முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
ரட்சிக்கப் பட்ட ஜெகதரட்சகன். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 44
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
சனிக்கிழமை, 04 செப்டம்பர் 2010 05:30


ஜெகதரட்சகன். இந்தப் பெயர் கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு வரை, வன்னியர் சங்க தலைவர் என்ற வகையில், அங்கங்கே சுவர் விளம்பரங்களில் மட்டும் தென்படும். வன்னியர் சமுதாயத்தில் இவருக்கு பெரிய அளவில் ஆதரவு ஒன்றும் இல்லை. கருணாநிதி, இவரை ராமதாசின் செல்வாக்கை உடைப்பதற்கென்று பயன் படுத்திக் கொண்டார்.

தேர்தல் நேரத்தில் ஜெகதரட்சகனும் தனது சங்கத்தை கலைத்து விட்டு, திமுகவுடன் ஐக்கியமாகி பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி ஆக ஆனார்.

எம்.பி ஆக ஆனதும், பலரையும் ஆச்சர்யத்துக்குள்ளாக்கும் வகையில் மந்திரி சபைக்கு பரிந்துரைக்கப் பட்டார் ஜெகதரட்சகன். 

திமுக எம்.பியாக ஆகும் முன், ஜெகதரட்சகன், “கல்வித் தந்தையாக“ இருந்தார். அவரின் பாலாஜி பல்மருத்துவக் கல்வி மூலமாக கல்வி வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார். வெறும் கல்வி வியாபாரத்தின் மூலமாக பெரும் செல்வத்தை ஈட்ட முடியாது என்பதால், தற்போது தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சராக மட்டுமல்லாமல், “கருணாநிதி பாராட்டு விழா துறையையும்“ கூடுதலாக கவனித்து வருகிறார்.

இப்படிப் பட்ட ஜெகதரட்சகன் கடந்த ஆண்டு ஜுன் 2009ல் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார். டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நிறுவனம், வியாபாரமாகும் கல்வியை படம் பிடித்துக் காட்ட ஒரு ஒரு ஸ்டிங் ஆபரேஷன் நடத்தியது. (இதற்கு நல்ல தமிழ் வார்த்தைகள் இருந்தால் அறிஞர்கள் கூறவும்) இந்த ஆபரேஷனில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சிக்கியது இரண்டு கல்லூரிகள். ஒன்று ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைகழகம் மற்றொன்று, ஜெகதரட்சகனின் பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி. 



ராமச்சந்திரா நிகர்நிலை பல்கலைகழகத்தில் கேமரா முன்பு ஒருவர் மருத்துவ மேல்படிப்புக்கு 20 லட்ச ரூபாய் வரை செலவாகும் என்று பேரம் பேசி சிக்குகிறார். பாலாஜி பல் மருத்துவக் கல்லூரியில் ஒருவர் பல் மருத்துவக் கல்விக்கான இடத்துக்கு இதே போல பேரம் பேசி சிக்குகிறார்.

இந்த தகவல்கள் வெளியானதை அடுத்து, மத்திய அரசிடமிருந்து இந்தக் கல்லூரிகளிடம் அறிக்கை கேட்பதும், விசாரணைக்கு உத்தரவிடுவதும் என நடவடிக்கைகள் தூள் பறந்தன. அதன் பிறகு மருத்துவக் கவுன்சிலின் தலைவர் கேதன் தேசாயே சிபிஐ வலையில் சிக்கியதும், இந்த விவகாரம் மறக்கப் பட்டது.

இந்த விவகாரத்தில் பல்வேறு விஷயங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வராமலே நடந்தேறியுள்ளது தெரிய வந்துள்ளது.

இந்தக் கல்விக் கட்டணக் கொள்ளையையும், மருத்துவ சீட்டுகளை ஏலம் போடும் விஷயத்தையும், விசாரிக்க வேண்டுமென மத்திய அரசு முடிவெடுத்தது உண்மையே. இதற்காக மத்திய புலனாய்வு நிறுவனமான சிபிஐ மூலம் விசாரணை நடத்த உத்தரவிடப் பட்டது. சிபிஐ ஒரு விஷயத்தில் விசாரணை நடத்த வேண்டுமென்றால், சம்பந்தப் பட்ட மாநில அரசின் ஒப்புதல் வேண்டும். இதற்கான கடிதத்தை மத்திய புலனாய்வு நிறுவனம், மாநில அரசிடம் அளிக்கிறது.

இந்த கடிதம் மாநில அரசை வந்து அடைந்த போது ஒரு சுவையான நிகழ்வு நடக்கிறது.

ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ பல்கலைகழகத்தின் வேந்தர் வெங்கடாச்சலத்துக்கும் உளவுத்துறை ஐஜி ஜாபர் சேட்டுக்கும் ஒரு மனத்தாங்கல் ஏற்படுகிறது. ஜாபர் சேட்டின் அதிகாரத்தை மதிக்காமல் வெங்கடாச்சலம் நடந்து கொள்கிறார் என்று நினைத்த ஜாபர் சேட், வெங்கடாச்சலத்துக்கு ஒரு சரியான பாடம் கற்பிக்க நினைக்கிறார்.

விசாரணை நடத்த மாநில அரசின் அனுமதி கேட்டு வந்த சிபிஐ கடிதம் உள்துறை செயலரை அடைந்த உடன், உள்துறை செயலர் மாலதியும் ஜாபர் சேட்டும் இதைப் பற்றி விவாதித்து, இந்த விசாரணை நடந்தால், திமுக அமைச்சர் ஜெகதரட்சகனை இது பாதிக்கும் என்று தெரிந்தும், கருணாநிதிக்கு தெரியாமல் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுகிறார்கள். இதற்கான ஆணை அரசாணை எண் 593 உள்துறை நாள் 25.06.2010ல் வெளியிடப் படுகிறது.

இந்தத் தகவல் அறிந்த வெங்கடாச்சலம், ஒரு பல்கலைக்கழக துணை வேந்தர் மூலமாக கருணாநிதியை அணுகுகிறார். கருணாநிதி ஜாபரை அழைத்து என்ன விபரம் என்று கேட்கிறார்.

ஜாபர் சேட்டும் மாலதியும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு அனுமதி வழங்காவிட்டால் மாநில அரசுக்கு மிகுந்த கெட்ட பெயர் ஏற்படும் என்று கூறுவதை கேட்டு கருணாநிதி அமைதியாகிறார். 

இதற்கு முன்பு, இந்த ஸ்டிங் ஆபரேஷன் நடந்த போது, பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி சார்பில் கேமராவில் பணம் கேட்டு சிக்கியவர்கள் இருவர். ஒருவர் ஜான்சன். மற்றொருவர் லட்சுமி. இந்த இருவரும் பாலாஜி பல் மருத்துவக் கல்லூரியின் நிர்வாக அலுவலகர்கள் (Administrative Officers). இந்த இருவர் மீதும் பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி நிர்வாகம், இவர்கள் இருவரும் நிர்வாகத்திற்கே தெரியாமல் ஏமாற்றி பணம் வாங்கி விட்டதாக ஒரு புகாரை குரோம்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்கின்றனர்.

இந்தப் புகார் குரோம் பேட்டை காவல் நிலைய குற்ற எண் 290/2009 என்ற எண்ணில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 420 (ஏமாற்றுதல்) மற்றும் 511 (குற்றம் செய்ய ஆயத்தம் செய்தல்) ஆகிய இரு பிரிவுகளின் பதிவு செய்யப் படுகிறது.

விசாரிக்க மாநில அரசின் அனுமதி அனுமதி கேட்ட கடிதம் வந்த உடனேயே, அவசர அவசரமாக குரோம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி அளித்த புகாரில் ஜான்சன் மீதும் லட்சுமி மீதும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்கின்றனர். இந்தக் குற்றப் பத்திரிக்கை தாம்பரம் இரண்டாம் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் படுகிறது. இந்த வழக்கு எண் சி.சி. 528/2010. 


சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு அனுமதி அளித்த விவகாரம் ஜெகதரட்சகனுக்கு தெரிய வருகிறது. ஸ்டிங் ஆபரேஷனில் சிக்கிய ஜான்சன் மற்றும் லட்சுமியை வைத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் படுகிறது. இவர்கள் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே எங்கள் மீது குரோம்பேட்டை காவல்நிலையத்தில் வழக்கு தொடரப் பட்டு விட்டது. அதனால், சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், 22.07.2010 அன்று அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறது.

இதற்கு நடுவே தாம்பரம் இரண்டாம் நடுவர் நீதிமன்றத்தில் லட்சுமி மற்றும் ஜான்சன் மீதான வழக்கு 13.08.2010 அன்று விசாரணைக்கு வந்த போது இவருவரும் தங்கள் மீதான குற்றத்தை ஒப்புக் கொள்கிறார்கள். குற்றவாளிகள் இருவருக்கும் நீதிபதி தலா ரூ.5000/- அபராதம் விதித்து வழக்கை மூடுகிறார்.

இது போலவே, ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி சார்பில், போரூரிலும் ஒரு புகார் வழங்கப் பட்டு அதுவும், இதே போல மூடப்பட்டுள்ளது என்று தெரிகிறது.

இதில் தப்பித்தாலும், லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக, 1500 கிலோ தங்கப் புகழ் கேதன் தேசாய் மீதான வழக்கு விசாரணையில் சிபிஐ, அந்தக் கல்லூரி உரிமையாளரை நெருக்கும் போது, அந்த வலையில் ஜெகதரட்சகனும் வருவார் என்று தெரிகிறது.

ஒரு போக்குவரத்துக் காவலர், 200 ரூபாய் லஞ்சம் வாங்கி விட்டார் என்றால் அவரை இடை நீக்கம் செய்து, அவரை கைது செய்து, அவர் மீது, நீதிமன்ற வழக்கு, துறை நடவடிக்கை என்று அவரின் வாழ்க்கையை நாசம் செய்யும், இந்த அரசுத் துறையும், நீதித் துறையும், சமூகத்தில் பெரிய மனிதர்களை காப்பாற்ற எப்படி கூட்டு சேர்ந்து வேலை செய்கிறது என்று பாருங்கள்.

லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி மீது என்ன குற்றச் சாட்டு தெரியுமா ? கேதன் தேசாயோடு சேர்ந்து கொண்டு, மருத்துவ மாணவர்களுக்கு எந்த விதமான வசதியும் செய்து கொடுக்காமல், வசதிகள் இருப்பது போன்ற பொய்யான ஆவணங்களை தயார் செய்து, லஞ்சம் பெற்றுக் கொண்டு, கூட்டுச் சதியில் ஈடுபட்டு, மருத்துவக் கல்லூரி நடத்த அனுமதி பெற்று நடத்தி வந்துள்ளனர் என்பதுதான் அந்தக் குற்றச் சாட்டு.

இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐக்கு, ஆகஸ்டு 17 அன்று சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்தது. தடை விதித்த நீதியரசர் வேறு யாருமல்ல ? நமது சவுக்கு வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான நீதியரசர் சி.டி.செல்வம் தான் அது. சவுக்கு வாசகர்களின் நினைவுக்காக அந்த நீதியரசரின் படத்தை சவுக்கு மீண்டும் ஒரு முறை வழங்குகிறது.



வெறும் பேச்சோடு நிற்பது சவுக்குக்கு பிடிக்காது. செயலிலும் இறங்க வேண்டும் அல்லவா ? அதனால், தமிழக மக்கள் உரிமைச் கழகம் சார்பாக, மத்திய புலனாய்வுத் துறைக்கு விரிவான புகார் ஒன்று அனுப்பப் பட இருக்கிறது.

 

Comments  

 
0 #15 sundar 2011-02-11 12:41
ivan oru paddu,etukku ivana patthi ellam ezhuthi time waste pannrangae?
Quote
 
 
0 #14 True Indian Citizen 2011-01-08 13:20
SOMBU THOOOKKII JAGATH AVARGALE UNGAL SOMBU THOOKKI PANI INI DHAE THODARA EN VAAZTHUKKAL
Quote
 
 
0 #13 praburaja2002 2011-01-03 01:13
ஸ்டிங் - உளவு நடவடிக்கை
Quote
 
 
0 #12 rajee 2010-12-23 22:31
sabash savukku, your are doing excelend job.
Quote
 
 
-2 #11 newtonpaulsingh 2010-12-13 12:48
dear sir I'm the regular reader of savukku website most of the messages are only targeting the DMK and their family it looks like the opposite website of THE DMK not like a makkal urimai kazahagam my self and my friends believe that the website may belongs to the AIADMK party. kindly reply don't fool us by simply saying that the DMK is in ruling.
Quote
 
 
+3 #10 sathileelaavathi 2010-11-01 23:59
sting operation -
ரகசிய குற்றக்காட்சிப் பதிவு
Quote
 
 
+1 #9 Gan 2010-09-17 04:20
Just a quick question, If I get a chance I will ask onething, what are you going to take along with you when you go out of this world?
Quote
 
 
0 #8 Dilip Kumar 2010-09-16 15:12
Do you think there will be any use complaining to the CBI? CBI is only towing the line of its political bosses.This has been exposed in the spectrum scandal by the Supreme court
Quote
 
 
+2 #7 Boobalan 2010-09-15 10:50
Sting - Ulavu Paarthal

Ithu en karuthu!
Quote
 
 
+3 #6 vijay 2010-09-12 13:09
பச்சை சீருடை இன்னும் அவரது மிடுக்கை அதிகரிக்கும் என நம்புகிறேன்,,இத ு பின்னோட்டத்துக் காக அல்ல,
Quote
 
 
0 #5 singan 2010-09-11 18:57
Tamil term for sting operation--tirudanukku telkottum sikitchai tks ssn
Quote
 
 
0 #4 thiyagu 2010-09-11 17:39
Migavum arumaiyana blog.Neengal thiratti irukkum thagavalgal acchiriyumuttug inrana.
Quote
 
 
+2 #3 ஆதவன் 2010-09-10 22:00
ஜகத்ரட்சகன் ஒரு காமெடி பீசு. நுங்கம்பாக்கத்த ில் உள்ள இவரது அலுவலகத்திற்கு நேரே நான் குடியிருந்தேன். அப்போது இவரின் அல்லக்கைகள் பண்ணுகின்ற அலம்பல்களை காணுகின்ற பாக்கியம் கிடைத்தது. பார்ப்பானே தோற்கின்ற அளவிற்கு நெற்றி நிறைய சந்தனம், குங்குமம், பளபள வென்று வெள்ளையும் சொள்ளையுமாக தடிதடியாக சுற்றுவார்கள். இவரோடுதான் திராவிடர் தமிழர் கூட்டு வைத்துள்ளார். அய்யோ அய்யோ
Quote
 
 
0 #2 Karthik.S 2010-09-10 14:18
New looking web site & with the same powerful content. You r just great savukku...
Quote
 
 
+3 #1 naan 2010-09-10 10:59
இது பின்னோட்டமல்ல, நான்தான் சவுக்கிடம் ஒரு கேள்வி கேட்டதும் , அடிக்கடி நிறைய பின்னோட்டம் எழுதுவதுமுண்டு, உலகத்தில் ராஜபக்க்ஷகூட எனக்கு பெரியவெறுப்புக் குரிய ஆள் அல்ல. ஆனால் உலகத்தில எனக்குப்பிடிக்க ாத ஒரு பொருளென்றால் அது கருணாநிதிதான்,அ வை தவிர சவுக்கு இணையத்திற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள், அத்துடன் எனது சிறிய வேண்டுகோள், தேசியத்தலைவரை முதன்மைப்படுத்த ி அவரது படத்தை முகப்பில் இலச்சினை அளவுக்கு சவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நாம் ஈழத்தமிழினம் பெருமகிழ்வடைகின ்றோம்,
இப்போ முகப்பில் அலங்கரித்து க்கொண்டி ருக்கும் படத்தில் தலைவரின் 'யூனிப்போம்' உடை அவரது வழமையான உடையல்ல ,நீலநிற யூனிப்போம் கடல்ப்புலிகளுக் குரியது ,தலைவர் பிரதான தளபதி என்பதால் அந்த யூனிப்போமை சிலசந்தர்ப்பத்த ிற்காக தரித்திருக்கிறா ர். அவருடைய பச்சை நிற வரிப்புலி சீருடைதான் சாலப்பொருந்துவத ாக நாம் எல்லோரும் விரும்புவதுண்டு . சவுக்கிடம் ஒரு வேண்டுகோளாக ஈழத்தமிழி னத்தின் தனி ஒருவன் கேட்டிருக்கிறேன ், பச்சை சீருடை இன்னும் அவரது மிடுக்கை அதிகரிக்கும் என நம்புகிறேன்,,இத ு பின்னோட்டத்துக் காக அல்ல,
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 136 விருந்தினர்கள் மற்றும் 1 உறுப்பினர்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

தமிழ்லீடர்

tamilleader

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4760
mod_vvisit_counterYesterday9838
mod_vvisit_counterThis week57497
mod_vvisit_counterLast week67096
mod_vvisit_counterThis month176305
mod_vvisit_counterLast month297247
mod_vvisit_counterAll days8392033