முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
மே 18 அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 5
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
புதன்கிழமை, 18 மே 2011 23:57

இன்று ஈழத்தமிழினத்தின் "கரிநாள்"
காலத்தால் மறக்க முடியாத
கறுப்புத்தினம்!! 
முள்ளிவாய்க்கால் மூர்க்கமான
குண்டு மழைக்குள்
வஞ்சகமாக முக்குளித்த 
இரண்டாவது குருதி வருடம்!!!.

சொல்லில் வடிக்க முடியாத 
சிறுமை கொண்டு
இந்தியாவும் இலங்கையும்
ஈழத்தமிழினத்துக்கு 
ஈமைக்கிரியை செய்ய முனைந்த
வெட்கக் கேட்டின் 
இரண்டாம் ஆண்டு நினைவு நாள்.

ஈழத்தமிழினத்தின் எதிரில் தோன்றிய
இன்னல் மிகுந்த பெருத்த 
கரிய சுவடு.
செறிவான குண்டு மழையால்
நீலவானமும் நிலமும் 
நிறம் மாறிய நிமிடங்கள்.

ஈயும் மண்புழுவும் எறும்பும்
இயற்கை தாவரங்களும்
எரிந்துபோன பொட்டல் வெளியில்.
இரசாயன கலவையால்
மானுடம் வதை கொள்ளப்பட்ட 
வரலாறு தினம்.

நேற்றுப்போல நினைவில் ,
நெஞ்சு வெந்து
நினைவில் இருந்து விடுபட மறுக்கும்
நிரந்தரமான வலி.

மானுடம் மரணப்படுக்கையில்
வீழ்த்தப்பட்டு
ஈழத்து வீரத்தை உலகம்
ஏலம் கூவிய பொழுதுகள்.

முள்ளிவாய்க்கால்
செயற்கை எரிமலையாய் மாற்றப்பட்டு .
கால கொடு கயமையினால் 
கலி கொண்டு 
மானுடம் காவு கொள்ளப்பட்ட "கரிநாள்". 

சூழ்ச்சியில் சூனியத்தால்
சுற்றி கட்டப்பட்டு
சுவாசிக்க 
காற்றும் நுழைய முடியாத 
கனத்த பொழுதுகள்.

இன்றும்
நெஞ்சு கனலாக தகிக்கிறது.
பாலுக்கு அழுத பிஞ்சுகளும்.
பதை பதைத்த தாய்மாரும்.
வேல் கொண்டு ஆடிய பெண்புலியும்.
விடுதலை வேட்கை கொண்ட வீரனும்.
வஞ்சகத்தின் வலையில் 
காவுகொள்ளப்பட்ட "கரிநாள்"

எரிந்த சுவாலை ஓய்ந்து போனாலும். 
தனலும் 
தகதகக்கும் 
வெப்பமும்
காலத்தால் அழியாத கயமையும்.
நினைவில் ஆழமாக.
நித்திய வேதனையாக.

இருந்தும்
இன்று நாங்கள் 
எரிந்த சாம்பலிலிருந்து
எழுந்து வந்துகொண்டிருக்கிறோம்.
சாவிலும் வாழ்வோம்.
சரித்திரம் மட்டும்தான் 
எங்களை தீண்ட முடியும்.

தீனிக்கும் 
திரை மூடிய புணர்ச்சிக்கும்
வீணான வெளிச்ச விளம்பரத்துக்கும்
நாங்கள் காலத்திலும்
அடிபணியப்போவதில்லை.

நாம்
வீழுவோம் என்றா நினைத்திருந்தாய்
வினை தந்த விழலை விட்டு
மாழுவோம் என்று நினைத்தாயா.

எம்
மண் தமிழீழம் காணும்வரை
சோருவோம் என்று நினைத்தாயா.

ஈழத்தின் கொடி வான் உயர்ந்து
தேசம் விடியும் வரை
நெருப்பாகி  மாழுவேன் என்று
வேண்டுமானால் 
நீரில் எழுதிக்கொள்.

மூலம்அறியாமல்.. 
என் தலைவனின்  விவேகம் அறியாமல்.
விடுதலைப்புலிகளின் வேகம் அறியாமல்.
காலப்பதிவில்
காலியாகி விட்டாயே....

நான்கு சுவர்களுக்குள் போடும் 
சுலோகமென்றா நினைத்தாய்..
ஈழம் 
பாழாகும் என்று நினைத்தாயோ.
கனவென்று 
மாற்றிக்கொள்.
தேசம் விடியும்வரை.
திண்ணமது.
மண் மேட்டிலிருந்தும் 
சாம்பலிலிருந்தும்
மறுபடியும் எழுவோம்..

வானிடை விரைந்து வந்து வழிநீளம் 
ஷெல்லும் வீழ.
மானிடக்குடிகள்மீது மழையென 
குண்டும் பாய-மேனிகள் 
சிதறி ரத்த வெள்ளமாய் சகதியாயினும்
நாம் என்றும் புலியாய் நின்று-கொடியை
நாட்டுவோம் ஈழ மண்ணில்.

ஊர்க்குருவி

 

Comments  

 
+1 #6 அகத்தியர். 2011-05-19 22:45
Quoting கும்பிடறேன் சாமி:
பொருள் குற்றம் மிகுந்த ஒரு கவிதையை போட்டுள்ளீர்கள் . "ஈழத்தின் கொடி வான் உயர்ந்து தேசம் விடியும் வரை நெருப்பாகி மாழுவேன் என்று வேண்டுமானால் நீரில் எழுதிக்கொள்." கல்லின் மேல் எழுதும் எழுத்து அழியாது நிற்கும். நீரின் மேல் எழுதிய எழுத்து...?
மேலும் ஒன்று..."மூலம்அறியாமல்..
என் தலைவனின் விவேகம் அறியாமல். விடுதலைப்புலிகள ின் வேகம் அறியாமல். காலப்பதிவில் காலியாகி விட்டாயே.... " யாரை குறிப்பிடிகிறார ் இந்த ஆசு கவி. யாரவது புரிந்தால் சொல்லுங்கள். ஈழம் என்ற உடன் உணர்ச்சி கொப்புளிக்கனும் ன்னு ஒரு வியாதி. பொருளற்ற வார்த்தைகள். இப்பிடியே ஊருக்கு ஒன்பது காசி ஆனந்தங்கள்!!!! கண்ணை கட்டுது.

அங்கம் பொடிபட அரிவாய் நெய்பூசி சங்காரம் செய்யவந்த நக்கீரா உம்மை பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
Quote
 
 
+2 #5 கும்பிடறேன் சாமி 2011-05-19 15:20
பொருள் குற்றம் மிகுந்த ஒரு கவிதையை போட்டுள்ளீர்கள் . "ஈழத்தின் கொடி வான் உயர்ந்து தேசம் விடியும் வரை நெருப்பாகி மாழுவேன் என்று வேண்டுமானால் நீரில் எழுதிக்கொள்." கல்லின் மேல் எழுதும் எழுத்து அழியாது நிற்கும். நீரின் மேல் எழுதிய எழுத்து...?
மேலும் ஒன்று..."மூலம்அறியாமல்..
என் தலைவனின் விவேகம் அறியாமல். விடுதலைப்புலிகள ின் வேகம் அறியாமல். காலப்பதிவில் காலியாகி விட்டாயே.... " யாரை குறிப்பிடிகிறார ் இந்த ஆசு கவி. யாரவது புரிந்தால் சொல்லுங்கள். ஈழம் என்ற உடன் உணர்ச்சி கொப்புளிக்கனும் ன்னு ஒரு வியாதி. பொருளற்ற வார்த்தைகள். இப்பிடியே ஊருக்கு ஒன்பது காசி ஆனந்தங்கள்!!!! கண்ணை கட்டுது.
Quote
 
 
+1 #4 நாம் தமிழர் 2011-05-19 15:16
ராசபக்சே ஒரு போர் குற்றவாளி என்று தமிழக சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதற்கு வழியுண்டா?
Quote
 
 
+1 #3 The Fuhrer 2011-05-19 14:25
மண் மேட்டிலிருந்தும ் சாம்பலிலிருந்து ம்
மறுபடியும் எழுவோம்..

Very True lines....This will happen...
Quote
 
 
+1 #2 RAMNIVAAS 2011-05-19 11:55
Revolutions never go backwards.

போற்று தமிழ் இனமானம்!தமிழனாய ் நீ
பொங்கல் செய்!விழித்தெழு வாய்!வீறுகொண்ட
காற்று எழுந்தால் புயலாகும்!பொங்க ி வாடா!
களம் காண்போம்!தமிழீழ ம் காப்போம்!

தமிழ் மறவர் கூட்டம் கடல்

கடந்து சென்று ஈழத்தில்

கொடி நாட்டும் நாள்

வெகு தூரமில்லை!
Quote
 
 
+1 #1 bhakat 2011-05-19 07:41
நாம் வீரத்துடன் இருந்தால் மட்டும் போடாது. விவேகமுடனும் செயல்படவேண்டும் . 5
ஆண்டுக்கு ஒரு முறை தேர்தலில் வாக்கு அளித்துவிட்டால் போதும், நமது வேலை
முடிந்துவிட்டது என்று எண்ணாமல், தமிழ்நாடு மீண்டும் கொள்ளை போவதை தடுக்க, நாம் எல்லாம் அணி திரள வேண்டும். தமிழகத்தில் RTI club ஒன்றை உருவாக்கி நடக்கும் தவறுகளுக்கு கேள்வி கேட்க வேண்டும். கொள்ளை போன பணம், மற்றும் சொத்துகளை மீட்க வேண்டும். கொள்ளையர்களை குறைந்தது 5 ஆண்டுகள் சிறையில் போடவேண்டும்.

நடுத்தர மக்கள் கேள்வி கேட்கமாட்டார்கள ், முதுகு எலும்பு இல்லாத கோழைகள் என்று
நினைக்கும் ஆட்சி, அதிகார வர்க்கத்தினரை பயம் கொள்ள செய்ய வேண்டும். முன்னாள்
கொள்ளையர்களையும ், அவர்களுக்கு துணை போன அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும்.

தமிழர்களே 'நாம் ' ஒன்றிணைந்து செயல்படுவோமா ? வீரம், மற்றும் விவேகத்துடன் செயல்படுவோமா ? ஒருவர் மட்டும் RTI வழியாக கேள்வி கேட்டால் அடிக்க வருவார்கள். ஆனால் 'நாம்' ஆயிரம் வேறாக சேர்ந்து கேட்போம். ஆயிரம், லட்சங்களாக மாறும்.

தயவு செய்து ஒன்று சேருங்கள். தமிழ்நாடு ஊழல் எதிர்ப்பு இயக்கம் -

ஊழலற்ற தமிழகம் அமைய தொடர்பு கொள்ளுங்கள்.


iacchennai.org

சென்னை வடக்கு :9841429930, 9444020744, 9444321222

சென்னை தெற்கு :9940066327 , 9176657632 , 9843677487, 790909123
9710201043

சென்னை மேற்கு : 9884269094 , 9941292846, 9444961168

சென்னை கிழக்கு : 9382193943, 9840852132, 9600041079

பகத்சிங்
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 134 விருந்தினர்கள் மற்றும் 1 உறுப்பினர்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

தமிழ்லீடர்

tamilleader

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4764
mod_vvisit_counterYesterday9838
mod_vvisit_counterThis week57501
mod_vvisit_counterLast week67096
mod_vvisit_counterThis month176309
mod_vvisit_counterLast month297247
mod_vvisit_counterAll days8392037