முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
இனிக்காத சர்க்காரியா பாகம் 2 அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 13
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
சனிக்கிழமை, 05 மார்ச் 2011 01:55

இனிக்காத சர்க்காரியா முதல் பாகம் எழுதியதையடுத்து, பின்னூட்டங்களில் பல கண்டனங்கள் வந்திருந்தன. ராசாத்தி அம்மாளின் தனிப்பட்ட வாழ்க்கையையும், கருணாநிதியின் தனிப்பட்ட வாழ்க்கையையும் எழுதுவதால் யாருக்கு என்ன பயன் என்று ? அதற்கு பதில் எழுதியிருந்தாலும், மேலும் சில கண்டனங்கள் வரத்தான் செய்தன.

 

அது முதல் பாகம் தோழர்களே… இந்த இரண்டாவது பாகத்தை படியுங்கள்.   படித்துவிட்டு, முதல் பாகம் அவசியமா இல்லையா என்று நீங்களே முடிவு செய்யுங்கள்.

 

“1969ம் ஆண்டு ஜனவரி மாதம் 20ம் நாளில் திருமதி, தர்மா, சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் எண் 9, முதல் குறுக்குத் தெருவில் உள்ள வீட்டை திருமதி.ஈ.எல்.விசுவாசம் என்பவரிடமிருந்து ரூ.57,000 க்கு கிரயத்திற்கு வாங்கியதாக கூறப்படுகிறது.

 

1970ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 21ம் நாளில் திருமதி.தர்மா அதே வீட்டை 60 ஆயிரத்திற்கு விற்று விட்டார். இதற்கு பதிவுப் பத்திரம் ஒன்றும் இருக்கிறது. (ஆவணம் எண் 1523/70). அந்த விற்பனைப் பத்திரத்தில் பதிவாளர், அந்த வீட்டை வாங்குபவரான டி.கே.கபாலி, ராஜாத்தி என்ற திருமதி தர்மாவுக்கு ரூ 14,000 ரொக்கம் தம் முன்னிலையில் கொடுத்ததாக எழுதி வைத்திருக்கிறார். அதே நாளன்று திருமதி தர்மா பதிவு செய்யப் படாத குத்தகைப் பத்திரம் ஒன்றை டி.கே.கபாலியின் பெயருக்கு எழுதிக் கொடுத்துள்ளார். அதன் படி மாதம் ரூ.300 அவருக்கு வாடகையாக கொடுக்க வேண்டும்.

 DSC_9069

1972ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ம் நாளில் கபாலி இந்த வீட்டை திருமதி தர்மாவின் தாயார் திருமதி.சிவபாக்கியம் அம்மாளக்கு ரூ.45 ஆயிரத்துக்கு விற்றார். இதற்குப் பதிவு பெற்ற பத்திரம் ஒன்று இருக்கிறது. இந்த வீட்ப் பொறுத்தவரையில் சிவபாக்கியம் அம்மாள் 1972ம் ஆண்டு மார்ச்சு மாதம் 20ம் நாளில் அவரது மகள் திருமதி.தர்மா, தர்மாவின் மகள் கனிமொழி ஆகியோரின் பெயருக்குச் செட்டில்மென்ட் பத்திரம் ஒன்றை எழுதிக் கொடுத்தார். இந்தப் பத்திரத்தில் மேற்படி சொத்து அவர் மரணத்துக்குப் பின்னர் அவர்களைச் சேரும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

 

இந்த நான்கு விவகாரங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் மேலும் சில விவரங்களை இங்கே குறிப்பிடலாம்.

 

முதற்கண் 1969ம் ஆண்டு, ஜனவரி மாதம் 20ம் நாள் திருமதி தர்மா வாங்கிய வீடு ரூ.5,415 மதிப்புள்ள முத்திரைத் தாளில் 82/1969ம் ஆவணமாக பதிவு செய்யப் பட்டது. இதற்கு பதிவுக் கட்டணமாக ரூ.291 செலுத்தப் பட்து. இதனை மயிலாப்பூர் உதவிப் பதிவாளர் திரு.வி.எஸ்.தாமோதரன் பதிவு செய்தார்.   அச்சமயம் அஞ்சல் துறையில் அஞ்சல் பிரிப்பாளராக இருந்த திரு.கருணானந்தம் உதவிப் பதிவாளர் முன்னிலையில் கிரயதாரருக்கு ரூ.57 ஆயிரம் கொடுத்தார். திரு.கருணானந்தம் இப்பணத்தை திருமதி தர்மாவிடமிருந்து வாங்கி அவர் சார்பில் விற்பவருக்கு கொடுத்ததாகக் கூறினார்.

 

பட்டயக் கணக்கர் திரு.ஜெகதீசன் மூலமாக வருமானவரி அதிகாரிக்கு அனுப்பி 1973ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் நாளிட்ட தனது கடிதத்தில் திருமதி தர்மா இந்த வீட்டை வாங்குவதற்காக அவர் கபாலியிடமிருந்து ரூ.40 ஆயிரம் கடன் வாங்கியதாகவும், எஞ்சியுள்ள 23 ஆயிரத்தை தனது சொந்த சேமிப்பிலிருந்து கட்டியதாகவும் கூறினார். ரூ.40 ஆயிரம் கொடுத்ததற்கு சான்றாக பதிவு பெறாத 1970ம் ஆண்டு ஜனவரி மாதம் 11ம் நாளிட்ட ஒப்பந்தம் ஒன்று இருக்கிறது. இது கபாலியின் பெயருக்கு அவர் எழுதிக் கொடுத்ததாகும்.   அதில் மேற்படி தொகை ரூ. 15 ஆயிரம் என்று மூன்று ஆறுமாதத் தவணைகளில் திருப்பிக் கொடுக்கப் படும் என்றம், அப்படிக் கொடுக்கத் தவறினால் மேற்படி சொத்தை கபாலிக்கு விற்று விடுவதாகவும் அதில் நிபந்தனை குறிப்பிடப்டிருந்தது. மேற்சொன்ன கடனைத் தவணைகளில் செலுத்த வேண்டும். இதற்குச் சான்றாக 1970ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 21ம் நாளில் திருமதி.தர்மாவால் எழுதிக் கொடுக்கப் பட்டது. திருமதி.தர்மாவிடமிருந்து ரூ.40 ஆயிரம் பெற்றுக் கொண்டதாக டி.கே.கபாலி இந்தப் புரோநோட்டில் எழுதி வைத்தார். இந்தப் புரோ நோட்டைப் பட்டயக் கணக்கர் ஜெகதீசன் அலுவலகத்திலிருந்து 1976ம் ஆண்டு, மார்ச்சு மாதம் 23ம் நாளில் வருமான வரி உதவி இயக்குனரால் கைப்பற்றப் பட்டது.

 

புலனாய்வு அறிக்கையின் படி, திருமதி.தர்மாவுக்கு கபாலி ரூ.40 ஆயிரம் கொடுத்துள்ளதாகத் தோன்றுகையில் அவருக்குப் பெரும் நிதி நெருக்கடி இருந்தது. 1969ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளில் கபாலி இந்தியன் வங்கியிடமிருந்து ரூ.20 ஆயிரம் கடன் கேட்டு இருந்தார். அவரது கடன் விண்ணப்பத்தில் வங்கிக்கு கொடுக்க வேண்டிய இருப்புகள், பொறுப்புகள் அறிக்கையில் திருமதி தர்மாவுக்கு ரூ.40 ஆயிரம் கடன் கொடுத்திருப்பதை குறிப்பிடவில்லை. 1970ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ம் நாளில் திரு.கபாலி 1969-70ம் ஆண்டுக்கான தமது வருமான வரிக் கணக்கை நிகர ஆண்டு வருமானம் 3,500 என்று கணக்குக் காட்டி தாக்கல் செய்தார்.

 

1973ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ம் நாளில் கபாலி 1971-72 ்ம ஆ்ணடு்ககான கண்ககை ரூ.4819 நிகர நட்டமென காட்டித்தாக்கல் செய்தார்.   இந்தக் கணக்கில் திருமதி தர்மாவுக்குக் கொடுத்த தொகையையும், வி.சிவபாக்கியம் அம்மாளிடமிருந்து ரூ.20 ஆயிரம் கடன் பெற்றதையும் அவர் காட்டியிருந்தார்.

 Oct_21_j

புகார் மனு கொடுத்தவர்கள் இந்தக் குற்றச் சாட்டுகளைக் கொடுத்த பல ஆண்டுகளுக்குப் பின்னர் கபாலி தானே முன்வந்து திருத்த வருமான வரிக் கணக்கொன்றை 1975ம் ஆண்டு மார்ச்சு மாதம் 5ம் நாளில் தாக்கல் செய்தார். அதில் 1968-69ம் ஆண்டுக்கும் நிகர வருமானம் 12,490 எனக் காட்டியிருந்தார்.

 

எண் 9 முதல் குறுக்குத் தெருவில் உள்ள இந்த வீட்டில் விற்பனை பத்திரம் 21.03.1970ல் கபாலியின் பெயருக்கு திருமதி.தர்மா எழுதிக் கொடுத்ததாகும். இந்தப் பத்திரம் மயிலாப்பூர் உதவி பதிவாளரால் பதிவு செய்யப் பட்டது.

 

உதவிப் பதிவாளர் பி.எஸ்.தாமோதரன், விற்பனைப் பத்திரத்தில் தாம் எழுதியுள்ளதை மறுத்துக் கூறியதாவது. ’21.08.1970 அன்று மாலை சுமார் 5.45 மணிக்க திரு.கருணாநிதியின் தனிச் செயலாளர் வைத்தியலிங்கம் அலுவலகத்திற்கு வந்து அவரை அரசு வண்டி ஒன்றில் ஏற்றிக் கொண்டு ராஜா அண்ணாமலைபுரம், முதல் குறுக்கத் தெருவில் உள்ள 9ம் எண் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். திரு.கபாலியும் அங்கு வந்தார். விற்பனைப் பத்திரக்திற்கான வரைவு ஒப்புதல் அளிக்கப் பட்ட பின்னர் அது, முதலமைச்சர் திரு.கருணாநிதியின் நேர்முக உதவியாளர் சண்முகநாதனால் தட்டச்சு செய்து பெறப்பட்டது. அதன்பின்னர் ராஜாத்தி என்ற திருமதி தர்மாவின் கையொப்பத்துடன் அது கொடுக்க பபட்டது. திருமதி தர்மாவைப் பார்க்கவேயில்லை. முதலமைச்சர் கருணாநிதியின், அவரது நேர்முக உதவியாளர் ஆகியோரது முன்னிலையில் கபாலி, சாட்சியின் முன்னிலையில் ரூ.14 ஆயிரம் ரொக்கம் தம்மால் கொடுக்கப் பட்டது என்று விற்பனைப் பத்திரத்தில் எழுதும்படி கபாலி கேட்டார். முதலமைச்சரிடமிருந்து இப்படிப்பட்ட கட்டனை வருவதாகக் கருதி அவ்வாறே கிரயதாரரான கபாலி விற்பவருக்கு ரூ.14 ஆயிரம் ரொக்கம் கொடுத்ததாக விற்பனைப் பத்திரத்தில் எழுதப் பட்டது.

 

இந்த விற்பனைப் பத்திரத்தில் சாட்சிகளாக கையொப்பமிட்டுள்ள முருகேசன் மற்றும் சத்தியமூர்த்தி இருவரும், ஆவணத்தில் கையொப்பமிடும் போது அந்தப் பத்திரத்தில் என்ன எழுதப் பட்டுள்ளது என்பது தங்களுக்குத் தெரியாது என்று கூறியுள்ளனர்.”

 rajathi-sona

இது சர்க்காரியா கமிஷனின் விசாரணை அறிக்கையில் ஒரு சிறு பகுதி மட்டுமே….   ஒரு வீட்டை வாங்குவதற்கே எப்படிப் பட்ட தில்லுமுல்லுகளை அரங்கேற்றியுள்ளனர் என்பதை பாருங்கள்.

 

ஆயிரக்கணக்கில் செய்த இதே தில்லுமுல்லுகள் அன்று தண்டிக்கப் படாமல் போனதன் விளைவுதான் இன்று ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய்களாக வளர்ந்து நிற்கிறது. அந்த தில்லு முல்லின் வெளிப்பாடே, அண்ணா சாலை வோல்டாஸ் கட்டிடம், ஊட்டி வின்ட்சர் எஸ்டேட் கட்டிடம், இந்தியா முழுக்க நட்சத்திர ஹோட்டல்கள்…

ஜெயலலிதாவை வாய்தா ராணி, ஊழல் வழக்கிலிருந்து தப்பித்தார் என்று கருணாநிதி லட்சக்கணக்கான முறை கூறியிருப்பார். ஜெயலலிதா தன் மீது தொடரப்பட்ட வழக்குகளை நீதிமன்றத்தில் சந்தித்தே விடுதலை பெற்றிருக்கிறார். ஆனால், கருணாநிதி, சர்க்காரியா கமிஷனால் குற்றச் சாட்டுகள் நிரூபிக்கப் பட்ட பின் இந்திரா காந்தியின் காலில் விழுந்து, ஆயிரக்கணக்கானோர் உழைத்து நடத்தப் பட்ட விசாரணையை மீளாத் துயிலில் ஆழ்த்தியது மட்டுமல்லாமல், அந்த அறிக்கையின் நகல்களையும் ஒளித்து வைக்கிறார்.

 

தொடர வேண்டுமா இந்தக் குடும்ப ஆட்சி…. ? முடிவு செய்யுங்கள்.

 

 

 

Comments  

 
+1 #23 Ezhai Thamizhan 2011-03-11 13:32
இது உங்களுடைய தலைவன் போல் ஒரு கேவலமான விளம்பர திட்டம் போலவே தெரிகிறது. தங்களுடைய இணையதளத்திற்கு வருகை தருபவரை அதிகப்படுத்த இப்படி சவுக்கில் கீழ்த்தனமாக கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டாமே. உங்கள் இணையதளத்தில் கலைஞர் வாழ்க, அவர் செய்த சாதனைகள் (ஊழல்கள் என்று படிக்கவும்) பற்றி எழுதி இருப்பீர்கள் என்று பார்த்தல் உப்பு சப்பு இல்லாமல் ஏதோ எழுதுகிறீர்... உங்கள் இணையதளத்தில் அவரை புகழவேண்டியது தானே? அதை செய்யமால் இங்கே வந்து ஏன் வீர வசனம்? நெஞ்சில் உறமேல்லை மானம் வீரம் உள்ளவர் பேச வேண்டிய விஷயங்கள். அதெல்லாம் கடுகளவு கூட இல்லாத தலைவனை பின்பட்ட்ருபவன் பேசவே கூடாது.

இனியாவது இப்படி கீழ்த்தனமாக நடந்துகொள்ளாமல் நல்ல கருத்துகளை தங்களது இணையதளத்தில் போட்டு வாசகர்களை அதிகரித்துக்கொள ்ளுங்கள். சவுக்கு இணையதலத்திர்கேன ்று ஒரு பெயர் உள்ளது அதை வித்து தாங்கள் குளிர் காய நினைக்காதீர்...

Quoting யுவகிருஷ்ணா:
இங்கு நான் வைத்த பல கருத்துகளுக்கு சவுக்கின் ஜால்ராக்கள் அந்த கருத்துகளில் உள்ள உண்மையின் வெப்பம் தாங்க முடியாமல் என்னையும், என் தலைவனையும் ஏசுவதும் எழுதுவதுமாகவும் உள்ளனர். பாவம். பரவாயில்லை. என் வலைப்பக்கமான (www .luckylookonline .com )ல் கொடுக்கப் பட்ட என் தொடர்புகளை இங்கே சவுக்கின் ஜால்ராக்களுக்கு தந்துள்ளேன். கருத்து மோதலுக்கு நான் தயார். நெஞ்சில் உரமிருந்தால் நீங்கள் தயாரா?
மின்னஞ்சல் : yuvakrishna@gma il.com
கைப்பேசி :+919841354308

காத்திருக்கிறேன ் ஜால்ராக்களே...!!!
Quote
 
 
0 #22 INDIAN 2011-03-09 13:37
IN KUTTE NETAO KO CHOURAHE PAR GOLI MAR DO
Quote
 
 
+3 #21 tamil anban 2011-03-07 21:14
அன்புள்ள சவுக்கு ,,, யுவகிருஷ்ணா என்ற கருணாநிதியின் துதி பாடி ஒருவன் நமது சவுக்கு இணையதளத்தை தவறாக உபயோகபடுதுகிறான ். அவனது கீழ்த்தரமான வலைதளத்தை சவுக்கு மூலம் பரப்புகிறான். எல்லா செய்தி இணையதளங்களிலும் புகுந்து சர்ச்சையான விவாதங்களை பின்னுட்டம் இட்டு அதன் மூலம் அவனது கேவலமான வலைதளத்தை பிரபலபடுத்தி வருகிறான், இவனது பின்னுட்டங்களை பல செய்தி இணையதளங்களின் பார்த்திருக்கிற ேன், இப்பொழுது, இவன் நமது மதிப்பிற்கு உரிய சவுக்கிலும் நுழைந்து விட்டன. இவனை அனுமதிக்க முடியாது.. தயவு செய்து அவனது பின்னுட்டங்களை தவிர்க்குமாறும் , அவனது பின்னுட்டங்களை அகற்றுமாறும் சவுக்கின் ஒரு வருட வாசகன் என்ற வகையில் உரிமையுடன் கேட்கிறேன். இது சவுக்கின் ஒட்டுமொத்த வாசகர்களின் கருத்தாக ஏற்று கொண்டு இதை நிறைவேற்றுமாறும ் உரிமையுடன் கேட்டு கொள்கிறேன்.
Quote
 
 
+1 #20 so wat 2011-03-07 18:23
Quoting யுவகிருஷ்ணா:
இங்கு நான் வைத்த பல கருத்துகளுக்கு சவுக்கின் ஜால்ராக்கள் அந்த கருத்துகளில் உள்ள உண்மையின் வெப்பம் தாங்க முடியாமல் என்னையும், என் தலைவனையும் ஏசுவதும் எழுதுவதுமாகவும் உள்ளனர். பாவம். பரவாயில்லை. என் வலைப்பக்கமான (www .luckylookonline .com )ல் கொடுக்கப் பட்ட என் தொடர்புகளை இங்கே சவுக்கின் ஜால்ராக்களுக்கு தந்துள்ளேன். கருத்து மோதலுக்கு நான் தயார். நெஞ்சில் உரமிருந்தால் நீங்கள் தயாரா?
மின்னஞ்சல் : yuvakrishna@gma il.com
கைப்பேசி :+919841354308

காத்திருக்கிறேன ் ஜால்ராக்களே...!!!

The above quote shows Ur trying 2 sell yourself to us... but unforunately we are very much knew which is gud and bad... so un suya vilambarathai niruthitu... poi karunaku kujathuku...
Quote
 
 
-12 #19 யுவகிருஷ்ணா 2011-03-06 14:00
இங்கு நான் வைத்த பல கருத்துகளுக்கு சவுக்கின் ஜால்ராக்கள் அந்த கருத்துகளில் உள்ள உண்மையின் வெப்பம் தாங்க முடியாமல் என்னையும், என் தலைவனையும் ஏசுவதும் எழுதுவதுமாகவும் உள்ளனர். பாவம். பரவாயில்லை. என் வலைப்பக்கமான (www .luckylookonline .com )ல் கொடுக்கப் பட்ட என் தொடர்புகளை இங்கே சவுக்கின் ஜால்ராக்களுக்கு தந்துள்ளேன். கருத்து மோதலுக்கு நான் தயார். நெஞ்சில் உரமிருந்தால் நீங்கள் தயாரா?
மின்னஞ்சல் : yuvakrishna@gma il.com
கைப்பேசி :+919841354308

காத்திருக்கிறேன ் ஜால்ராக்களே...!!!
Quote
 
 
+2 #18 yuvasenthilkumar 2011-03-06 08:55
மு.கருணாநிதியின் ராஜதந்திர விளக்கம்
இந்தக் காலத்திலே சகுனியாக இருந்து சூழ்ச்சி பண்ணனும்; விபீஷனனாக இருந்து துரோகம் பண்ணனும்? - அதெல்லாம் அநியாயமாயிற்றே பாபச் செயலாயிற்றே என்று தயங்கினால் - பதவி, பவிசு, பத்து தலைமுறைக்குப் போதுமான அசத்தி பாஸ்த்தி, ஆதிக்கம், அதிகாரம் இதெல்லாம் ஒன்றும் எட்டிக் கூடப் பார்க்காது! ஒருத்தரோட அழிவிலேயோ அல்லது துன்பத்திலேயோதா ன் இன்னொருத்தரின் செழிப்பும் செல்வாக்கும் இருக்கிறது என்றால் அதற்கேற்ற படி காரியம் செய்வதுதான் ராஜதந்திரம்.
ஆதாரம்: மு.கருணாநிதி எழுதிய பொன்னர்-சங்கர் புத்தகம், பக்கம் 12, முதல் பத்தி
Quote
 
 
+1 #17 kamalinatarajan 2011-03-05 21:29
haiyo haiyo.......................
Quote
 
 
+7 #16 suresh raja 2011-03-05 17:37
உஸ்.... அப்பாடா... இப்பவே கண்ண கட்டுதே...
கொள்ளை அடிக்கிறதுக்கு என்னாமா யோசிக்கிறாய்ங்க ... நாமதேன் கொஞ்சம் ஏப்ப சாப்பையா இருந்திட்டோமோ? அதுக்கு மேல இது டிரைலர் தானே.... முழு படத்தையும் பாத்தா நமக்கெல்லாம் தூக்கம் வராது... இந்த வள்ளல இவிங்களுக்கு சப்போர்ட் கமெண்ட் வேற... இந்த பன்னாடைங்க பின்னாடி திரியிரதுக்கு, போய் புள்ள குட்டிகள படிக்க வைங்கடா...
Quote
 
 
+11 #15 வெற்றிசெல்வன் 2011-03-05 14:32
'திமுக' மூன்று எழுத்து.
திமுக எனக்கு தந்த 'வாழ்வு' மூன்று எழுத்து.
என்னை வாழ வைக்கும் 'ஊழல்' மூன்று எழுத்து.
'மனைவி' மூன்று எழுத்து அதனால் எனது மனைவிகள் மூன்று .
-கருணாநதி
:)
Quote
 
 
+11 #14 kp 2011-03-05 10:58
கவிஞர் வைரமுத்துவின் கவிதை( கற்பனைதான்)
‍‍‍‍‍‍‍‍‍=============================================
"அன்று சர்க்காரியா சொன்னார்.
நீ விஞ்ஞான முறையில் ஊழல் செய்பவன் என்று.
ஆனால் இன்று விஞ்ஞானத்திலேயே நீ ஊழல் செய்திருக்கிறாய ்.
வானில் உள்ள தேவர்களின் எண்ணிக்கை கூட முப்பத்து முக்கோடி தான்.
நீ ஒரே தவணையில் அடித்ததோ ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி.
ஊழல் செய்வதில் நீ ஒரு எட்டமுடியாத சிகரம்.
ஊழலுக்கே உன் குடும்பம்தான் தலைநகரம்.
வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தின் தலைவன் நீ..
உன் குடும்பம் வழி வந்தாரை வாழ வைக்கும் தலைவன் நீ…
ஆம் குடும்பத் தலைவன் நீ..
நான் கட்டியதோ பொன்மணி மாளிகை….
நீ கட்டியதோ பத்மாவதி, தயாளு மற்றும் ராசாத்தி…
சர்காரியாவையே சாக்கு மூட்டையில் கட்டியவன் நீ….
உன்னிடம் சுண்டைக்காய் சிபிஐ எம்மாத்திரம் ….."
Quote
 
 
+1 #13 Nadaga priyan... 2011-03-05 10:31
அது ஏன் சோனாவுடன் உள்ள படத்தை போட்டு உள்ளீர்கள் . "சத்தியமா எனக்கு ஏன்னு புரியல"!!
Quote
 
 
0 #12 akss1967 2011-03-05 10:20
Nadantha sambavangalin thogupputhan Varalaru. ithai theriyathavarha lukku ariyatharuvathu Savukku vin kadamai.

Thanks.
Quote
 
 
+9 #11 Kumar.T 2011-03-05 09:52
சோனியா அகர்வாலுக்கு சரி சமமா இந்தம்மாவும் மேக்கப் போட்டுருக்கே ... சுமார் 2 இன்சிக்கு மேக்கப் ஏத்திருபாங்க போலவே... !
நல்லா எண்ணை சட்டியில சுண்ணாம்பு தடவுன மாதிரி இருக்கு ... :-)
Quote
 
 
+8 #10 ஜோசப் 2011-03-05 08:56
தமிழ் லீடர் இணைய தளத்தில், 575 கோடி மோசடி செய்த வழக்கு விவகாரம் வந்துள்ளது. அதில் பெரிய பெரிய போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கிறதாம்.
படிக்க www.tamilleader.in
Quote
 
 
+22 #9 குப்புசாமி 2011-03-05 07:51
கருணாநிதி மூதாதியர் குடும்பமும் ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு தவிலடிக்க வந்தவங்கதான் !!!!!
Quote
 
 
+32 #8 சரவணன் 2011-03-05 07:48
இங்கு கருத்து சொல்லும் சிலர் விஜயகாந்த் கூட்டணி சேர்ந்தது தவறு என்று சொல்கிறார்கள் . விஜயகாந்த் கூட்டணி சேர்ந்தது தவறு என்றால், அவர் தனியாக நின்று திமுக ஜெயிக்க வழி செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்களோ ? அநேகமாய் அவர்கள் அரசு ஊழியர்களை பிள்ளைகளாகவோ, அரசியல்வாதிகலாக வோ அவர்கள் பிள்ளைகளாகவோ இருக்க வேண்டும், எங்களை போன்ற தனியார் நிறுவனத்தில் 8000 சம்பளத்தில் வேலை பார்த்தால் இங்கு நடக்கும் கொடுமைகள் தெரியும், விலைவாசியும் , வீட்டு வாடகையும் , பள்ளிக்கட்டணமும ் எவ்வளவு சிரமப் படுத்துகிறது என்று. வாங்கும் சக்தியும் வசதியும் வாய்ப்பும் எங்களுக்கு அதிகரித்ததில்லை . பணக்காரனுக்கும் அரசு ஊழியர்களுக்கும் எதுவும் பிரச்னை இல்லை, ஏழைகளுக்கு இலவசமும் சலுகைகளும் போதும் , உழைத்து வாழ நினைக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு ? ஸ்பெக்ட்ரம் 2 ஜியில் ஊழல் செய்த பணத்தில் எல்லா மாவட்டத்திலும் தொழிற்சாலை கட்டியிருந்தால் நாங்கள் சென்னை நோக்கி வர வேண்டாம் . ஆனால் கொள்ளை அடித்த பணத்தை வெளிநாடுகளில் அல்லவா முதலீடு செய்கிறார்கள்? எரியிற கொள்ளியில் எந்த கொள்ளியும் நல்ல கொள்ளி இல்லை. குறைந்த அளவு கொள்ளை அடிப்பவர்கள் நாட்டை ஆள வைத்தால் சரிதான் .
Quote
 
 
+8 #7 Ungalil oruvan 2011-03-05 06:12
Ssssssss... Ippave kanna kattudhe..
Quote
 
 
+20 #6 மறவன் 2011-03-05 05:37
மானமுள்ள தமிழக இளைஞர்களே, எத்தனை நாளைக்குத்தான் இப்படி எழுதி எழுதி இளைத்தும் களைத்தும் போகப்போகின்றீர் கள்? எழுதி எழுதி இழந்தது போதும் இனியாவது ஆயுதத்தை தூக்கி தமிழுக்கும் தமிழர்களுக்கும் அரண் செய்ய முன் வாருங்கள். ஆயுதத்தின் மொழியே அனைத்துக்கும் மருந்து. நான் தமிழகத்தில் வாழ்பவனாக இருந்தால் இதனை நானே முன்னெடுத்திருப ்பேன். அடி உதவுவது போல் இனி எதுவுமே உதவாது என் உறவுகளே, வன்முறை என்பது தகாத வழி முறைதான் என்ன செய்வது வேறு வழியில்லை தமிழ் காக்க திட்டமிடுங்கள் செயற்படுங்கள் வெற்றி நிச்சயம்.
Quote
 
 
+14 #5 பார்த்திபன் 2011-03-05 05:22
கடும் உழைப்புக்குப் பின் எழுதப்பட்டதாகத் தெரிகிறது. மு.க. வின் ஊழல் ஆண்டுகள் என் வயதை விட அதிகம்.
Quote
 
 
+13 #4 Padman 2011-03-05 04:27
உண்மைதான் சவுக்கு... ஏப்ரல் 13 க்குப் பிறகு வரும் ஏப்ரல் 14 தமிழ்ப்புத்தாண் டு மட்டுமில்லாது தமிழன் உண்மையிலேயே விடுதலையடைந்த நாளாகவும் கொண்டாடப்படும். இதுக்குமேல சொல்றதுக்கு எதுவுமே இல்லை சவுக்கு.

/ பத்மநாபன்
Quote
 
 
+10 #3 Ranjani 2011-03-05 04:03
Do you have the full document of the sarkaria commission? Can you please post it here or somewhere online? This information needs to come out to the public domain.
Quote
 
 
+24 #2 piriyan 2011-03-05 03:01
சமீபத்தில் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் பேசிகொண்டிருந்த பொழுது அவரது ஒரு நாள் வருமானம் ரூ100 ஐ தொடுவது அதிகபட்சம் என்கிறார் ஆனால் இங்கு சர்வசாதரணமாக (திட்டமிட்டு) மக்களின் பணத்தை எடுத்துக்கொண்டு இவர்கள் மக்களிடம் பண்ணும அலப்பறை ஐயோ கடவுளே :sad: :sad: :sad: :sad: :sad:
Quote
 
 
+22 #1 sakthy 2011-03-05 02:46
நெஞ்சு பொறுக்குதில்லைய ே இந்த நிலை கெட்ட கருணாநிதி குடும்பத்தையே நினைந்து விட்டால்...இந்த ஊழல் சக்கரவர்த்தியின ் முழு ஊழல்,கொலைகள் மற்றும் அராஜகத்தை,சவுக் கில் வந்தவற்றை ஒரு பத்திரிகையில் தொடராக வெளியிட வேண்டும். பாட்டி தொட்டியெங்கும் உள்ள பாமர மக்களும் அறிந்து வரலாற்றில் என்றும் இந்தக் குடும்பம் அரசியலுக்கு வராதவாறு செய்ய வேண்டும்.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 97 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

தமிழ்லீடர்

tamilleader

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4619
mod_vvisit_counterYesterday9838
mod_vvisit_counterThis week57356
mod_vvisit_counterLast week67096
mod_vvisit_counterThis month176164
mod_vvisit_counterLast month297247
mod_vvisit_counterAll days8391892