முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
நான்தான் ஆட்சியை மாற்றினேன்… … !!! அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 15
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வெள்ளிக்கிழமை, 20 ஜனவரி 2012 08:38

இப்படி யாராவது அதிமுகவின் வெற்றிக்கு நான்தான் காரணம் என்று மார்தட்டிக் கொள்ள முடியுமா ? ஒரு வேளை இப்படி யாராவது மார்தட்டிக் கொள்ள வேண்டும் என்றால் கருணாநிதியைத் தவிர வேறு யாரும் மார்தட்டிக் கொள்ள முடியாது.

vant

ஆனால் இப்படி ஒருவர் மார்தட்டிக் கொண்டார்.  அவர் வேறுயாரும் அல்ல.  மன்னார்குடி மாபியாவின் தலைவர் ம.நடராஜன் தான்.  

ஜனவரி 15 முதல் 17 வரை தஞ்சாவூரில் பொங்கல் கலை இலக்கிய பெருவிழா நடந்தது.  இந்த விழாவின் இறுதிநாளில் தான் இப்படி முழங்கினார் நடராஜன். வழக்கமாக இந்த விழா நடைபெறும் போது, நடராஜனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் நிகழ்ச்சிகளில் விருந்தினர்களாக கலந்து கொள்வது இல்லை.  ஆனால், இம்முறை இவ்விழாவை சசிகலாவின் கடைசித் தம்பி திவாகரன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைப்பார் என்று அறிவிக்கப் பட்டு இருந்தது. அதன் படி திவாகர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைக்கவில்லை.  காவல்துறையின் கண்காணிப்பு வளையத்துக்குள் இருந்ததாலோ என்னவோ, திவாகரன் விழா நடந்த பக்கமே தலை காட்டவில்லை.

tnj-3

விழாவுக்கு தமிழகத்தின் பல இடங்களில் இருந்தும் வாகனங்களில் மக்கள் அழைத்து வரப்பட்டு, தங்கும் இட வசதிகள் ஏற்பாடு செய்து கொடுக்கப் பட்டு இருந்தது வெளிப்படையாக பார்க்க முடிந்தது.  இந்த விழாவுக்காக மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஏற்பாடு செய்யப் பட்டு, மக்கள் வரவழைக்கப் பட்டிருந்தனர் என்பதை வெளிப்படையாக பார்க்க முடிந்தது.

லட்சுமண் ஸ்ருதி இசை நிகழ்ச்சி, அசத்தப் போவது யாரு என்ற நிகழ்ச்சியை நடத்தும் நகைச்சுவையாளர்களின் நிகழ்ச்சி என்று பல்வேறு நிகழ்ச்சிகள் பொழுதுபோக்கு வசதி இல்லாத தஞ்சை மக்களை கவர்ந்து இருந்ததை பார்க்க முடிந்தது.

aer

விழாவின் இறுதி நாளான 17 அன்று கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களில் இருவர் முக்கியமானவர்கள்.  கவிஞர் காசி ஆனந்தன் மற்றும் பழ.நெடுமாறன்.

இறுதி நாள் விழா நடந்து கொண்டிருந்த போது, நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய கவிஞர் சிநேகன், இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டு பொங்கல் விழாவின் போதும், தமிழ் எழுத்தாளர்கள் கவுரவிக்கப் படுவார்கள் என்று அறிவித்தார்.  முதல் விருது நெடுமாறனுக்கு என்று அறிவிக்கப் பட்டது.  இந்த திடீர் அறிவிப்பால் நெடுமாறன் அதிர்ச்சிக்கு உள்ளானார் என்பது வெளிப்படையாக தெரிந்தது.   நெடுமாறனுக்கு ஒரு தங்க நாணயம் வழங்கப் பட்டது.   அதை நெடுமாறன் பெற்றுக் கொண்டிருந்த போதே, அந்த நாணயம் இரண்டு பவுன் என்று சொல்லுமாறு ஸ்நேகனுக்கு உத்தரவிட்டார் நடராஜன்.   இரண்டு பவுன் தங்க நாணயம் மற்றும் ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கப் பட்டது.  காசி ஆனந்தனுக்கும் இதே பரிசு.

காசி ஆனந்தன் மற்றும் நெடுமாறன் பேசி அமர்ந்தவுடன் பேச வந்தார் நடராஜன்.   “நான் இப்போது ஒரு முழுமையான தலைவனாகி விட்டேன்.   இப்போது நான் ஒரு கட்டுப்பாடற்ற தலைவன்.  இரண்டே இரண்டு பேருக்குத்தான் நான் கட்டுப்படுவேன்.  ஒன்று பழ.நெடுமாறன். இரண்டு எனது மனைவி.”

m.n_1

பிறகு முல்லைப் பெரியாறு விவகாரத்துக்குள் நுழைந்து விட்டார்.  “நான் முதல் முறையாக நான் ஆசிரியராக இருக்கும் புதிய பார்வை இதழில்தான், கேரளாவின், தேவிக்குளம், பீர் மேடு பகுதிகளை  தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்று எழுதினேன்.   அந்த இதழ் டிசம்பர் 25 அன்று வெளியானது.   நான் அதற்குப் பிறகு வெளிநாடு சென்று விட்டேன்.  நான் ஜனவரி முதல் தேதி அன்று சென்னை திரும்பி வந்தேன்.  வந்து பார்த்தால், திமுக தலைவர் கருணாநிதி அவர்கள், தேவிக்குளம், பீர்மேடு பகுதிகளை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்று எழுதியிருந்தார்.  நான் புதிய பார்வை இதழில் எழுதியதை படித்து விட்டுத்தான் அவர் இப்படி எழுதியிருந்தார்.   அது வரை அவருக்கு இது ஏன் தோன்றவில்லை….. ?”

“இந்தக் கூட்டத்துக்கு வருகை தந்திருக்கும் பலர், நடராஜன் ஏதாவது அறிவிப்பு வெளியிடுவான் என்று எதிர்ப்பார்த்து வந்திருக்கிறார்கள்.  உரிய நேரம் வரும்போது நான் அந்த அறிவிப்பை வெளியிடுவேன்.    நான்தான் இந்த ஆட்சியை மாற்றினேன்.    ஆனால் இதற்காக உழைத்த நான் இருக்கும் போது, வேறு யாரோ இதன் பலனை அனுபவித்து வருகிறார்களே என்று சிலர் சொல்கிறார்கள்.   அது பற்றி எனக்கு கவலையில்லை.  அது வாக்களித்த மக்களின் விருப்பம்.

நான் ஏன் அமைதியாக இருக்கிறேன் என்று பலர் கேட்கிறார்கள்.  நான் எடுக்கும் முடிவுகள் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தி விடக் கூடாதே என்பதற்காகத்தான் அமைதியாக இருக்கிறேன்.   என்னை நம்பி பலர் இருக்கிறார்கள்.  வாக்களித்த மக்கள் இருக்கிறார்கள்.  இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கும் உள்ள தமிழர்கள் இருக்கிறார்கள்.  அதற்காகத்தான் நான் அமைதியாக இருக்கிறேன்.   தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டி யிருக்கிறது.  மேலும் எனது மனைவி மீதான வழக்கும் முடிவுக்கு வர வேண்டும்.

aerou

சமீபத்தில் நடந்த சில விஷயங்களைப் பற்றி யாரும் பயப்படத் தேவையில்லை.   நீங்கள் யாரும் பயப்படவில்லை என்பதை இங்கே திரண்டிருக்கும் கூட்டமே காட்டுகிறது.  நீங்கள் யாருக்கும் அஞ்ச மாட்டீர்கள்.

உரிய நேரம் வரும் வரை காத்திருங்கள்.  நான் அப்போது எனது முடிவை அறிவிப்பேன்.  எனக்கு சில கடமைகள் இருக்கின்றன.  மூன்று பேருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிலேயே மரண தண்டனை ஒழிக்கப் பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கன்னியாக்குமரி முதல் சென்னை வரை நடைபயணம் மேற்கொள்வேன்.   அது எப்போது என்பதை நெடுமாறன் அறிவிப்பார்.  முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களுக்கு நினைவிடம் கட்டப் பட்டு வருகிறது.  அது மார்ச் மாதம் முடிவடையும்.  இது போல பல கடமைகள் இருக்கிறது.  அதற்காகத்தான் நான் அமைதியாக இருக்கிறேன்” என்றார்

நடராஜன் பேசி முடித்ததும் அவரே ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.  “நான் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைப்பதற்கு 50 லட்ச ரூபாய் தருகிறேன் என்று சொன்னேன்.   அதை இப்போதே தருகிறேன்.   என்னுடைய 9 பதிவு எண் கொண்ட நிஸ்ஸான் காரை அமெரிக்காவைச் சேர்ந்தவர் வாங்கிக் கொள்ள முன்வந்துள்ளார்.  அதை இப்போதே அவருக்கு 20 லட்ச ரூபாய்க்கு வழங்குகிறேன்.  என்னுடைய ரோலெக்ஸ் வாட்சை துபாயைச் சேர்ந்த ஒருவர் 10 லட்ச ரூபாய்க்கு வாங்கிக் கொள்ள முன் வந்துள்ளார்.  அதையும் வழங்குகிறேன்.  என்னுடைய 1234 பதிவு எண் கொண்ட சொனாட்டா காரை லண்டனைச் சேர்ந்தவர் 10 லட்ச ரூபாய்க்கு வாங்கிக் கொள்ள முன்வந்துள்ளார்.  என்னுடைய 7070 பதிவு எண் கொண்ட போர்ட் என்டவர் காரை 15 லட்ச ரூபாய்க்கு மலேசியாவைச் சேர்ந்தவருக்கு கொடுக்கிறேன். (இவ்வாறு நடராஜன் அறிவித்ததும், ஏற்கனவே தலையில் மஞ்சள் தண்ணீர் தெளிக்கப் பட்ட ஆடுகள் போல வரிசையாக வந்து நடராஜன் வழங்கியதை வெளிநாட்டைச் சேர்ந்த தமிழகர்கள் பெற்றுக் கொண்டனர்.)  மொத்தம் 45 லட்ச ரூபாய் வந்திருக்கிறது.  உடனே அருகில் இருந்த ஒருவரை அழைத்தார்.  துபாய் தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்தவர் இப்போது நன்கொடை அளிப்பார் என்றார்.  அவர் நான்  அண்ணன் நடராஜன் கட்டும் நினைவிடத்திற்கு 5 லட்ச ரூபாய் நன்கொடை அளிக்கிறேன் என்று அறிவித்தார்.

இது முடிந்ததும் நடராஜன், பார்த்தீர்களா… நான் சொன்னது போல 50 லட்ச ரூபாய் தந்து விட்டேன்.   இதை மார்ச் மாதத்திற்குள் கட்டி முடிக்க வேண்டியது நெடுமாறனின் பொறுப்பு என்றார்.

இந்த நிகழ்ச்சி நடந்த மூன்று நாட்களுக்கும் ஆன செலவு மட்டும் இரண்டு கோடி ஆகியிருக்கும்.  தஞ்சை நகரெங்கும் ப்ளெக்ஸ் போர்டுகள் காணப்பட்டன.  ஏராளமான வாகனங்கள், வந்தவர்களுக்கு உணவு, தங்குமிட வசதி, என்று அனைத்தையும் கணக்கிட்டால் பணம் வாரி இறைக்கப் பட்டிருந்ததைக் காண முடிந்தது.

இந்த நிகழ்ச்சி நடராஜன் தந்தை மருதப்பனின் பெயரில் ஏற்படுத்தப் பட்டிருந்த அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்றது. எண்பதுகளின் இறுதியில் தன் வேலையை ராஜினாமா செய்த நடராஜனுக்கு எங்கிருந்து பல லட்ச ரூபாய் மதிப்புள்ள கார்களும், ரோலெக்ஸ் வாட்சுகளும், விழா நடத்த கோடிக்கணக்கான பணமும் வந்தது என்பது குறித்து யாரும் கேள்வி எழுப்பியதாகத் தெரியவில்லை.

விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்து தீவிரமான விமர்சனங்களை வைத்திருப்பவர்கள் கூட மறுக்காமல் ஒப்புக் கொள்ளும் ஒரு விஷயம், அந்த இயக்கம் அர்ப்பணிப்புள்ள இயக்கம் என்பது.  உயிரைத் துச்சமாக மதித்து, இனத்துக்காக, உயிரை இழக்க சம்மதிப்பவர்களே புலிகள் இயக்கத்தில் இணைகிறார்கள்.  அப்படிப்பட்ட ஒரு இயக்கத்தையும், அதன் தியாகத்தையும் பற்றி, ஒரு மாபியா கூட்டத்தின் தலைவராக இருக்கும் ஒரு நபர் நடத்தும் நிகழ்ச்சி மேடையில் நெடுமாறனும், காசி ஆனந்தனும் பேசியது மிகுந்த வேதனையை அளித்தது.

முள்ளி வாய்க்காலில் இறந்த மக்கள், குற்றும் குலையுமாக, உண்ண உணவின்றி இறந்தனர்.   அப்படி இறந்த மக்களுக்காக கட்டப்படும் நினைவிடம், நடராஜனின் கார்களில் இருந்தும் ரோலெக்ஸ் வாட்சிலிருந்தும் கிடைக்கும் பணத்திலா கட்டப்பட வேண்டும் ?  அப்படி ஒரு நினைவிடம் அந்த மக்களுக்கு அவசியமா ?   நெடுமாறன் போன்று உலகத்தமிழகர்கள் அனைவரும் மதிக்கும் ஒரு தலைவர், நடராஜன் போன்ற நபர்களோடு மேடை ஏறலாமா ?  அதுவும், இந்த நேரத்தில்… !!!

m.n_3

அரசுப் பதவியோ, தேர்தலில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப் பட்ட பதவியையோ ஒரு நபர் வகித்திருந்தால் கூட, எப்படி இவ்வளவு சொத்து வந்தது என்று அவர் மீது ஊழல் வழக்கு தொடுக்க முடியும். 20 ஆண்டுகளாக, நடராஜன் நிழல் அரசாங்கம் நடத்தி வந்ததை அனுமதித்த ஜெயலலிதாவையே இந்த மோசடிகளுக்கெல்லாம் காரணமாக சொல்ல வேண்டும்.  இன்று மன்னார்குடி மாபியாவை விரட்டியடித்திருந்தாலும், இத்தனை ஆண்டு காலம், இந்த மன்னார்குடி மாபியாவை தண்ணீர் ஊற்றி வளர்த்தது ஜெயலலிதாவே…. ஜெயலலிதா இல்லாவிட்டால், சாதாரண மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த நடராஜன், இன்று புலவர்களுக்கு பரிசில் வழங்கும் புரவலராக வளர்ந்திருக்க மாட்டார்.   தன்னிடம் உள்ள கருப்புப் பணத்தை, வெள்ளையாக மாற்றுவதற்காக நடராஜன் போடும் வேஷமே இந்த தமிழினக் காவலர் வேஷம்.

இந்த நிகழ்ச்சியில் நடராஜன் பேசியதை சவுக்கு குறிப்பெடுத்துக் கொண்டிருந்த போது, தள்ளாடியபடி ஒரு உடன்பிறப்பு வந்தார்.   நீங்க ப்ரெஸ்ஸா என்று கேட்டார்.  ஆம் என்றவுடன், எந்த ப்ரெஸ்ஸு என்றார்.  ஒரு பிரபலமான பத்திரிக்கை பெயர் சொன்னவுடன், குறிப்புப் புத்தகத்தைப் பார்த்தார். அவரு ஒன்று சொல்றாரு… நீங்க ஒன்னு எழுதறீங்க என்று கேட்டார்.  இல்லைங்க… வேகமா எழுதறதுக்காக இங்க்லீஷ்ல எழுதறேன் என்றவுடன், எனக்கும் இங்கிலீஷ் தெரியும்…. நான் பி.ஏ.எகனாமிக்ஸ் என்றார்.  சரிங்க என்றதும், நான் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் முக்கியப் பொறுப்பாளர் என்றார்.   முதல்ல நடிகர் கார்த்திக்க நம்பி ஆதரவு கொடுத்தோம்…..  அவரு எங்க ஜாதிய கை விட்டுட்டாரு… இப்போ அண்ணன நம்புறோம்.. அண்ணன் எப்படி பின்றாரு பாத்தீங்களா.. என்றார்….  செமையா பின்றாரு… என்றதும்… அண்ணன் அண்ணன்தான் என்று சொல்லி விட்டு சென்று விட்டார்.   வந்திருந்த கூட்டம் எப்படி வரவழைக்கப் பட்டிருந்தது என்பதை அந்த உடன்பிறப்பு தெளிவாகவே விளக்கி விட்டார்.

a

tnj-5

tnj-6

tnj-13-jpg

tnj-14-jpg

 

Comments  

 
+1 #41 kusumban 2012-01-30 23:14
எப்படி ச்ம்பாதிச்சார் இம்புட்டு பனம்? த்தூ...
Quote
 
 
-1 #40 krish1 2012-01-30 20:48
தமிழன் இலிச வாயன் என நடராஜன் போடும் வேஷமே ஊற்றி வளர்த்தது ஜெயலலிதாவே
Quote
 
 
+1 #39 Ram_Mani 2012-01-29 22:10
Carefully read for whom those car and watches are sold? all are from abroad!!! he doesn't want any local people harrassed by tamilnadu govt later who buy this things... or is it Natarajan's money used by these NRI's?? cheap publicity stunt by mannargudi mafia :-*
Quote
 
 
+17 #38 RAJKUMARPANDIAN 2012-01-24 01:26
தமிழீழ தேசிய தலைவர் மேதகு .வே.பிரபாகரன் அவர்களை நாடு கடத்த வேண்டும் என்று சட்ட சபையில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க அதன் நகல் எரிப்பு போரட்டத்தை நெடுமாறன் அறிவித்ததை ஒட்டி ...குறிப்பிட்ட அந்த போராட்ட நாளில் ..காலையில் நெடுமாறன் தன் ஆட்களுக்கு சொன்ன செய்தி எரிக்க செல்லுங்கள் ..காவல் துறை கைது செய்ய ஒத்துழையுங்கள் .. எரித்து விட வேண்டாம் ..என்பது ..ஆனால் இந்த செய்தி கிடைக்காத ..அவரது கட்சியின் சென்னை மாவட்ட செயலாளர் நெல்லை கரிகாலன். மற்றும் ஒரு தோழர் பெயர் நினைவில்லை. இருவர் மட்டும் சென்னையில் எரிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர் என்பவர் மெமோரியல் அரங்கம் அருகே அந்த நகலை எரித்து விட்டார் ..ஒரு மாதம் ரேமன்ட் செய்யப்பட்டார் ..அந்த செய்தி மற்ற தோழர்களுக்கு தெரியவே அவர்கள் நெடுமாறனை அணுகி பிணை எடுக்க சொல்ல அவர் ..சொன்னது அவன யார் எரிக்க சொன்னது ..என்று அவன் உள்ளே கிடக்கட்டும் ..என்று கரிகாலன் ஒரு மாதம் உள்ளே இருந்து விட்டு தான் வந்தார் ..கூடுதல் செய்தி அவர் கரிகாலன் தமிழை தாய் மொழியாக கொண்டவரில்லை ..அவர் தாய் மொழி தெலுங்கு..அவருக்கு திருமணமாகி பத்து பதினைந்து நாட்களுக்குள் ..சிறை சென்றவரை சென்று பார்க்ககூட நெடுமாறனோ ..அவர் இயக்கத்தின் தலைவர்களோ செல்லவில்லை ...அவரது திருமணம் இந்த நெடுமரம் தலைமையில் தான் நடந்தது ...
Quote
 
 
+5 #37 RAJKUMARPANDIAN 2012-01-24 01:00
[ஃஉஒடெ நமெ="காணேஸ்ஹ் ட்ஹேவாற்"]மாமன்னர் புலித்தேவர் புகழ் பரப்பிய அஞ்சாநெஞ்சர் ம . நடராஜன் தலைமையில் ஆண்ட பரம்பரை
மீண்டும் ஆளட்டும் ....தமிழகம் வளம் பெறட்டும் ......[/ஃஉஒடெ]





ம.நடராசன் தன்னிடம் இருந்த பணத்தை அள்ளி இறைத்தார்...வள்ளல் அவர் என்று நெடுமாறன் எங்கேயாவது எழுதி வைத்துவிட்டு போய்விடுவார்..அவ்வளவுதான் ..தெய்வீக திருமகன்,தேசியத ்தலைவர் NO 2. பராக் ..பராக்...பராக்
Quote
 
 
-20 #36 tharani 2012-01-22 23:33
பிடிக்காத மருமகள் கை ப்ட்லாளும் குட்றம்,கால் பட்டாளும் குட்றம் என்கிற என்னத்தில் எழுதாதீற்கள்,
Quote
 
 
+20 #35 கிராமத்தான் 2012-01-21 15:52
பொங்கலுக்கு தஞ்சாவூர் பக்கம் சென்ற போது வழியெங்கும் இந்த முள்ளமாறி படம் வைத்த தட்டி தான். இதற்கெல்லாம் செலவு செய்த பணம் எத்தனை தமிழ் மக்களிடம் கொள்ளை அடித்ததோ? சில மாதங்களுக்கு ஒருமுறை நக்கீரன், சூ.விகடன் அட்டையில் தோன்றி (5 லட்சம் செலவு செய்து), கேள்வி பதில் வெளியாக்கி, தம்முடைய பிரசன்ஸை விளம்பரப் படுத்திக் கொள்வான். கொள்ளை அடித்த பொருட்களை (ஆம் - பணம், நிலம் மட்டுமல்ல - கிடைப்பதையெல்லா ம் ஆட்டைய போடுபவன் தான்) ஏதோ தர்மம் செய்வது போல் செட்டப் செய்தது அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்த பணம் கொண்டு நினைவுச் சின்னம் எழுப்பக்கூடாது. சாதி வெறியன்கள் தமிழ்மக்கள் என்று சொல்வது வெறும் சந்தர்ப்பவாதம்.
Quote
 
 
+6 #34 கிராமத்தான் 2012-01-21 15:43
பொங்கலுக்கு தஞ்சாவூர் பக்கம் சென்ற போது வழியெங்கும் இந்த முள்ளமாறி படம் வைத்த தட்டி தான். இதற்கெல்லாம் செலவு செய்த பணம் எத்தனை தமிழ் மக்களிடம் கொள்ளை அடித்ததோ? சில மாதங்களுக்கு ஒருமுறை நக்கீரன், சூ.விகடன் அட்டையில் தோன்றி (5 லட்சம் செலவு செய்து), கேள்வி பதில் வெளியாக்கி, தம்முடைய பிரசன்ஸை விளம்பரப் படுத்திக் கொள்வார். கொள்ளை அடித்த பொருட்களை (ஆம் - பணம், நிலம் மட்டுமல்ல - கிடைப்பதையெல்லா ம் ஆட்டைய போடுபவன் தான்) ஏதோ தர்மம் செய்வது போல் செட்டப் செய்தது அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்த பணம் கொண்டு நினைவுச் சின்னம் எழுப்பக்கூடாது.
Quote
 
 
+5 #33 dr ashok 2012-01-21 14:18
barking dog
Quote
 
 
+11 #32 Rajesh Thamizh Thozh 2012-01-21 13:47
நடராசன் நம்மை முட்டாள் ஆக்குகிறார்,தமி ழ் நாட்டில் மட்ரும் ஒரு புதிய அரசியல் கட்சியா????... இந்த தமிழ்ணாடு தான்காது....பழ.னெடுமாரன்,காசிஆ னந்தன் மீது உல்ல மரியாதை குரைந்துவிட்டது ...
Quote
 
 
+14 #31 SUTHIRAN 2012-01-21 08:23
டசெரினாவிடம் இழந்த பணம் 2 கோடி இப்போது முள்ளிவாய்க்கால ் நினைவிடம் அமைக்க 50 லக்ஷம் ! விழா நடத்த செலவு 2 கோடி ! மற்றும் அவ்வப்போது வெளினாடு செல்ல நட்சத்திர ஓட்டல்களில் தங்க வ்ருஷம்தோறும் இது நாள் வரை செய்த செலவு 3 கோடி! குற்றாலத்தில் மனைவியிடம் பெறமுடியாத பல சந்தோஷங்களை விலை கொடுத்து வாங்குவதற்கு சில கோடிகள் ! பட்டுப் பீதாம்பரம் போன்ற வெள்ளை வெளேர் பைஜாமா ஜிப்பா தினம் தினம் புதுசு புதுசாக ! இவருக்கெல்லாம் கிடையாதா வருமான வரி மற்றும் எகனாமிக் அஃபன்ஸ்களை விஜாரணை செய்ய என்ஃபோர்ஸ்மென்ட ் டைரக்டரேட்டின் ரெய்டுகள்! இவர் அடிக்கும் கூத்துக்களை எல்லாம் பொறுத்துக் கொள்ள நாம் என்ன பாவம் செய்தோமோ?
Quote
 
 
0 #30 Ramachandran 2012-01-21 06:03
Very good article. When you see his face in the poster's you can find the purpose of his birth. Intha thiruttu polappukku pesama picchai edukkalaam.
Quote
 
 
+5 #29 kali.krishna 2012-01-21 03:38
எனக்கு ஒரு டவுட்டு. இந்த போஸ்டர்களோட போட்டோவெல்லாம் மக்கள் சாணி அடிக்க முதல் எடுத்ததா? :-?
Quote
 
 
-1 #28 nsharma 2012-01-21 01:53
[ஃஉஒடெ நமெ="விஜய் கிருஷ்ணா"]எவ்வளவு தான் வசதி உள்ளவனாலும் இப்படி ஐம்பது லட்ச ரூபாய் பணம் கொடுக்க பெரிய மனசு வேணும். அது எப்படி வந்ததுன்றது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனா, இவ்வளவு தைரியமா பெரிய மனசோட கொடுக்க நிச்சயம் மனம் வேணும். அந்த மனசு இல்லாவிட்டாலும் நீங்க குறை சொல்ல மட்டும் முன்னால வந்துடறீங்க..பட்டிணம்பாக்கம் போய் சேர ஏசி 12பி யா இருந்தா என்ன..சாதா 12பி யா இருந்தா என்ன..இலவசமா கூட்டிப்போகும் போது சந்தோஷமா பட்டணம்பாக்கம் போற வழியை தான் பார்க்கனும்.. அதை விட்டுபுட்டு தொட்டதுக்கெல்லா ம் குறை சொன்னா..வடபழனியிலேயே நின்னுக்கிட்டு முறுக்கு சாப்பிடறவன வேடிக்கை பார்க்க வேண்டியது தான்! சட்டு புட்டுன்னு பணத்தை வாங்கி நினைவிடத்தை கட்டற வேலையை பாருங்கப்பூ..[/ஃஉஒடெ]

ஆமா விஜி அவர்களே, ஊரார் வீட்டு நைய்யெ என் பொண்டாடி கைய்யெ என்பது போல் திருடின பணம் தானெ தாரளமாக தூக்கி எரிய வேண்டியகது தான். விஜி பொன்ர வர்கலுக்கு உழைப்பின் அருமை எப்படி தெரியும்?
Quote
 
 
+5 #27 உண்மை விளும்பி 2012-01-21 01:19
Quoting jagant:
சவுக்கு.. இன்னைக்கு டெக்கான் க்ரா. வில் நீங்க தகவல் கமிஷனர் ஸ்ரீபதிக்கு, நெற்குன்றம் விவகாரத்தில் கஷாயம் கொடுத்தது ப்ற்றி படித்தபோது சந்தோஷமாக இருந்தது. இந்த பன்னாடை பதவி ஓய்வு பெற்றபின்பும் வீடு வாங்க விண்ணப்பித்தான் எனில் எவ்வள்வு பேராசை. பண்த்திற்கும் ஆதாயத்துக்கும் எதுவும் செய்வார்கள் போல.

http://www.deccanchronicle.com/channels/cities/chennai/scic-dock-availing-state-benefit-181
Quote
 
 
+4 #26 vandhiyadevan 2012-01-20 23:14
His eyes does not show honesty,faith or confidence. If he gets support of the people then I feel he succeeded as an actor.
8)
Quote
 
 
+6 #25 சரவணன் 2012-01-20 22:55
[ஃஉஒடெ நமெ="விஜய் கிருஷ்ணா"]எவ்வளவு தான் வசதி உள்ளவனாலும் இப்படி ஐம்பது லட்ச ரூபாய் பணம் கொடுக்க பெரிய மனசு வேணும். அது எப்படி வந்ததுன்றது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனா, இவ்வளவு தைரியமா பெரிய மனசோட கொடுக்க நிச்சயம் மனம் வேணும். அந்த மனசு இல்லாவிட்டாலும் நீங்க குறை சொல்ல மட்டும் முன்னால வந்துடறீங்க..பட்டிணம்பாக்கம் போய் சேர ஏசி 12பி யா இருந்தா என்ன..சாதா 12பி யா இருந்தா என்ன..இலவசமா கூட்டிப்போகும் போது சந்தோஷமா பட்டணம்பாக்கம் போற வழியை தான் பார்க்கனும்.. அதை விட்டுபுட்டு தொட்டதுக்கெல்லா ம் குறை சொன்னா..வடபழனியிலேயே நின்னுக்கிட்டு முறுக்கு சாப்பிடறவன வேடிக்கை பார்க்க வேண்டியது தான்! சட்டு புட்டுன்னு பணத்தை வாங்கி நினைவிடத்தை கட்டற வேலையை பாருங்கப்பூ..[/ஃஉஒடெ]

முள்ளிவாய்க்கால ் நினைவிடம் அயோக்கியர்கள் பணத்தில் வேண்டாம். உழைக்கும் மக்கள் ஒரு ரூபாய், 2 ரூபாய் எனக் கொடுத்தாலும் அதை வைத்துக் கட்டினால்தான் அவர்களுக்கு உண்மையான அஞ்சலி.
Quote
 
 
+9 #24 alby 2012-01-20 21:04
சவுக்கு இது போன்ற செய்திகள் போட்டு உங்கள் நேரத்தை வீனாக்காதிர்கள் . அதெ சமயம் நடராஜன் போன்றவரை பெரிய ஆட்கள் ஆக்கிவிடாதிர்கள
Quote
 
 
-8 #23 manithan 2012-01-20 20:38
நடராசன் ஒரு சிறந்த ராஜ தந்திரி, அ தி மு க வின் வெற்றிகளில் அவருக்கும் பங்கு உண்டு.. ஆனால் அம்மாவை பகைக்க நினைத்தால் சுதாகரன் மாதிரி கஞ்சா கேசுல உள்ள போக வேண்டியதுதான்...
Quote
 
 
-31 #22 GANESH THEVAR 2012-01-20 20:34
மாமன்னர் புலித்தேவர் புகழ் பரப்பிய அஞ்சாநெஞ்சர் ம . நடராஜன் தலைமையில் ஆண்ட பரம்பரை
மீண்டும் ஆளட்டும் ....தமிழகம் வளம் பெறட்டும் ......
Quote
 
 
+2 #21 Kandasamy S 2012-01-20 20:31
இங்கே சிலர் சொல்வது போல் திரு. பன்னீர் செல்வம் ஒன்றும் அறியாதவர் அல்ல. என் கல்லூரி நண்பர் புரொபசர் நேற்று எனக்கு சொன்னார். திரு. பன்னீர் செல்வம் பி.ஏ டிகிரி முடிக்கவில்லையா ம். இவர் எம்.எல்.ஏ தேர்தல் நாமினேசன் செய்யும்போது பி.ஏ முடிக்கவில்லை என்று சொல்லியுள்ளார். ஆனால் அரசு குறிப்புகளில் பி.ஏ முடித்துள்ளதாக தெரிவித்துள்ளார ். சட்டப்படி குற்றமாக கூட இருக்கலாம்.

http://www.elections.tn.gov.in/Affidavits/200/PANNEERSELVAM.O.pdf
http://www.assembly.tn.gov.in/members/profile/200.html
Quote
 
 
+3 #20 தடியா 2012-01-20 18:36
சவுக்கு

சபாஷ்


அசத்து
Quote
 
 
+3 #19 ஷாலி 2012-01-20 18:26
முள்ளிவாய்க்கால ் படுகொலை நடந்தபொழுது கண்டும் காணாமல் இருந்த தமிழர்கள்,தமிழ் தலைகள்,அந்த மக்களை காப்பாற்ற எதுவும் செய்யவில்லை.
ஏனென்றால் இந்திய அரசோடு மௌன சம்மதத்துடன் சதியில் உடந்தையாக இருந்தவர்கள் இவர்கள்.

இன்று தமிழ் மக்கள் பணத்தை கொள்ளையடித்த நடராஜன் அதை பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் நினைவுக்கு தருவது ஏற்றுக் கொள்ளவேண்டிய ஒன்றுதான். இதில் நெடுமாறனுக்கோ,க ாசி ஆனந்தனுக்கோ ஒன்றும் குறைவு ஏற்பட்டு விடாது.ஏதிலிகள் நதிமூலம் ரிஷிமூலம் பார்க்க முடியாது.

ஈழமக்களுக்கு தேவை ஏதொரு வகையில் ஆதரவு,
அதை நல்ல தமிழன் தர மறுக்கிறான்.கள்ளத் தமிழன் கொடுக்கிறான்.

ஈழத்தமிழனை கள்வர்களிடமெல்ல ாம் கையேந்தும் நிலைக்கு ஆளாக்கியது யார் குற்றம்?

பிரபாகரனா?,பிரபாகரனை உருவாக்கிய சிங்கள பேரினமா?சிங்களருக்கு துணைபோன இந்திய அரசா?,அரசுக்கு தோள்கொடுத்த கருணாநிதியா? ஆம்! தி மு க –திருவாரூர் முத்துவேலர் கருணாநிதிதான்.
Quote
 
 
+7 #18 எழிலரசன் 2012-01-20 18:19
சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின ் சொத்துக்களை உடனே பறிமுதல் செய்து, அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும். ஏனெனில், முறைகேடாக் குவிக்கப்பட்ட பணம், இவ்விழாவைப் போன்று பல்வேறு வழிகளில் புழக்கத்துக்கு வர வாய்ப்புண்டு.
Quote
 
 
+2 #17 ஊர்க்குருவி. 2012-01-20 18:13
பட்டம் பதவி புகழ் தானே வரவேண்டும். வில்லங்கத்துக்க ு வேண்டுமென்றால் வைத்துக்கொள்ளலா ம், ஆனல் ஒரு இடத்திலும் அது உதவிக்கு வரப்போவதில்லை. நான் என்ற வார்த்தையை கருணாநிதியையும் விட இந்த நடராசனார் அதிகம் பயன்படுத்துகிறா ர். நடராசனை ஒரு குளப்பவாதியாகவே தமிழ்நாடு மக்களுக்கு அறிமுகப்படுத்தி யது, அதுவும் சசிகலா நடராசன் என்றாலே இந்த நடராசன் நினைவுக்கு வந்தவர். தனி நடராசன் என்றால் எந்த ந்டராசன் என்பதே யாருக்கும் தெரியாது. இன்று நான் நான் என்று உல்க பெரும் தலைவராக தன்னிலை விளக்கமளிப்பதும ் ஊடகங்கள் இவருக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் கோமாளித்தனமாக இருக்கிறது. இதில் நெடுமாறன் காசி ஆனந்தன் ஆகியோர் சறுக்கியது எப்படியென்று தெரியவில்ல. இருந்தும் இது ஆடிக்காற்றில் படபட்டக்கும் காகிதம்தான் ஆவணி பிறக்க தனாக அடங்கிவிடும்.
Quote
 
 
+8 #16 prabhu ramaswamy 2012-01-20 17:33
வன்டுமுருகன் அன்னன். கருமை நிர கன்னன் பெசிசிலெ மன்னன் சிந்தனை சிர்பி சயனைடு குப்பி...

இவன் ஒரு வென்காயம்...
Quote
 
 
-23 #15 G Hari 2012-01-20 16:52
செய்வதற்கு ஒரு மனம் வேண்டும் , சவுகுகிற்கு இவரை பிடிக்கலேன்னா அதை நேரிடையாக சொல்லிவிடலாம் , அதை விடுத்தது தமிழ் உணர்வோடு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, சென்னை புல்லா அவின்யு நடந்த தமிழன உணர்வு தீபந்த நிகழ்விற்கும் ,இன்னும் சில நிகழ்விலும் இவர் பங்கெடுத்து உள்ளார் .இவர் ஒன்றும் ஆயிரம் ஆயிரம் தொண்டர்களுக்காக கட்டிய கட்சி அலுவலகத்தை தன் தொலைகாட்சி நிறுவனத்திற்கோ இல்லை வோல்டாஸ் கட்டிடத்தையோ வாங்க வில்லையே , தன் சொந்த கார் மற்றும் தனக்கு சொந்தமான பொருட்களை தானே விற்று கொடுத்தார் ...இவருக்கு ஏது இவொலோ பணம் என்று கேட்க ஆரம்பித்தால் , தமிழ் நாட்டில் மட்டும் அல்ல இந்திய நாடு முழுவதிலும் ,மன்னர் வம்சாவளி ,ஜமின் ,பரம்பரை கோடிஸ்வரர்கள் தவிர எல்லாரையும் கேட்ட வேண்டும்

செய்வதற்கு ஒரு மனம் வேண்டும் ,இன உணர்விற்காக இவர் செய்கிறார் ,அதை வரவேற்க வேண்டும் ,உங்கள் தனிப்பட்ட பகையை தமிழ் இன உணர்வோடு கலக்க வேண்டாம் ...
Quote
 
 
+1 #14 செல்வமணி 2012-01-20 16:44
பாசிச இலங்கை அரச அமைச்சர் ஒருவரை ஐரோப்பாவிற்கு அழைத்து தலித் மாநாட்டை நிகழ்த்திவிட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்காகக் குரலெழுப்புவதாக க் கூச்சலிடும் இவர்கள் அபாயகரமானவர்கள் .
இவ்வேளையில், அண்மையில் தமிழ் நாட்டில் "இந்து பாசிச குழு" ஒன்றின் யாத்திரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டமை மட்டுமன்றி அவர் "விஷ்வ இந்து பரிஷாத்தில் இலங்கைப் பிரதிநிதி"(VHP) என்றும் அறிவித்தார்.--

http://inioru.com/?p=25701
Quote
 
 
+26 #13 Suraa 2012-01-20 14:42
இது ஒரு டம்மி பீசு பாசு...வுடுங்க..
Quote
 
 
+23 #12 nsharma 2012-01-20 14:21
1956ல் எனக்கு 8 வயது. அப்பொதெ திமுகவினர் தெரு தெருவாக "தெவி குளம் பீர் மெடு தமிழருக்கெ" என்ரு எழுதி அதை தெர்தல் குரிக்கொள் ஆக்கினர். இந்த நடராசன் மக்களை மூட்டாள் ஆக்க முயர்சிகிறார்.
Quote
 
 
+17 #11 குடிமகன் 2012-01-20 13:17
மிட்டாஸ் சாரய கம்பெனி பற்றி எழுதவும். அதில் ஜெயாவுக்கும் சசிக்கும் எவ்வளவு பஙகு என்று எழுதவும். ஊரை அடித்து உலையில் போடும் கூட்டம் அழியட்டும்.
Quote
 
 
-57 #10 விஜய் கிருஷ்ணா 2012-01-20 12:08
எவ்வளவு தான் வசதி உள்ளவனாலும் இப்படி ஐம்பது லட்ச ரூபாய் பணம் கொடுக்க பெரிய மனசு வேணும். அது எப்படி வந்ததுன்றது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனா, இவ்வளவு தைரியமா பெரிய மனசோட கொடுக்க நிச்சயம் மனம் வேணும். அந்த மனசு இல்லாவிட்டாலும் நீங்க குறை சொல்ல மட்டும் முன்னால வந்துடறீங்க..பட்டிணம்பாக்கம் போய் சேர ஏசி 12பி யா இருந்தா என்ன..சாதா 12பி யா இருந்தா என்ன..இலவசமா கூட்டிப்போகும் போது சந்தோஷமா பட்டணம்பாக்கம் போற வழியை தான் பார்க்கனும்.. அதை விட்டுபுட்டு தொட்டதுக்கெல்லா ம் குறை சொன்னா..வடபழனியிலேயே நின்னுக்கிட்டு முறுக்கு சாப்பிடறவன வேடிக்கை பார்க்க வேண்டியது தான்! சட்டு புட்டுன்னு பணத்தை வாங்கி நினைவிடத்தை கட்டற வேலையை பாருங்கப்பூ..
Quote
 
 
+17 #9 jagant 2012-01-20 12:07
சவுக்கு.. இன்னைக்கு டெக்கான் க்ரா. வில் நீங்க தகவல் கமிஷனர் ஸ்ரீபதிக்கு, நெற்குன்றம் விவகாரத்தில் கஷாயம் கொடுத்தது ப்ற்றி படித்தபோது சந்தோஷமாக இருந்தது. இந்த பன்னாடை பதவி ஓய்வு பெற்றபின்பும் வீடு வாங்க விண்ணப்பித்தான் எனில் எவ்வள்வு பேராசை. பண்த்திற்கும் ஆதாயத்துக்கும் எதுவும் செய்வார்கள் போல.
Quote
 
 
+10 #8 nallavan 2012-01-20 11:51
இந்த நடராஜன் பெரிய குடும்பம்திற்கு ம், கருணாநிதியின் மேகா குடும்பம்திற்கு ம் ஒரு மேற்கேற் நடந்தால் நல்லது. நாமெல்லாம் ஆபிரிக்க நாடுகளில் போய் தஞ்சம் அடைந்து பொழப்பை ஓட்டலாம் . என்ன போகும்போது கிட்னி க்கு ஏதும் ஆபத்து வரமால், அதை கூட புடுங்கி அனுப்பாமல் ஜகரதியாக செல்ல வேண்டும் நாம் எல்லாம் .
Quote
 
 
+6 #7 SAM 2012-01-20 11:42
very well said savukku !
Quote
 
 
+23 #6 whistele 2012-01-20 11:07
For one of your previous articles, one reader had commented about the link between Nedumaran and Natrajan. I didn't believe it at that time. But now the link is very clear.
Quote
 
 
+56 #5 குட்டி 2012-01-20 11:04
திரு நடராஜன் அவர்களின் பேச்சைக் கேட்கும் பொது(முள்ளிவாய் க்கால் நினைவிடம் அமைப்பதற்கு 50 லட்ச ரூபாய் திரட்டிய ??? பேச்சு )பிதாமகன் படத்தில் சூர்யா ரயிலில் பொருட்களை ஏமாற்றி விற்பது தான் நினைவுக்கு வருகிறது....
Quote
 
 
+47 #4 குட்டி 2012-01-20 10:55
நாராயணா! இந்த கொசு தொல்லை தாங்க முடியல... ஏதாவது ஒரு மருந்து அடிச்சு கொள்ளுங்கடா...
Quote
 
 
+28 #3 covai murugan 2012-01-20 10:21
இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் இருந்தா அப்புறம் எப்படி பாஸ் நம்ம நாடு உருப்புடும் ...சங்கர் படம் மாதிரி சினிமாவுலதான் இந்தியா வல்லரசாகும்
Quote
 
 
+16 #2 SOUNDAR 2012-01-20 10:20
தமிழன் இலிச வாயன் என நடராஜன் போடும் வேஷமே 8) ஊற்றி வளர்த்தது ஜெயலலிதாவே
Quote
 
 
+70 #1 karthikPrabhakaran 2012-01-20 10:19
இது நிச்சயமாக நெடுமாறன், காசி ஆனந்தன் ஆகியோரின் மதிப்பை சற்று குறைக்கச் செய்யும்....இது போன்ற நினைவிடங்கள் நமது வியர்வையில் உருவான பணமாக இருக்க வேண்டும்.ரத்தத்தை உறிஞ்சிய பணமாக இருக்கக் கூடாது.
.அத்தனை லட்சம் பேர் சாகும் போது இவர் எங்க புடுங்க போயிருந்தாராம்.இப்ப நினைவிடத்துக்கு காரையும் வாட்சையும் வித்து பணம் தருவாராம்.அதை வாங்கி அப்படி ஒரு இடமே தேவையில்லை.அந்த கார் எவன் உயிரை எடுத்து வாங்கினானோ????
தனது பலத்தை காட்டுகிறேன் என்று இது சீண்டிப் பார்க்கும் செயலாகவே தெரிகிறது.சொந்த செலவில சூன்யம் வெச்சுக்கிட்ட மாதிரி தெரியுது.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 64 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

தமிழ்லீடர்

tamilleader

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday2309
mod_vvisit_counterYesterday10960
mod_vvisit_counterThis week47655
mod_vvisit_counterLast week74101
mod_vvisit_counterThis month262045
mod_vvisit_counterLast month376831
mod_vvisit_counterAll days7425122