முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
தமிழ் தேசிய முன்னணி மாநாடு. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 9
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
வெள்ளிக்கிழமை, 04 நவம்பர் 2011 16:11

தமிழ் தேசிய முன்னணி மாநாடு வரும் 26 நவம்பர் 2011 அன்று மாலை 3 மணிக்கு ஈரோட்டில் நடைபெற உள்ளது. 

 

TNF-Notice

TNF-Notice-2nd-Page

 
பரமக்குடி சம்பவம். உண்மை அறியும் குழு அறிக்கை அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 34
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
புதன்கிழமை, 12 அக்டோபர் 2011 15:10

பரமக்குடி சம்பவம் தொடர்பாக, மக்கள் கலை இலக்கியக் கழகம், மனித உரிமை கண்காணிப்பகம் என்று தொடர்ச்சியாக உண்மை அறியும் குழு அறிக்கைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக வரும் சனியன்று, சென்னை, எழும்பூரில் உள்ள இக்சா அரங்கத்தில் பரமக்குடி சம்பவம் தொடர்பாக உண்மை அறியும் குழு அறிக்கை வெளியிடப் பட இருக்கிறது.  இந்த அறிக்கை புகைப்படங்களுடன் வண்ணத்தில் நூல் வடிவில் வெளியிடப் படுகிறது.  அந்த நூலை பழ.நெடுமாறன் வெளியிட, விடுதலை ராசேந்திரன் பெற்றுக் கொள்கிறார்.

parama_notice_6

 
கைப்புள்ள ஸ்டாலின் அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 41
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
புதன்கிழமை, 12 அக்டோபர் 2011 12:37

 

கைப்புள்ள ஸ்டாலின் என்ற தலைப்பிலேயே அன்பு பதிப்பகம் சார்பில் புதிய புத்தகம் வெளியாகியுள்ளது.  இந்தப் புத்தகத்தில் எழுத்துக்களை விட ஆவணங்கள் அதிகமாக உள்ளது.  உள்ளாட்சித் துறையை தன் வசம் வைத்திருந்த ஸ்டாலினின் உள்ளாட்சித் துறையில் நடைபெற்ற ஊழல்களே பெருமளவில் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

 

மு.க.ஸ்டாலினுக்கு ஒரு அப்பவித் தொண்டனின் கடிதம் என்ற முதல் அத்தியாயத்தோடு புத்தகம் தொடங்குகிறது.   ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருந்த அஷோக் வரதன் ஷெட்டி ஐஏஎஸ் அதிகாரி செய்த ஊழல் திருவிளையாடல்களையும் இந்தப் புத்தகம் புட்டு புட்டு வைக்கிறது.

 STALIN-WRAPPER

ஆவடியை அடுத்த மோரை கிராமத்தில் நடந்த பெரும் நில மோசடி குறித்தும், இயற்கை உரம் என்ற பெயரில் உள்ளாட்சித் துறையில் நடந்த மோசடிகள் குறித்தும் பல்வேறு தகவல்களை இந்த நூல் தருகிறது.

 

இதற்கு முன்பு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் “மக்கள் ஏமாந்தார்களா ஏமாற்றப் பட்டார்களா” என்ற புத்தகத்தையும் “கேடி சகோதரர்கள்” என்ற புத்தகத்தையும் எழுதி வெளியிட்ட பத்திரிக்கையாளர் திரு அன்பு அவர்களே இந்தப் புத்தகத்தையும் வெளியிட்டுள்ளார்.

 

கடந்த வாரம் இந்தப் புத்தகத்தை எம்.நடராஜன் வெளியிட, திருச்சி வேலுச்சாமி முதல் பதிப்பை பெற்றுக் கொண்டார்.

DSC_4908

 

 

 
சர்ச்சைக்கு பதில் அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 17
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
செவ்வாய்க்கிழமை, 11 அக்டோபர் 2011 07:32

எழுத்தாளர் ஜெயமோகனுக்கும் சர்ச்சைகளுக்கும் எப்போதுமே நெருக்கமான உறவு உண்டு.  ஜெயமோகன் எழுதிய “இன்றைய காந்தி” என்ற நூல்தான் தற்போது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.

 

காந்தியை புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப் பட்ட ஜெயமோகனின் நூலில் பெரியாரின் வைக்கம் போராட்டத்தையும், அம்பத்கேரையும் கம்யூனிஸ்டுகளையும் சிறுமைப் படுத்தி எழுதியுள்ளார் என்பதே ஜெயமோகனின் மீது உள்ள குற்றச் சாட்டு. மேலும் பெரியார் தலித்துகளுக்காக எதுவும் செய்யவில்லை  என்றும், தாழ்த்தப் பட்டவர்களை காங்கிரசிலிருந்து பிரிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திலேயே பெரியாரின் மேடைப் பேச்சுக்கள் அமைந்திருந்தன என்கிறார் ஜெயமோகன். இது போலவே பெரியாரின் வைக்கம் போராட்டத்துக்கு பெரிய அளவில் வரலாற்று முக்கியத்துவம் இல்லை என்றும் ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.

 

 


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 50 விருந்தினர்கள் மற்றும் 1 உறுப்பினர்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

தமிழ்லீடர்

tamilleader

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday2274
mod_vvisit_counterYesterday10960
mod_vvisit_counterThis week47620
mod_vvisit_counterLast week74101
mod_vvisit_counterThis month262010
mod_vvisit_counterLast month376831
mod_vvisit_counterAll days7425087