முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 167
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
ஞாயிற்றுக்கிழமை, 10 ஏப்ரல் 2011 00:51

 

கருணாநிதி எத்தனை பெரிய தீய சக்தி என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் கருணாநிதியை விட மிகப் பெரிய தீயசக்தி ஒன்று இருக்கிறது. அது எதுவென்றால், கேடி சகோதரர்கள் என்று அழைக்கப் படும் கலாநிதி மற்றும் தயாநிதி சகோதரர்கள். இவர்கள் எப்படி கருணாநிதியை விட மிகப் பெரிய தீய சக்தியாக ஆக முடியும் என்றால் காரணம் இருக்கிறது.

 

Dayanidhi_Kalanidhi_Maran_Loyola_Alumni_Association_2010_stills_03

தன்னால் வளர்ந்து சாம்ராஜ்யத்தை கட்டியவர்கள், தன் சொந்த மகனை ரவுடி என்று தொலைக்காட்சியில் செய்தி போட்டதை மறக்கக் கூடிய அளவுக்கு கருணாநிதி என்ன பெருந்தன்மை படைத்தவரா ?

நிச்சயமாக இல்லை.   கேடி சகோதரர்களைப் பார்த்து கருணாநிதி பயந்தார் என்பதுதான் உண்மை.   கேடி சகோதரர்களோடு பிணக்கு ஏற்பட்டவுடன், தயாநிதி மாறனை மந்திரி பதவியை விட்டு ராஜினாமா செய்ய உத்தரவிட, கட்சியின் செயற்குழுவை கூட்டி முடிவெடுத்த கருணாநிதி, குடும்பம் ஒன்று சேர்கையில் வசதியாக செயற்குழுவை கூட்ட மறந்து விட்டார்.   “இதயம் இனித்தது, கண்கள் பனித்தன” என்று ஒற்றை வார்த்தையில் முடித்து விட்டார்.   ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று எழுந்த கேள்விக்கு, “அது முடிந்து போன விவகாரம்“ என்று முற்றுப் புள்ளி வைத்தார்.

 


5

கருணாநிதி, இந்தத் தேர்தல் முடிந்தவுடன் தளர்ந்து போய் விடுவார். அவருக்கு பாராட்டு விழா நடத்தி, காக்காய் பிடிக்கும் ஜால்ராக் கூட்டங்கள் அவரை விட்டு விலகிப் போய் விடும். கருணாநிதியின் கண்ணுக்கு கண்ணாக, உயிருக்கு உயிராக இருந்து ஜாபர் சேட், ஏற்கனவே அதிகாரம் இழந்து நிற்கிறார். ஆகையால், தேர்தலுக்குப் பின், கருணாநிதி தமிழக மக்களுக்கு பெரிய ஆபத்தாக இருக்கப் போவதில்லை. ஆனால், கேடி சகோதரர்கள் ?

திமுக தொண்டர்களின் உழைப்பால் பிடித்த ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி, பகாசுர வளர்ச்சி கண்டவர்கள்.

 

யார் இந்த கலாநிதி மாறன். சென்னை டான்பாஸ்கோ பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு, லயோலா கல்லூரியில் பட்டப் படிப்புக்கு பிறகு, அமேரிக்காவில் எம்பிஏ படித்தவர். எம்பிஏ படித்து விட்டு, இந்தியா திரும்புகிறார். சில காலம், குங்குமம் இதழில் பணியாற்றுகிறார்.


endhiran-movie-audio-launch-stills_26_084719123

டுடே நிறுவனம், அப்போது வீடியோ மேகசின் என்ற புதிய உத்தியை கண்டு பிடித்து, ந்யூஸ் ட்ராக் என்ற வீடியோ பத்திரிக்கையை தொடங்கியது.

இதைப் பார்த்து, தமிழிலும் இது போல் தொடங்க வேண்டுமென திட்டமிட்டார் தயாநிதி மாறன். அதன் படி, முதன் முதலில் 1990ல் தொடங்கப் பட்டதுதான் “பூமாலை“. இந்த பூமாலை மாதமிருமுறை வரும் வீடியோ கேசட். இதில் தற்போது, இந்த வார உலகம் என்று தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் வருகிறதல்லவா ? அதைப் போலவே, தொடங்கப் பட்டது.

ஆனால், இந்த பூமாலைக்குப் பின்னால், கருணாநிதியின் பின்புலம் செயல்பட்டது.   இந்தியா டுடேவின் ந்யூஸ் ட்ராக் போல, சந்தாதாரர்கள் இல்லாததால், தமிழகத்தில் உள்ள அத்தனை வீடியோ கடைகளும், மிரட்டப் பட்டன. மாதந்தோறும், பூமாலை கேசட்டுகள் ஒவ்வொரு கடையும் 10 வாங்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தப் பட்டன. தவறும் கடைகள் மீது, நீலப் படம் வைத்திருந்த வழக்கு பாய்ந்தது. (அப்போவும் போலீஸ் இப்படித்தான்).   இதை வைத்து மிரட்டி, மிரட்டி பூமாலை வீடியோ கேசட்டை ஓட்டினார்கள்.

அதன் பிறகு தாராளமய பொருளாதாரக் கொள்கை வந்த பிறகு, சன்டிவி தொடங்கப் படுகிறது.   1993ம் ஆண்டு சன் டிவி தொடங்கப் படுகிறது.   இந்த சன் டிவி தொடங்கப் பட்டதற்கு பின்னணியில் ஒரு சுவையான கதை இருக்கிறது. இப்போது போல, அப்போதெல்லாம், ட்ரான்ஸ்பாண்டர்கள் குறைந்த விலையில் கிடைக்காது. இப்போது ஒரு கோடி ரூபாய் முதலீட்டில் ஒரு டிவி சேனல் தொடங்கி விடலாம்.   அத்தனை மலிவாகி விட்டது.   உடனே, ஆண்டிமுத்து ராசா நினைத்திருந்தால், ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி சேனல்களை தொடங்கியிருக்கலாமே என்று யோசிக்காதீர்கள்.   1993ல் சென்னையில் ப்ரூனே சுல்தானின் உறவினர் ஒருவர் இருந்தார். அவருக்கு சொந்தமான ட்ரான்ஸ்பாண்டர் ஒன்று இருந்தது. அவரோடு நட்பு ஏற்படுத்தி, அந்த ட்ரான்ஸ்பாண்டரை இலவசமாக பெறுகிறார் கலாநிதி மாறன். இப்படித் தான் சன்டிவி தொடங்கப் பட்டது.

சன்டிவி தொடங்கிய உடனேயே பிரபலமாக ஆனதன் காரணம், அப்போது வேறு டிவி சேனல்கள் இல்லை என்றாலும் கூட, தரமான நிகழ்ச்சிகளை வழங்கியது ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.   எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும், சேனலின் நம்பகத்தன்மையை போக்கும் வகையில் எந்த நிகழ்ச்சியையும் ஒளிபரப்ப மாட்டேன் என்பதில், கலாநிதி பிடிவாதமாக இருந்தார்.   மற்ற சேனல்களில் வருவது போல், சன் டிவியில், டெலி ஷாப்பிங்கோ, சுவிசேஷக் கூட்டங்களோ, போலி மருத்துவர்களின் நேரடி நிகழ்ச்சியோ இடம் பெறாது. ஏனெனில், இது போன்ற நிகழ்ச்சிகள் ஒரு முறை வந்தால் கூட, சேனலின் நம்பகத்தன்மை போய் விடும் என்று கலாநிதி நம்பினார்.

இது 1993 முதல் 1996 வரை தான். 1991 முதல் 1996 வரியிலான ஜெயலலிதாவின் ஆட்சி, அராஜகம் மற்றும் ஊழலின் மொத்த உருவமாக இருந்ததால், மாற்று ஊடகத்தில் வரும் செய்திகளுக்கு மக்கள் ஏங்கினார்கள். இந்த ஏக்கத்தைப் பயன்படுத்தி, அன்றைய எதிர்க்கட்சி வேலையை சன்டிவி குழுமத்தினர் நன்றாகவே செய்தனர். தூர்தர்ஷன் செய்திகளுக்கு வேறு மாற்றே இல்லை என்பதால், மக்களும், இதை ரசிக்கவே செய்தார்கள்.

இப்போது ஜெயா டிவியில் இருக்கும், ரபி பெர்னார்ட் அப்போது சன்டிவியில் இருந்தார். ஜெயலலிதா அரசாங்கத்தில், பத்திரிக்கையாளர்களுக்கு செய்திகளுக்கு குறையே இல்லை.   தினம் தினமும் செய்திகள் புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கும்.   அப்போது ஜெயலலிதாவின் அதிமுகவிலிருந்து, தினந்தோறும் ஒருவர் விலகி, ஜெயலலிதாவின் ஊழல்களைப் பற்றியும், சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கத்தைப் பற்றியும் செய்திகளை வெளியிட்டுக் கொண்டே இருப்பார்கள்.   இவ்வாறு விலகி வந்தவர்களை வைத்து ரபி பெர்னார்ட் நடத்திய நேருக்கு நேர் நிகழ்ச்சி அப்போது அவ்வளவு பிரபலம்.

 

4293346778_21fb94341d_o

1995 செப்டம்பர் 7 அன்று ஜெயலலிதாவின் விருப்பத்திற்குறிய வளர்ப்பு மகனாக இருந்த சுதாகரனின் திருமணம் வெகு விமர்சையாக இருந்தது. அப்போது சன் டிவி வழங்கிய செய்திகள், மக்கள் மனதில் அப்படி ஒரு இடம் பிடித்தது.   வளர்ப்பு மகன் திருமணத்திற்காக ட்ரான்ஸ்பார்மர்களிடமிருந்து மின்சாரம் திருடியது, அதிகாரிகளை மிரட்டியது, போன்ற அத்தனை விஷயங்களையும் படம் பிடித்துக் காட்டியது. இன்றைய தலைமுறையினர் முன்னூறு சேனல்களோடு பிறந்ததால், அந்தச் செய்திகள் அப்படி சிறப்பாகத் தோன்றாவிட்டாலும், அப்போது தூர்தர்ஷன் செய்திகளைப் பார்த்துப் பார்த்து சலித்துப் போயிருந்த கண்களுக்கு, சன் டிவியின் செய்திகள் புத்துணர்வை தந்தது.   வளர்ப்பு மகள் திருமணத்தின் போது, அந்த மணமகன் வரவேற்பு ஊர்வலத்தில், பட்டாடையுடன், ஜெயலலிதாவும், சசிகலாவும், உடல் முழுக்க நகை ஜொலிக்க நடந்து வந்ததையும், ஏடிஎம் மிஷின்களுக்கு பணம் எடுத்து வரும் வண்டியில் பாதுகாப்புக்காக வரும் துப்பாக்கி ஏந்திய காவலர் போல, அவர்களுக்குப் பாதுகாப்பாக, துப்பாக்கியோடு, அப்போது நடந்து வந்த வால்டர் தேவாரமும் நடந்து வந்த கண்கொள்ளா காட்சியை மலர் மருத்துவமனை மாடியிலிருந்து சன்டிவியின் கேமரா மேன் கண்ணன் என்பவர், படமெடுத்தார்.

இப்போது எல்லைப் பாதுகாப்புப் படை டிஜிபியாக உள்ள விஜயகுமார், அப்போது ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காகவே எஸ்எஸ்ஜி என்ற படையை உருவாக்கினார். அந்தப் படையைச் சேர்ந்தவர்கள், மலர் மருத்துவமனையின் மாடியிலிருந்து படமெடுத்த கண்ணனை ஜெயலலிதாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்ததாக கைது செய்தனர். இந்த கைது சன்டிவியின் பரபரப்பை பெருமளவில் அதிகரித்தது. இந்தக் கைதை பெரிய செய்தியாக்கிய சன் டிவி, இது தொடர்பாக ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா, அப்போதைய உள்துறை அமைச்சர் எஸ்.பி.சவாண், ஆகியோருக்கு புகார் அனுப்பியது.

1996. இதற்குப் பிறகுதான், மாறன் சகோதரர்களின் அசல் முகம் தெரியத் தொடங்கியது.   கருணாநிதி ஆட்சியைப் பிடித்தவுடன், சன் டிவி எடுக்கும், நெடுந்தொடர்களுக்கு திரைப்பட நடிக நடிகையரை மிரட்டுவதில் இருந்து, சன் டிவிக்கு விளம்பரம் தருமாறு, தனியார் நிறுவனங்களை மிரட்டுவதில் தொடங்கி கேடி சகோதரர்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது.   திமுக ஆட்சி என்பதால் தனியார் நிறுவனங்களும், திரைத் துறையினரும், வாய் மூடி மவுனிகளாக இருந்தனர்.

அறிவாலயத்தில் தனது அலுவலகத்தை வைத்திருந்த சன் டிவி, மெல்ல மெல்ல, அறிவாலயத்தையே தன் வசம் கொண்டு வந்தது. அறிவாலயத்தில் ஒரு அலுவலகம் வைத்திருந்த, வேலூர் எம்எல்ஏ காந்தியை, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி காலி செய்ய வைத்தார் கலாநிதி மாறன்.

Rajini_and_Kalanidhi_Maran_endhiran_2

 

அழகிரி, அதிரடி அரசியல் செய்து தனது பெயரை கெடுத்துக் கொண்டார் என்றால், கேடி சகோதரர்கள், அழகிரி செய்வதைப் போல பத்து பங்கு செய்தாலும் வெளியில் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.   கேடி சகோதரர்களைப் போல திமுக ஆட்சியின் அதிகாரத்தை பயன்படுத்தியவர்கள், கருணாநிதி குடும்பத்தில் ஒருவருமே இல்லை.

அப்போதெல்லாம், இப்போது போல கேபிள் யுத்தம் பெரிதாக இல்லை. சேனல்களும் குறைவாக இருந்ததால், கேபிள் தொழில் அவ்வளவு போட்டி நிறைந்ததாக இல்லை.   ஆனால், ஒரு ஆக்டோபஸ் போல கேபிள் தொழிலை கேடி சகோதரர்கள் வளைக்கத் தொடங்கினர். எஸ்.சி.வி என்ற கேபிள் விநியோக நிறுவனத்தை தொடங்கியவர்கள் முதலில் சென்னை நகரில் மட்டும் கேபிள் விநியோகத்தை நடத்தி வந்தனர். எஸ்சிவிக்கு போட்டியாக சென்னையில் இருந்தது மும்பையைச் சேர்ந்த ஹாத்வே நிறுவனம். ஹாத்வே நிறுவனத்தின் முக்கிய சந்தாதாரர்கள் மிகப் பெரிய பணக்காரர்கள்.  வசதி படைத்தவர்கள் இருக்கும் குடியிருப்புப் பகுதிகளில் ஹாத்வே நிறுவனம் கொடிகட்டிப் பறந்தது.   96-2001ல் ஹாத்வேயை விட்டு வைத்த கேடி சகோதரர்கள், 2006ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், கேபிள் தொலைக் காட்சியில் தங்கள் ஏகபோகத்தை நிலைநாட்டினர்.

2006ல் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலேயே தமிழகம் முழுக்க கேபிள் தொழிலை தங்கள் கட்டுப் பாட்டில் கொண்டு வந்தவர்கள் தான் கேடி சகோதரர்கள். 2006ல் திமுக ஆட்சிக்கு வந்ததும், பலத்தை பிரயோகித்து, ஹாத்வே நிறுவனத்தை சென்னை நகரத்தை விட்டே துரத்தினர். தமிழகம் முழுக்கவும், கேபிள் தொழில், கேடி சகோதரர்களின் கட்டுப் பாட்டில் வந்தது. 2004ல் தயாநிதி மாறன், தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக ஆனதும், கேபிள் தொழில் இவர்கள் கட்டுப் பாட்டில் கொண்டு வருவதற்கு பெரும் உதவியாக அமைந்தது மட்டுமல்ல, பல்வேறு சேனல்களில் செய்தி வெளியிடாமல் இருக்க பெரும் நெருக்கடி கொடுக்க உதவியது.   விஜய் டிவியில் முன்பு, ஒரு ஐந்தாண்டுகளுக்கு முன்பு என்டிடிவி நிறுவனத்தோடு சேர்ந்து தயாரித்த செய்திகள் ஒளிபரப்பாகி வந்தன. அந்தச் செய்திகள், நடுநிலைமையாக, மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால், தனது அதிகாரத்தை பயன்படுத்தி, விஜய் டிவிக்கு செய்திகள் ஒளிபரப்பும் அனுமதியை பறித்தார் தயாநிதி மாறன். அப்போது பறிக்கப் பட்ட செய்திக்கான அனுமதி, விஜய் டிவிக்கு மீண்டும் வழங்கப் படவேயில்லை.

இது மட்டுமல்லாமல், அப்போது ஓரளவு நடுநிலையோடு செய்திகளை வெளியிட்டு வந்த, ராஜ் டிவி நிறுவனம், விசா என்ற தனது தெலுங்கு தொலைக்காட்சிக்காக ஆன்லைன் ப்ராட்காஸ்டிங் எனப்படும், ஓபி வேனை வைத்து, செய்தி ஒளிபரப்பியதாக குற்றஞ்சாட்டி, இரண்டு வருடங்களுக்கு விசா தொலைக்காட்சியை செய்தி ஒளிபரப்ப விடாமல் தடுத்து விட்டனர். இதற்கு முழு முதற்காரணம், தயாநிதி மாறனே… எப்படிப் பட்ட அதிகார துஷ்பிரயோகம் பாருங்கள்.

தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சரானதே ஒரு சுவையான கதை.   அவரின் தந்தை முரசொலி மாறன் வர்த்தகத் துறை அமைச்சராக இருந்து, உலக வர்த்தக மைய மாநாட்டில் ஏழை நாடுகள் தொடர்பான நீண்ட உரையை ஆற்றி, இந்தியாவை பெருமைப் படுத்தினார்.   சென்டிமென்ட்டலாகவாவது, அந்தத் துறையை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். ஆனால் இவர்கள் தான் கேடி சகோதரர்களாயிற்றே… தொலைத் தொடர்புத் துறைதான் வேண்டும் என்று, அத்துறையை கைப்பற்றினர். அந்தப் பொறுப்பை ஏற்பதற்கு சில நாட்களுக்கு முன், சன் டிவியின் தலைமை நிர்வாகியாக இருநதார் தயாநிதி மாறன்.

தயாநிதி மாறன் தரப்பில் சொல்லப் படும் ஒரு முக்கிய தியரி, டிவி சேனல்கள் தொடர்பாக தகவல் ஒளிபரப்புத் துறைதான் அனுமதி வழங்க வேண்டும், என்பது. ஆனால், தகவல் ஒளிபரப்புத் துறை ஒரு போஸ்ட் ஆபீஸ்தான்.   ஒரு தொலைக்காட்சி தனது ஒளிபரப்பை நடத்துவதற்கு ஸ்பெக்ட்ரம் தான் அடிப்படை. அந்த ஸ்பெக்ட்ரத்தை வழங்குவதற்கு அனுமதி வழங்க வேண்டியது தொலைத் தொடர்புத் துறை.   இதை வைத்துத் தான், சன் டிவிக்கு போட்டியாக, உள்ள சேனல்களை வளர விடாமல் செய்தனர்.

ஒரு உதாரணத்தைக் கூற வேண்டுமானால், ஜெயா தொலைக்காட்சி, 24 மணி நேர செய்தி சேனல் தொடங்குவதற்காக விண்ணப்பித்தது. இதற்காக ஜெயா தொலைக்காட்சி புதிய ஸ்பெக்ட்ரம் கேட்கவில்லை.   ஏற்கனவே ஜெயா தொலைக்காட்சிக்காக ஒதுக்கிய ஸ்பெக்ட்ரத்தை மேலும் வலுவாக பயன்படுத்தவே அனுமதி கேட்டது. மே 2004ல் சமர்ப்பிக்கப் பட்ட ஜெயா டிவியின் விண்ணப்பம், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தயாநிதி மாறனால் கிடப்பில் போடப்பட்டது.

ஜெயா டிவி நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றத்தில் ஜெயா டிவி போலவே, கைரளி டிவியும் செய்தித் தொலைக் காட்சி தொடர்வதற்காக கொடுத்த விண்ணப்பம், ஒரு சில நாட்களில் பரிசீலனை செய்யப் பட்டு ஒதுக்கப் பட்ட விவசாரமும் நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டப் பட்டது.

தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது நடந்த மற்றொரு முக்கிய நிகழ்வு டாடா ஸ்கை தொடர்பானது. டாடா நேரடியாக வீட்டுக்கே தொலைக்காட்சி சேவையை வழங்கும் டாடா ஸ்கை என்ற ஒளிபரப்பை துவக்க உத்தேசித்தது. இதற்கான அனுமதியை வழங்க வேண்டியது தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம்.   டாடா ஸ்கை தொடங்க அனுமதி வழங்குவதை தொடர்ந்து தாமதித்தார் தயாநிதி மாறன்.

 
tata

தயாநிதி மந்திரியாக இருந்த சமயத்தில், தொலைத் தொடர்புத் துறை புதிய சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. அது என்னவென்றால், தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, செல்பேசியிலேயே நேரடியாக தொலைக்காட்சியை பார்க்கும் வாய்ப்பு உருவானதால், செல்பேசிக்கு பயன்படும் ஸ்பெக்ட்ரத்தையும், தொலைக்காட்சிகள் ஒளிபரப்பப் படும் அலைவரிசையையும் இணைக்கும் வகையில் (Convergence) வழி வகை செய்யும் ஒரு சட்டம் உருவாகிறது.

இது போன்ற சட்டம், உருவாக்கும் அமைச்சகத்தின் அமைச்சர் தம்பி தயாநிதி மாறன். அந்த அமைச்சகம் உருவாக்கும் சட்டத்தின் விளைவுகள் என்ன என்பதை உணர்ந்து அதற்குத் தகுந்தாற்போல புதிய பிசினசை தொடங்குவது அண்ணன் கலாநிதி மாறன். எப்படி இருக்கிறது ?

நீண்டதொலைவு அழைப்புகளுக்கான கட்டணம் 100 கோடி ரூபாயாக இருந்த போது, அந்த கட்டணத்தை 2.5 கோடியாக குறைத்தவர் தயாநிதி.   இது எந்த நேரத்தில் என்றால், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நீண்ட தூர அழைப்பு வசதியை வழங்குவதற்கு போட்டி போடத் தொடங்கிய நேரத்தில் இவ்வாறு கட்டணங்களை குறைத்தார். வெளிநாடுகளுக்கு அழைக்கும் கட்டணங்களையும் குறைத்தார். இந்த தொழில் தொடங்குவதற்காக இருந்த பல்வேறு கட்டுப்பாடுகளையும் நீக்கினார்.   அதோடு, ஒரே கம்பிவட இணைப்பு மூலமாக, இணைய இணைப்பு, தொலைபேசியில் பேசும் வசதி உள்ளிட்ட வசதிகளை வழங்கவும் வழிவகை செய்தார்.

இந்த வசதிகளை உருவாக்கிய நோக்கமே, எஸ்சிவி மூலமாக, இதே வசதியை சன் நெட்வொர்க் வழங்க வேண்டும் என்பதற்காவே….. தம்பி வழங்குகிறார்… அண்ணன் பயன்படுத்திக் கொள்கிறார்.   இதற்காக நாம் வாக்களித்து இவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புகிறோம்.

84 எப்எம் லைசென்ஸ் பெறுவதற்கு விண்ணப்பித்த கேடி சகோதரர்கள் 67 லைசென்சுகளை பெற்றார்கள். இப்போது உள்ள சட்டத்தின் கீழ் 46 லைசென்சுளைத் தான் வைத்துக் கொள்ள முடியும் என்பதால், மீதம் உள்ள லைசென்சுகளை விற்று விடுவார்கள்.

தம்பி தருகிறார், அண்ணன் பெறுகிறார்.     டாடா, அம்பானி, பிர்லா, பஜாஜ், போன்ற அத்தனை பெரிய நிறுவனங்களும், அரசாங்க விதிகளை வளைத்து, லஞ்சம் கொடுத்துதான் தொழில் செய்கின்றன என்றாலும், இது போல இவர்களே அரசாங்கமாகவும், இவர்களே தொழில் அதிபர்களாகவும், இவர்களே லைசென்சுகளை கொடுத்தும், இவர்களே, அதைப் பெற்றுக் கொள்வதும், இந்தியாவிலேயே முதல் முறை என்றால் அது மிகையாகாது.

இந்த கேடி சகோதரர்கள், இந்து பத்திரிக்கையின் பங்கை வாங்குவதற்கு முயற்சி எடுத்தார்கள் என்ற செய்தி உங்களில் பல பேருக்கு அதிர்ச்சியாக இருக்கும். கேடி சகோதரர்கள் சன் டிவி பங்குச் சந்தையில் நுழைந்த காலத்தில், அதன் மூலம் வந்த பெரிய வருவாயை வைத்து, இந்து பத்திரிக்கையில் பங்கை வாங்க முயற்சித்து, அது நிறைவேறாமல் போனது.

சன் டிவி உள்ளிட்டு, கேடி சகோதரர்கள் மொத்தம் 20 சேனல்களை பல்வேறு தென்னிந்திய மொழிகளில் நடத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டைப் போல, ஏகபோகம் அங்கே இல்லாவிட்டாலும், தமிழகத்தில் உள்ள, தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசும் மக்களின் ஒட்டு மொத்த கவனத்தையும் ஈர்த்து அதன் மூலம் பெரிய வருவாயை ஈட்ட கடுமையாக முயற்சித்து வருகிறார்கள்.

கேடி சகோதரர்களின் வெற்றிக்கு ஒரு முக்கியமான காரணம், வியாபார தந்திரம். ஒரு விஷயத்தை வியாபார ரீதியாக வெற்றி பெற வைக்க நூதனமான பல்வேறு தந்திரங்களை கையாளுவதில் கேடி சகோதரர்கள் சமர்த்தர்கள். தினகரன் நாளிதழை வாங்கியதும், வடிவமைப்பை மாற்றி வண்ணத்தில் கொண்டு வந்ததோடு, அதை வியாபார ரீதியாக வெற்றி பெற வைக்க மிகச் சிறந்த தந்திரத்தை கையாண்டார்கள். தினத்தந்தி 3 ரூபாய்க்கும், தினமணி 3 ரூபாய்க்கும், தினமலர் 3 ரூபாய்க்கும் விற்றுக் கொண்டிருந்த காலத்தில், தினகரனை 1 ரூபாய்க்கு வழங்கினார்கள். 1 ரூபாய் என்றதும், வியாபாரம் கொடிகட்டிப் பறந்தது. குறுகிய காலத்திலேயே சர்குலேஷன் பல மடங்கு உயர்ந்ததும், பத்திரிக்கை விலையை 2 ரூபாய் ஆக்கி விட்டு இன்று தமிழகத்தின் 2வதாக அதிகம் விற்பனையாகும் நாளிதழாக ஆக்கியிருக்கிறார்கள்.

இதே போல கேடி சகோதரர்கள் தொடங்கிய மாலை நாளிதழ் தமிழ் முரசு. சென்னையில் மாலையில் பரபரப்பாக பல வருடங்களாக கொடிகட்டிப் பறந்த மாலை நாளிதழ்கள் மாலை முரசு மற்றும் மாலை மலர். தமிழ் முரசு வெளியீடு தொடங்கியதும், தினந்தோறும், தமிழ் முரசோடு இலவசமாக ஏதாவது ஒரு பொருளை வழங்கினார்கள். அவ்வாறு இலவசமாக வழங்கப் படும் பொருள்களுக்கு இவர்கள் காசு செலவழிக்கப் போவது இல்லை.   சம்பந்தப் பட்ட பொருள்களை தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் விளம்பரத்திற்காக இலவசமாக வழங்கும் பொருட்களை இவர்கள் தமிழ் முரசோடு வழங்கி, தங்கள் விற்பனையை அதிகரித்துக் கொண்டார்கள். இது தவிரவும், குங்குமம், வண்ணத்திரை, முத்தாரம் என்று வார இதழ்களையும் நடத்தி வருகிறார்கள் கேடி சகோதரர்கள்.

இதற்கு அடுத்து கேடி சகோதரர்கள் இறங்கிய தொழில் திரைப்படத் தயாரிப்பு.   இவர்கள் திரைப்படத் தயாரிப்பில் இறங்கிய பிறகு, சன் டிவி தங்கள் வியாபாரத்துக்கான எத்தனை பெரிய அயோக்கத்தனத்தில் வேண்டுமானாலும் இறங்கும் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.

 

endhiran-movie-audio-launch-stills_36_085223123

சன் பிக்சர்ஸ் சார்பில் எடுக்கப் பட்ட முதல் படம் ‘காதலில் விழுந்தேன்’. அந்தப் படத்தில் ஒரு டப்பாங்குத்து பாடலை தவிர்த்து வேறு எதுவுமே இல்லை. மிகச் சுமாரான வசூலைப் பார்த்த அந்தப் படத்தை சன்டிவி டாப் டென் திரைப்படங்களில் முதலிடத்தை பிடித்ததாக தொடர்ந்து பல வாரங்களுக்கு ஒளிபரப்பியது, சன் டிவியின் மோசமான ஊடக தர்மத்தை வெளிப்படுத்தியது.

எந்திரன் என்ற ரஜினிகாந்த் நடித்த படத்துக்காக பெரிய பரபரப்பை ஏற்படுத்தி, இந்தியாவுல் ஏதோ யுகப்புரட்சி நடந்து விட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார்கள் கேடி சகோதரர்கள். இந்தத் திரைப்படம் எதிர்ப்பார்த்ததைப் போல ஓடவில்லை, விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தியது என்று ஒரு செய்தி போட்டதற்காக டெக்கான் க்ரானிக்கிள் மற்றும் தினமணி செய்தித் தாள்களை மிரட்டும் விதமாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியவர்கள் இந்த கேடி சகோதரர்கள் என்பதை மறந்து விடக் கூடாது.   அப்போது சவுக்கும் இதைப் பற்றி கண்டித்து எழுதியது.

அடுத்ததாக கேடி சகோதரர்கள் இறங்கிய தொழில் விமான சேவை. ஸ்பைஸ் ஜெட் விமான சேவை நிறுவனத்தில் பெரும்பான்மை பங்குகளை வாங்கி இன்று அந்த நிறுவனத்தை தங்களுக்குச் சொந்தமானதாக ஆக்கிக் கொண்டுள்ளனர் கேடி சகோதரர்கள்.   சமீபத்தில் ஜெயா டிவியில் வெளி வந்த செய்தி கேடி சகோதரர்களின் அயோக்கியத்தனத்துக்கு ஒரு சான்று.

Mr_Kalanithi_Maran

 

   திமுக சார்பாக, வாக்காளர்களுக்கு கொடுக்கப் படுவதற்காக பல்வேறு மூட்டைகள் ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் சரக்குகளாக தூத்துக்குடியில் வந்திறங்கி சோதனையில் அந்தப் பார்சல்கள் கைப்பற்றப் பட்ட செய்தி, அவ்வளவாக வெளியில் தெரியாமல் போனது.

கேடி சகோதரர்களின் விஷமத்தனத்துக்கு ஒரு நல்ல சான்று, அரசு கேபிள் கார்ப்பரேஷன். தினகரன் ஊழியர்கள் படுகொலைக்குப் பிறகு, குடும்பம் பிரிந்ததும், அரசுப் பணம் சும்மாதானே இருக்கிறது என்று கருணாநிதி அரசு கேபிள் கார்ப்பரேஷனை தொடங்கினார்.   லஞ்சம் வாங்கி சம்பாதிக்கத் தெரியாத உருப்படாத ஐஏஎஸ் அதிகாரியான உமாசங்கர், அந்த கார்ப்பரேஷனின் தலைவராக நியமிக்கப் பட்டு, மிக மிக சிறப்பான பணியை செய்தார்.   கோவை மாவட்டத்தில் முதல் முறையாக ஒளி இழை வடங்களை நிறுவி, கேபிள் மூலமாகவே, இணைய இணைப்பு, கேபிள் தொலைக்காட்சி போன்ற பல்வேறு சேவைகளை வழங்க முயற்சி எடுத்தார்.

 

uma-shankar-ias

அப்போது, கேடி சகோதரர்கள் அழகிரியோடு கடுமையான யுத்தத்தில் இருந்தார்கள்.   அரசே அவர்களுக்கு எதிராக இருந்தது. ஆனால், கேடி சகோதரர்கள் சற்றும் சளைக்காமல் ரவுடித்தனத்தில் ஈடுபட்டு, கம்பி வட இணைப்புகளை இரவோடு இரவாக அறுத்தெரிந்தார்கள். கம்பி வட இணைப்பு ஒரு முறை அறுக்கப் பட்டால், மீண்டும் மொத்தமாக புதிதாக நிறுவப்பட வேண்டும். பல முறை இவ்வாறு அறுக்கப் பட்டு புதிதாக நிறுவப்பட்டும், மீண்டும் மீண்டும் அதை அறுக்கும் வேலைகளில் கேடி சகோதரர்கள் ஈடுபட்டதை பொறுக்க முடியாமல் தான் உமாசங்கர், கம்பி வட இணைப்புகளை அறுப்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அனுமதி வேண்டும் என்ற அப்போதைய தலைமைச் செயலாளர் ஸ்ரீபதிக்கு கடிதம் எழுதினார். ஸ்ரீபதி, பெருமாள் கோயில் வாசலில் பிச்சை எடுப்பவனுக்கு இருக்கும் சுயமரியாதை கூட இல்லாத ஒரு நபர். அவரா நடவடிக்கை எடுப்பார் ?

அதிகாரம் இல்லாத போதே இவ்வாறு ரவுடித்தனத்தில் ஈடுபடுகிறார்கள் என்றால், கேடி சகோதரர்களின் துணிச்சலை புரிந்து கொள்ளுங்கள். இது தவிரவும், கேடி சகோதரர்களுக்கு திமுக கட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற கனவு உண்டு.   பிரிவு காலத்தின் போது, ‘மாறன் பேரவை’ என்ற பேரவையை தொடங்கி கட்சிக்குள் பிளவு ஏற்படுத்த முயற்சித்தவர்கள் தான் இவர்கள் என்பதை மறந்து விடக் கூடாது.

குடும்பம் பிரிவதற்கு முன்பு கூட, கட்சியை கைப்பற்றும் முயற்சியில் கேடி சகோதரகள் ஈடுபட்டே வந்தார்கள். கருணாநிதியோடு உரையாடிய ஒரு சமயத்தில், கலாநிதி மாறன், திமுக நிர்வாகிகள் அனைவருக்கும் ஒரு பொலிரோ ஜீப் வாங்கித் தர உத்தேசித்துள்ளதாக கருணாநிதியிடம் கூறிய போது தான், கருணாநிதி உஷாரானார்.   பிரிவு காலத்தின் போது, கேடி சகோதரர்கள் சார்பாக, தன்னிடம் பேச்சு வார்த்தை நடத்த வந்த வைரமுத்துவிடம், கருணாநிதி முரசொலி மாறன் தன் கண்ணின் மணிபோன்றவர் என்றும், ஒரு நாளும், தன்னுடைய நாற்காலிக்கு ஆசைப்பட்டவர் கிடையாது என்றும் சொல்லியிருக்கிறார்.

கேடி சகோதரர்கள் சந்தித்த முதல் நெருக்கடி, கலைஞர் டிவியின் தொடக்கம். கலைஞர் டிவி தொடங்கப் பட்ட போது, அங்கே பணியாற்றிக் கொண்டிருந்த 250க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப கலைஞர்கள், கலைஞர்கள் என ஒரே நாளில் கலைஞர் டிவிக்கு மாறினார்கள்.   இதற்கான முக்கிய காரணம் என்னவென்றால், இத்தனை கோடிகள் சம்பாதித்தாலும், ஊழியர்களுக்கு கப்பித் தனமாக குறைந்த சம்பளமே சன் டிவியில் வழங்கப் படும் என்பது. கலைஞர் டிவியில் கூடுதல் சம்பளம் கிடைக்கிறது என்றவுடன், பெரும்பாலான கலைஞர்கள் கிளம்பி விட்டார்கள்.

கேடி சகோதரர்களின் அராஜகம் ஒரு பக்கம் என்றால், அவர்களிடம் வேலை பார்க்கும் நபரும் அராஜகத்தில் ஈடுபடுவது என்பதுதான் வேதனையிலும் வேதனை. சரக்கடித்து விட்டு, பெண் விவகாரத்தில் ஏற்பட்ட ஒரு சாதாரண சண்டையை, ஆட்களை கூட்டிக் கொண்டு போய், ஒரு ஓட்டலை அடித்து நொறுக்கும் அளவுக்கு துணிச்சல் கொண்டவர்தான் ஹன்ஸ்ராஜ் சக்சேனா என்ற கேடி சகோதரர்களின் நம்பிக்கைக்குரிய கைத்தடி.

ayyanaar_2

 

jak-3

 

jak-6

 

இந்தத் துணிச்சல் வந்ததற்கு காரணம், கருணாநிதி முதல்வர் என்பதைத் தவிர வேறு என்ன ? அவர்களின் துணிச்சல் பொய்யானது இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், சென்னை மாநகர கமிஷனர் கண்ணாயிரம், இந்த விஷயத்தில் இது வரை ஒருவரைக் கூட கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது.

கேடி சகோதரர்களின் அதிகாரமும், அயோக்கியத்தனங்களும் தமிழகத்தில் பாயாத இடமே இல்லை எனலாம். அடுத்ததாக கேடி சகோதரர்கள் ரிலையன்ஸ் ப்ரேஷ் போன்ற ரீட்டெயில் வாணிபத்திலும் இறங்கத் திட்டமிட்டுள்ளனர் என்பதுதான் லேட்டஸ்ட் தகவல்.

டுமாரோ நெவர் டைஸ் என்று ஒரு ஜேம்ஸ் பாண்ட் படம் வரும். அந்தப் படத்தில் வரும் வில்லனுக்கு தொழிலே மீடியா அத்தனையையும் தன் கட்டுப் பாட்டில் வைத்திருப்பது.   அது எதற்காக என்றால், நாளை இந்த உலகம் என்ன படிக்க வேண்டும், எது செய்தியாக வேண்டும் என்பதை நான்தான் தீர்மானிப்பேன் என்று கூறுவார். ஏறக்குறைய அந்த வில்லன் போன்றவர்கள் தான் இந்த கேடி சகோதரர்கள்.

சமீபத்திய உதாரணம், அன்னா ஹசாரேவின் பட்டினிப் போராட்டம். அன்னா ஹசாரே பட்டினிப் போராட்டத்தை தொடங்கியதிலிருந்து, தேசிய காட்சி ஊடகங்களும், அச்சு ஊடகங்களும் இந்த செய்திக்கு கொடுத்த முக்கியத்துவத்தையும், அதையொட்டி, நாட்டில் உள்ள படித்த வர்க்கம் அனைத்தும் கிளர்ந்தெழுந்ததும் நம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம்.

 
dayanidhi-3

ஆனால் சன் டிவி, இது போன்ற ஒரு சம்பவமே நடக்காதது போல, வடிவேலுவின் பேச்சை ஒளிபரப்பிக் கொண்டிருந்தது என்றால், எத்தனை பெரிய அயோக்கியத்தனம் என்பதை நினைத்துப் பாருங்கள்.   நாடே பற்றிக் கொண்டு எறியும், ஒரு செய்தியை, அந்தச் செய்தி தேர்தலை பாதிக்கும் என்பதால், வெளியிடாமல் இருப்பது எத்தனை பெரிய துரோகம் ? அயோக்கியத்தனம் ?

கேடி சகோதரர்களின் மிகப் பெரிய பலமே, எஸ்சிவி தான். இந்த எஸ்சிவியின் கொட்டத்தை அடக்கினால், இவர்களின் ஏகபோகம் தானாக முடிவுக்கு வரும்.   இன்று சென்னையில் என்டிடிவி இந்து, பாலிமர், போன்ற பல்வேறு தொலைக்காட்சிகள் ஒழுங்காக தெரியாமல் இருக்கிறது என்றால், அதற்கு ஒரே காரணம், கேடி சகோதரர்கள் தான்.   வருடத்துக்கு இவர்களுக்கு ஐந்து கோடி கட்டினால் மட்டுமே, சம்பந்தப் பட்ட சேனல்கள் ப்ரைம் பாண்டில் வைக்கப் படும். இல்லயென்றால், சுத்தமாக தெரியாத வண்ணம் பார்த்துக் கொள்வார்கள்.

நான்கு வருடங்களாக அமைதியாக இருந்து விட்டு, இன்று திடீரென கருணாநிதி குடும்பத்தை உறித்து தொங்க விட்டுக் கொண்டிருக்கும் விகடன் குழுமத்திலும், கணிசமான பங்குகளை கேடி சகோதரர்கள் வாங்கியிருக்கிறார்கள் என்பது பரவலாக பத்திரிக்கையாளர்கள் மத்தியில் உலவும் செய்தி.   திமுக குடும்பத்தைப் பற்றி இத்தனை செய்திகள் வெளியிட்டாலும், விகடன் குழுமம், கேடி சகோதரர்களைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல், கவனமாக மவுனம் சாதிப்பது, இந்தத் தகவலை உறுதிப் படுத்துகிறது.

கருணாநிதி ஆட்சி வீழ்த்தப் பட வேண்டியதன் அவசியம், கருணாநிதி மற்றும் அவர் குடும்பத்தினரின் அட்டூழியங்கள் மட்டுமல்ல…..   கேடி சகோதரர்கள் என்ற ஆக்டோபஸ், தமிழகத்தை கபளீகரம் செய்யாமல் இருப்பதற்காகவுமே…..

 

Comments  

 
-1 #105 suresh pdy 2011-08-10 11:52
இந்த நாய்களை நிரந்தரமாக புறகணிக்க வேண்டும்
Quote
 
 
+1 #104 pushparaj 2011-08-06 17:32
[ஃஉஒடெ நமெ="நாய் சேகர்"]கருணாநிதி குடும்பம் மற்றும் சன் நிறுவனம் பல துறைகளை தன் பிடியில் கொண்டுவந்துவிட் டது, இதை யாரும் தடுக்க முடியாது போன்றதொரு தோற்றத்தை எல்லோருமே எழுதவும், சொல்லவும் கேட்டுக்கொண்டேய ுள்ளோம். இது பெரும் மடத்தனமன்றி வேறென்ன? அவர்களின் பொருட்களை வாங்குவதை நிற்த்திவிட்டால ் தானாக வழிக்குவருவார்க ள். அவர்களின் பத்த்ரிக்கைகளை இலவச இனைப்புக்காக்வோ அல்லது வேறு காரணத்திற்காகவோ வாங்காதீர்கள். அவர்களின் படத்தை, சீரியலை பார்க்காதீர்கள் அல்லது படத்தை திருட்டு விசிடியில் ம்ட்டுமே பாருங்கள், அவர்களை அவர்கள் வழியிலேயே வழிக்குகொண்டுவர ும் வித்தை நம்மிடம் உள்ளது. வெண்ணயை கையில் வைத்துக்கொண்டு நெய்யிற்கு அலைவது முட்டாள்தனம்தான ே? கயவர்களின் பொருட்களை வாங்கமாட்டோம் என்று உறுதியெடுப்போம் , கயவர்களை வேரறுப்போம்.[/ஃஉஒடெ]
அருமையான கருத்து.
Quote
 
 
+1 #103 r 2011-05-15 09:42
i agree
Quote
 
 
-1 #102 nediyon 2011-05-05 12:58
Excellent analysis. Thanks for bringing this to lime light. We need patriots now, belonging to any religion, to rule this nation in state and at centre.

Regards,
Nediyon
Quote
 
 
+2 #101 N. Prabu 2011-04-30 12:21
this brothers are dangerous brother for tamilnad and tamil media world
Quote
 
 
0 #100 yuvaraj 2011-04-20 19:58
first unnoda correct name sollu,pambalakk adi pamba
Quote
 
 
+2 #99 koomaresun 2011-04-20 15:29
Coat suit pottavanellam nallavan illai enbathai intha seithi uruthi seithu irukkirathu...Ungaloda nermaiana intha news ku en manamarntha parattukkal....
Quote
 
 
-6 #98 ELAVARASAN 2011-04-20 12:22
I am neither DMK or other party supporter. But to be honest all the comments given here on this article is just impressive and a good time pass its a kinda entertainment we use to get while watching the channel that were mentioned in this article. I would sincerely suggest you all to behave like a ward of good parents rather than born due to their sexual pleasure. Can anybody tell me what can be done to abolish this activity ? Do you and your family, relatives, friends have the tendency to stop watching their channels thereby bringing a dramatic change in the TRP of Sun network that would definitely leads to fall of the SUN NETWORK share price and empire. If you are really born for good parents do this, else all the comments recorded here will be taken as the post done by a victim of two individuals sexual pleasure.
Quote
 
 
+1 #97 Chandran 2011-04-19 09:32
I appreciate the beautiful family of Dr.Karunanithi and His Loving family, because of this family our Tamil Nadu has seen the revival in it. the blind people of NT could begin to see in every aspect of this world. let them grow for the glory of our state Tamil Nadu. May God help them.
Quote
 
 
+2 #96 poornima 2011-04-16 08:19
wonderful news. will it hit the headlines. Who will see it? You have to go to SCV for going public. Will Madam jayalalitha be in a position to do the job of foreclosing their atrocity? Did you probe into the nexus between these two warring groups. They are the Maharaja of this country. I am only astonished they have not entered directly in automobile industry. Instead of blaming them kindly educate the public. Let me furnish you an information wherein the lands belonging to the temple had been bartered by the Government of Tamil Nadu headed by Kr. Kalaignar to Mr. palanaisami of Karur, the sand t. f. Why did this subject not made public. ARe you aware that a property beloning to a religious group had been removed from its custody to pave way for the KD brother's property? More shock will await you. Keep publising and expose all these rascals for the betterment of the Country. Jai Ho.
Quote
 
 
+1 #95 Dravid 2011-04-16 01:26
Kalanithi Maran seems to be a sinister think tank like his father and Dayanithi Maran looks more or less like a joker....making jokes even when chatting with Sonia Gandhi!
Quote
 
 
+2 #94 aboo 2011-04-15 23:58
kalaanithimaran +thayaanithimar an+karunaanithi ==aniyaayam,attul iyam
Quote
 
 
+2 #93 solomon 2011-04-15 16:45
Hi as per you its 100% true. Kedi brothers are big criminals in this world. I never forgot Madurai incident. The Victims family sin definitely kill these idiots.
Quote
 
 
+4 #92 உண்மை 2011-04-15 15:18
சவுக்கு- பெயருக்கு ஏற்றவாறு உண்மையை தைரியமாக சொன்னீர்கள். பாராட்டுக்கள்.
Quote
 
 
+2 #91 உண்மை 2011-04-15 15:12
எவ்வளவு கொள்ளை அடித்தும் இவங்களுக்கு இன்னும் ஆசை அடங்கலபா
Quote
 
 
+1 #90 Robert 2011-04-15 12:44
KDs had tacken over the Aircel and they had bought two charted flights any many is missing
Quote
 
 
+1 #89 Soma sundaram 2011-04-14 13:46
Hi!

I very much appreciate the team of savukku.net for their investigative journalism bringing to lime light the hugh corruption committed by the Indian Politicians! :eek: Well done! Keep it up!! :lol:
Quote
 
 
+2 #88 Soma sundaram 2011-04-14 13:40
Hi!
It is shocking to note the tune of millions swindled by the Maran group and the dictatorship and dominence attitude of their practices despite their humble and decent look. I thought since they are educated they will be different from the fellow uneducated politicians. But they look worst and dangerous!!!
Quote
 
 
+2 #87 Tamilan1234 2011-04-14 11:14
KD brothers want to die otherwise we want to kill
Quote
 
 
+1 #86 Tamilan1234 2011-04-14 11:13
we will teach a new lesson to them pls wait only 30days then you want to suicide your self. then only we are celebrating the Tamil new year
Quote
 
 
+3 #85 ramss 2011-04-13 22:11
cimema yeduthu loss kanakku kaatura indha brothers really KD brothers thaan...
Quote
 
 
-3 #84 Kelvi_ketkkumTamilan 2011-04-13 13:43
Ivlo naal ithellaam sollaama, savukku enna pannittu irunthathu. Election timela mattum ithellam solreenga. Neemga ADMKla panam vaangittu ithelaam podureengala.
Quote
 
 
+1 #83 prasath 2011-04-13 13:07
change is soon
Quote
 
 
+1 #82 subhasahish 2011-04-13 11:56
neegal ellam vazhanuma.paru ungaluku vaikarum appu. :oops:
Quote
 
 
+1 #81 mani_xxx 2011-04-13 09:10
ivarkalin kalam aliya pothu kootiya viraivil
Quote
 
 
0 #80 Murthilingam 2011-04-13 02:33
Its True....
Quote
 
 
+1 #79 sen 2011-04-12 23:01
this is true .. neeti adi sir .. kedi bro voliga
Quote
 
 
+3 #78 qboy 2011-04-12 20:58
கேடி பிரதர்ஸின் சாம்ராஜ்யம் ரெம்ப நாள் நீடிக்கா
Think before vote
Quote
 
 
-1 #77 nithi 2011-04-12 20:54
! How can we stop this corrupted government? Not only DMK! Most of the politicians are like this. Instead of giving things free, they can give right job for people to earn. For that, right education system is required, education system is required, Everywhere, corruption has reached its height. Eventually, all these affect the general public and nation’s growth. What can be done? Can we protest this? If so, by what means? It’s high time, we should think that first. How to identify the right people for right government? Now, mass communication is really excellent. It would not be so difficult to communicate to all. We can do mass protestation! We should mind that Egypt government has changed because of Mass Protestation.
Quote
 
 
+1 #76 onai pol oruvan 2011-04-12 18:48
Nothing can do now, all went above head...

(Don't tamil font to type in...)
Quote
 
 
+2 #75 gopas 2011-04-12 16:33
like anna hazare a strong public silent protest must take place in tamilnadu against corruption.
Quote
 
 
-1 #74 makkal virumbi 2011-04-12 16:31
indha kedu ketta arasialai olippadharkku endha makkalukkum sakthi illamal poi vittadha? illai payabpudkirarga la? endru ariyavillai . indha soolnilail yarukku oattu poduvadhu enra perum kulappam poi yaru adhigam panam kudukkirargalo avargalukkuthan enru mudivu agivittadhu. irundhum idharku murrupulli eppadi engay eppodhu edirparpugalodu .
ippadikku makkal virumbi kumbakonam
Quote
 
 
+7 #73 சுகுமார் 2011-04-12 15:03
சவுக்கு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் .....
தமிழக மக்களை முட்டாளாக்க மறுபடியும் அதே கேசட்டை ஒளிபரப்ப தொடங்கிவிட்டனர் .... ஆனால் சற்றே மாறுபட்ட கோணத்தில்.... ஆம் இந்த முறை நியாபகம் வருதே பாடலுடன்.... உண்மையில் சமுதாயத்தின் வளர்ச்சியில் அக்கறை இருந்தால் ஸ்பெக்ட்ரம் ராஜா கைதையும் ஒளிபரப்பட்டும் பார்க்கலாம்.....
ஈனப்பிறவிகள்...
Quote
 
 
+16 #72 நாய் சேகர் 2011-04-12 10:46
கருணாநிதி குடும்பம் மற்றும் சன் நிறுவனம் பல துறைகளை தன் பிடியில் கொண்டுவந்துவிட் டது, இதை யாரும் தடுக்க முடியாது போன்றதொரு தோற்றத்தை எல்லோருமே எழுதவும், சொல்லவும் கேட்டுக்கொண்டேய ுள்ளோம். இது பெரும் மடத்தனமன்றி வேறென்ன? அவர்களின் பொருட்களை வாங்குவதை நிற்த்திவிட்டால ் தானாக வழிக்குவருவார்க ள். அவர்களின் பத்த்ரிக்கைகளை இலவச இனைப்புக்காக்வோ அல்லது வேறு காரணத்திற்காகவோ வாங்காதீர்கள். அவர்களின் படத்தை, சீரியலை பார்க்காதீர்கள் அல்லது படத்தை திருட்டு விசிடியில் ம்ட்டுமே பாருங்கள், அவர்களை அவர்கள் வழியிலேயே வழிக்குகொண்டுவர ும் வித்தை நம்மிடம் உள்ளது. வெண்ணயை கையில் வைத்துக்கொண்டு நெய்யிற்கு அலைவது முட்டாள்தனம்தான ே? கயவர்களின் பொருட்களை வாங்கமாட்டோம் என்று உறுதியெடுப்போம் , கயவர்களை வேரறுப்போம்.
Quote
 
 
+6 #71 KK 2011-04-12 08:49
Jayalalitha is the only MAN in Tamilnadu politics who can take on KD brothers

VOTING FOR JAYA is historical necessity
Last chance for Tamils
Quote
 
 
+1 #70 top guy 2011-04-12 03:44
இதற்கு திண்டுக்கல் லியோனியை போட்டு ஒரு பட்டிமன்றமே வைக்கலாம் Karunanithiyaa illai Kedi Brothrsaa endru
Quote
 
 
+3 #69 Kudimagan 2011-04-12 01:02
நாசமா போவீங்க....உங்களுக்கு ஆப்பு நிச்சயம் வரும்...
Quote
 
 
+16 #68 ம.பொன்ராஜ் 2011-04-12 00:43
செய்திகளை மட்டும் அல்ல... திரைப் படங்களையும் இந்த கேடி பிரதர்ஸ் எப்படி எடிட்டிங் என்கிற பெயரில் தங்களுக்கு வேண்டாத விஷயங்களை நீக்குகிறார்கள் என்பதற்கு ஒரு சில உதாரங்கள்.
1 . 'பேசாம பேசாம இருந்து' என்கிற சீமானின் பாடல் நீக்கப்பட்டே 'மாயாண்டி குடும்பத்தார்' ஒளிபரப்பப் படும்.
2 . ரன் திரைபடத்தில் விவேக்கின் காமெடி வசனம்:
'மத்தவன் பேச்சை கேட்காதே. பெத்தவன் பேச்சை கேளு. சும்மா இருக்காதே. அம்மா தான் எல்லாம்" ... இதில் 'அம்மா தான் எல்லாம்' என்கிற வரிகள் நீக்கப்பட்டே ஒளிபரப்பபடும்.
3 கவுண்டமணியின் 'அமைச்சர் பொன்னுரங்கம்' காமெடி. காட்சி 'கவுண்டமணி பி எvaana செந்தில் மக்களிடம் மனு வாங்குகிறார்'
"ஏண்டா மனு வாங்கின... இந்த எழவை வாங்கி என்ன நடக்கப் போகுது". இதில் "இந்த எழவை வாங்கி என்ன நடக்க போகுது" என்கிற வரிகள் நீக்கப் பட்டிருக்கும்.
4 .ஜென்டில் மென் படம்: காட்சி: எம்.எல்.ஏவின் வைப்பாட்டியின் வீட்டில் அர்ஜுனும், விநீத்தும் மெடிகல் சீட்டுக்காக சந்தித்தல்.
"எலெக்ஷனுக்கு 20 லட்சம் வாரி இறைச்சிருக்கொமே அந்த காசை எல்லாம் எப்படி எடுக்குறது? பொது பணிதுறையா... போட்ட காசை பட்டுன்னு எடுக்குறதுக்கு..? இல்லை சாராய இலாகாவா? ஊத்திகினே இருக்கிறதுக்கு?" இதில் 'பொதுப் பணித்துறை தொடங்கி ஊத்திகினே இருக்கறது' வரை வரிகள் நீக்கப் படும்.
Quote
 
 
+4 #67 ம.பொன்ராஜ் 2011-04-12 00:26
வாசகர்கள் அடுத்தமுறை 'சன்' தொலைக் காட்ச்சியில் 'வாஞ்சிநாதன்' என்ற விஜயகாந்த், பிரகாஸ்ராஜ் நடித்த திரைப்படம் வந்தால் பார்க்கவும். கலாநிதி மாறன் என்கிற மகா மீடியா கேடியின் நடவடிக்கைகளை அப்பட்டமாக வெளிபடுத்தியே 'பிரகாஸ்ராஜ்' கதாபாத்திரம் உருவாக்கப் பட்டிருக்கும். 'தான் எப்பேர்பட்ட அயோக்கியன்' என்பதை உலகுக்கு காட்டும் எண்ணம் அன்றி வேறொண்டும் இல்லை.
Quote
 
 
+14 #66 ம.பொன்ராஜ் 2011-04-12 00:12
//திமுக குடும்பத்தைப் பற்றி இத்தனை செய்திகள் வெளியிட்டாலும், விகடன் குழுமம், கேடி சகோதரர்களைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல், கவனமாக மவுனம் சாதிப்பது, இந்தத் தகவலை உறுதிப் படுத்துகிறது.//இது நூற்றுக்கு நூறு உண்மை. ஒரு காலத்தில் நான் விகடன் வாசகனாக அதில் எழுதிய பின்னூட்டம்: "இறுதிகட்ட போரில் மக்கள் கொத்துகொத்தாக இறந்ததை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாத சன் டி.வி , புலிகளிடம் இருந்து மக்கள் தப்பித்து பாதுகாப்பு வளையத்தை நோக்கி சாரை சாரையாக வருகின்றனர் என்று சேதி ஒளிபரப்பியது. நான் பார்த்துக் கொண்டிருப்பது தமிழக ஊடகமா அலல்து இலங்கை ஊடகமா என்று குழம்பிப் போனேன்.".... இதை விகடன் திரித்து "இறுதிகட்ட போரில் மக்கள் கொத்துகொத்தாக இறந்ததை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாத (சன்னை நீக்கிவிட்டார்க ள்) டி.வி , புலிகளிடம் இருந்து மக்கள் தப்பித்து பாதுகாப்பு வளையத்தை நோக்கி சாரை சாரையாக வருகின்றனர் என்று சேதி ஒளிபரப்பியது. நான் பார்த்துக் கொண்டிருப்பது தமிழக ஊடகமா அலல்து இலங்கை ஊடகமா என்று குழம்பிப் போனேன்." நிற்க. எனது கருத்தை முற்றிலுமாக புறக்கணிக்கவோ, அல்லது வெளியிடவோ தான் விகடனுக்கு உரிமை உண்டு. அதை திரித்து அவர்கள் இஷ்டம் போல வெளியிட விகடனுக்கு உரிமை இல்லை என்று பொட்டில் அடித்தது போல அவர்களுக்கு மெயில் அனுப்பியும் அவர்கள் திருந்தியபாடில் லை. அதனால் வெறுத்து போய் ஒதுங்கியவன் தான். அன்றில் இருந்து விகடன் படிப்பதும் இல்லை, வாங்குவது இல்லை, பின்னூட்டம் இடுவது இல்லை.
Quote
 
 
-10 #65 அப்துல் குத்தூஸ் 2011-04-11 23:04
நீங்க வெளியிட்டதை தமுமுகவினர் ரொம்ப பெருமையாக பரப்புகிறார்கள் . அதனால் அப்படியே தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ் சொன்னதையும் இதில் சேர்த்துக்கங்க தொட்ச்சி 10 ஜெயலலிதாவோ ""பாஜகவுடன் கூட்டு சேர மாட்டேன்'' என்று கூறிவிட்டு, மீண்டும் கூட்டு சேர்ந்து வாக்குறுதியை மீறி முஸ்லிம்களை வேதனைப்படுத்தின ார்.
ஜெயலலிதா நம்பிக்கைக்குரி யவர் அல்ல, அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆர்எஸ்எஸ்#ன் எண்ணங்களைத்தான் அமல்படுத்துவார் என்பதை சமுதாயம் சிந்தித்து செயல்பட வேண்டும்.
ஜெயலலிதா அரசினால் எல்லோருக்கும் துன்பம்!
வெள்ள நிவாரண நிதி என்ற பெயரில் 50க்கும் மேற்பட்ட உயிர்கள் பறிபோகக் காரணமாக இருந்தது
ஏழை விவசாயிகளை எலிக்கறி உண்ணும் நிலைக்குத் தள்ளியது
லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை வஞ்சித்தது
போலீஸ் இலாகாவைப் பயன்படுத்தி பொதுமக்களை மிரட்டியது
# என எல்லாத் தரப்பு மக்களையும் துன்பத்தில் ஆழ்த்தியவர் ஜெயலலிதா.
எனவே அன்பிற்கினிய சமுதாயமே... நமது சமுதாயத்திற்கு இடஒதுக்கீடும் தராமல், 8 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்களுக்கு ஜாமீனும் வழங்காமல் ஆட்சியின் இறுதியில் நாடகமாடும் ஜெயலலிதா அரசை வீட்டுக்கு அனுப்புவோம்.
மத்திய மாநில அரசுகளில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு
சிறைவாசிகளுக்கு ஜாமீனில் விடுதலை
ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதி கொடுத்திருக்கும ் திமுக தலைமை யிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு நமது வாக்குகளை அளிப்போம்.-----------------------இதில் நான் எதுவும் எக்ஸ்ட்ரா சேர்க்கலைங்க. தமுமுக தலைவர் சொன்னது தான் இது. ஆனால் மூணு சீட்டு கிடைச்சவுடன் எப்படி தலைகீழா பேசுறாங்க பார்த்தீங்களா! இவங்களை முஸ்லிம்கள் என்று சொல்வதற்கு எங்களுக்கு ரொம்ப வெட்கமா இருக்குங்க...
Quote
 
 
+3 #64 Man 2011-04-11 22:29
இதை எல்லாம் தமிழ் மக்கள் நன்றாக சிந்தித்து வோட்டு போடவேண்டும் 
Quote
 
 
+2 #63 nithi 2011-04-11 21:11
All! How can we stop this corrupted government? Not only DMK! Most of the politicians are like this. Instead of giving things free, they can give right job for people to earn. For that, right education system is required, education system is required, Everywhere, corruption has reached its height. Eventually, all these affect the general public and nation’s growth. What can be done? Can we protest this? If so, by what means? It’s high time, we should think that first. How to identify the right people for right government? Now, mass communication is really excellent. It would not be so difficult to communicate to all. We can do mass protestation! We should mind that Egypt government changed because of Mass
Quote
 
 
+4 #62 நாய் சேகர் 2011-04-11 20:48
கருணாநிதிக்கு வேட்டு வைக்கபோவதே இந்த் கேடி பிரதர்ஸ்தான். இப்போது அட்கக்கி வாசிக்கிறார்கள் , ஆட்சி மாறினால் தஙகள் தொழிலை காப்பற்ற என்னவேண்டுமானலு ம் செய்வார்கள். இருக்கின்ற கருப்பு பணத்தையெல்லாம் சினிமா எடுத்து வெள்ளையாக்கிவிட ்டார்கள். இவர்கள் என்னமே ஸ்டாலினை வைத்து அரசியலை தங்கள் பிடிக்குள் கொண்டுவருவதே. அவரின் திறமையின்மை, அதே வேளையில் அவரின் பெயர் இவர்களுக்கு உதவும். கேபிள் டிவி அரசுடமை, டிடிஹெச் சேவயை அரசாங்கம் எடுத்தாலே இவர்களின் கொட்டம் அடங்கும். இவர்களின் அட்டூழியத்தால் காத்துக்கொண்டு உள்ளார்கள். பெரும்பான்மையான நிறுவனங்கள் தங்கள் சொந்த கட்டிடத்திற்கு சென்றால் ஒரு பெரும் பின்னடைவு வரும் என்பார்கள். இப்பொழுது நேரம் எல்லாம் சரியகியுள்ளது, ஆட்சி மாற்றம் வரும், இவர்களுக்கு ஆப்பும் வரும்.
Quote
 
 
+7 #61 tamilkudimagan 2011-04-11 18:40
எல்லாரும் கலர் டிவி கொடுகிறார்கள் என்றதும் மகிழ்ச்சி அடைந்தார்கள் ஆனால் அதன் பின்னணி என்ன தெரியுமா ?? கலர் டிவி கொடுத்ததற்கான மொத்த பணம் 3000 கோடி ஆனால் அந்த டிவி முலம் பார்க்கும் கேபிள் டிவி வருமானம் கலைஞர் டிவி க்கு வருடம் 15000 கோடி , தன் சுய லாபத்திற்காக அரசாங்க பணத்தையே இலவச டிவி என்ற பெயரில் கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார் ...Think before vote
Quote
 
 
+10 #60 Force 2011-04-11 14:49
2ஜியில் விந்தையான‌ விச‌ய‌ம் என்ன‌வெனில், திரு ர‌த்த‌ன் டாடா 'முந்தைய‌ ம‌த்திய‌ அமைச்ச‌ர்' ராஜாவின் சிற‌ந்த‌ செயலாற்ற‌ல் பற்றிய‌ பாராட்டுக் க‌டித‌த்தை, பிர‌த‌ம‌ருக்கு அனுப்பாம‌ல், மாநில‌ முத‌ல்வ‌ருக்கு த‌னி ஆள் மூல‌ம் அனுப்பபிய‌து‌? மேலும், ப‌ழைய‌ தொலை தொட‌ர்பு அமைச்ச‌ர், 'திரு த‌யாநிதிக்கும் எனக்கும் ப‌ர‌ஸ்ப‌ர‌ம்(கெ மிஸ்ட்ரி) ஒத்துப் போக‌வில்லை என்கிறார். ராடியாவின் ஒலிநாடா கசிந்த‌ ச‌ம‌யத்தில் ஆங்கில டிவிக்கு இவ‌ரே த‌யாநிதி "மிகவும் புத்திசாலி, வெகு சாம‌ர்த்திய‌சால ி" என்ற‌ வ‌ஞ்ச‌கச் சான்றித‌ழும் தந்திருக்கிறார் . இவ‌ர்(த‌யாநிதி) ப‌த‌விக்கு வ‌ந்துவிட‌க் கூடாதென்று தான் டாடாவும்,ரிலைய‌ ன்சும், ராஜாவும், க‌னிமொழியும், நீரா ராடியாவை ப‌ய‌ன்ப‌டித்தி, அதிகார‌ம் சார்ந்த‌ அனைவ‌ரிட‌மும் அவ‌ர‌து தொட‌ர்புத் திற‌னால் காரிய‌த்தைச் சாதித்த‌ன‌ர். சுருக்க‌மாய் சொல்வ‌த‌னால், த‌யாநிதியின் அதிகார‌ துஷ்பிர‌யோக‌த்த ை டாடா போன்ற‌வ‌ர்க‌ளால ேயே, நேர் வ‌ழியில் க‌ட்டுப்ப‌டுத்த ‌ப்ப‌ட‌ முடிய‌வில்லை. ஆக‌வே ராஜாவை கொண்டுவ‌ந்து த‌யாநிதியின் 'தொல்லை தொட‌ர்பை' துண்டிக்க முடிந்த‌து.

சிவ‌ராஜ் ப‌டீல் ஒரு ந‌பர் க‌மிஷன் அறிக்கை சார்ந்து சிபிஐ விசாரணையில் திரு அருண்ஷோரி, திரு த‌யாநிதியின் (2006/2007)காலக‌ட்ட‌த ்தில் தான், டிராய் ஒழுங்குமுறை விதிக‌ள் மாற்றப் ப‌ட்டிருக்கிற‌த ு என்கிறார். அப்ப‌டியானால், இன்னும் இவரை ஏன் சிபிஐ விசாரிக்காம‌ல் இருக்கிற‌து? இவ‌ரோ இன்னும், முக‌த்தில் வ‌ழியும் பொய்ச் சிரிப்போடு தாத்தாவுக்கும், மாமாவுக்கும் வாக்குச் சேக‌ரிக்கும் வேலையில் பிசியாய் இருக்கிறார்.
Quote
 
 
+14 #59 raju 2011-04-11 11:05
டேய் தயாநிதி நீ கொள்ளை அடித்தது மக்கள் நிதி!!
எப்போது கிடைக்கும் இதற்கு நீதி!!
உன் டிவியில் உண்மையோ பாதி ஒளித்து மறைத்தாய் பாதி ஊதி பெருக்கினாய் மீதி!!
மொத்தத்தில் உங்கள் குடும்பம் சுருட்டியது தமிழ்நாட்டில் பாதி!!
மீண்டும் நாங்கள் தவறுசெய்தால் நீ சுருட்டபாற்பது இந்தியாவிலேயே பாதி!!
பாவப்பட்ட மக்களுக்கு இல்லை நாதி!!
தமிழன் என்பது எங்கள் சாதி!! வரும் தேர்தலில் நிலைநாட்டுவோம் நீதி!!
அதன்பின் உங்கள் கூட்டத்திற்கே பேதி!!
Quote
 
 
+32 #58 ம.பொன்ராஜ் 2011-04-11 09:02
சவுக்கு வாசகர்களுக்கு ஒரு நற்செய்தி. இந்த தேர்தலுடன் ஏதாவது ஒரு கட்சி காணாமல் போகும். அதிமுக வெற்றி பெற்றால் திமுக இருக்காது.. அல்லது திமுக ஜெயித்தால் அதிமுக இருக்காது... இதில் வேடிக்கை என்னவென்றால் அதிமுக வெற்றி பெற்றால் திமுகவை வீழ்த்த அது எந்தவித சிரமும் எடுக்க வேண்டாம். மாறாக 1 .கலைஞர் அன்னாவடி சேர்வார். 2 திமுக (ஸ்டாலின் குரூப், அழகிரி குரூப், கனிமொழி குரூப், கேடி பிரதர்ஸ் குரூப்) என்று குறைந்தபட்சம் நான்காக உடையும். நாளடைவில் கேடு குரூப் மட்டுமே எஞ்சி இருக்கும். அதுவும் விரைவில் காங்கிரசுடன் இணைக்கப் பட்டு, திமுக என்கிற கட்சி இருந்ததற்கான சுவடே இல்லாமல் போகும். 2016 தேர்தல் இன்னும் சுவாரசியமாக இருக்கும் என்று நம்புகிறேன். ஒரு தமிழனாக, அவன் எழுதிருக்க ஒரு மகத்தான ஒரு செயல் 2016 ல் நடக்கும் என்று நம்புகிறேன்.
Quote
 
 
+7 #57 top guy 2011-04-11 02:43
டேய் தயாநிதி நீ கொள்ளை அடித்தது மக்கள் நிதி!!
எப்போது கிடைக்கும் இதற்கு நீதி!!
உன் டிவியில் உண்மையோ பாதி ஒளித்து மறைத்தாய் பாதி ஊதி பெருக்கினாய் மீதி!!
மொத்தத்தில் உங்கள் குடும்பம் சுருட்டியது தமிழ்நாட்டில் பாதி!!
மீண்டும் நாங்கள் தவறுசெய்தால் நீ சுருட்டபாற்பது இந்தியாவிலேயே பாதி!!
பாவப்பட்ட மக்களுக்கு இல்லை நாதி!!
தமிழன் என்பது எங்கள் சாதி!! வரும் தேர்தலில் நிலைநாட்டுவோம் நீதி!!
அதன்பின் உங்கள் கூட்டத்திற்கே பேதி!!
Quote
 
 
+6 #56 top guy 2011-04-11 02:41
டேய் தயாநிதி நீ கொள்ளை அடித்தது மக்கள் நிதி !!
எப்போது கிடைக்கும் இதற்கு நீதி!!
உன் டிவியில் உண்மையோ பாதி ஒளித்து மறைத்தாய் பாதி ஊதி பெருக்கினாய் மீதி!!
மொத்தத்தில் உங்கள் குடும்பம் சுருட்டியது தமிழ்நாட்டில் பாதி!!
மீண்டும் நாங்கள் தவறுசெய்தால் நீ சுருட்டபாற்பது இந்தியாவிலேயே பாதி!!
பாவப்பட்ட மக்களுக்கு இல்லை நாதி!!
தமிழன் என்பது எங்கள் சாதி!! வரும் தேர்தலில் நிலைநாட்டுவோம் நீதி!!
அதன்பின் உங்கள் கூட்டத்திற்கே பேதி!!
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 140 விருந்தினர்கள் மற்றும் 1 உறுப்பினர்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

தமிழ்லீடர்

tamilleader

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4726
mod_vvisit_counterYesterday9838
mod_vvisit_counterThis week57463
mod_vvisit_counterLast week67096
mod_vvisit_counterThis month176271
mod_vvisit_counterLast month297247
mod_vvisit_counterAll days8391999