதையி ட்டு பெருமகிழ்வடைவது டன் உலகத் தமிழர்கள் சார்பில் ஈழதேசம் இணையம் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவிற்கும ் தமிழக அரசிற்கும் தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரிற்கும் எல்லாவற்றிற்கும ் மேலாக இந்த வரலாற்றுச் சந்தர்ப்பத்தை சாத்தியமாக்கிய தாய்த்தமிழ் உறவுகளிற்கும் வாழ்த்துக்களையு ம் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றது.
http://eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=7845:2011-06-08-09-57-21&catid=1:aktuelle-nachrichten&Itemid=50
காமெடி பண்ணாதிங்கப்பா.. LTTEயே இதை செய்தது நாங்க தான்னு ஒத்துகிட்டாங்க..
பரவலாக குண்டுமழை பொழிந்து அப்பாவி மக்களை கொன்று குவித்தது. மனிதர்கள் வாழும் இடங்களின் மீதும், மருத்துவ மனைகள் மீதும் குண்டுகளை வீசியது. மனிதாபிமான முறையில் செய்ய வேண்டிய உதவிகளை செய்ய மறுத்தது. உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் விடுதலைப்புலிகள ் அமைப்பைச்சேர்ந் தவர்கள் என்று சந்தேகப்படக்கூட ியர்கள் உள்பட இந்தச் சண்டையில் பலியானவர்கள் மற்றும் எஞ்சியுள்ளவர்கள ் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது.
இலங்கை அரசை விமர்சிப்பவர்கள ் மற்றும் ஊடகங்கள் உள்பட போர்ப் பகுதிக்கு வெளியே இருப்பவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது. போன்ற கடுமையான, நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக் களை உள்நாட்டுப்போரி ன் போது இலங்கை அரசு நிகழ்த்தியுள்ளத ாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால் நியமனம் செய்யப்பட்ட குழு கண்டறிந்து இருக்கிறது.
எனவே, இத்தகைய போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்கள ை போர்க்குற்றவாளி கள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும், தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி, சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழவகை செய்யும் வரையில், அனைத்து குடியுரிமை களையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை இந்திய அரசை கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து இந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் பேசினார்கள். முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் பதில் உரைக்கு பிறகு தீர்மானம் நிறைவேறியது.
Aiyaa Congress ai poruthamatilum reliance matrum tata thaan desa pitha avargal solvadhey soniya seivaar, soniya solvadhyae adimai panrigal seiyum (naai nadri ulla praani adhanaal adhai vitu vidungalaen please) nama chidambaram allakai anaivarukum otru oodhugiraar, avar manaivi seidha gold MLM business la ewlo kodi eemathinanu chennai vaasigala kaetu paarunga, adhilum I.T engineers a ketu paarunga
உ-ம்.
அண்மை,
அண்மித்தான்.
அணுகினான்.
அன்புடன் சவுக்கு அவர்களுக்கு.
சவுக்கு முன்பக்கத்தில்
விளம்பரம் செய்ய அ(னு)கவும். என்று விளம்பரப்படுத்த ப்பட்டுள்ளது,
>அணுகவும்
- I thought Savukku will look like a Che Guevara, not like a normal person with belly
If you look at 2g scam, the home ministry surely knows in and out of individuals involved in this scam. our officials hands are tied due to political compulsion. Thats is the reason still our country failing infront of corruption.
savukku - wish you all the best! if you have book release footage... please upload to youtube.
thank you,
padmanaban
2nd photo ist on the right
1)A human bomber can kill an individual easily but not 15 to 20 people just like that??It needs a lot of explosives than that.The bomb was already planted on stage.
2)Why should the LTTE photograph itself and leave the camera ryt there,without which there would be no lead in the investigation.They simply told there was a photographer n he too died.n y no video
3)who is chanra swami n why the hell he should "finance" it.There is nothing to finance it except for the 700 gm RDX.
4)Why did Subramania swami aka CIA swami started shouting at 10:20 that RAJIV WAS KILLED,when the actual assasination took place 10 minutes later
5)Why did none in the LTTE top brass knew about it.N how the hell LTTE suddenly got huge cache of arms out of no where for the forthcoming unceasing waves 1 ,2,3.
6)Someone wanted him dead for his pro-palestinian policy.n LTTE was a mere masking agent.
7)n Why no tamil politician died in it??
someone please read the book named "By Way of Deception".
Their motto is:'By way of deception, thou shalt do war.'
இதுதான் உண்மையா? தயவு செய்து நடு நிலையில் நில்லுங்கள். விக்கீலீக்ஸுக்க ு இணையாக மார்தட்டிக்கொள் ளும் நீங்கள் திரித்து பேசுவது துரோகம் இல்லை?[/ஃஉஒடெ]
[ஃஉஒடெ நமெ="ஆருன்குமர்"]ராஜீவ் கொலையில் தண்டிக்கப் பட்டு இருக்கும் ஏழு தமிழரைப் பற்றிப் பேசினார். அவர்களோடு, கடந்த பத்து ஆண்டுகளாக பழகி வருவதாகவும், அவர்களுக்கு இந்தப் படுகொலையைப் பற்றி எந்த விபரமும் தெரியவில்லை என்பதை தன்னால் உணர முடிந்தது என்றும் கூறினார். ராஜீவின் கொலையானது, இந்திய அமைதிப் படையின் அட்டூழியங்களால் பாதிக்கப் பட்ட, பாலியல் வன்புணர்ச்சிக்க ு ஆளாக்கப் பட்ட யாரோ ஒரு சகோதரியின் குடும்பத்தைச் சேர்ந்தவர், பழிவாங்கும் உணர்ச்சியால் செய்திருக்கக் கூடியதே, இதை ஒரு இயக்கம் செய்திருக்கும் என்று கருதுவதற்கான சாத்தியங்கள் குறைவே, இதற்காக ஒரு இனத்தையே அழிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டது என்று கூறினார்.
இதுதான் உண்மையா? தயவு செய்து நடு நிலையில் நில்லுங்கள். விக்கீலீக்ஸுக்க ு இணையாக மார்தட்டிக்கொள் ளும் நீங்கள் திரித்து பேசுவது துரோகம் இல்லை?[/ஃஉஒடெ]
இந்த கருது சவுக்கொட கருத்து இல்ல...தோழர் புகழேந்தி அவர்களின் கருத்து...!!
இக்கருத்தும் தவறு என்று கூற முடியாது.....அதற்க்கு தான் ஆரம்பத்திலேயே கென்னடி இன் கொலை பற்றிய வரலாறு கூறப்பட்டு உள்ளது....!!
என்று விழிக்கும் இந்திய தேசம்? இன்றே விழிக்காவிடில் எதிர்கால சந்ததி நம்மை பழிக்கும்..
//
உங்கள் விலை பதிப்பகத்தின் விலையை விட 66% சத விகிதம் அதிகம்.
http://www.panuval.com/index.php?route=product/product&product_id=57
ஏனிந்தக் கொள்ளை?
வாழ்த்துகள் . உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள். மேலும் நல்ல புத்தகங்களை வெளியிட வேண்டும் என விரும்போகிறோம்
எத்தனை பேர் வந்தாங்க ? நான் ஒரு நூறு பேராவது வருவாங்கன்னு எதிர்பாத்தேன். எத்தின பேரு வந்தாங்க?
ஒரு வழியா இன்று 07/06/2011 புத்தகம் வாங்கிவிட்டேன். இனிமேல் தான் படிக்க வேண்டும்.
வாழ்க வளமுடன்.
இரண்டாவது போட்டோ ல கடைசி யாக ஒருத்தர் நிகிறாரு பாருங்க . தனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல் லாத மாதிரி . அவர்தாங்க நாம சவுக்கு :ரொல்ல்:
ந்ஹொ இச் பெஹின்ட் ஸவுக்கு.னெட் (நிகி ளெஅக்ச் ஒஃப் ஈன்டிஅ)?
யாரு கைல புத்தகம் இல்லையோ அவர் தான் சவுக்கு....சரியா ??
எனது உள்ளார்ந்த வாழ்த்துக்கள்...
சவுக்கு உஙலோட போடோ எது ??[/ஃஉஒடெ]
இரன்டாம் புகைப்படம், 5ம் நபர்(வலபுரம்)
RSS feed for comments to this post