முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
நீங்கள் மனது வைத்தால் முடியும். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 39
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வெள்ளிக்கிழமை, 26 ஆகஸ்ட் 2011 13:47

 

கடந்த காலங்களில் நீங்கள் எடுத்த கடுமையான நிலைபாட்டினால், நாங்கள் உங்களிடம் பெரிதாக எதையும் எதிர்ப்பார்க்கவில்லை என்பதே உண்மை.  ஆனால், நாங்கள் நினைத்ததை பொய்யாக்கும் விதமாக, தமிழக சட்டசபையில், இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நீங்கள் நிறைவேற்றிய போது, இடிந்து போயிருந்த தமிழினத்திற்கு நம்பிக்கை பிறந்தது.  போர்க்குற்றங்கள் புரிந்து, அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்த சிங்கள இன வெறி அரசுக்கு தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கை ஒளி தெரிந்தது.

 adfad

அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி க்ளின்டனின் இந்திய வருகையின் போது, மாநில முதலமைச்சர்கள் வெளியுறவுக் கொள்கையை விவாதிக்கக் கூடாது என்ற மரபை மீறி தாங்கள் முள்வேலி முகாமிற்குள் அடைத்து வைக்கப் பட்டுள்ள தமிழர்களை பற்றிப் பேசிய போது, உள்ளம் மகிழ்ச்சியடைந்தது.

 

தமிழ்நாட்டு முகாமில் இருக்கும் ஈழ ஏதிலிகளுக்கான உதவித்தொகையை அதிகரித்த போது, உண்மையில் தமிழர்களின் மீது அக்கறை கொண்ட ஒரு தலைவர் கிடைத்து விட்டார் என்று அகமகிழ்ந்தனர் தமிழர்கள்.

 

அதே நம்பிக்கையோடு உங்களிடம் உலகத் தமிழினம் எதிர்ப்பார்ப்பது, முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளனின் உயிரை நீங்கள் காக்க வேண்டும் என்பதே.

 

திமுக தலைவர் கருணாநிதியால் நீங்கள்  27 நாட்கள் சிறையில் அடைக்கப் பட்டீர்கள்.  சிறையின் வேதனை என்ன என்பதை நேரடியாக அறிந்தவர் நீங்கள். உங்களுக்கு வேறு யாரும் சொல்லித் தெரிய வைக்க வேண்டியதில்லை. அந்த வேதனையின் வெளிப்பாடுகளை அதன் பிறகு நீங்கள் பேசிய பல்வேறு பொதுக்கூட்டங்களில் காண முடிந்தது. அப்படிப் பட்ட கொடுஞ்சிறையில், 21 ஆண்டுகளாக முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோர் இருந்து வருகின்றனர்.   அதுவும், தூக்கு தண்டனைக் கைதிகள் என்பதால், இவர்களுக்கு தனிமைச்  சிறை.   ஒரு மனிதனுக்கு நேரக்கூடிய மிகக் கொடுமையான சூழல் என்னவென்றால், அவன் இறக்கும் நாள் தெரிவதுதான்.   நாம் அனைவரும் ஒரு நாள் இறக்கப் போகிறோம் என்பது நன்கு தெரிந்தாலும், அது என்றைக்கு என்று தெரியாததால் தான் நம்மால் தொடர்ந்து வாழ முடிகிறது.   நாளையோ, நாளை மறுநாளோ மரணம் என்ற எண்ணத்தோடு வாழ்வது போன்ற ஒரு கொடிய வேதனையை வார்த்தைகளால் விவரிப்பது கடினம்.

 

திரிவேணி பேன் என்பவர் வழக்கில் உச்ச நீதிமன்றம், குறிப்பிட்டதை இந்த நேரத்தில் எடுத்தாளுவது பொறுத்தமாக இருக்கும்.  “எரியும் நெருப்பையும், மன உளைச்சலையும் ஒப்பிட்டால், பிந்தையதே அதிக துன்பத்தைத் தரும், ஏனெனில் எரியும் நெருப்பு பிணத்தை எரிக்கிறது ஆனால், மன உளைச்சல் உயிரை எரிக்கிறது”.  இந்த மன உளைச்சலோடு 21 ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கின்றனர் இந்த மூவர்.

 pic02

அன்பான முதல்வர் அவர்களே…..!! ஊழல் புகாரிலும், நில அபகரிப்புப் புகாரிலும், குடும்பச் சண்டையிலும் சிக்கி, கட்சியை எப்படி காப்பாற்றுவது என்று அல்லாடிக் கொண்டிருக்கும் நிலையிலும், கருணாநிதி தன்னை இன்னும் தமிழினத் தலைவர் என்று அழைத்துக் கொண்டிருக்கிறார்.  உலகத் தமிழினம், அவரை என்றோ கை கழுவி விட்டு விட்டாலும், அவர் இன்னும் தன்னை அப்படித்தான் அழைத்துக் கொண்டிருக்கிறார்.

 

அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 161 மாநில அரசுக்கு வழங்கியிருக்கக் கூடிய அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்த மூவரின் மரண தண்டனையை நீங்கள் ரத்து செய்தீர்களே ஆனால், உலகத் தமிழினம், உயிருள்ள வரை உங்களைப் போற்றும். மற்ற அரசியல் கட்சித் தலைவர்களிடம் காணப்படாத வகையில் சுற்றுச் சூழலை மிக அதிகமாக நேசிப்பவர் நீங்கள். 2001லேயே உங்கள் கட்சியினருக்கு ப்ளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம் என்று கட்டளையிட்டீர்கள். மழை நீரை சேமிப்பதை கட்டாயமாக்கியது நீங்கள் தான்.   சுற்றுச் சூழலில் உங்களுக்கு இருக்கும் அக்கறையே உங்களை சேது சமுத்திரத் திட்டத்திற்கு எதிராக நிலைபாட்டை எடுக்க வைத்தது.    சுற்றுச் சூழலின் மேல் இப்படி ஒரு அக்கறையைக் கொண்டுள்ள, கருணை உள்ளம் படைத்த நீங்கள், மூவரின் உயிரை அரசு பறிப்பதை வேடிக்கை பார்க்க மாட்டீர்கள் என்று நம்புகிறோம்.

 

நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட நீங்கள், வெறும் அரசியல் காரணங்களுக்காக மூன்று உயிர்கள் கொல்லப்படுவதை அனுமதிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறோம்.

 

நாகரீக வளர்ச்சி பெற்றுக் கொண்டு மனித இனம் வீறு நடை போட்டுக் கொண்டிருக்கும் இந்த 21ம் நூற்றாண்டில், அரசே சட்ட பூர்வமாக உயிரைப் பறிப்பது அநாகரீகமான செயல் என்று மனித சமுதாயம் கருதியதாலேயே, உலகில் 150க்கும் மேற்பட்ட நாடுகள் மரண தண்டனையை ஒழித்திருக்கின்றன.

 

சிக்கலான சூழலில், மிகப் பெரிய அரசியல் நெருக்கடியில் காங்கிரஸ் கட்சி சிக்கியிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.   அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலரோடு, நீங்கள் வெளியுறவுக் கொள்கை தொடர்பான விஷயங்களை விவாதித்ததை காங்கிரஸ் கட்சி மிகுந்த எரிச்சலோடு பார்க்கிறது என்பதையும் நீங்கள்  அறிவீர்கள்.   உலகத் தமிழர்கள் மத்தியில், உங்கள் புகழ் பன்மடங்கு உயர்ந்திருப்பதையும், நாளை ஒரு மூன்றாவது அணி அமையும் நேர்வில், அந்த அணிக்கு நீங்கள் தலைமையேற்கும் சூழல் கனிந்து வருவதையும், காங்கிரஸ் கட்சி கவலையோடு கவனித்து வருகிறது.

 

இப்படிப் பட்ட ஒரு சூழ்நிலையில், உங்களை நெருக்கடியில் ஆழ்த்துவதற்காகவே, 12 ஆண்டுகள் கழித்து, இந்த நேரத்தில், இந்த மூவரின் கருணை மனு நிராகரிக்கப் பட்டிருக்கிறது.  இதை விட மிக மிக மோசமான நெருக்கடியிலிருந்து மீண்டு வந்தவர் நீங்கள்.   இவர்களின் மரண தண்டனையை ரத்து செய்ய பரிந்துரை செய்வதன் மூலம், இந்த நெருக்கடியிலிருந்தும் நீங்கள் வெளி வர வேண்டும் என்று விரும்புகிறோம்.

 jaya2_20110614

கருணாநிதி அரசு, மக்களை கடும் துன்பத்தில் ஆழ்த்தியதோடு அல்லாமல், மக்களுக்கு வாக்களிக்க பணம் கொடுத்து மக்களை ஊழல் பேர்விழிகளாக மாற்றி வைத்திருந்தது.  2011 சட்டமன்றத் தேர்தலில், திமுகவினர் எவ்வளவு பணம் கொடுத்தாலும், அதற்கு மசியாமல், உங்களுக்கும் உங்கள் கூட்டணிக் கட்சியினருக்கும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி வாய்ப்பை வாரி வழங்கியிருக்கின்றனர் தமிழக மக்கள்.

 

இந்த வெற்றிக்கு தமிழ்நாட்டு வாழ் தமிழர்களைத் தவிர்த்து, புலம் பெயர்ந்த தமிழர்களின் கணிசமான பங்கு இருந்தது என்பதை நீங்கள் மறுக்க முடியாது.

 

உங்களுக்கு வரலாறு காணாத வெற்றியை அள்ளித் தந்த உரிமையில் இறைஞ்சிக் கேட்கிறோம்…. மூவர் உயிரைக்  காப்பாற்றுங்கள்.   தமிழினம் உள்ளவரை நீங்கள் வாழ்த்தப் படுவீர்கள்.

 

அன்புடன்

 

உலகத் தமிழினம்.

 

Comments  

 
0 #141 thamilan @ kenayan 2011-09-01 22:24
முதல்வராக இருந்த கருணாநிதி தடுத்து நிறுத்தியிருக்க முடியுமா என்றால்
முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. ஆனால் மத்திய அரசுக்கு அழுத்தத்தைக் கொடுத்திருக்க முடியும். ஆட்சியைத் துறந்திருந்தால் மத்திய அரசு இக்கட்டுக்கு உள்ளாகி போரை நிறுத்தியிருக்க லாம்.

ஆனால் இன்று மூன்று பேரையும் தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா காப்பாற்ற முடியும் என்றால் முடியும். கையில் அதிகாரம் இருக்கிறது. கேரள பாலன் வழக்கு முன்னுதாரணமாக இருக்கிறது. அதிகாரம் கையிலிருந்தும் ஏன் ஜெயலலிதா பொய் சொல்கிறார்?

அழுத்தம் கொடுக்காத கருணாநிதி துரோகி என்றால் அதிகாரம் இருந்தும் மறுக்கும் ஜெயலலிதாவை என்னவென்று சொல்வது? இதற்கு மேலும் ஜெயலலிதாவை எப்படி நியாயப்படுத்த போகிறீர்கள்? ஜாபர் சேட்டுக்கு இக்கொட்டு கொடுத்தார் என்பதற்காகவா?








ஏஙக ஷன்முக நாதன் இப்பதான் தீர்மானம் போட்டாசே...இப்பவும் மத்திய சட்ட அமைச்சர் இந்த தீர்மானம் எந்த வகையிலும் உச்ச நீதிமன்றத்தையோ மத்திய அரசையோ கட்டுபடுத்தாது என்கிறார்.......

இதை என்னனு சொல்லுறது?
Quote
 
 
0 #140 shanmuganathan 2011-09-01 20:26
[yes i suuport these pointsquote name="Tamilss"]ஈழம் அழியும்பொழுது தமிழகத்தின் முதல்வராக இருந்த கருணாநிதி தடுத்து நிறுத்தியிருக்க முடியுமா என்றால்
முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. ஆனால் மத்திய அரசுக்கு அழுத்தத்தைக் கொடுத்திருக்க முடியும். ஆட்சியைத் துறந்திருந்தால் மத்திய அரசு இக்கட்டுக்கு உள்ளாகி போரை நிறுத்தியிருக்க லாம்.

ஆனால் இன்று மூன்று பேரையும் தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா காப்பாற்ற முடியும் என்றால் முடியும். கையில் அதிகாரம் இருக்கிறது. கேரள பாலன் வழக்கு முன்னுதாரணமாக இருக்கிறது. அதிகாரம் கையிலிருந்தும் ஏன் ஜெயலலிதா பொய் சொல்கிறார்?

அழுத்தம் கொடுக்காத கருணாநிதி துரோகி என்றால் அதிகாரம் இருந்தும் மறுக்கும் ஜெயலலிதாவை என்னவென்று சொல்வது? இதற்கு மேலும் ஜெயலலிதாவை எப்படி நியாயப்படுத்த போகிறீர்கள்? ஜாபர் சேட்டுக்கு இக்கொட்டு கொடுத்தார் என்பதற்காகவா?
Quote
 
 
+1 #139 ராஜரத்தினம் 2011-08-30 14:22
இன்று நிறைவேற்றிய தீர்மானம் போதுமானதாக இருக்குமா?
Quote
 
 
+1 #138 balaNISH 2011-08-30 12:57
உஙக கருத்துக்களை அம்மா கேட்பார்...!!
Quote
 
 
0 #137 KARTHEESWARAN 2011-08-30 12:16
மூவரின் தூக்கை ஆயுளாக குறைக்கக் கூறி சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றம்.

http://thatstamil.oneindia.in/news/2011/08/30/tn-assembly-wants-death-sentence-aid0091.html
Quote
 
 
+1 #136 KARTHEESWARAN 2011-08-30 11:33
முதலமைச்சர் அவர்கள் கண்டிப்பாக ஏதாவது செய்ய வேண்டும், அப்படி செய்தால் தமிழ் இனத்தின் அசைக்க முடியாத ஒரே ஒரு தலைவராக வைருப்பார்.. அப்படி இந்த மூன்று பேரையும் தூக்கிலிட்டால் ஒரு காங்கிரஸ்காரனைய ும் உயிரோடு விடக் கூடாது. இதற்கு பழியாக சோனியா, ராவுல் வின்சி மற்றும் பிரியங்கா ஆகியோரை சுட்டுக் கொள்ள வேண்டும்..
Quote
 
 
0 #135 Rajasekhar 2011-08-30 07:28
A genuine inability: Tamil Nadu Chief Minister and AIADMK Supremo J Jayalalithaa said she had no powers to stop them from facing the gallows.
http://thatstamil.oneindia.in/news/2011/08/29/chief-minister-cannot-intervene-after-president-rejects-aid0091.html
Quote
 
 
-1 #134 Rajesekher 2011-08-30 06:58
"இனமானக் காவர்" என்றுக் கூறிக் கொள்ளும் "பேராசிரியன்? க.அன்பழகன் தான் இந்த அவமானத்திற்கு காரணம். தமிழனின் மானம் "கோவணமும் இல்லாமல்" உலகம் முழுவதும் சிரிப்பாய் சிரிக்கிறது!.
-------------------------------------
சேர, சோழ, பாண்டியன் என்று தலை நிமிர்ந்து இருந்த தமிழினம் இன்று இப்படி பிறரிடம் மன்றாடி நிற்பதன் காரணம் என்னவோ? தமிழனின் தன்மானம் என்ற நரம்புகள் அறுந்து போய் விட்டனவா?
Quote
 
 
0 #133 அநானி 2011-08-29 22:53
வணக்கம்
தமிழர்களின் உணர்வு பொங்கி எழுந்ததனால் தான் ஆட்சியில் அமரும் வாய்ப்புக்கிடைத ்தது.
தமிழர்கள் அனைவரும் அம்மா என்று பாசத்துடன் அழைக்கப்படும் முதலமைச்சர் அவர்கள் மேதகு குடியரசுத் தலைவருக்குத்தமி ழர்களின் மன உணர்வினை எடுத்துச் சொல்லி ஒரு கோரிக்கை மனு அனுப்ப முடியும், சட்டம் இதற்குத் தடை சொல்ல முடியாது
Quote
 
 
+8 #132 pottadi 2011-08-29 21:43
எப்படி கொன்றார்கள் . யார் யார் கொன்றார்கள் என்பதை கொண்டே வழங்கப்படும்
தண்டனைத் தவறானது. கொல்லத் திட்டமிட்டவர்கள ் யார் ? என்பதை
தெளிவு படுத்தாதவரை இவர்களைத் தூக்கில் இடுவது எந்த வகையில் நியாயம்.
சுப்ப்ரமணியசாமி , சந்திராசாமி என்ன செய்தார்கள் ? சோனியாவின் பங்கு என்ன ?
அரை வேக்காட்டு தீர்ப்பு என்று மக்கள் சொல்வது காதில் விழாம்ல் போனதேன்.
உங்களது மேற்பட்ட விசாரனையில் உங்களுக்கே நம்பிக்கை இல்லாததனால்தான் .
அப்பவிகள் பலி ஆடுகள் அபர்மிதமான அதிகாரம் ஆளுபவர் இடத்தில் இருப்பதால்.
Quote
 
 
+7 #131 pottadi 2011-08-29 21:24
முதல்வர் அவர்களுக்கு ,
உங்களுக்கு அதிகாரம் இல்லாமல் இருக்கலாம். நீங்கள் தமிழக முதல்வர் தமிழக மக்களின்
குரல் உங்கள் மூலமாக ஒலிக்கட்டும் . அண்ணா ஹ்ஷாரே ஊழலுக்கு எதிராக மக்களின்
பிரதி நிதியாக குரல் கொடுத்து நல்லதை உண்டாக்கியிருக் கும் பொது மனித நேயம் அறிந்த
எங்களின் குரலை எடுத்து சொல்லுங்கள் . அதிகாரம் உள்ளவர் குரலே எடுபடும் என்பது
உங்களுக்குத் தெய்ரியாதா ?
Quote
 
 
-4 #130 vennai 2011-08-29 20:28
tamilnatil ulla congress karan yaru. avan ellam verra state aa ?? ippadi pese pesi thanga neenga aliyureenga....Quoting tamillinux:
சேர, சோழ, பாண்டியன் என்று தலை நிமிர்ந்து இருந்த தமிழினம் இன்று இப்படி பிறரிடம் மன்றாடி நிற்பதன் காரணம் என்னவோ? தமிழனின் தன்மானம் என்ற நரம்புகள் அறுந்து போய் விட்டனவா?
Quote
 
 
+2 #129 raghunathan m s 2011-08-29 19:58
SINCE THE THREE ARE NOT INVOLVED DIRECTLY IN THE ASSASINATION THEY CAN BE PARDONED AND DAETH SENTENCE MAY BE COMMUTED. HOWEVER IF MINORITY MUSLIM ORGANISATIONS START AGITATION FOR A SIMILAR ACT OF GENEROSITY TO SHOW LENIENCE TO AFSAL GURU AND KASAB WHAT WILL BE THE REACTION OF READERS
Quote
 
 
+6 #128 கொடுமை 2011-08-29 19:54
ஐய்யா சாமி... எல்லாம் சரி காணாமல் போன திமுக மத்திய அரசிடமிருந்து வாபஸ் வாங்குமா..?
Quote
 
 
+2 #127 tamilsacfe.blogspot 2011-08-29 19:48
தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் எனக்கு இருப்பது போலவும், அந்த அதிகாரத்தை நான் பயன்படுத்தி அவர்களை காப்பாற்ற முடியும் என்பது போலவும் பேசப்படுவது சட்டத்தின்படி சரியானது அல்ல. பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் சட்டங்களைத் தெரிந்து கொண்டு வேண்டுமென்றே இவ்வாறு எனக்கு அதிகாரம் இருப்பது போல சொல்லி வருகிறார்களா? அல்லது சட்டங்களைப் பற்றி எதுவுமே தெரியாமல் முதல்- அமைச்சருக்கு இத்தகைய அதிகாரம் இருப்பதாக கூறுகிறார்களா? என்பது தெரியவில்லை.

எனவே சட்ட நிலைமை என்ன என்பதை இந்த மாமன்றத்தின் வாயிலாக பொது மக்களுக்கு தெரி விப்பது எனது கடமை ஆகும் எனக் கருதுகிறேன். உச்ச நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப் பட்டவர்களுக்கு ஆளுநரோ அல்லது குடியரசுத் தலைவரோதான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படி மன்னிப்பு அளிக்க முடியும் (தமிழகத்தின் முதல்வர் திரு ஜெயலலிதா அவர்களின் பேட்டி )

சவுக்கு மற்றும் அதன் வாசக நண்பர்கள், திரு ஜெயலலிதாவிற்கு ஏன் தமிழகத்தின் ஆளுநர் மாளிகையை முற்றுகை இட்டு போராட அதிமுக, திமுக, மற்றும் அனைத்து கட்சிகளையும் அதிமுக தலைமையில் ஒருங்கிணைக்க கோரிக்கை வைக்க கூடாது/???
Quote
 
 
+1 #126 Naanthan 2011-08-29 17:24
[ஃஉஒடெ நமெ="ர்௯"]ப்ல்ச் ஹங் தெ த்ரே...ச்ம் ப்ல்ச் டொன்ட் இன்டெர்ஃபெரெ அன்ட் ச்பொஇல் உர் நமெ[/ஃஉஒடெ]

correctly said. CM should not spoil her name.
Quote
 
 
+4 #125 Gnanadoss 2011-08-29 16:33
தர்கொலை தடை சட்டம் இருக்கும் போது, ஒரு உயரை பரிக்க சட்டதுக்ககு எது உரிமை,
மனிதனை மனிதன் கொல்வது மிருகதனமன செயல் சட்டம் யென்பது மனிதனை திருததவே தவிர அலீப்பதக்கு அல்ல
Quote
 
 
0 #124 http://koothadivedda 2011-08-29 16:28
ராஜி்வ் கொலையாளிகள் 3 பேரை, வரும் 9 ம் தேதி தூக்கில் போட ஏற்பாடுகள் துரித கதியாக நடந்து வருவதை அடுத்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் தூக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.தமிழக முதல்வர் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி 3 பேரையும் காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை குரல் எழுந்தது. ஆனால் இந்த விஷயத்தில் தலையிட முதல்வருக்கு அதிகாரம் இல்லை என சட்டசபையில் முதல்வர் ஜெ., அறிவித்தார்.

ஜனாதிபதியின் கருணை மனு நிராகரிக்கப்பட் டதை அடுத்து ராஜிவ் கொலையாளிகள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற சிறை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் ஜெ., சட்டசபையில் இது தொடர்பான விஷயத்திற்கு விளக்கம் அளித்து இவர்களை காப்பாற்றும் அதிகாரம் தமக்கு இல்லை , இதில் தான் தலையிட முடியாது. என முற்றுப்புள்ளி வைத்தார். என்று செய்திகள் வருகின்றன.

முதலமைச்சர் அம்மா அவர்கள் ஜனாதிபதியிடம் ஒரு கோரிக்கை மனுவாவது கொடுக்கமுடியும் அல்லவா. செய்வாரா?
Quote
 
 
+1 #123 Abdul Rahman - Dubai 2011-08-29 15:54
அந்த மூவரின் உயிர்களும் கட்டாயம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது.
அதே சமயம், மனசாட்சியோடு - நடுநிலையோடு எதையும் பார்க்க வேண்டும்.

எல்லாம் கைமீறி சென்று விட்ட பிறகு, ஒட்டு மொத்த சுமையையும், ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சரின் மீது போட்டுவிட்டு, "அவர் கட்டாயம் உதவி செய்தாக வேண்டும்" என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சர் தனக்குரிய அதிகார வரம்பை மீறி எதுவும் செய்து விட முடியாது" என்பது யாருக்கும் தெரியவில்லையா? அல்லது புரியவில்லையா??

இவையெல்லாமே காலம் கடந்த முயற்சிகள்!! இனி பலன் கொடுக்காது. இவர்களின் உயிர்களை காப்பாற்ற இத்தனை காலங்களில் எதையாவது செய்து இருக்கலாம். இந்த கடைசி நேரத்தில் என்னதான் முயற்சிகள் எடுத்தாலும் பலன் கொடுக்கப் போவதில்லை.

எது எப்படியோ, 10-செப்டம்பர்-2011-க்குப் பிறகு "தமிழின துரோகியே! ஒழிக!!" என்று யாரும் குரல் எழுப்பாமல் இருந்தாலே போதும்.

எனது இந்த கருத்துக்கு Poor Coooment போடப் போகும் நண்பர்களே!! ஒரு நிமிடம்.... ஜெயலலிதாவின், அதாவது தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் இருக்கையில் இன்று நீங்கள் ஒருவேளை இருந்தால் என்ன செய்வீர்கள்?? உங்களால் என்ன செய்ய முடியும்?? என்று யோசித்து விட்டு, பிறகு, கருத்துக்கு மதிப்பிடுங்கள்.

"ஒருவேளை நான் மட்டும் முதல் அமைச்சராக இருந்தால், அந்த மூவரையும் அல்லேக்காக தூக்கி வந்து விடுவேன்" என்கிற அளவில்தான் உங்கள் புத்தி இருந்தால் நீங்கள் தாராளமாக, என் கருத்துக்கு Poor Comment போடலாம்.
Quote
 
 
+12 #122 kk 2011-08-29 15:37
2000-ம் ஆண்டில் முதல்- அமைச்சராக இருந்த இதே கருணாநிதிதான் தனது தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் கருணை மனுக்களையும் நிராகரிக்கலாம் என்றும், மூவருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்யலாம் என்றும் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளார் . அன்றைய முதல்- அமைச்சர் கருணாநிதியின் இந்தப் பரிந்துரையை அன்றைய ஆளுநரும் ஏற்றுக்கொண்டார் . இவ்வாறு பேரறிவாளன் உள்ளிட்ட மூவருக்கும் அளிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்து விட்டு, செய்வதையெல்லாம் செய்துவிட்டு, இன்று ஒன்றும் தெரியாதது போல், அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று கருணாநிதி அறிக்கை வெளியிடுகிறார் என்றால், இது இரட்டை வேடம் அல்லாமல், பித்தலாட்டம் அல்லாமல், கபட நாடகம் அல்லாமல், வேறு என்ன என்பதை தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்.
Quote
 
 
-10 #121 so.ra.ilaiyavan 2011-08-29 15:36
இப்ப தெரியும் முதல்வரின் நிஜ முகம்........
Quote
 
 
-6 #120 Pandaram 2011-08-29 14:50
பிரதமருக்கு குன்டு வைத்துவிட்டு
அடுத்து ஜனாதிபதியிடம் சென்ட்ரான்,
கருனை மனுவுடன்
Quote
 
 
-11 #119 danguvaaru andhurum1 2011-08-29 14:42
அம்மாவும் கைவிரித்து விட்டாரே... அவருக்கு வோட்டு போடச் சொன்ன சவுக்கு இப்போது என்ன சொல்கிறார்...
Quote
 
 
+3 #118 vid 2011-08-29 14:30
மிக சிறந்த உதாரணம். இங்கு தூக்கு தன்னடனைக்கு ஆதரவாக பேசும் பலருக்கு அவளவு தெளிவில்லை. இங்குள்ள நிறைய பேர் ராஜீவ் வை கொன்றரவர்கள் என்று எழுதுகிறார்கள். இவர்கள் ஒரு கருவி மட்டுமே என்பது கூட அவர்களுக்கு புரியவில்லை.
Quote
 
 
-3 #117 js 2011-08-29 13:11
இப்போ என்ன் சேயயலாம் ப்ரெசிடென்ட் க்கு தந்தி அனுப்பல்மா அல்லது சோனியா,ராகுல், பரிய்ஙா நினைததால் நடக்குமா
Quote
 
 
0 #116 vennai 2011-08-29 12:57
sankar and you should read proper history. without any know you people are wasting your timings. see today dinamnai headlines. LAW concept is clearly explained. mr.raj as usual you are registring all waste contents. the other portal people try to educate you but its totally waste. better stick to here.. sankar also like you only..Quoting புதியவன் ராஜ்:
இந்த மூன்று பேரும் நேரடியாக குற்றத்தில் சம்பந்தப்பட்டவர ்கள் இல்லை. மேலும் ஆயுள் தண்டனையான 14 வருடங்களையும் கடந்து, 20 வருடங்களுக்கு மேல் சிறையில் வாடிவிட்டனர். தூக்குதண்டனை என்பது ஒரே குற்றத்திற்கு (குற்றம் செய்து இருந்தாலும்) இரண்டுமுறை தண்டிப்பது போல உள்ளது. அது தர்மமும் இல்லை நீதியும் இல்லை. சட்டத்திலும் ஒரே குற்றத்திற்கு இரண்டு முறை தண்டிக்க இடமும் இல்லை. 3 பேரையும் தூக்கு மேடையில் இருந்து காப்பாற்ற அதிகாரமுள்ளவர்க ள் கருணையுடன் நடவடிக்கை எடுத்து 3 பேர் உயிரையும் காப்பாற்ற வேண்டும். தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உயிரைக்காப்பாற் றினால் தமிழர்கள் இதயத்தில் நீங்காத இடம் பெறுவார்.
Quote
 
 
+10 #115 ஸ்டார் 2011-08-29 11:56
பேரறிவாளன்,ஒன்ற ும் அறியா பத்தொன்பது வயதில் போட்டா சட்டத்தால் கைது செய்யப்பட்டு,இர ுபது ஆண்டுகளாக தண்டனை பெற்றவர்,அவர்கள ் குடும்பம் பெரியார் சிந்தனை உடையவர்கள் ஒரேபையன்,நல்ல நடத்தை உள்ள அப்பா,நல்ல நடத்தை உள்ள அம்மா,நல்ல ஒரே மகன்,இவர்கள் குடும்பத்தில் எவரும் எந்தமநிதராலும் வெறுக்கப்பட்டு கொலைசெய் யப்படவில்லை.வெளிநாட்டுப்பெண ்ணை மனம்முடிக்கவில் லை.ஏன் இவருக்கு இரட்டை தண்டனை???இவர் குடும்பதில் எனக்குதெரிந்து யாரும் மவுன்பாட்டன் கலின் மனைவிஉடன் சல்லாபம் செய்யவில்லை.போஃபர்ஸ் ஊழல் புரியவில்லை,ஸ்வ ிஸ் வங்கிக்கு கருப்புபணம் அனுப்பவில்லை,இந ்திய அமைதிப்படை கொண்டு இலங்கையில் கொலைக்குற்றம் புறிய வில்லை. பிறகு ஏன் இந்த குடும்பத்திற்க் கு இந்த சோதனை??..
Quote
 
 
-1 #114 father 2011-08-29 11:48
why should she save the life of those burtal killars of our ex PM then every one will think to kill some leader and after sometime any baseless politician will come to save them. shame.. shame.. to keep this killers so far.
Quote
 
 
+5 #113 senthil blr 2011-08-29 11:21
Quoting dilip kumar:
இந்த அம்மா மனது வைக்க மாட்டார். இந்த தூக்கு தன்டனை யினால் காங்கிரச் கட்சி தமிழ் நாட்டில் கானாமல் போய் விடும்.அது தானெ வேன்டும் அம்மயார்க்கு!


Dont you have sense. If jeyalalitha do something, do you think sonia congress will allow her to rule tamilnadu peacefully. they will use the new congress governer and the karunanidhi to produce some fake report on law and order and then will dissolve jeya government. In that case we will lose the only person capable for fighting for getting justice for lakhs of tamil killings in srilanka.
Quote
 
 
0 #112 kk 2011-08-29 11:17
29.8.2011 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண். 110 ந் கீழ் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் அளிக்கப்பட்ட அறிக்கை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,


தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் எனக்கு இருப்பது போலவும், அந்த அதிகாரத்தை நான் பயன்படுத்தி அவர்களை காப்பாற்ற முடியும் என்பது போலவும் பேசப்படுவது சட்டத்தின்படி சரியானது அல்ல.


எனவே சட்ட நிலைமை என்ன என்பதை இந்த மாமன்றத்தின் வாயிலாக பொது மக்களுக்கு தெரிவிப்பது எனது கடமை ஆகும் எனக் கருதுகிறேன்.


மரண தண்டனை குறித்த நிகழ்வுகளில் அதன் தொடர்பான கருணை மனு இந்திய அரசமைப்புச் சட்டம் 72 ந் கீழ் குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரத்தின்படி குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட் டிருந்தால், அது தொடர்பாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகூறு 161 ந்படி உள்ள அதிகாரத்தை பயன்படுத்த மாநில அரசிற்கு அதிகாரம் இல்லை என்று அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு கூறு 257 (1) ந்படி கட்டளையிடுகிறது .


இருப்பினும் சூழ்நிலைகள் மாறுபட்டிருந்தா லோ அல்லது புதியதாக ஏதாவது ஆதாரம் இருந்தாலோ, மரண தண்டனை பெற்ற நபரோ அல்லது அவர் சார்பாக வேறு ஒருவரோ, குடியரசுத் தலைவரின் முந்தைய உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு புதியதாக ஒரு மனுவினை குடியரசுத் தலைவருக்கு சமர்ப்பிக்கலாம் . குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட் ட பின்னர், அது தொடர்பாக பின்னர் தாக்கல் செய்யப்படும் அனைத்து மனுக்களும் குடியரசுத் தலைவருக்கு தான் சமர்ப்பிக்கப்பட வேண்டும்; இது குறித்து நடவடிக்கையை குடியரசுத் தலைவர் தான் எடுப்பார்.

எனவே, பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று நபர்களின் கருணை மனு மேதகு குடியரசுத் தலைவர் அவர்களால் நிராகரிக்கப்பட் ட நிலையில், இதனை மாற்றுவதற்கு எந்த வித அதிகாரமும் மாநில முதலமைச்சர் என்ற முறையில் எனக்கு இல்லை என்பதை வலியுறுத்தி தெரிவிக்க விரும்புகிறேன். இந்த நிலையில் எனக்கு இதற்கான அதிகாரம் இருக்கிறது என்ற பிரச்சாரத்தை அரசியல் கட்சித் தலைவர்கள் எவரும் மேற்கொள்ள வேண்டாம் என்று இந்தப் பேரவையின் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்.
Quote
 
 
+6 #111 Tamilss 2011-08-29 11:14
ஈழம் அழியும்பொழுது தமிழகத்தின் முதல்வராக இருந்த கருணாநிதி தடுத்து நிறுத்தியிருக்க முடியுமா என்றால்
முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. ஆனால் மத்திய அரசுக்கு அழுத்தத்தைக் கொடுத்திருக்க முடியும். ஆட்சியைத் துறந்திருந்தால் மத்திய அரசு இக்கட்டுக்கு உள்ளாகி போரை நிறுத்தியிருக்க லாம்.

ஆனால் இன்று மூன்று பேரையும் தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா காப்பாற்ற முடியும் என்றால் முடியும். கையில் அதிகாரம் இருக்கிறது. கேரள பாலன் வழக்கு முன்னுதாரணமாக இருக்கிறது. அதிகாரம் கையிலிருந்தும் ஏன் ஜெயலலிதா பொய் சொல்கிறார்?

அழுத்தம் கொடுக்காத கருணாநிதி துரோகி என்றால் அதிகாரம் இருந்தும் மறுக்கும் ஜெயலலிதாவை என்னவென்று சொல்வது? இதற்கு மேலும் ஜெயலலிதாவை எப்படி நியாயப்படுத்த போகிறீர்கள்? ஜாபர் சேட்டுக்கு இக்கொட்டு கொடுத்தார் என்பதற்காகவா?
Quote
 
 
-2 #110 kutty savukku 2011-08-29 11:07
wowwwwwwwwwww super statement from amma
ராஜிவ் கொலையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள ்ள சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோர் கருணை மனுக்களை பரிசீலிக்கும் அதிகாரம் முதல்வருக்கு இல்லை என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார ். சட்டசபையில் இன்று பேசிய அவர், மூவரின் கருணை மனுக்களையும் ஜனாதிபதி நிராகரித்துள்ளத ால், அதில் தலையிட தனக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்துள்ளார ். இது தொடர்பாக மூவரும், மீண்டும் ஜனாதிபதியை அணுக வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மூவரின் மரண தண்டனையை நிறுத்தக்கோரி, காஞ்சிபுரத்தில் செங்கொடி என்ற பெண் தீக்குளித்து உயிரிழந்தது தனக்கு வருத்தமளிப்பதாக தெரிவித்த முதல்வர், யாரும் தீக்குளிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபடவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார ்.
Quote
 
 
0 #109 GVR1965 2011-08-29 10:33
Dear Savukku,
To save the 3 from death sentence, I feel there is only one chance- a mass prayer to the almighty. If you could post an exclusive request to our readers requesting them to pray GOD to save from the Capital Punishment, things may change. In fact when you quoted Mahatma Gandhi that God Alone Gives and he alone takes, let us pray that he takes care of these 3 too and not death sentence!!!
I look forward for your post on the same ASAP.
A quote from Quran:
If misfortune befalls you, it is the consequence of your own actions. Yet God forgives much. On this earth you can not escape God; and there is no one apart from God who can protect or help you.
Quote
 
 
-2 #108 Pandaram 2011-08-29 10:00
பிரதமருக்கு குன்டு வைத்தவன்,
அடுத்து ஜனாதிபதியிடம் சென்ட்ரான்,
கருனை மனுவோடு - பன்டாரம்
Quote
 
 
+1 #107 easakimuthu 2011-08-29 08:36
தாயெ தாய்மை உல்லத்தொடு எங்கல் சகொதரனைகாப்பட்ர ுஙல்
Quote
 
 
+1 #106 KPR 2011-08-29 08:19
My inner senses confirm that our 3 innocent brothers' life will be saved for sure by Amma Jayalalithaa.

She is a kind women. Only the MuKa biased media portrayed her as an atrocious person. Basically she is a strong personality who handles the bad elements with an iron hand. This good quality got twisted by MuKa & gang for their advantage to create a wrong image on Madam Jayalalithaa.

So she will take the right decision soon to save the 3 innocent lives!

Dharmam Thalai Kaakkum!
Thakka Samayathil Uyir Kaakkum!

Anbutan,
KPR
Quote
 
 
+20 #105 dilip kumar 2011-08-28 22:26
இந்த அம்மா மனது வைக்க மாட்டார். இந்த தூக்கு தன்டனை யினால் காங்கிரச் கட்சி தமிழ் நாட்டில் கானாமல் போய் விடும்.அது தானெ வேன்டும் அம்மயார்க்கு!
Quote
 
 
+8 #104 tamillinux 2011-08-28 21:32
சேர, சோழ, பாண்டியன் என்று தலை நிமிர்ந்து இருந்த தமிழினம் இன்று இப்படி பிறரிடம் மன்றாடி நிற்பதன் காரணம் என்னவோ? தமிழனின் தன்மானம் என்ற நரம்புகள் அறுந்து போய் விட்டனவா?
Quote
 
 
+7 #103 தமிழ் பெண் 2011-08-28 17:06
ராஜிவ் கொலை விசாரணைகளின்போத ு, புலனாய்வாளர்கள் கேஸை தாம் விரும்பிய ஒரு திசையின் செலுத்திச் சென்றார்கள் என்று கூறும், திருச்சி வேலுசாமி, “பேரறிவாளன், திராவிடர் கழகத்தில் இருந்தவர். ராஜிவ் காந்தியைக் கொன்ற பெல்ட் பாம் தயாரிக்க பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக பேரறிவாளன் கைதுக்குக் காரணம் சொல்கிறார்கள் அதிகாரிகள். பெங்களூரு ரெங்கநாத் என்பவர் கொடுத்த வாக்குமூலத்தில் , “அதே பெல்ட் பாமை யாகத்தில் வைத்து சந்திரா சாமி ஆசீர்வதித்தார்” என்று கூறியிருக்கிறார ்.
Quote
 
 
+5 #102 தமிழ் பெண் 2011-08-28 17:04
இந்த கொலை விவகாரத்தில், அப்போதைய சட்ட அமைச்சர் சுப்பிரமணியன் சுவாமிக்கும் பங்கு இருப்பதாகக் கூறுகிறார் வேலுசாமி. “மே 21-ம் தேதி இரவு ராஜீவ் கொலை நடந்தது. அடுத்த நாள் காலை 9 மணிக்குத்தான் விசாரணை தொடங்கியது. ஆனால், விசாரணை தொடங்கும் முன்னரே, ‘ராஜீவைக் கொன்றது புலிகள்தான்’ என்று சுப்பிரமணியன் சுவாமி அறிவித்தது எப்படி?” என்றும் கேட்கிறார் வேலுசாமி.
Quote
 
 
+3 #101 muthuayyanar 2011-08-28 15:51
அம்மா தயாஉ காட்டுங்கல்
Quote
 
 
+3 #100 ஸ்டார் 2011-08-28 11:21
The killing of Sanjay Gandhi is based on capturing power,The killing of Indira Gandhi is based on capturing power,The killing of Rajive Gandhi is also for capturing power but the innocents are used as a weapon.
All knows the truth y subramaniyam,ch andrasaami`s are treated as a god.
But truth will reveal soon.
Quote
 
 
-1 #99 pottadi 2011-08-28 11:19
முதல்வர் அவர்களுக்கு வணக்கம்,

நீங்கள் வாய்ச்சொல் வீரரல்ல என்பது அனைவரும் அறிந்ததே. உங்களால் தமிழருக்காக
மிக முக்கியமான் ஒன்றையும் செய்ய முடியும் .அது தமிழர் மூவரை தூக்குத் தண்டனையில்
இருந்து காப்பாற்றுவது. உயிரின் அருமையும் , பெருமையும் அதன் மீதான பாசமும், பரிவும்
அறிந்தவர்கள் அன்னையர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
உங்களை இந்த நேரத்தில் நாங்கள் முதல்வராகப் பெற்றிருப்பது இறைவன் செயலாகவே
நான் கருதுகிறேன்.தமிழர்கள் அனைவரின் விருப்பம்,இறைவன ிடத்து இடப்படும்
வேண்டுகோள் அந்த இறைவனின் வரம் உங்கள் மூலமாக் நிறைவேறும் என்பதில் நம்பிக்கை
எங்களுக்கு உண்டு.

தண்டனைக்கான் குறிக்கப்பட்ட மாதத்தை கவனியுங்கள்,
கப்பலோட்டிய தமிழன் , பேரறிஞ்ர் அண்ணா , தந்தை பெரியார், தமிழ்தந்தை சி.பா.ஆதித்தனார்
ஆகியோர் பிற்ந்த மாதத்தில் மூன்று தமிழர்களை மனிதம் பற்றி பேசப்படும் இக்காலத்தில்
இழக்க விடாமல் காப்பது உங்கள் கையில்.

உங்களால் மட்டுமே பெருமைய்டன் தீர்க்க முடியும் இந்த தண்டணைய. அனைவர்து நம்பிக்கையும்
உங்களிடத்தில். மூவரின் உற்றார் உறவினர் மட்டுமல்லாமல் , தமிழ் இனமே உங்களுக்கு
நன்றிகூறுவது மட்டுமல்ல , கடமைப்பட்டும் இருக்கும்.

முடிந்த ஒன்றை தக்க நேரத்தில் செய்வதுதான் , நம்பும் மக்களுக்கு தலைவர்கள் தரும் சேவை.
Quote
 
 
+6 #98 Padman 2011-08-28 05:07
ராஜிவ் காந்தி வழக்கு ஒரு முடிவு பெறாத வழக்கு. இதில் அவசரப்பட்டு இதுபோல் தண்டனையை அளிக்கக் கூடாது. அன்னா ஹசாரே போராட்டத்தை திசை திருப்ப வேறு வழி கிடைக்கவில்லையா இந்த காரைக்குடிகார குடிகெடுத்த காங் கூட்டத்திற்கு?
Quote
 
 
+2 #97 anniyan 2011-08-28 04:50
நெல்லை குமரன்,
உங்கள் நோக்கம் வெற்றி அடைய வாழ்த்துக்கள். உங்கள் முயற்சி கைகூடட்டும்.

Quoting Nellai Kumaran:
சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில். விஜயகாந்த் கல்யாண மண்டபம் எதிரில், ஆக்சிஸ் பேங்க் ATM அருகில் உள்ள கட்டடத்தில் மூன்று பெண் வழக்கரிஜர்கள் உண்ணா நிலைப்போராட்டத் தில் இருக்கிறார்கள்.

தோழர் கிருஷ்ணசாமி MLA அவர்கள் அங்கு வந்து பார்த்து, பேசி விட்டு சென்றார்கள். பேரறிவாளனின் தாயார், அற்புதம் அம்மா அவர்களும் அங்கு வந்து சேர்ந்துவிட்டார ்கள். நூற்றுக்கும் மேலான நமது உணர்வாளர்கள் அங்கு உள்ளார்கள். 27-August, காலை பரப்புரை ஆரம்பம் ஆகும். ஆயிரகணக்கான தமிழர்கள் அங்கு வரவேண்டும்.

லட்சம் தமிழர்கள் கோயம்பேடு நோக்கி வாருங்கள்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள உணர்வாளர்களுக்க ு தகவலை பரப்புங்கள்.
லட்சம் தமிழர்கள் கோயம்பேடு நோக்கி வாருங்கள்.
Quote
 
 
-17 #96 rx 2011-08-28 00:26
pls hang the three...cm pls dont interfere and spoil ur name
Quote
 
 
+6 #95 malar 2011-08-27 23:25
இந்திராவின் குடும்பம் ஏன் படுகொலை செய்யப் படுகிரது என்பதை கான்கிரஷ்காரர்க ல் யோசிக்கவேன்டும் . புரியும்படி சொல்கிரேன் கத்தி எடுத்தவன் கத்தியாலே சாவான். ராசீவை துப்பாக்கியால் அடித்த சின்கலவனை கான்கிரஷ்காரன் ஏன் மன்னித்தீர்கல் என்ரு வாழப்பாடி நாய் ஒரு அரிக்கை விடு. அந்த வீடியோவை அவன் மகன் ராகுலுக்கு அனுப்புடா நாயே.
Quote
 
 
+5 #94 r.s.ramalingam 2011-08-27 22:41
காப்பாட்ரியதர்க ்காக ஆட்சியை எழந்தாலும் வருந்தாதீர்கல்... அடுத்த முரை 234 லிலும் ஜயிப்பீர்கல்.. மனது வையுஙல் சி.எம். அவர்கலே...
Quote
 
 
+2 #93 eswaran m 2011-08-27 19:52
Madam will save their lives defenitly-sure
Quote
 
 
+8 #92 புதியவன் ராஜ் 2011-08-27 18:42
இந்த மூன்று பேரும் நேரடியாக குற்றத்தில் சம்பந்தப்பட்டவர ்கள் இல்லை. மேலும் ஆயுள் தண்டனையான 14 வருடங்களையும் கடந்து, 20 வருடங்களுக்கு மேல் சிறையில் வாடிவிட்டனர். தூக்குதண்டனை என்பது ஒரே குற்றத்திற்கு (குற்றம் செய்து இருந்தாலும்) இரண்டுமுறை தண்டிப்பது போல உள்ளது. அது தர்மமும் இல்லை நீதியும் இல்லை. சட்டத்திலும் ஒரே குற்றத்திற்கு இரண்டு முறை தண்டிக்க இடமும் இல்லை. 3 பேரையும் தூக்கு மேடையில் இருந்து காப்பாற்ற அதிகாரமுள்ளவர்க ள் கருணையுடன் நடவடிக்கை எடுத்து 3 பேர் உயிரையும் காப்பாற்ற வேண்டும். தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உயிரைக்காப்பாற் றினால் தமிழர்கள் இதயத்தில் நீங்காத இடம் பெறுவார்.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 80 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

தமிழ்லீடர்

tamilleader

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4359
mod_vvisit_counterYesterday9838
mod_vvisit_counterThis week57096
mod_vvisit_counterLast week67096
mod_vvisit_counterThis month175904
mod_vvisit_counterLast month297247
mod_vvisit_counterAll days8391632