முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
காதாயிரம் ஆன கண்ணாயிரம். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 27
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வியாழக்கிழமை, 19 மே 2011 09:09

 

யார் இந்த கண்ணாயிரம் ? இந்த கண்ணாயிரம் யார் என்பதை வாசகர்கள் கமிஷனர் கண்ணாயிரம் என்ற கட்டுரையைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். சரி இவர் எப்படி காதாயிரம் ஆனார் ?

 

இன்று இவரை உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக நியமித்து, அரசாணை வெளியிட்டிருக்கிறது ஜெயலலிதா அரசு.   ஜாபர் சேட், சட்ட விரோதமாக தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டது சவுக்கு வாசகர்கள் உட்பட, அனைவரும் அறிந்ததே. கண்ணாயிரம் இந்தப் பதவியில் நியமிக்கப் பட்டதன் மூலம், இந்த சட்டவிரோத ஒட்டுக் கேட்பை இவரும் தொடர்வார் என்றே காவல்துறை அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். இது போல ஒட்டுக் கேட்பைத் தொடர்வதால், இவரை ஏன் காதாயிரம் என்று அழைக்கக் கூடாது ?

 

Rajanderan._10

 

இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநகர கமிஷனராக இருந்த, கண்ணாயிரம், அதிமுக அரசிலும் செல்வாக்காக இருப்பதற்கு இரண்டே இரண்டு காரணங்கள் தான் இருக்க முடியும். இவர் தன்னை முக்குலத்தோர் என்று அழைத்துக் கொள்கிறார்.   ஆனால் உண்மையில் இவர் வல்லம்பர் சாதி. சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரைச் சேர்ந்தவர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள வல்லம் என்ற இடத்தில் தொடக்க காலத்தில் இருந்தவர்கள், பின்னாளில் இடம் பெயர்ந்து சிவகங்கை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வசிக்கத் தொடங்கினர். இவர்கள் தங்களை நாட்டார் என்று அழைத்துக் கொள்கின்றனர்.   18ம் நூற்றாண்டில், மருது சகோதரர்களோடு சேர்ந்து போர் புரிகிறார்கள் வல்லம்பர்கள். இதனால், சிவகங்கை மன்னர், காரைக்குடி நகரத்தை ஆளும் பொறுப்பை வல்லம்பர்களுக்குத் தருகிறார். அதன் பின், வல்லம்பர்களுக்கு அம்பலம் என்ற பட்டம் வருகிறது.

 

கள்ளர், மறவர், தேவர் ஆகிய முக்குலத்தோர் சாதியோடு, பெண் கொடுத்து, பெண் எடுக்கும் பழக்கம் இச்சமூகத்தில் ஏற்பட்டதால், வல்லம்பர்கள் ஏறக்குறைய முக்குலத்தோர் என்றே அழைக்கப் படுகிறார்கள். ஆனால், கண்ணாயிரம் ஒரு படி மேலே போய், தன்னை சசிகலாவின் உறவினர் என்று அழைத்துக் கொள்வார்.

இந்தக் கண்ணாயிரம், திமுக ஆட்சியில் செய்த அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சம் கிடையாது.   இவரை இந்தப் பதவிக்கு கொண்டு வந்ததே ஜாபர் சேட் தான். அதனால் ஜாபர் சேட்டுக்கு கடைசி வரை விசுவாசமாக இருந்தார் கண்ணாயிரம்.

 

கண்ணாயிரத்தின் பெருமைகளை சொல்ல வார்த்தைகள் போதாது என்றாலும், ஒன்றிரண்டு சம்பவங்களைச் சொல்வது, இவர் பெருமைகளை எடுத்துக் கூற உதவும்.

 

நித்யானந்தாவின் வீடியோவை, கருமம் பிடித்த காமராஜும், கேடி சகோதரர்களின் சன் டிவியும், ஸ்டிங் ஆபரேஷன் என்ற பெயரில், படுக்கையறையில் நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக இருந்த காட்சிகளை காண்பித்ததை நாம் அறிவோம். அது ஸ்டிங் ஆபரேஷனா இல்லையா என்ற விவாதம் வேண்டாம்.   சன் செய்திகளை பார்த்துக் கொண்டிருக்கையில், வீட்டில் உள்ள உங்கள் குழந்தைகளோடு அதைப் பார்க்க முடியுமா ? இது போல ஆபாச காட்சிகளை செய்தி அல்லது ஸ்டிங் ஆபரேஷன் என்ற பெயரில் பதிப்பிப்பதையும், ஒளிபரப்புவதையும் பார்க்க முடியுமா ?   அது சட்டப் படி தவறு இல்லையா ?

 

கல்யாணி என்ற வழக்கறிஞர், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் கண்ணாயிரத்துக்கு புகார் ஒன்றை அனுப்பினார். அந்தப் புகாரில், பெண்களை தவறாக சித்தரித்தல், ஆபாச படங்களை ஒளிபரப்புதல் உள்ளிட்ட, பல்வேறு பிரிவுகளின் கீழ், நக்கீரன் இதழும், சன் டிவியும் குற்றங்களை செய்திருக்கின்றன என்றும், அவர்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒரு புகார் அனுப்பப் பட்டது.   கண்ணாயிரத்தின் நேரடி பார்வைக்காக பேக்ஸ் மூலமாகவும் அந்தப் புகார் அனுப்பப் பட்டது. அந்தப் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மறுத்தார் கண்ணாயிரம்.   அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் சன் டிவியையும், நக்கீரனையும் காப்பாற்றினார்.

 

குமுதம் சிநேகிதி என்ற இதழின் ஆசிரியராக பணி புரிபவர் லோகநாயகி. குமுதம் இதழில் தலைமை நிருபராக பணியாற்றி வந்தவர் திருட்டு சரவணன், மன்னிக்கவும், திருவேங்கிமலை சரவணன்.   இந்த திருவேங்கிமலை சரவணனுக்கு பெண்களை இழிவாகவும், தரக்குறைவாகவும் பேசுவதே பிரதான வேலை.   மகளிர் கல்லூரிகளுக்குச் சென்று, அந்தப் பெண்களோடு பழகி, குமுதம் இதழில் அவர்களின் படங்களைப் போட்டு, அதன் மூலம் அந்தப் பெண்களுக்கு வலை விரிப்பவர். இது போல, அலுவலகத்தில் தன்னோடு பணியாற்றிய ஜனனி, சாந்தி என்ற பெண்களைப் பற்றி தரக்குறைவாக பேசியதை, சிநேகிதி இதழின் லோகநாயகி கண்டித்தார். உடனே, லோகநாயகியைப் பற்றி, மிக மிகக் கேவலமாக பேசத் தொடங்கினார் திருட்டு சரவணன்.   இதைக் கண்டு மனம் பொறுக்க முடியாத லோகநாயகி, உடனடியாக நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்து விட்டு, சென்னை மாநகர காவல் ஆணையாளர் கண்ணாயிரத்திடம் நேரடியாக எழுத்து பூர்வமான புகார் அளிக்கிறார்.

report_008

பெண்களுக்கு பிரச்சினை என்றால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவும் மக்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறும் பெண் பத்திரிக்கையாளருக்கே பிரச்சினை   என்றால் ?     ஆனால் கண்ணாயிரம் அந்தப் புகாரை வாங்கி, சரக்கடித்து விட்டு டிஷ்யூ பேப்பர் என்று நினைத்து கையை துடைத்து விட்டாரோ என்னவோ ….. ? இறுதி வரை திருட்டு சரவணன் போன்றதொரு பொறுக்கியின் மீது சிறிய விசாரணை கூட நடத்தவில்லை. இதுதான் கண்ணாயிரத்தின் லட்சணம்.

 

ஒரு சில நாட்களிலேயே கண்ணாயிரத்துக்கு ஒரு ரகசிய உத்தரவு வருகிறது.   குமுதம் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு இடையே பிரச்சினை. அந்தப் பிரச்சினையில் தலையிட்டு, குரங்கு ஆப்பத்தை பங்கு வைத்த கதையாக தனக்கு என்ன லாபம் பார்க்கலாம் என்று கருணாநிதி திட்டமிடுகிறார்.   அதற்கு யாராவது ஒரு பார்ட்னரை மிரட்டினால் தானே சரிப்படும் ? டாக்டர்.ஜவஹர் பழனியப்பனோடு சேர்ந்து அதில் ஒரு பங்குதாரரான வரதராஜனை கைது செய்து பொய் வழக்கு போடலாம் என திட்டமிடுகிறார் கருணாநிதி. அதைச் செய்து முடிக்க அடியாள் வேண்டுமல்லவா ? வேறு எதற்கு இருக்கிறார் கண்ணாயிரம் ? கண்ணாயிரத்திடம் இந்தத் தகவல் சொல்லப் பட்ட உடனேயே களத்தில் இறங்குகிறார். கண்ணாயிரத்தின் உத்தரவுப் படி, கைது செய்யப் பட்ட வரதராஜனை அழைத்துக் கொண்டு போலீசார், எப்படியாவது அவர் வீட்டில் சோதனை ஒன்றை நடத்தி துப்பாக்கி ஒன்றை கைப்பற்றியதாக ஒரு வழக்கு போட்டு, Arms Act வழக்கு போட வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள். அதற்கு வீட்டில் சோதனை நடத்தி துப்பாக்கியை எடுத்தது போல செட்டப் பண்ண வேண்டுமல்லவா ? வரதராஜனை அழைத்துக் கொண்டு, காரில், 4 மணி நேரம் சுற்றுகிறார்கள் சென்னை போலீசார். செல்போனில், கண்ணாயிரத்திடமிருந்து உத்தரவுகள் பறந்த வண்ணம் இருக்கின்றன.   ஆனால், குமுதம் நிறுவனத்தின் இரண்டு முக்கியமான ஊழியர்கள் வழக்கறிஞரை அழைத்துக் கொண்டு, பைக்கில் அந்த காரை பின் தொடர்ந்தனர். என்னென்னவோ செய்து பார்த்தும் அவர்களை தவிர்த்து வரதராஜனை வீட்டுக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை என்பதால், வேறு வழியின்றி, சென்னை ம்யூசியத்தின் உள்ளே உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். பிறகு கமிஷனர் அலுவலகம் அழைத்துச் சென்று, Arms Act கேஸ் போட முடியாது என்றதும், ஜவஹர் பழனியப்பனை அழைத்து அவரிடம், வரதராஜன் நிதி மோசடியில் ஈடுபட்டார் என்று ஒரு புகாரை வாங்கினார்கள். இதற்குள், வரதராஜன் கைது செய்யப் பட்ட செய்தி தீயைப் போலப் பரவியதால், கமிஷனர் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களும், வழக்கறிஞர்களும் குழுமினர். வேறு வழியின்றி, வரதராஜன் அன்று இரவு 10 மணிக்கு ஜாமீனில் விடப்பட்டார். இதற்குப் பிறகு, கருணாநிதி, நான் பத்திரிக்கை சுதந்திரத்தை மதிப்பவன், குமுதம் இதழின் பங்குதாரர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்க ஒரு கமிட்டியை அமைக்கிறேன் என்று முதலைக் கண்ணீர் வடித்தார். ஆடு நனைகிறதே என்று அழுத ஓநாயின் குரல் கேட்கவில்லை ? இதைச் செயல்படுத்தியதும் கண்ணாயிரம் தான்.

 

தினமலர் நாளிதழ், ஒரு மிக மிக மோசமான செய்தியை வெளியிட்டது.   என்ன செய்தி என்றால், முன்னாள் நடிகைகள் விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று செய்தி வெளியிடப் பட்டது.   எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத அயோக்கியத்தனமான செய்தி அது.   இது போல ஒருவரைப் பற்றி அவதூறான செய்தி வெளியிட்டால், அது தொடர்பாக சம்பந்தப் பட்ட நபர் அவதூறு வழக்கு தொடர்வதுதான் சட்ட ரீதியான வழி. ஆனால், தினமலர் நாளிதழ் மீது பெண்கள் மீது கொடுமை இழைத்ததான சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டது. இதைக் கூட சவுக்கு தவறு என்று சொல்லவில்லை. ஒரு பத்திரிக்கையில் வரும் செய்திக்கு, சட்டத்தின் படி, பிரின்டர் மற்றும் பப்ளிஷர் தானே பொறுப்பாக முடியும் ?   செய்தி ஆசிரியர் எப்படி பொறுப்பாக முடியும். ஆனால், இந்தக் கண்ணாயிரம், தினமலரின் செய்தி ஆசிரியர் லெனினைக் கைது செய்தார். எத்தனை பெரிய அயோக்கியத்தனம் இது ?

s-1

மதுரையில் அழகிரியின் அல்லக்கை பொட்டு சுரேஷ் என்பவரைப் பற்றி உங்களுக்கு நன்கு தெரியும்.   இந்த பொட்டு பற்றி, ஜுனியர் விகடனில் ஒரு செய்தி வந்தது.   இந்தச் செய்தி பொட்டு சுரேஷை கடும் கோபம் கொள்ளச் செய்தது.   கடும் கோபடைந்த பொட்டு, உடனடியாக தினமலர் நாளேட்டில் ஒரு விளம்பரம் கொடுத்தார். அந்த விளம்பரம் என்னவென்றால், விகடன் அலுவலகம் முன்பாக நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறேன்.   இதற்கு மறைமுகமான அர்த்தம் என்னவென்றால், அடித்து நொறுக்கப் போகிறேன் என்பதுதான்.   இந்த விளம்பரத்தை அனுமதித்து, முழுப்பக்க விளம்பரமாக வெளியிட்ட தினமலரின் அயோக்கியத்தனத்தைப் பாருங்கள்.   பத்திரிக்கையாளர்கள் கொதித்து எழுந்தனர்.   விகடன் நிறுவனமும், ஆரம்பத்தில் கொதித்தது.   பிறகு பொட்டு சுரேஷிடம் சரணடைந்தது வேறு கதை.

 

தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பாக எத்தனையோ ஆர்ப்பாட்டங்களை மெமொரியல் ஹால் முன்பு நடத்த அனுமதி கேட்டு கடிதம் கொடுத்திருக்கிறோம்.   ஆனால், அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்த பிறகு, ஆர்ப்பாட்டத்திற்கு முதல் நாள் மாலை 7 மணிக்கு, அனுமதி மறுப்பு என்று கண்ணாயிரம் கடிதம் கொடுப்பார். ஏனெனில், அப்போதுதான் உடனடியாக நீதிமன்றத்தை அணுக முடியாது என்பதால்.

 

ஆனால், இந்த பொட்டு சுரேஷ் ஆர்ப்பாட்டத்திற்கு, விகடன் அலுவலகம் முன்பாக தடுப்புகளை போட்டு ஏற்பாடுகளை செய்தார் கண்ணாயிரம் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா ?   மவுன்ட் ரோடில், டிவிஎஸ் எதிரில், 300 பேர் ஆர்ப்பாட்டம் நடத்தினால் தாங்குமா ? மேலும், பத்திரிக்கை அலுவலகத்தை தாக்கும் நோக்கத்தோடே ஆர்ப்பாட்டம் நடத்த உத்தேசிக்கும் ஒரு நபருக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை உலகத்தில் எந்த முட்டாளாவது செய்வானா ? இப்படி ஒரு ஏற்பாட்டை செய்ய கண்ணாயிரத்திற்கு என்ன திமிர் இருக்க வேண்டும் ?

 

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் படி, வழக்கு பதியப் பட்டது.   சீமான் கைது செய்யப் படப் போகிறார் என்றதும், சீமானுக்கு ஒரே விருப்பம், கைது செய்யப் படும் முன்பு, பத்திரிக்கையாளர்களை சந்திக்க வேண்டும் என்பது மட்டுமே.   அதற்காக பத்திரிக்கையாளர்களை சந்திக்க சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்துக்கு சீமான் வருகை தந்த போது, காவல்துறையினரை விட்டு, பத்திரிக்கையாளர்களை தாக்கியவர்தான் இந்த கண்ணாயிரம்.   கடைசி வரை சீமானை பத்திரிக்கையாளர்களோடு பேச விடாமல் தடுத்தார்.

 

சென்னை கமிஷனர் அலுவலக வளாகத்தின் உள்ளேயே, பாண்டிச்சேரியைச் சேர்ந்த சிலரால், தாக்கப் பட்டார். இந்த சம்பவத்தை அடுத்து வெகுண்டெழுந்த பத்திரிக்கையாளர்கள், கண்ணாயிரம் அலுவலகத்தின் உள்ளே சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.   உரிய முறையில் சட்டப் படி நடவடிக்கை எடுக்கப் படும் என்று கண்ணாயிரம் உறுதி அளித்தார். தாக்கிய நபர்கள் கமிஷனர் அலுவலகத்திலிருந்து தப்ப வைக்கப் பட்டனர். கண்ணாயிரம் அடுத்து என்ன செய்தார் தெரியுமா ? புகார் கொடுத்த பத்திரிக்கையாளர் பணி புரியும் நிறுவனத்தின் முதலாளியிடம் சொல்லி, புகார் கொடுத்தவருக்கு நெருக்கடி கொடுத்து, புகாரை வாபஸ் பெறச் செய்தார்.   இதுதான் கண்ணாயிரம்.

 

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவின் போது, சில வழக்கறிஞர்கள், கருணாநிதிக்கு கறுப்பு கொடி காட்டினர்.   அப்போது, திமுக ரவுடிகள், வி.எஸ்.பாபுவின் தலைமையில் கறுப்புக் கொடி காட்டிய வழக்கறிஞர்கள் மில்டன், பார்த்தசாரதி, சுரேஷ், தியாகு, சாலமன் மற்றும் முனீஸ்வரன் ஆகியோரை அடித்து நொறுக்கினர்.   இதை படமெடுத்த ஜெயா டிவியின் கேமராமேன் மற்றும் என்டிடிவி ஹின்டுவின் கேமரா மேன் தேவராஜன் மற்றும் லைவ் இந்தியா டிவியின் கேமராமேன் ஆகியோர் மிருகத்தனமாக தாக்கப் பட்டனர்.   இது கண்ணாயிரம் அந்த இடத்தில் இருக்கும் போதே நடந்தது.

COMESENAR_Rajanderan

கண்ணாயிரம் என்ன செய்தார் சொல்லுங்கள் பார்ப்போம் ? தாக்கப் பட்ட வழக்கறிஞர்கள் மீது வழக்கு பதிவு செய்தார்.   அவர்கள் ஜாமீன் கோர மாட்டோம், சிறை செல்கிறோம் என்று சொன்னதும், நாங்கள் அவர்களை அவ்வாறு செய்யாதீர்கள் என்று சொன்னதால் ஜாமீன் தாக்கல் செய்தார்கள். பாதிக்கப் பட்ட பத்திரிக்கையாளர்கள், எஸ்பிளனேடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்கள். பத்திரிக்கையாளர் சங்க நிர்வாகிகள் மதியம் ஒரு மணிக்கு காவல் நிலையம் சென்றார்கள்.   மாலை 5 மணி வரை அவர்கள் புகார் காவல் நிலையத்தில் வாங்கப் படவே இல்லை.   உள் துறை செயலாளர் மாலதியிடம், பத்திரிக்கையாளர் சங்க நிர்வாகிகள் தொடர்பு கொண்டு பேசிய பிறகே புகார் வாங்கப் பட்டது.

 

இன்று வரை, தாக்குதலுக்கு காரணமான ஒருவர் கூட கைது செய்யப் படவில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது.

 

திமுகவின் ராஜ்ய சபா எம்பி வசந்தி ஸ்டான்லி தன் மீது மோசடி வழக்கு நிலுவையில் இருந்தது. இந்த மோசடி வழக்கில் முன் ஜாமீன் பெற்றார் வசந்தி. இதற்காக வசந்திக்கு மூன்று நபர்கள் ஜாமீன் (ஷ்யூரிட்டி) கொடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டது.

 

வசந்திக்கு ஜாமீன் தாரர்கள் மூன்று பேர்.   முதலாமவர் கே.ராமதாஸ். தந்தை பெயர் கண்ணன். முகவரி 25/38, கோவிந்த சிங் தெரு, புளியந்தோப்பு, சென்னை 12.

 

அடுத்த ஜாமீன்தாரர் கே.ராதாகிருஷ்ணன். தந்தை பெயர் கண்ணன். முகவரி எண் 2/421, முதல் குறுக்குத் தெரு, ராஜீவ் காந்தி நகர், மேடவாக்கம், சென்னை.

 

மூன்றாவது ஜாமீன் தாரர் எம்.புஷ்பராஜ், தந்தை பெயர் முனுசாமி. எண் 99, போக்குவரத்து சந்து தெரு, புதுப்பேட்டை, சென்னை.2

 

இதில் முதல் ஜாமீன்தாரர் ராமதாஸ் செங்கல்பட்டு மாவட்டம், சைதாபேட்டை தாலுகா, 135, சேலையூர் கிராமம், விவேகானந்தர் தெரு, கதவு எண் 198ல், சர்வே எண் 212/பி ல் உள்ள பிளாட் எண் 4561 விஸ்தீரணம் 2400 சதுர அடியில் உள்ள வீடும் காலி மனையும் அடங்கிய சொத்துப் பத்திரத்தை வசந்திக்காக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறார். இவருக்கு இந்த அளவுக்கு சொத்து உள்ளது என்று தாம்பரம் தாசில்தார், ஒரு சொத்துச் சான்றிதழையும் வழங்குகிறார்.

 

இரண்டாவது நபர் ராதாகிருஷ்ணன், தனக்கு எண் 28, அம்மன் கோயில் தெரு, ஈஞ்சம்பாக்கம் கிராமம், தாம்பரம் தாலுகா என்ற முகவரியில் நான்கு செண்ட் மதிப்பில் ஒரு ஓட்டு வீடும் காலி மனையும் இருப்பதாக காட்டி, தாம்பரம் தாசில்தார் அலுவலகத்தில் ஒரு சொத்துச் சான்றிதழை தாக்கல் செய்திருக்கிறார்.

 

மூன்றாவது நபர், புஷ்பராஜ், அவருக்கு சென்னை தாம்பரம் தாலுகா, சேலையூர் கிராமம், திருவள்ளுவர் தெருவில், நான்கு சென்ட் இடத்தில் ஒரு ஓட்டு வீடும், ஒரு காலி மனையும் இருப்பதாக காட்டியிருக்கிறார்.   இதற்கும் தாம்பரம் தாசில்தார் சான்று அளித்துள்ளார்.

 

இந்த ஆவணங்களின் அடிப்படையில், வசந்தி ஸ்டான்லி, கைது செய்யப் படாமல் முன்பிணை பெறுகிறார்.

 DSC_0097

இப்போது விஷயத்துக்கு வருவோம்.   ராமதாஸ் தனக்கு சொந்தமானது தாக்கல் செய்துள்ள 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள வீட்டிற்கு சென்றால், அப்படி ஒரு வீடே அங்கு இல்லை.   ராமதாஸ் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு சென்று பார்த்தால், அங்கு உள்ள ராமதாஸ் மாதம் 350 ரூபாய் வாடகை வீட்டில் குடியிருக்கும் ஒரு கூலித் தொழிலாளி.   ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த வீட்டையும் காலி செய்து விட்டு சென்று விட்டார்.   அந்த பத்திரத்தின் எண் 2856. தாம்பரம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் விசாரித்துப் பார்த்தால், அந்தப் பத்திரம் வேங்கை வாசல் கிராமத்தில் இருக்கும் ருக்குமணி என்பவரின் சொத்து. ராமதாசுக்கும் இந்த சொத்துக்கும் சம்பந்தமே இல்லை.

 

அடுத்த நபர் ராதாகிருஷ்ணன். அதுவும் கே.ராதாகிருஷ்ணன்.   இவர் தனது சொத்து என்று குறிப்பிட்டுள்ள, எண் 28, அம்மன் கோயில் தெரு, ஈஞ்சம் பாக்கம் என்ற முகவரியே போலி. அப்படி ஒரு சொத்து இல்லை. இந்த ராதாகிருஷ்ணன் கொடுத்த வீட்டு முகவரியும் போலி.

 

மூன்றாவது நபரான புஷ்பராஜ் தனக்கு சேலையூரில் சொத்து இருப்பதாக ஆவணம் தாக்கல் செய்துள்ளார். அந்த முகவரியில் அப்படி ஒரு வீடே இல்லை என்பது தெரிய வந்தது.   சரி இந்த நபரின் புதுப்பேட்டை முகவரியாவது சரியாக இருக்குமா என்று பார்த்தால், அந்த தெருவில் இரண்டு புஷ்பராஜுகள் இருந்தனர். ஒருவர் இறந்து விட்டார். மற்றொருவர், அவரது வீட்டை 1999ம் ஆண்டு விற்று விட்டு சென்று விட்டார்.

 

சரி. தாம்பரம் தாசில்தார் அலுவலகத்தில் சொத்துச் சான்றிதழ் கொடுத்திருக்கிறார்களே… அது எப்படி வழங்கப் பட்டது என்று விசாரித்தால், இதை விட பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது.

 

எஸ்.கோவிந்தராஜன், வட்டாட்சியர், (பொறுப்பு), தாம்பரம், தனது கடித எண் ந.க.459/2009 பி2 என்ற 22.04.2009 நாளிட்ட கடிதத்தில் இந்த மூன்று சொத்துச் சான்றிதழ்களும் பரிசீலிக்கப் பட்டது.   அந்த சான்றுகளில் தாம்பரம் வட்டாட்சியர் வி.ராமனாதன் என்று கையொப்பமிடப் பட்டுள்ளது.   மேற்குறிப்பிட்ட தேதிகளில், திரு.ராமனாதன் என்ற பெயர் கொண்ட வட்டாட்சியர் எவரும் இவ்வட்டத்தில் பணிபுரிய வில்லை. எனவே இந்தச் சான்றுகள் இந்த அலுவலகத்தில் வழங்கப் படவில்லை என்றும், மேலும் தாங்கள் தாக்கல் செய்துள்ள பட்டாக்களில் வட்டாட்சியர் கையொப்பம் இடப்பட்டுள்ளது. தனி நபர் பெயர்களில் வழங்கப் படும் பட்டாக்களில் வட்டாட்சியர் கையொப்பமிட்டு வழங்கப் படுவதில்லை. துணை வட்டாட்சியர் நிலையில்தான் பட்டாக்களில் கையொப்பமிடுதல் வழக்கம். மேலும் அதில் உள்ள கோபுர முத்திரையை ஆய்வு செய்ததில் அம்முத்தியும் இவ்வலுவலக முத்திரை கிடையாது. ஏனெனில் வட்டாட்சியர் அலுவலகம் என்று இவ்வலுவலக முத்திரை இருக்கும். ஆனால் தாங்கள் தாக்கல் செய்துள்ளவற்றில் வட்டாட்சியர் அலுவலர் என்று உள்ளது. எனவே மேற்படி சான்றுகள் இவ்வலுவலகத்தில் வழங்கப் படவில்லை என்றும், மெய்த்தன்மையற்றது என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.   இத்துடன் இவ்வலுவலகத்தில் பயன்படுத்தப் படும் வட்டாட்சியர் ரப்பர் ஸ்டாம்ப் முத்திரையையும், கோபுர முத்திரையையும் வெள்ளைத்தாளில் இட்டு இணைத்து அனுப்பியுள்ளேன் என்று கூறியுள்ளார்.”

 

இந்த விபரங்களையெல்லாம் குறிப்பிட்டு, வசந்தி ஸ்டான்லி மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பதற்கான ஆவணங்களை இணைத்து, சென்னை மாநகர ஆணையாளர் கண்ணாயிரத்துக்கு, வழக்கறிஞர் புகழேந்தி கடந்த அக்டோபர் 2010ல் ஒரு புகாரை கொடுக்கிறார்.

 

இந்தப் புகாரின் மீது, நடவடிக்கை எடுக்க இதற்கு பொறுப்பாக இருந்த கூடுதல் ஆணையாளர் சஞ்சய் அரோரா முயன்ற போது, அவரை கண்ணாயிரம் தடுத்தார் என்று தகவல்கள் கூறுகின்றன. வசந்தி சமர்ப்பித்த போலி ஆவணங்கள், இன்று வரை நீதிமன்றத்தில் இருக்கின்றன. என்ன செய்தார் கண்ணாயிரம் ?

 Rajendran-T-IPS-2

விளக்கமாற்றுக்கு பட்டுக் குஞ்சம் ?

மோசமான, திமுகவின் கைக்கூலிகளாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளை கண்டு பிடித்த ஜெயலலிதா, எப்படி கண்ணாயிரம் விஷயத்தில் ஏமாந்தார் என்று தெரியவில்லை.   தவறு செய்வது சகஜம். அதை திருத்திக் கொள்வதே, நல்ல ஆட்சியாளர்களுக்கு அழகு.   ஜெயலலிதா செய்வார் என்று நம்புவோம்.

 

முடிப்பதற்கு முன்பு ஒரு கொசுறு செய்தி. பணம் கொடுத்து செய்தி போடுவது (Paid news) என்று கேள்விப் பட்டிருப்பீர்கள். இதற்கு அருமையான உதாரணம், இன்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரசில் வந்துள்ள செய்தி.   கண்ணாயிரம் பாரபட்சம் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுப்பாராம். பாரபட்சம் இல்லாமல் சரக்கடிப்பார்.   அப்புறம் க்ளீம் இமேஜாம்.   அவருக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளைக் கேட்டுப் பாருங்கள். காறித் துப்புவார்கள்.

 IMG

இந்தச் செய்தியை எழுதியுள்ளவர் குஹாம்பிகா என்ற பத்திரிக்கையாளர்.   இவரை கண்ணாயிரத்தின் தொண்டர் அடிப்பொடி என்றால் அது மிகையாகாது.   கடந்த முறை “கமிஷனர் கண்ணாயிரம்” என்ற கட்டுரையை எழுதிய பிறகு, குஹாம்பிகாவை சந்திக்க நேர்ந்தது. “என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் உங்கள் மனதில். இஷ்டத்துக்கு எழுதுவீர்களா ?   நல்ல அதிகாரிகளைப் பற்றி இப்படித்தான் எழுதுவீர்களா ? யார் கொடுத்தது உங்களுக்கு இந்த தகவல்களை ?” வேண்டுமென்றால் கண்ணாயிரத்தை மறுப்பு கொடுக்கச் சொல்லுங்கள் சவுக்கில் பதிப்பிக்க தயாராக இருக்கிறோம் என்றே பதில் அளிக்கப் பட்டது. அந்தக் கட்டுரையில், கண்ணாயிரத்துக்கு இரண்டு மனைவிகள் என்று நேரடியாக குற்றம் சாட்டப் பட்டிருந்தது. இந்தக் குற்றச் சாட்டு பொய்யாக இருந்திருந்தால், கண்ணாயிரம் சவுக்கை சும்மாவா விட்டு வைத்திருப்பார் ?   இதற்கு குஹாம்பிகாதான் பதில் சொல்ல வேண்டும். இந்தச் செய்தியை அனுமதித்த பாபு ஜெயக்குமார் அவர்களும் இதற்கு பதில் சொல்லட்டும். அதிகாரிகளுக்கு ஜால்ரா போடுவது தவறல்ல ? சகாயம் போன்ற நல்ல அதிகாரிகளுக்கு போடுங்கள் பாபு ஜெயக்குமார்.   கண்ணாயிரம் போன்ற கயவர்களுக்குப் போடாதீர்கள்.

 

Comments  

 
+1 #53 jebarson 2011-05-22 00:02
Use compressed images in your pages, this page takes hell lot of time to load just because the images are big.
Quote
 
 
-1 #52 குல்லை பூலாசி 2011-05-20 19:26
Quoting நெல்லை பாலாஜி:
சவுக்கு,
என்னுடைய இந்த கருத்துகள் உங்களை கேலி செய்யவோ அல்லது நக்கல் செய்யவோ இல்லை. இவ்வளவு விஷயம் தெரிந்த நீங்களே இன எதிரி ஜெயாவுக்கு support செய்தே எரிச்சலில். இன துரோகியை எதிர்க்க என எதிரியை support செய்த உங்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
தினமலர் பத்திரிக்கையை பாருங்கள், அந்த தே************* * அடிக்கும் ஜால்ராவை பாருங்கள். பொறுத்து இருந்து பாருங்கள் இந்த கூட்டத்தின் ஆட்டத்தை..
இவனுக எப்போவோமே இப்படித்தான் பாஸ். நாம்தான் வெட்டியாய் எதோ பண்ணுறோம்.

ஆனாலும் வாழ்த்துகள். ஏனென்றால் நீங்கள் இனிமேதான் நிறைய எழுத வேண்டி இருக்கும்


குல்லை பாலாஜி[நெல்லை பாலாஜி], ஏன் உனக்கு காது இவ்வளவு வேர்க்குது.....உனக்கு இஷ்டம் இல்லைனா வடிவேலோட போய் நல்லா ஜால்ரா அடி அதுக்குதான் நீ லாயக்கு.....
Quote
 
 
0 #51 sarooo 2011-05-20 18:40
pinringa boss...thodarungal :-)
Quote
 
 
-2 #50 jaya 2011-05-20 13:57
Quoting savukku friend:
KANNAYIRAM SHOULD BE TRANSFERED TO KANYAKUMARI REFUGEE CAMP

ada poppa. kanyakumari super ana oooru?
Quote
 
 
0 #49 jaya 2011-05-20 13:56
Quoting நெல்லை பாலாஜி:
சவுக்கு,
என்னுடைய இந்த கருத்துகள் உங்களை கேலி செய்யவோ அல்லது நக்கல் செய்யவோ இல்லை. இவ்வளவு விஷயம் தெரிந்த நீங்களே இன எதிரி ஜெயாவுக்கு support செய்தே எரிச்சலில். இன துரோகியை எதிர்க்க என எதிரியை support செய்த உங்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
தினமலர் பத்திரிக்கையை பாருங்கள், அந்த தே************* * அடிக்கும் ஜால்ராவை பாருங்கள். பொறுத்து இருந்து பாருங்கள் இந்த கூட்டத்தின் ஆட்டத்தை..
இவனுக எப்போவோமே இப்படித்தான் பாஸ். நாம்தான் வெட்டியாய் எதோ பண்ணுறோம்.

ஆனாலும் வாழ்த்துகள். ஏனென்றால் நீங்கள் இனிமேதான் நிறைய எழுத வேண்டி இருக்கும்

appadi thuppittu kilambu... yaaru the..... dinamlaraa? karunaavaa?
Quote
 
 
-1 #48 TMS 2011-05-20 13:15
2016 கண்ணாயிரம் (ராஜெந்திரன்) மண்டபம் அகதிகள் முகாம் , இப்போ முடியு தெரிந்த்து விட்டது
Quote
 
 
+1 #47 Unnai pol oruvan 2011-05-20 12:42
Intha savvuku oru nadu nillaiyana thalma entru santhegam ullathu. En entral ithan ella katturaikalum DMKvuku ethiragavum ADMKvuku supportagavum ullathu.
Quote
 
 
-2 #46 Abcd 2011-05-20 09:06
Engappa ponna Asraf....Unna May 13 romba thedinan...Unna kanom.....Welcome back....



Quoting Ashraff:
Raja No 2 in 'Time' List of Ignominious Leaders Club
http://news.outlookindia.com/item.aspx?722468
Quote
 
 
-2 #45 M Ramasamy 2011-05-20 08:53
WE GOT AN ANSWER FOR OUR WAIT AND WATCH.
Quote
 
 
+3 #44 anniyan 2011-05-20 07:25
நெல்லை பாலாஜி,
பல போலீசாருக்கு தனிமனிதனாய் வடிவேலு பீதி உண்டாக்கி இருக்கிறாரா? சவுக்கு ஒன்றும் வடிவேலு இல்லை.. இவர் தமிழ்நாட்டின் பிராபாகரன்..

நீங்கள் ஜெயில் இல்லை, லாக்கப்பிலாவது ஒரு நாள் இருந்ததுண்டா? சிக்னல்ல ட்ராபிக் கான்ச்டபிள் புடிச்சாலே ஒண்ணுக்குடற நீங்க, உளவுத்துறையில் இருந்து ஜெயிலுக்கே போய் வந்திருக்கிறார் .. இவரைப் பத்தி பேசறீங்களா? இவர் ஜால்ரா அடிக்க நினைத்திருந்தால ் அன்றே அடித்து ஜெயில் லத்தி அடியில் இருந்து தப்பித்திருக்க முடியாதா?

இவர் நமக்குக் கிடைத்த நேதாஜி.
இவர் உடலில் பட்ட அடிகள் ஒவ்வொன்றும் திமுகவின் கோட்டையில் விரிசல் விடச் செய்தன.
இவர் இங்கே போடுவது ஜால்ரா அல்ல.. அக்கினிக் குஞ்சு.. இது அரசியல் காட்டை வெந்து தணிக்கும்..
இந்த பட்டாம்பூச்சியி ன் படபடப்பு ஒரு டோர்னாடோவை உருவாக்கும்..
சவுக்கின் ஒரு விளாசல் அரசியல் கருமேகங்களில் இடிச்சத்தமாய் ஒலிக்கும்.
இவரின் படிப்புதான் அரசியல்..
எழுத்து வரலாறு... ஆனால் ஆம் இவர் எழுதியது இப்போது வரலாறு..

காது கொடுத்துக்கேளுங ்கள்.. இது ஜால்ரா தாளம் அல்ல..
கௌரவப் படைக்கு எதிராக ஓங்கிய பாஞ்சஜன்யத்தின் முழக்கம்

Quoting நெல்லை பாலாஜி:
என்ன சவுக்கு.. உங்களுக்கு வச்சிட்டாங்கையா ஆப்பு... இதுக்குத்தான் கொஞ்சம் ஜால்ரா கம்மிய அடிக்கணும். ஓவரா அடிச்சா உடம்புக்கு ஆகாது.

வடிவேல் லிஸ்ட்ல சவுக்கா???? என்ன கொடும சரவணா இது?
Quote
 
 
0 #43 anniyan 2011-05-20 06:32
(IMHO, this can be placed as separate kindal article than a comment)
http://www.tamilhindu.com/2011/05/kaagitha-odam-cartoon/

பாடல் : மு.கருணாநிதி

படம் : மறக்க முடியுமா ?
குரல் : சுசீலா
இசை : ராமமூர்த்தி

காகித ஓடம் கடல் அலை மீது
போவது போலே மூவரும் போவோம் (மூவரும்=karunanidhi, azhagiri, staalin )
ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம் ( DMK lost support of congress)
அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்

கோலமும் போட்டு கொடிகளும் ஏற்றி
தேரையும் ஓட்டி தீயையும் வைத்தான் ( azhagiri )
காலமும் பார்த்து நேரமும் பார்த்து
வாழ்வையும் ஈந்து வதைக்கவும் செய்தான்

காகித ஓடம் கடல் அலை மீது
போவது போலே மூவரும் போவோம்
ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம்
அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்

அழுவதைக் கேட்க ஆட்களும் இல்லை ( MLAs)
ஆறுதல் வழங்க யாருமே இல்லை ( Jaffer Sait )
ஏழைகள் வாழ இடமே இல்லை ( DMK purchased all land in Tamilnadu)
ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை

காகித ஓடம் கடல் அலை மீது
போவது போலே மூவரும் போவோம்
ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம்
அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்

தாயின் மடியும் நிலைத்திடவில்லை
தந்தையின் நிழலும் காத்திடவில்லை ( Kanimozhi worries)
ஆறிலும் சாவு நூறிலும் சாவு ( For Tha. Krishnan, Batcha, Dinakaran workers,Leelava thi)
அம்மா எங்களை அழைத்திடு தாயே (Soniya )

காகித ஓடம் கடல் அலை மீது
போவது போலே மூவரும் போவோம்
ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம்
அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்
Quote
 
 
+1 #42 KK 2011-05-19 23:24
Quoting KK:
There must be some reason to make him to ths post. May be chief minister wants to have a close watch on him.
Also he may be useful in giving evidence against Jaffar sait
Further he knows inner dealings of Karuna family thro Jaffar and hence he may be useful in launching cases

Dont underestimate Jaya on this. After sending him to Jail ADGP to appont him means some thoughts must have gone in CMs mind

I sent this comment in the mornning. It has become true by appointment of Ramanujam
Quote
 
 
-2 #41 கும்பிடறேன் சாமி 2011-05-19 22:18
கண்ணயிரத்துக்கு தொப்பிய கழட்டியே சவுக்கு. காதாயிரத்த கந்தாயிரம் ஆக்கிட்டியேப்பா . உனக்கு வேல போச்சுன்னதுக்கா க பொலிசுக்காரன் ஒருத்தனுமே நல்லாயில்ல என்னு ஆயிடுமா ஒன்னயயும் கண்ணாடில அடிக்கடி பாத்துக்க மாத்திடப்போறாங் க.
Quote
 
 
-2 #40 Velmurugan ABUDHABI 2011-05-19 22:07
savukku,

MUKKUKATHOR MEANS KALLAR,MARAVAR AND AGAMUDAIYAR, MAMANNAR MARUTHUPANDIARK AL BELONGS TO AGAMUDAYAR.I APRECIATE YOUR WORK, YOU ALSO ONE OF THE MAIN REASON TO CHANGE THE GOVERNMENT

VELMURUGAN ABUDHABI
Quote
 
 
+2 #39 நெல்லை பாலாஜி 2011-05-19 20:42
Quoting Asraf:
சவுக்கு ஆரம்பிச்சிட்டாய ா உன் வேலையை !!!!!!! சவுக்கு திமுகாவுக்கு மனைவி துனைவி எண்ற அதிகாரம் மையம் மட்டும்தான், ஆனால் அதிமுகாவில் பல அதிகார மையங்கள் உங்களுக்கு தெரிய வரும்

சவுக்கு , இந்த தளத்தில் உள்ள சில வாசகர்களை ( அல்லது சில ஜால்ரகளை) பற்றி உங்க கருத்து என்ன. ? யாராவது ஒருவர் தி மு க வையோ ஆதரித்துஅல்லது அ தி மு க வை எதிர்த்தோ கருத்து போட்டால் உடனே மைனஸ் மார்க் போடுராங்களே ? இது நியாமா ? ஒரு நடுநிலை கருத்து வர கூடாத என்ன?
Quote
 
 
-2 #38 நெல்லை பாலாஜி 2011-05-19 20:33
Quoting அகத்தியர்.:
சவுக்கு இன்று வெளியிட்டிருக்க ும் இந்தச் செய்தியிலுள்ள பல தகவவல்கள் சவுக்கு முன்பு ஒருமுறையும் வெளியிட்டிருந்த து. இன்னுமா அந்த படு மோசமான மோசடிகள் விசாரணைக்குட்பட ுத்தப்படவில்லை?, சரி ஊழல் முதலையான கருணாநிதி அரசின் செயற்பாடுகள் எல்லாமே நாட்டுக்கு நாசம்/ நாமம். என்பதால்த்தானே அந்த அரசை நாட்டை விட்டே மக்கள் எத்தி விரட்டப்பட்டிரு க்கிறார்கள்..

புதிய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இப்படியான முறை கேடுகளுக்கும் மோசடிகளுக்கும் இடந்தரமாட்டார்க ள் என்று நம்புகிறோம். இந்தக்குற்றச்சா ட்டுக்கு முதல்வர் நடவடிக்கை எடுக்க தவறுவாராக இருந்தால். தேர்தலில் அமோக பெரும்பான்மையில ் அம்மாவை பதவிக்கு கொண்டுவந்த இந்த தேர்தலும் வியாழனுக்கு அடுத்து வரும் வெள்ளிபோல போய் திரும்ப வியாழனும் வெள்ளியும் வந்து போய்க்கொண்டே இருக்கும். திருடர்களும் பச்சோந்திகளும் அதிகார மட்டத்தில் இருப்பதற்கு அரசே காரணம். ஆரம்பத்தில் ஐந்துபேருக்கு சரியான அடி விழுந்தால் அடுத்து வருபவன் திருட நினைக்கமாட்டான் . பொறுத்திருந்து பார்ப்போம்.


ஐயா அகத்தியரே, எந்த உலகத்தில் இருகிங்கோ? நீங்க என்ன naxala ???? நடுக்குறதே பேசுங்க பாஸ்...
Quote
 
 
-3 #37 நெல்லை பாலாஜி 2011-05-19 20:31
Quoting நண்டு:
தவறு செய்வது சகஜம். அதை திருத்திக் கொள்வதே, நல்ல ஆட்சியாளர்களுக் கு அழகு. ஜெயலலிதா செய்வார் என்று நம்புவோம்.

போதும் போதும் ஜால்ரா சத்தம் ரொம்ப கேக்குது
Quote
 
 
-4 #36 நெல்லை பாலாஜி 2011-05-19 20:30
சவுக்கு,
என்னுடைய இந்த கருத்துகள் உங்களை கேலி செய்யவோ அல்லது நக்கல் செய்யவோ இல்லை. இவ்வளவு விஷயம் தெரிந்த நீங்களே இன எதிரி ஜெயாவுக்கு support செய்தே எரிச்சலில். இன துரோகியை எதிர்க்க என எதிரியை support செய்த உங்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
தினமலர் பத்திரிக்கையை பாருங்கள், அந்த தே************* * அடிக்கும் ஜால்ராவை பாருங்கள். பொறுத்து இருந்து பாருங்கள் இந்த கூட்டத்தின் ஆட்டத்தை..
இவனுக எப்போவோமே இப்படித்தான் பாஸ். நாம்தான் வெட்டியாய் எதோ பண்ணுறோம்.

ஆனாலும் வாழ்த்துகள். ஏனென்றால் நீங்கள் இனிமேதான் நிறைய எழுத வேண்டி இருக்கும்
Quote
 
 
-5 #35 நெல்லை பாலாஜி 2011-05-19 20:22
Quoting Abi:
சவுக்கு அவர்களே,

இந்த கண்ணாயிரம் பற்றி பக்கம் பக்கமாக புகழ்ந்து எழுத ஆள் இருப்பது போல நம்ம வசந்தி அக்காவை பற்றியும் வர்ணித்து புகழ்ந்து எழுத ஆட்கள் இருக்கிறார்களே... சென்ற ஞாயிறு தின தந்தி சிறப்பு மலரில் அக்காவின் முழு பக்க பேட்டி வெளியாகி இருக்கிறது... எதுக்காக அந்த ஒரு பக்க விளம்பரம் அக்காவுக்கு ? அக்காவின் புகழ் தான் நம்ம எல்லாருக்கும் தெரியுமே...

பாஸு.. இப்போ தெரியுதா இங்க comment எழுதுறது குட்டைல(அல்லது கிணத்தில் ).. (வெளியில தெரியாது..) கல்ல எரியுறது மாதிரி.. நீங்க இன்னும் வளரனும் தம்பி!!!!!!
Quote
 
 
-7 #34 நெல்லை பாலாஜி 2011-05-19 20:19
Quoting Ashraff:
is there a system whether Amma is aware of your writings?


இன்னுமா இந்த உலகம் உங்களை நம்புது?? ieyo ieyo
JJ சவுக்குகு JJ
Quote
 
 
-5 #33 நெல்லை பாலாஜி 2011-05-19 20:15
என்ன சவுக்கு.. உங்களுக்கு வச்சிட்டாங்கையா ஆப்பு... இதுக்குத்தான் கொஞ்சம் ஜால்ரா கம்மிய அடிக்கணும். ஓவரா அடிச்சா உடம்புக்கு ஆகாது.

வடிவேல் லிஸ்ட்ல சவுக்கா???? என்ன கொடும சரவணா இது?
Quote
 
 
+3 #32 சன்னா 2011-05-19 20:03
ஜெயலலிதா எப்படி ராஜேந்திரன் விஷயத்தில் ஏமாந்தார் என்பது புதிராக உள்ளது. இந்த கட்டுரையை ஜெயலலிதாவுக்கு பெட்டிசனாக அனுப்ப என்ன செய்ய வேண்டும். யாராவது உதவுங்களேன். திரு. ராஜேந்திரன் அவர்களை வேறு பொறுப்புக்கு மாற்றவேண்டும். இல்லையென்றால் கருணாநிதியின் உளவுத்துறையாக மாறிவிடுவார். வெளியே பயிரை மேய்ந்த கதையாக அதிமுக அரசின் செயல்பாடுகளுக்க ு துன்பம் விளைவித்து விடுவார். அம்மா காதில் இந்த விஷயத்தை தெரிவிக்காதவரைய ில் சும்மா விடமாட்டேன்.
Quote
 
 
0 #31 Vaedhampudhidhu 2011-05-19 19:58
Situation: chinnathambi
Koundamani / Kannayiram: adhu illenganna naan rendu pakkamum motor cycle varudhu nadula poondhu poidalamnu ninaichaen.
Govt: Idhu lorry da saavugraki, nadula pugundha sudugaatuku thaan poirupa..
Quote
 
 
+1 #30 pottadi 2011-05-19 19:54
முதல்வர் அவர்களுக்கு,
முக்கிய பதவியில் பகிரங்கமான குற்றசாட்டுக்கள ுக்கு ஆளான ஒருவரை
நியமித்து இருப்பதை மறு பரிசீலனை செய்யுங்கள். அதுவே எல்லோருக்கும் நல்லது
என்பதை விட நியாமான ஒன்று என்பதை உங்களுக்கு நாங்கள் சொல்லித் தெரிய
வேண்டியதில்லை.உங்களுக்கு வந்த ஓட்டுக்கள் கருணாநிதிக்கு எதிரான
ஒட்டுக்கள் அல்ல அதிமுக மீது கொண்ட நம்பிக்கை கொண்ட ஓட்டுக்கள்
என்றே நீங்கள் எடுத்துக் கொண்டாலும் , கருணாநிதிக்கு எதிரான (திமுக விற்கு
எதிராக அல்ல) ஓட்டுக்களே வெற்றியைத் தீர்மானித்தவை என்று கொள்வதே
புத்திசாலித்தனம ானது .கட்சி சார்பற்ற என் போன்றோர் இந்த முறை
உங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறோ ம்.
சொல்வன எல்லாம் சரியே எல்லாம் இறையே , சுதாரித்துக் கொள்ளுங்கள்.
Quote
 
 
+1 #29 Raj 26 2011-05-19 19:48
குமுதம் தனது ஜால்ரா வேலையை ஆரம்பித்து விட்டது. இந்த வார புத்தகத்தில் ஜெயலலிதா வை புகழ்ந்து 20 க்கும் மேற் பட்ட பக்கங்கள் வெளியிடப்பட்டது .
Quote
 
 
+8 #28 anbu 2011-05-19 19:18
2008ல் தேவை ஜெயந்தி விழாவிற்கு அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா, பசும்பொன் கிராமம் சென்றார், அவர் செல்வதற்கு 30 நிமிடம் முன்பு ஸ்டாலின் அடியாட்கள் சகிதம் போய் வந்தார். ஜெயலலிதா காரை விட்டு இறங்கியது, கல்லால் ஒரு கும்பல் தாக்கியது, அந்த இடத்தில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டி.ராஜேந்திரன் இருந்தும், கல்லால் தாக்கி கும்பலை தடுக்கவில்லை.
ஜெயலலிதா, அப்போது வெளியிட்ட அறிக்கையில் கூடுதல் டிஜிபி டி.ராஜேந்திரன் முன்னிலையில் கல்லால் தாக்குதல் நடந்தது என்று கண்டனம் தெரிவித்தார்.
அந்த டி.ராஜேந்திரனை உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக நியமனம் செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது..
வி.அன்பு
Quote
 
 
+1 #27 Ashraff 2011-05-19 18:47
Raja No 2 in 'Time' List of Ignominious Leaders Club
http://news.outlookindia.com/item.aspx?722468
Quote
 
 
+10 #26 தஞ்சை குணா 2011-05-19 17:59
முதலமைச்சர் இவரிடம் ரொம்ப எச்சரிக்கையை இருக்கணும். நேரடியாய் உள்ளே நுழையமுடியாத கூட்டம் நல்லவர்கள் மீது உளவுத்துறை மூலம் கெட்டபெயரை உருவாக்கி தனது ஆட்களை உள்ளே நுழைக்கும் திட்டம் போடலாம்.Be careful .
Quote
 
 
+1 #25 Madhavan 2011-05-19 16:04
Amma should be taken action to Mr. kannayiram. if savukku mentioned above it is true story please reconform.
Quote
 
 
0 #24 shewag 2011-05-19 15:31
een jaya vallambarnu enna romba kevalama solluringa, athukkum intha newskum sambathame illaye. nnanum pallathurthan jaya, mind ur words.
Quote
 
 
+2 #23 M Ramasamy 2011-05-19 15:05
THANK YOU. LET US WAIT AND WATCH ON THIS
Quote
 
 
0 #22 jaya 2011-05-19 14:45
You have remove the nithyananda photo? I have seen the photo today morning. afternoon it is not there?
Quote
 
 
-6 #21 Asraf 2011-05-19 12:58
சவுக்கு ஆரம்பிச்சிட்டாய ா உன் வேலையை !!!!!!! சவுக்கு திமுகாவுக்கு மனைவி துனைவி எண்ற அதிகாரம் மையம் மட்டும்தான், ஆனால் அதிமுகாவில் பல அதிகார மையங்கள் உங்களுக்கு தெரிய வரும்
Quote
 
 
+6 #20 idlyvada 2011-05-19 12:55
சங்கர். ஒன்று தெரியுமா ?? முன்னாள் சீப் செக்ரட்டரி ஸ்ரீபதியும் இப்போது சீப் செக்ரட்டரி சாரங்கியும் சட்டகர்கள் .. அக்காள் தங்கையை திருமணம் செய்தவர்கள் ..ஆனாலும் போஸ்டிங் பெறவில்லையா ..ஏதோ ஒரு ஐடியா அம்மா மனசுல இருக்கும்.. அம்மான்னா சும்மாவா
Quote
 
 
+5 #19 இராம இளங்கோ 2011-05-19 12:34
அமைச்சர்கள் நியமனத்தின்போது ம் முக்கிய அதிகாரிகளின் நியமனத்தின்போது ம் ஓதிக்கிவைக்கப்ப ட்டிருந்த நிழல் முதல்வர் தன்னோட வேலையே தொடங்கிட்டாங்கள ோ????
Quote
 
 
0 #18 RayJaguar 2011-05-19 11:47
amma will take care of this criminal cop :-)
Quote
 
 
+2 #17 RayJaguar 2011-05-19 11:47
samma matter pa :lol:
Quote
 
 
+9 #16 Abi 2011-05-19 11:42
சவுக்கு அவர்களே,

இந்த கண்ணாயிரம் பற்றி பக்கம் பக்கமாக புகழ்ந்து எழுத ஆள் இருப்பது போல நம்ம வசந்தி அக்காவை பற்றியும் வர்ணித்து புகழ்ந்து எழுத ஆட்கள் இருக்கிறார்களே... சென்ற ஞாயிறு தின தந்தி சிறப்பு மலரில் அக்காவின் முழு பக்க பேட்டி வெளியாகி இருக்கிறது... எதுக்காக அந்த ஒரு பக்க விளம்பரம் அக்காவுக்கு ? அக்காவின் புகழ் தான் நம்ம எல்லாருக்கும் தெரியுமே...
Quote
 
 
+2 #15 Ashraff 2011-05-19 11:40
is there a system whether Amma is aware of your writings?
Quote
 
 
+4 #14 விகடகவி 2011-05-19 11:29
இந்தியாவில் விபச்சாரம் என்பது சட்டவிரோத செயல். அப்படி இருக்கும் போது, அதில் ஈடுபட்டவர்களைப் பற்றி செய்தி போடுவதில் என்ன தவறு?
Quote
 
 
0 #13 KK 2011-05-19 10:52
There must be some reason to make him to ths post. May be chief minister wants to have a close watch on him.
Also he may be useful in giving evidence against Jaffar sait
Further he knows inner dealings of Karuna family thro Jaffar and hence he may be useful in launching cases

Dont underestimate Jaya on this. After sending him to Jail ADGP to appont him means some thoughts must have gone in CMs mind
Quote
 
 
+2 #12 குசும்பன். 2011-05-19 10:48
இவிர இன்னுமா அம்மா நம்மிக்கிட்டிரு க்காங்க.
பொய்யுங்க..
மாமாவ கையுங்களவுமா புடிச்சு தண்ணியில்லா காடுமில்ல தண்ணியுள்ள காட்டுக்குமில்ல ீங்க வீட்டுக்கு ஓட்டி வெரட்ட அம்மா போட்ட கவுண்டவுணுதாங்க கம்மாயிரத்த
உளவுத்துறையில பூட்டி உழ விட்டிருக்காங்க . மாமா சீக்கிரம் ஊட்டுக்கு கோயிங்.
Quote
 
 
+8 #11 உங்களில் ஒருவன் 2011-05-19 10:45
சவுக்கின் விசிறி எழுதுவது,
அருமையான பதிப்பு, தாங்கள் இதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயலலாமல்லவா? மேலும், நேற்று transfer செய்யப்பட்டிருக ்கும் பிற அதிகாரிகளைப்பற் றி தாங்கள் அறிந்த தகவல்களை ஒரு பதிவாக போட்டால் நன்றாக இருக்கும்.

நன்றி,
உங்களில் ஒருவன்
Quote
 
 
+4 #10 sam 2011-05-19 10:43
என்ன ஒரு புலன் விசாரணை !! சபாஷ் சவுக்கு !!
Quote
 
 
+6 #9 அகத்தியர். 2011-05-19 10:39
சவுக்கு இன்று வெளியிட்டிருக்க ும் இந்தச் செய்தியிலுள்ள பல தகவவல்கள் சவுக்கு முன்பு ஒருமுறையும் வெளியிட்டிருந்த து. இன்னுமா அந்த படு மோசமான மோசடிகள் விசாரணைக்குட்பட ுத்தப்படவில்லை?, சரி ஊழல் முதலையான கருணாநிதி அரசின் செயற்பாடுகள் எல்லாமே நாட்டுக்கு நாசம்/ நாமம். என்பதால்த்தானே அந்த அரசை நாட்டை விட்டே மக்கள் எத்தி விரட்டப்பட்டிரு க்கிறார்கள்..

புதிய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இப்படியான முறை கேடுகளுக்கும் மோசடிகளுக்கும் இடந்தரமாட்டார்க ள் என்று நம்புகிறோம். இந்தக்குற்றச்சா ட்டுக்கு முதல்வர் நடவடிக்கை எடுக்க தவறுவாராக இருந்தால். தேர்தலில் அமோக பெரும்பான்மையில ் அம்மாவை பதவிக்கு கொண்டுவந்த இந்த தேர்தலும் வியாழனுக்கு அடுத்து வரும் வெள்ளிபோல போய் திரும்ப வியாழனும் வெள்ளியும் வந்து போய்க்கொண்டே இருக்கும். திருடர்களும் பச்சோந்திகளும் அதிகார மட்டத்தில் இருப்பதற்கு அரசே காரணம். ஆரம்பத்தில் ஐந்துபேருக்கு சரியான அடி விழுந்தால் அடுத்து வருபவன் திருட நினைக்கமாட்டான் . பொறுத்திருந்து பார்ப்போம்.
Quote
 
 
-1 #8 pandiyan 2011-05-19 10:37
may this is too early to comment. savukky should understand how govt or any investigation agency should work. they will also some extend to get all the news , evidence then through out finally. may be he required for bring all the old news, corruptions matters, rowdyis list in previous government. if any appointment happen he or she may concentrate in the future problems not the earlier one. so i would think that he may required to target previous government people and bring those into public.
Quote
 
 
+16 #7 நல்லது 2011-05-19 10:30
கண்ணாயிரம் உளவுத்துறையில் நியமனம் செய்யப்பட்டதற்க ு சவுக்குதான் காரணம்.!!!!
சும்மா தண்ணியடித்துவிட ்டு, பகலெல்லாம் ராத்தூக்கம் போட்டவரை,”கண்ணா யிரம் கண்ணாயிரம் கண்ணாயிரம்” என்று மூச்சுக்கு ஆயிரம் தடவை சொன்னதினால், ஜெயலலிதா உண்மையில் கண்கள் ஆயிரம் இருப்பதாக எண்ணிவிட்டார்.
அதனால் ஆயிரம் கண்களினால் நன்றாக பார்த்து உளவு சொல்வார் என்று ஒரு நம்பிக்கை!!!!
ஆனால் உண்மையில் இது ஜெயலலிதாவின் “style". கருணாநிதியிடம் நெருக்கமாக இருந்தவர்களை வைத்து கருணாநிதியை பழிவாங்குவது. புது எஜாமாணியிடம் விசுவாசமாக இருக்க இந்த நாய் என்ன வேண்டுமானுலும் செய்யும். :lol: :lol:
Quote
 
 
0 #6 m.perumal 2011-05-19 10:24
BREAKING NEWS: 2-g RAJA IS AWARDED TIME HALL OF SHAME. KK MAY NOW SEND A CONGRATULATORY LETTER THROUGH MUDASOLI REQUSTING RAJA TO GET THE AWARD FOR HIM AND KALLIMOLI. KK HAS ALSO ORDERED HIS SLAVES--VALI,VAIRAMUTHU ,KUNJAMANI.SUPA,KURUMA,N.RAM,CASPER-- TO HAVE A FUNCTION LIKE PASATHALAIVANAK KU IRANGAL VILA TO CELEBRATE THE UNIQUE DISTINCTION OF BRINGING SHAME TO TAMILS.
Quote
 
 
+10 #5 jaya 2011-05-19 10:17
இந்த கட்டுரையின் மூலம் தெரிவது என்னவென்றால் சவுக்கு ரொம்ப பாடுபட்டு செய்திகளை சேகரித்து உள்ளது.வல்லம்பர் ஜாதி முக்குலோதோர் இல்லை.முக்குலத்தோர் ஜாதி வேறு. வல்லம்பர் ஜாதி வேறு. வல்லம்பர் மிக பிற்படுத்தப்பட் ட சாதியாகும் . நான் இவர் ஊரான பள்ளத்தூர் ஆவேன்.எனவே இவர் முக்குலத்தோர் இல்லை. வல்லம்பர் தான். மிகவும் பிற்படுத்தப்பட் ட ஜாதி தான். மேலும் மற்ற விஷயங்கள் சவுக்கு குரிபிட்டதேல்லா ம் உண்மையாகும் அவ்வப்போது பத்திரிக்கை படிப்பவர்களுக்க ு இவை அனைத்தும் உண்மை என்பது புலப்படும். இவர் உளவுத்துறைக்கு லாயக்கு இல்லை என்பது அம்மா போக போக புரிந்து கொள்ளுவார்கள். யாரோ அம்மாவிடம் தவறாக சொல்லி இந்த பதவி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் விளைவு இன்னும் கொஞ்ச நாளில் தெரியும். இவர் திமுகவிடம் விஷயங்களை சொல்லி விசுவாசமாக இருப்பார். அதனால் இவரும் மண்டபத்தில் தான் தூக்கி அடிக்கபடவேண்டும ் ஒரு ஏட்டு பதவியில்.
Quote
 
 
-1 #4 savukku friend 2011-05-19 10:17
KANNAYIRAM SHOULD BE TRANSFERED TO KANYAKUMARI REFUGEE CAMP
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 131 விருந்தினர்கள் மற்றும் 1 உறுப்பினர்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

தமிழ்லீடர்

tamilleader

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4767
mod_vvisit_counterYesterday9838
mod_vvisit_counterThis week57504
mod_vvisit_counterLast week67096
mod_vvisit_counterThis month176312
mod_vvisit_counterLast month297247
mod_vvisit_counterAll days8392040